Wednesday, February 27, 2008

பாகம் -14

குழந்தைகளிடம் பக்குவமாய் தாத்தாவும் பாட்டி முன்னிலையில் ரகுவும் , மதுவும் எடுத்துச்சொல்கிறார்கள்.. 11 வயது மகள் புரிந்துகொள்கிறாள்.. அப்பாவின் மேல் அதிக பிரியமும், மரியாதையும் கொண்ட அவள் முதன்முறையாக அப்பாவை கொஞ்சம் வெறுக்கிறாள்..
கோபப்படுகிறாள்... அம்மாவை அதிகமாக நேசிக்கிறாள்..அதையும் மது சரி செய்கிறாள்..
தன் மேலும் தப்பு இருக்கு என்றும் , அப்பாவின் முடிவும் அவர்பொறுத்த மட்டில் சரியே என்று பெண்ணிடம் விளக்குகின்றாள்..


பெண் ஹாஸ்டலில் விரும்பி சேர்கிறாள், தன் படிப்பு மற்றும் டென்னிஸ் விளையாட்டின் நிமித்தம்..5 வயது பையனுக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை.....தாத்தா பாட்டியிடம் , வேலையாட்களிடம் வளர்ந்தவன்..

ரகுவிற்கு ,யாரும் தனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்றிருந்தாலும் , தடுக்கவில்லை என்று திருப்தி.. தன் அருமை பெண் தன்னிடம் பேசவிரும்பவில்லையே என்பது மட்டும் வருத்தம்.. மறு கல்யாணத்திற்கு பெண்பார்க்க சொல்லிவைக்கிறான்..

-------------------------------------------------------------------------------------------------------------------

எல்லாரும் தன்மேல் பரிதாபப்படுவது மதுவுக்கு பிடிக்கவில்லை... சந்தோஷப்படுத்தவேண்டி, பையனின் பிறந்த நாளுக்கு , தன் வீட்டாரையும், நிஷா, சுந்தர், டாக்டர் சங்கர் ,சீதாம்மா , எல்லோரையும் அழைக்கிறாள்....
விழா முடியும் போது , எல்லோரும் முன்பு போல் ரகுவிடம் அன்பாக பேசவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறாள்..

" நான் ஒரு அதிர்ஷ்டசாலி.. எதிர்பார்க்காத அழகான திருமண வாழ்க்கை, பரிசாக அருமையான குழந்தைகள், அன்பான மாமா, அத்தை, உறவுகள் கிடைத்தது...இந்த உறவுகள் எப்பவும் மாறாது...இதை தக்க வைக்காதது என் தவறே..முடிந்தால் நானே நல்ல பெண் பார்த்து வைப்பேன் ரகுவுக்கு " என்கிறாள்..

ரகுவை எல்லாரும் ஒருமாதிரியாக பார்க்க, அதற்கும் மது தான் காரணம் போல் எழுந்து உள்ளே சென்றுவிடுகிறான்...ரகுவிடம் அனைவரும் சமாதானம் பண்ண முயல, அவனோ மது வேலையை விடுவது ஒன்றே தீர்வு, மறுபேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறுகின்றான்.

" ரகுவும் பாவம்.. வருடத்தில் பாதி நாட்கள் நான் பயணத்தில்.. எல்லா அலுவலக பார்ட்டிகளுக்கும் தனியாக செல்கிறார்.. வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்...அவரை கூட இருந்து கவனிக்க கண்டிப்பா ஒரு துணை தேவை.. அவர் முடிவு தவறில்லை...."ஒருபக்கம் மதுமேல் பாவமாக இருக்கிறது.. ஆனாலும் அவள் பிடிவாதத்தினால் கஷ்டப்படட்டும் என்றே தோன்றுகிறது , ரகுவுக்கு..

"நான் என்ன குறை வைத்தேன் அவளுக்கு.. வேலையை விட்டுவிட்டு என்னையும் வீட்டையும் கவனிக்கலாமே.. பார்க்கலாம் அவளா வருவாளா என்று.."தப்புக்கணக்கு போடுகிறான், இன்னும் அவளை முழுவதும் புரிந்துகொள்ளாமல் ...

விசாலம் அம்மாவுக்கு மது , ரகுவை விட்டுக்கொடுக்காமல் பேசியது ஆறுதலாயிருந்தது..
" எல்லாத்தையும் உன் தலையிலேயே போட்டுக்கொள்கிறாயே மா.?..என்னவோம்மா, ஊருக்கு உன் சேவை தேவையாயிருக்கு... என் சேவை உனக்கு எப்போதுமிருக்கும்...." கண்கலங்க,


" அம்மா இப்ப நான் தெளிவா இருக்கேன்.. இனி நாம் யாரும் கலங்கத் தேவையில்லை.. கடவுள் நல்ல வாழ்க்கை , வசதி , நல்ல மனிதர்கள்கொடுத்துள்ளார் என்று திருப்தியோடிருப்போம் மா.." நிதானமாக சொல்லிக்கொண்டிருக்க தொலைபேசி அழைக்கிறது...

