Friday, September 21, 2007

நெருங்காதே தோழி....( தோழனே! )
==============================

சாதி, சமயம், அந்தஸ்து
பார்த்து பழகும் மனிதருக்கிடையில்,
கோழ் சொல்லும் வீணருக்கிடையில்,
என்ன வேலை என்ன சம்பளம்,
என்ன கார், என்ன வீடு,
என்று ஆராயும் பண்பற்றவரிடமிருந்து,
வித்தியாசமாக, தவமின்றி கிடைத்தாய்
என் தாயான உயிர் தோழி ...( தோழா! )

என் வெற்றிகளை, பாராட்டுகளை,
ஏற்றுக்கொள்ள பலருண்டு.
என் சந்தோக்ஷத்தை பகிர்ந்துகொள்ள,
எனக்கொரு கூடுமுண்டு.
என்னை விமர்சிக்க, சோதிக்க
எனை சுற்றி கூட்டமுண்டு,
கூட இருந்து குழிபரித்த நண்பர்,
என நினைத்த நயவஞ்சகர்கள்,
நாடாமலே இங்குண்டு.

ஆனால் என் கஷ்டங்கள், தோல்விகள்,
பிரச்சனைகள், எதனையும் பகிர்ந்து கொள்ளாமலே,
பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொண்டு,
அன்னமாய் எனை அணைத்தாய் அன்புத் தோழி ...( தோழா! )

ஆசான் , பெற்றோர் கற்றுத்தராததை,
கடல் கடந்த வாழ்வு கற்றுத்தந்தது. பசுமரத்தாணியான மனது,பல விஷயம் புரிந்த போது பாராங்கல்லாகிப்போனது.
பல கஷ்டம் பார்த்த பலமான மனது,உன்னை சில நிமிடம் பார்த்ததும் பலவீனமடைகிறது.
சவால்களை எதிர் நோக்கியிருக்கும் எனக்கு,

உன் கருணையை பாரட்ட முடியாமல்
உன் அன்பை ஏற்க முடியாமல் ,
நீ காயப்படுவாயோ என் கவலைபடுகிறது.

தலைப்பிரசவமும், அடுத்து வந்த
தனிப்பிரசவமும் , கொடுக்காத
வலியையும், கண்ணீரையும்,
என்றோ ஒரு நாள் நடக்கப் போகும்
உன் பிரிவு பற்றி நினைத்த மாத்திரத்தில் கொடுக்கிறதே.

ஆகையால் என் அருமைத் தோழி ,( தோழா! )
என்னை நெருங்காதே.... உன் அன்பால் என்னைக் கொல்லாதே!! கோழையாக்காதே.!!!!!
என்னை விட்டு விலகி நில்.
நான் இப்படியே இருந்து விடுகிறேன்...

No comments: