Tuesday, June 10, 2008






பரபரப்பூட்டும் மலை, அருவி, காட்டாறு விளையாட்டுகள் பாகம் ‍ 4*


மலைமேலே விளையாட்டுகள்..
முதலில் நாங்கள் சென்றது, மலையிலிருந்து கீழே சருக்குவது.. ஒரு மிதவைமேல் படுத்துக்கொண்டு.. உண்மையிலேயே பயம் . ஏனேன்றால், அந்த மிதவை குப்புற கவிழுமோ என்ற பயம்.. பையன் மட்டும் சென்றான்..நான் உற்சாகப்படுத்தியதில்...மீண்டும் மேல வந்தவன் , " அம்மா நல்லாருக்கு " எனவும், சரி நீயேஇன்னோரு முறை எனக்கு பதிலாக போ என அனுப்பினேன்..
கிட்டத்தட்ட 7 மாடி உயரத்திலிருஃது நீண்ட பிளாஸ்டிக் ஷீட் விரித்து அதில் இந்த மிதவையை தள்ளிவிடுகிறார்கள், அது வழுக்கிக்கொண்டே செல்ல கூட தண்ணீரும் தெளிக்கிறார்கள் அங்கங்கே.. அதை கவனிப்பது ஒரு கர்ப்பிணி பெண்.. அவள் ஒருமுறை தண்ணீரி பைப்பை எடுக்க அது சீரிக்கொண்டு அவள்மேலேயே தண்ணீரை கொட்ட, அடுத்த பாவம்...கொஞ்சம் கவனக்குறைவென்றாலும் அவள் வழுக்கலாம்...
ஏன் இந்த இடத்தில் வேலை பார்க்கிறாள் என்று எனக்கு வருத்தம்..அதுவும் கர்ப்ப காலத்தில்..
அது முடிந்ததும் , அதே போல் ஒரு மிகப்பெரிய பந்து , அதனுள்ளும் தண்ணீர் செலுத்தி, ஆளையும் செலுத்தி, மூடி விட்டு மலையிலிருந்து சருக்கில் உருட்டி விடுகிறார்கள்.. இது பயங்கர சிரிப்பாயிருந்தது... உள்ளே உள்ள ஆள் கண்டபடி புரட்டி போடுது , முகத்தில் தண்ணீர் வேறு பாய்கிறது.. வேகம் வேறு.. விழுந்து விழுந்து சிரித்தேன், எல்லாரும் என்னை ஒருமாதிரியாக பார்த்தாலும்.. ( சில நேரம் சிரிப்பை அடக்கமுடியாது.. அடக்க அடக்க வெடிக்குது..ஏன் என தெரியலை..)
நேரமாச்சு குழந்தை பற்றி விசாரிக்க , தகவல் சொல்ல ,என கைபேசியில் கணவரை அழைத்தால் செல்லமாட்டேங்குது.. நெட் ஒர்க் பிரச்சனை போல..சோதனை இப்படித்தானே வரும்..
அடுத்து ஃபிளையிங் ஃபாக்ஸ் அன கயற்றில் மலை உச்சியில் இருந்து தொங்கிக்கொண்டே கீழே இறங்குவது...8 80 வயது வரை செல்லலாம் பயமில்லை...
அடுத்து நீரில் சருக்கு... மேலே ஒரு படகில் ஏறி சடாரென்று கீழே நீரில் இறங்குவது..இதெல்லாம் பழசு..
அடுத்து கார்ட் க்ராஸ்.. இதுக்கு பையனை அனுப்பலாம் என்றால்
" உங்க பையன் வயது என்ன?.18 க்கு மேலே கீழா?." ஒருவேளை இது சின்னப்பசங்களுக்கு மட்டும் போல என எண்ணி, " ஹிஹி 18 க்கு கீழே " என்றேன்..
" அய்யோ மன்னிக்கவும் , முடியாதே." எனவும்,
" ஆனா அவன் நல்லா ஓட்டுவான் " நம்பிட்டாங்க.. அவன் பார்க்க 20 வயசு பையன் போல் இருக்கான்.. , 12 வயதுக்காரன்..
" சரி அப்ப நீங்களும் அமருங்கள்.. "
"அடப்பாவமே இது என்ன சோதனை...சரியென்று நானும் ஹெல்மெட் போட்டு நானே ஓட்டினேன்..பையனுக்கு ஓட்ட முடியவில்லை என வருத்தம்...
ஒருவழியா முடிந்து மீண்டும் ரயில் வண்டி ஏறி வர, எதிர்வண்டியில் சின்னவனும் அப்பாவும்.. ஹஹஹா
திரும்பி அவர்கள் வரும் வரை கடையில் சென்று சூடா காஃபி குடிக்க சென்றோம்..