" மது , உன் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.. உன்னிடம் பேசலாமா?.."வேந்தன்.." நன்றி.. தாராளமா சொல்லுங்களேன்..."

" அடுத்த வாரம் ஆஸ்திரேலியா செல்ல உனக்கொண்ணும் தடையில்லையே.. முக்கியமான தொழில் பொருட்காட்சி.. நாமும் பங்கேற்கிறோம்.."

" சரி வேந்தன்.. உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்..." நிம்மதியாக இருந்தது... கொஞ்சம் பிரச்சனைகளை மறக்கலாம்...

எனக்காக எவ்வளவு செய்த கம்பெனி.. ஆரம்பகாலத்தில் , பரமுவின் குடும்பத்துக்காக, ரகுவிற்குத் தெரியாமல் உதவ, பின்னர், பரமுவின் கணவருக்கு தன் கிளை கம்பெனியில் வேலை வாங்கியது, அப்பாவின் மருத்துவச்செலவுகள், இப்படி எத்தனையோ... அதற்கெல்லாம் நன்றியோடு இருக்க சந்தர்ப்பம் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டாள்..

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஆஸ்திரேலியா செல்லுமுன் பெரியவர் மதுவிடம்

"அம்மா மது, நம் கம்பெனிக்கு காண்டிராக்ட் வரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.. ஏனெனில் போவது இரண்டு புலிகளாச்சே.."சிரித்தார்

" ஆனால் முக்கியமான வேலை, வரும்போது வேந்தன் மறுமணத்துக்கு ரெடியா இருக்கணும்.. அது உன்னால்தான் முடியும் மா.. உன்னிடம் மட்டும் தான் மனம் விட்டு பேசுகிறான்..."

" கண்டிப்பாக செய்கிறேன் அய்யா.. பெண் மட்டும் நீங்க பாருங்க.. மத்ததை நான் பார்த்துக்கொள்கிறேன்..." சந்தோஷமாக சொல்கிறாள்..
---------------------------------------------------------

மறுநாள் மது அலுவலகம் வரவில்லை.. துடித்துப்போகிறான் வேந்தன்...விசாரித்து டாக்டர் சங்கரைக் காணச் செல்கிறான்...இருவருக்கும் பிடித்துப் போகவே, மதுவின் பெண் ப்ரீத்தியை காண அவள் பள்ளிக்குச்செல்கிறார்கள்...அவள் சிறந்த டென்னிஸ் வீராங்கனை என்று வேந்தன் கேள்விப்பட்டதும்,

" உன்னை ஒரு சானியா போல் ஆக்க என்னால் முடியும் .. நீ தயாரா.. நானும் டென்னிஸ் வீரன் தான்.. விளையாட்டுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம்..."

' ரொம்ப மகிழ்ச்சி அங்கிள்...அம்மாவிடம் சொல்லணும்..." ப்ரீத்தி பின் சாயங்காலம் மதுவிடம் ப்ரீத்தி கூறியபோது ஆச்சர்ய பட்டு போகிறாள்..

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கம்பெனி மீட்டிங் நட்சத்திர ஹோட்டலில்..அதுகுறித்து விவாதித்து ,சிரித்து பேசிக்கொண்டே வேந்தனும் , மதுவும் ,சுற்றும் படிகளில்( escalators??) மேலே வர, அடுத்த படிகளில் ரகு கீழே இறங்கி வருகிறான்..நேருக்கு நேர்.. அவள் சிரித்து பேசி வருவது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை .கண்டுகொள்ளாமல் செல்கிறான்..

' ரகு, ரகு..." என்று கூப்பிடுகிறாள்.. ஓடிச்சென்று வேந்தனிடம் அறிமுகப்படுத்த ரகுவின் கையை பிடிக்கிறாள்.. அவனோ கையை உதறிவிட்டு வேகமாக நடக்கிறான்...அதிக ஏமாற்றத்திலும், வேந்தன்முன் நடந்ததாலும் வெட்கி வேதனைப்படுகிறாள்...

புரிந்து கொண்டு அவளைத் தனியாக அழைத்துச்சென்று ஒன்றும் தெரியாதவர், பார்க்காதவர் போல் ,எதுவும் கேட்காமல்

' பரவாயில்லை , அவர் ரொம்ப பிஸியாயிருக்கலாம்..இன்னொருமுறை பார்த்துக்கொள்ளலாம்..." புன்னகையோடு பேச்சை மாத்துகிறார் அலுவலக விஷயத்தில்.

----------------------------------------------------------------------------------------------------------------

அன்றே டாக்டருடன் அவரது இல்லத்தில் ரகுவை சந்தித்து பேசுகிறர் வேந்தன்..

***********************************************************************************தொடரும்...

No comments: