பரபரப்பூட்டும் மலை, அருவி, காட்டாறு விளையாட்டுகள் பாகம் 3
அடுத்ததாக நாங்கள் செல்ல வேண்டிய இடம், மலை அருவியிலிருந்து கயறு கட்டி கீழே இறங்குவது...தேடினோம் வந்தது... அப்போதுதான் ஞாபகம் வந்தது , பணம் எடுக்கவேண்டும்.. எடிஎம் இயந்திரம் அங்கு இல்லை.. ஊருக்குள் தான் வரணும்... 30 கி.மீ ஊருக்குள் வந்து திரும்பி சென்றோம்.. மலையழகை ரசிப்பதிலேயும், சரக்கொன்னை, பூமரங்கள் ( flame of forest ) வழி நெடுகிலும் பந்தல் போட்டதுபோல் இருந்த அழகும், வயல்வெளியும், அதில் உள்ள தனித்தனி பண்ணை வீடுகளும், குதிரை லாயங்களும், ஏறி இறங்கி மீண்டும் ஏறி இறங்கி வளைந்து செல்லும் சாலையும்,மிக அழகு..கண்ணுக்கும் , மனதுக்கும் குளிர்ச்சி..
அருவியிலிருந்து கயறு கட்டி இறங்கும் இடத்துக்கு வந்தால் அருவியும் இருக்கு, கீழே ஓடையும் இருக்கு ஆள்கள்தான் இல்லை... காலில் ஷூ மாட்டிக்கொண்டு பந்தாவாக இறங்கி விசாரித்தால் வாரத்தில் 3 நாள் மட்டுமே விளையாட்டு உண்டாம்... சரியான ஏமாற்றம்...எனக்கும் பெரியவனுக்கும்.. அப்பாவுக்கு குஷி கேக்கணுமா?..
சரி இன்னும் இதே போன்று இடம் வேறு கண்டிப்பாக இருக்கும் என்று ஆறுதல்படுத்திக்கொண்டு, முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் போல், பாதையெங்கும் விளம்பரப்பலகை பார்த்துக்கொண்டே வந்ததில் ஒரு விளையாட்டு (அம்யூஸ்மென்ட் ) பூங்கா கண்ணில் பட்டது..
குழந்தை தூங்கிவிட்டான்.. " பெரியவனுடன் நீங்க போறீங்களா , இல்லை நான்?."
" அய்யோ ஆள விடும்மா... நான் காரிலேயே இருக்கிறேன் குழந்தை பார்த்துக்கொண்டு.."
நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு வந்தால் ஒரு நீள ரயில் வண்டி தயாராய்.. அங்கிருந்து மலைக்குள் 3 கி.மீ செல்லணுமாம்.. பையனுக்கு எங்கே உட்காருவது என்று குழப்பம்... முன்னால, இல்ல இல்ல , பின்னால..
" வேண்டாய்யா, நடுவில் உட்காரலாம், மழை வந்தாலும் வரும்..."
" இல்லம்மா, வாங்க முன்னால்.."
ஏறி உட்கார்ந்து வண்டி கிளம்பியதும், மழை சோரென்று அடித்து பெய்தது, முகத்தில்.. முழுதும் நனைந்தோம்.. என் கைபேசியை மட்டும் நனையாமல் பார்த்துக்கொண்டேன்.. டிக்கெட், பணம் அனைத்தும் நீரில்.குளிர் தாங்க முடியாமல் டைப் அடிக்குது விரல்களும், உதடுகளும்..
.மேகங்கள் எங்கள்மேல்பட்டு விரைவாக கடந்து செல்லுது...அடுத்த சிறிது தூரத்தில் வெயில் அடிக்குது... மழை நின்று.. ஆச்சர்யமாய் இருக்குது..வண்டி ஏற்ற இறக்கத்தில் ரம்மியமான தாய் பாடல்களுடன், கவ்பாய் ஸ்டைலில் போகுது..
அனைவரும் கவ்பாய் போல உடையும்.. எதோ அவர்கள் கூட்டத்தில் இருப்பதுபோல உணர்ச்சி..
எல்லோரும் மழையிலும் பாட்டுபாடி கைதட்டிக்கொண்டு..எனக்கோ தலையிலிருந்து தண்ணீர் (+ முகத்தில் அசடு) சொட்டுகிறது துடைக்ககூட துணியில்லாமல்...பையனுக்கோ குஷி..மழையில் நனைவது... ( பின்னால் பாடு எனக்குத்தானே?.)
இப்ப எதை விளையாடுவது என்று.????..
விட்டு விட்டு மழை.
ஆனாலும் விளையாட்டு நடக்குது...
கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டே விளையாட்டை நடத்தும் பெண் ஊழியர்களும் ..பாவமாயிருக்கு .." "அம்மா, பாவம் 3 ஹிஹி."
சரி என்று ஒவ்வொன்றாக போனோம்...
நாளை கடைசி பாகத்தில் விளையாட்டுகள்....
*************************************தொடரும் கடைசி பாகம்********

No comments:
Post a Comment