பையன் சூடா சூப், நான் 2 காஃபி தயாரிக்க, கணவர் குழந்தையுடன் வந்து சேர்ந்தார். அவரை படுத்தி எடுத்துவிட்டானாம், அம்மாவை தேடி..ஏன் போன் , பேசலை?. , 1001 கேள்விகள்...
" சரி எதுக்கு 2 காஃபி.?. எனக்கு வேண்டாம்.."
" ஹிஹி.. நன்றிங்க.. இது ஓட்டுனருக்கு.. பாவம்.. மழைவேறு..அசதியாயிருப்பாரே.."
" அவர் இதெல்லாம் குடிக்கமாட்டார்.."
நான் சென்று குடுத்ததும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டார்..பெரியவனுக்கு ரொம்ப சந்தோஷம்.. " ரொம்ப நன்றிம்மா. நீங்க ரொம்ப நல்ல அம்மா" , என கொஞ்சினான்..
" ஆமா , இப்ப இப்படி சோலு, படிக்க சொன்னா மட்டும், கோச்சுக்கோ"
" சாஆஆஆரிம்மாஆஆ"மறுபடியும் கொஞ்சல்..
அதோடு போட்டிபோட்டு சின்னது முத்த மழை பெய்து கொஞ்ச, அப்பாவுக்கு கோவம் வருது..
" என்னதான் நான் கவனித்தாலும் , பாரு 2ம் உன்கிட்டதான் வருது...என்னவோ வசியம் பண்ற..ஊரிலுள்ளவர்கள் மேலெல்லாம் பாவம் பார்க்க என்னவிடுத்து..என்கிட்ட இருக்காமல் அம்மா என்று தேடுகிறான் சின்னவன்.."
அங்கேயே தங்குவதற்கும் அழகான கூடரங்கள், விடுதிகள் உள்ளன.
எல்லாம் முடிந்து அசதியுடன் கிளம்பும்போது எஸ் எம் எஸ் வருது..
அலுவலகத்திலிருந்து, மடல் பார்க்கச்சொல்லி...
எல்லோரும் வீடு வந்து சேரும் வரை நன்றாக தூங்க, சின்னவன் ஏற்கனவே தூங்கிவிட்டதால் என்னுடன் விளையாடிக்கொண்டே ,பேசிக்கொண்டே வர, எனக்கு மட்டும் அசதி..
வந்ததும் மடல் பார்த்து பதில் அனுப்பி, குளித்து , ஒதுங்க வைத்து படுத்ததுதான் தெரியும்.. தூக்கம் இழுத்துக்கொண்டு சென்றது..
சில விளையாட்டுகள் ஆபத்தானவை, நம் உடல் நலம் தெரிந்து விளையாடணும்.. எனக்கு சிறு வயதிலிருந்தே இதில் ஆர்வமிருந்ததால் , பிள்ளைகளை பழக்கும் பொருட்டு, கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் செயல்பட்டேன். படிப்பவர்கள் தயவுசெய்து எளிதாக எண்ணவேண்டாம்... என்னுடைய network வேலையும் அப்படி, மேலும் , நானும், வீட்டுக்காரரும், விளையாட்டுகளில் அதிகம் பங்கேற்றதால் , அடிவாங்கியதால்,கொஞ்சம் பயம் குறைவு.. அவ்வளவே. குழந்தைகளை சிறு வயதிலேயே பயம் போக்கி, வளர்ப்பது நல்லது.. அதற்கான சிறு முய்ற்சி இது...
வாசித்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள்..

2 comments:

ரசிகன் said...

//குழந்தைகளை சிறு வயதிலேயே பயம் போக்கி, வளர்ப்பது நல்லது.. அதற்கான சிறு முய்ற்சி இது..//

உண்மைதான். இது போன்ற விளையாட்டுக்களில் சிறுவயதிலிருந்தே குழந்தைகளை ஈடுபட ஊக்கமூட்டினால் தைரியமானவர்களாய் மிளிர்வார்கள். கிராமத்தில் இயல்பாகவே இது அமைந்து விடுகிறது. நகரங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளில் மூழ்கி ,தைரியமற்றவர்களாய் வளர்கிறார்கள் குழந்தைகள்:)

ரசிகன் said...

பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றிகள் தோழிக்கு:)