Wednesday, February 27, 2008


பாகம் - 11

நிஷா வேதனை தாங்கமுடியாமல், ரகுவின் தோழன், சுந்தருக்கும் டாக்டர் சங்கருக்கும், சொல்லிவிட்டாள்...அனைவருக்கும் அதிர்ச்சி.. ஆனால் இது குடும்ப விஷயம் ..
அவர்கள் விரும்பினாலன்றி நாம் தலையிடவேண்டாம் என்றும், சுந்தர் மட்டும் நயமாக பேசி பிரச்சனை என்ன என்று அறிவதாக ஏற்பாடு..மது இது அறிந்து முதலில் வருத்தப்பட்டாலும், பின்னர் ஒத்துக்கொண்டாள்..

ஆனால் அவன் போக்கில் விடுங்கள் சில நாள்கள் , எனக்காக மறந்தும் சப்போர்ட்டாக பேச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டாள்.

கீதாம்மாவுக்கு கோபமும் வருத்தமும்.. , தன்னிடம் கூட சொல்லாமல் நம் பெண் மறைத்துவிட்டாளே.. ஏன் கணவன் சொன்னால் வேலையை விட வேண்டியதுதானே?.. ஆனால் மதுவின் தந்தைக்கோ, தன் மகள் எது செய்தாலும் சரியாக இருக்கும், அவளிடம் யாரும் எதுவும் அதுபற்றி பேசவோ , கேட்கவோ கூடாது என தடைபோட்டார்..

ஏனெனில் அவன் கோபம் இவளுக்குத்தானே தெரியும்...இப்படித்தான் பரமு விசயத்தில்..,

* * * * * * * * *

"என்ன தைரியம் இருந்தால் ஒரு வேலையில்லாதவனை , அடுத்த மதத்தவனை திருமணம் செய்வேன் என்று சொல்லுவாய்..?"

" அண்ணா அவரைத் தவிர யாரையும் என்னால் நினைத்துகூட பார்க்க முடியாது..நான்கு வருட காதல். நல்ல படிப்பு..நல்ல வேலை கிடடக்கும் சீக்கிரம். நீயும்தானே. அண்ணியை....?"

" அப்படியென்ன பெரிய காதல்.. நான் காதலித்தேன் என்றால் தகுதியோடு, முறைப்படி , எல்லோருடைய விருப்பத்தோடும்., பெருமைபடும்படியாக..."

" பரமுவுக்கும் நாமே நடத்திவைக்கலாமே.. சின்ன பிள்ளை தெரியாமல் நடந்துவிட்டது...இப்ப வேறு வழியில்லையே.." கெஞ்சுகிறாள் மது..

" நீ கொஞ்சம் பேசாமல் இருக்கிறாயா?. இது என் குடும்ப விஷயம்...நீதான் இதுக்கு முழு ஆதரவா..?.என் தங்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிறது தப்பா...?. மது இனி இதில் யார் தலையிட்டாலும் எனக்கும் அவர்களுக்கும் எந்த உறவுமில்லை..மது ,நீ உள்ளே போ"மது வெறுப்புடன் உள்ளே செல்கிறாள்..

" பரமு, நான் பார்க்கும் மாப்பிள்ளையை தான் நீ கல்யாணம் செய்யவேண்டும்.. மீறினால் எனக்கும் உனக்கும் இனி உறவில்லை.."

" என் மகன் சொல்வதே நானும் .. ஏன் இந்த தலைக்குனிவு எனக்கு... நல்லாதானே வளர்த்தோம் உன்னை..?.." அப்பா.

விசாலம் அம்மா, பரமுவும் அழ, தன் அறைக்கு , ரகு சென்றபின் அழைத்துச்செல்கிறாள்... பரமுவோ பிடிவாதமாக இருக்கிறாள்,செத்துவிடுவேனென்று.. அவளை நன்றாகத் திட்டிவிட்டு, சரி பைத்தியமாக ஏதும் செய்துவிடாதே, நான் முடித்துவைக்கிறேன் என்கிறாள்..

அதேபோல் அந்த வாரமே விசாலம் அம்மா, பரமுவை அழைத்துக்கொண்டு ,கோயிலில் வைத்து திருமணத்தையும் முடித்துவிட்டுவீட்டுக்கு திரும்புகிறாள், புயலை எதிர்பார்த்து...

" அங்கேயே நில்..உள்ள ஒரு அடி எடுத்து வைக்கக்கூடாது... எவ்வளவு சொல்லியும் என் பேச்சை மீறி..."

