

தாய்மை
========
இன்று எப்படி என்று?
not bad என்றான்.
விளயாட்டு?
interesting என்றான்.
படிப்பு ?
so boring என்றான்.
வந்தது எரிச்சல் அடக்கிக் கொண்டேன்.
நண்பர் ?.
oh shit என்றான்.
விட்டேன் ஒர் அரை.
அம்மா என்றான்.
அணைத்துக் கொண்டேன் ,
மகனயும், மொழியையும் சேர்த்து ,
தாயல்லவா அவள்.
2 comments:
ம்ம்ம்ம்ம்
அருமை!
தாய்த்தமிழை அமைத்துக்கொள்ளும் ஒரு தாயின் தமிழே வளர்க..
Post a Comment