" சரி.. உள்ளே வந்து என்ன வேணாலும் பண்ணுங்க... வெளியில் நான்கு பேர் பார்ப்பாங்க..." அவள் சொல்லிக்கொண்டே உள்ளே செல்கிறாள், அம்மாவின் கையைப் பிடித்தபடி...அம்மா சமையலைறையில் புகுந்து கொண்டார்கள்..

" இப்ப என்ன அவள் செத்தாக்கூட பரவாயில்லை, ஆனால் உங்க மானம் தான் பெரிது இல்லையா மாமா?."

" அப்படித்தான் வெச்சுக்கோ.. எங்களைப்பொறுத்த வரையில் அவள் செத்துவிட்டாள்..... இனி நீயும் அவளுக்கு பரிந்துகிட்டு இந்த வீட்டில் இருக்க முடியாது.."அவளுக்கு உள்ளுக்குள் சிரிப்பாய் வந்தாலும், வெளியே காண்பிக்காமல்,

" அதுக்கெல்லாம் நானும் தயாராத்தான் இருக்கேன்... தங்கை , மகள் செத்தாலும் பரவாயில்லைன்னு நினைக்கிற மனுஷங்களோட இனி நான் இருக்க முடியாதுப்பா..." துணி மணிகளை எடுத்து வேகமாக பெட்டிக்குள் திணிக்கிறாள்...

"சரி. சரி.. நீ உள்ளே போம்மா.. அப்புறமா பேசிக்கொள்ளலாம்..." மாமா பயப்படுகிறார்...விசாலம் அம்மாவுக்கு இது நாடகம்தான் என்று தெரிந்ததால் அவர்,

" சரிம்மா, போகுமுன் ஒரு வாய் சாப்பிட்டு போகலாம்.. இரு இப்பவே சமைக்கிறேன் "என்கிறார்..

மது குழந்தையை கூப்பிட்டு, " கிளம்புடா, தாத்தா வீட்டுக்கு போகலாம்...இனி அங்குதான் நீ படிக்கப்போற.."சந்தடி சாக்கில் குழந்தையையும் இணைக்க,

" என் பெண்ணை எங்கே கூட்டிப்போற..?. அவள் என்கூடதான் இருப்பா..."பெண்மேல் அதிகம் பிரியம் ரகுவுக்கு..

" வேண்டாம்மா .. சொன்னா கேளு... ரகு நீ இப்போ உள்ளே போ.. " கொஞ்சம் அதட்டலாய் மாமா..இருபது நிமிடம் கழித்து பெட்டியுடன் மது வெளிவர, எல்லோரும் அதிர்ச்சியில்..
" எங்க போற..?"
"......" அழுகிற மாதிரி மது நல்லாவே நடிக்க.."
உள்ளே ..போ.."குழந்தை ஒரு கையில் , பெட்டி மறு கையில் எடுக்க,

" உள்ளே போ என்று சொன்னேன்..." பெட்டி எடுத்து அவளையும் இழுத்துக்கொண்டு உள்ளே சென்று சமாதானப்படுத்துகின்றான்...
" எனக்கு ஏதோ கோவம்.. அதுக்காக உடனே போய்விடுவாயா?...நீ பண்ணின காரியம் இருக்கே... சரி சரி... மறுபடியும் வேதாளம் ஏறிவிடும்..எல்லாரும் தப்பு பண்ணிட்டு என்னை தண்டியுங்க....ஆனா இனி பரமு பற்றி யாரும் பேசக்கூடாது .." சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்...

உள்ளே வந்த விசாலம் அம்மா, கதவை அடைத்துவிட்டு, மதுவை கட்டிப்பிடித்து அழுதார்... மது சிரிக்கிறாள்..

" அம்மா என் நடிப்பு எப்படி..இனி மாப்பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்கும்வரை ரகுவுக்குத் தெரியாமல் நாம் உதவணும்..?"
" என்னமோ மா. ரகுவை, மாமாவை உன்னால்தான் சமாளிக்க முடியும்...நான் செய்த புண்ணியம் நீ கிடைத்தது.."

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆனால் 10 வருடம் முன் உள்ள கோபம் வேறு. இப்போது வேறு .. அப்போது ரகு மதுவின் பின்னால் பூனைகுட்டி போல , எப்போதும் அவளுடன்.. ஆனால் இப்போது பிரிவு சகஜமான ஒன்று.. இப்போது பேசுவதே அபூர்வம்..
*************************************************************************தொடரும்...******************************************************

No comments: