பாகம் - 13- எனதுயிரே, எனதுயிரே....
சுந்தருக்கு ரகுவே போன் செய்து விவரம் கூறி தான் இன்னொரு பெண் தேடுவதாகவும், அவள் வேலைக்கு செல்லவேண்டாம் தன்னையும் , குடும்பத்தையும் மட்டும் கவனிப்பவளாய் இருக்கட்டும் என்கிறான்...
சுந்தர் கோபப்பட்டு திட்டுகிறான்...தயவுசெய்து இன்மேல் என்னிடம் மது பற்றி எதுவும் பேசாதே என்கிறான்..ரகுவின் கோவம் அதிகமாகுது..
யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டீங்க..எல்லோருமே மதுவுக்கு பரிஞ்சுகிட்டு வாங்க ....திட்டி போனை வைக்கிறான்.
-----------------------------------------------------------------------------------------------------
டாகடர் சங்கர் , சுந்தர், நிஷா மூவரும் ரகுவை அழைத்துப் பேசுகின்றனர்..
" புரியுது ரகு.. உங்க நிலைமை... வாழ்க்கையில ஒரு நிலைமையில் எல்லோருக்கும் இப்படித்தான் ரகு..
இப்ப பாருங்க.. நான் இங்கே தனிமையா மருத்துவமும், கோவிலும் என்று , என் மனைவியோ,மாறி மாறி அமெரிக்காவிலுள்ள மகள், மருமகளுக்கு, பேரக்குழந்தைக்கு ஆயாவா....நானும் உங்கள மாதிரி சிக்குன்னு ஒரு சின்னப்பெண்ணை கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன்...என்ன சொல்ரீ[றீ]ங்க....??.."" சிரிக்கிறார்...டாக்டர்..
" அண்ணா எப்பவுமே விளையாட்டுதானா?..." நிஷா, சுந்தர்...
" விளையாட்டா எடுத்தாதான் பிரச்சனை இல்லையே.. பாரு இந்த மதுவை, ஊருக்கு சேவை செய்யறாளாம்...எதுக்கு, சிறந்த பெண்மணி பரிசு வாங்கவா?.. பேசாமல் கணவனையும் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு எல்லா பெண்களையும் போலவருடம் ஒருமுறை ஊர்சுற்றிவிட்டு ஜாலியா இருப்பதை விட்டுட்டு...பைத்தியக்கார பொண்ணு....."
ரகு குழம்புகிறான்.. என்ன சொல்றார் இவர்...?..நமக்கு பரிந்து பேசுற மாதிரி திட்டுகின்றாரா?..
" சரி முடிவா என்ன சொல்ரீ[றீ]ங்க..?.." டாக்டர்
" பிரிவுதான் முடிவு .. இப்போதைக்கு....." சொல்லிவிட்டு எழுந்து செல்கிறான்.. ரகு.,.. அவன் போக்கை வித்தியாசமாக பார்க்கிறார்கள்..
வருத்தமாக தோளை குலுக்கி கையை விரிக்கிறார் டாக்டர்..இருந்தாலும் பின்னர் யோசிப்பான் ரகு கவலைப்படாதீர்கள் என்கிறார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மலைப்பயணம் மிகவும் இனிமையாக அமைந்ததால் ஆஸ்திரேலியா பயணத்தை மதுவுடன் செல்ல திட்டமிடுகிறான் வேந்தன்.., மதுவின் விவாகரத்து உறுதி என்ற நிலையில்..மதுவோ அய்யாவிடம் எப்படியும் வேந்தனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கலாம் என்று பெரியவரிடம் சொல்ல அவர் சந்தோஷப்படுகிறார்...
" எல்லாம் உன் கையில்தான் இருக்கும்மா.."
" அது என் கடமையும் அய்யா..."
----------------------------------------------------------------------------------------------------------------------------
வீட்டில் ரகுவும் , மதுவும் பேசாமல் இருப்பது விசாலம் அம்மாவுக்கு கொஞ்சமாய் புரிகிறது....இன்று எப்படியும் கேட்கணும்..
" அம்மா சாப்பாடு எடுத்து வையுங்கள்...." ரகு
" மது என்னன்னு பாரம்மா... அதான் மது வந்தாச்சே..."மது வருகிறாள்..
" இல்ல நீங்க வாங்க.. இல்லாட்டி நான் போகிறேன்.." ரகு
" என்னம்மா நடக்குது இங்க...." கலக்கத்துடன் அம்மா
"அது வேற ஒண்ணுமில்லம்மா....வந்து.." பயத்துடன் மது
" நான் சொல்றேன்மா..." ரகு
கண்களால் கெஞ்சுகிறாள் மது அவனருகில் வந்து...
" அம்மா..." என்று ரகு ஆரம்பிக்க , ரகுவின் கையை அழுத்தமாக பிடித்து கெஞ்சுகிறாள்..
" ஒண்ணும் இல்லம்மா கொஞ்சம் மனஸ்தாபம்.. அவ்வளவே..." சமாளிக்கிறாள்...
" இல்.....லை...அம்மா, நானும் மதுவும் பிரியலாம்னு ..."
" என்னடா சொல்ற?.. மது என்னம்மா இதெல்லாம்.. என் வயத்துல நெருப்ப அள்ளிக்கொட்றாப்ல.."தலையில் கைவத்து அப்படியே உட்காருகிறார்...
மது அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுகிறாள்...ரகு வெளியேறுகிறான்..கோபமாய் வருகிறது ரகுமேல் மதுவுக்கு..
என்ன ஒரு கல்நெஞ்சம்.. வயதானவர்களிடம் பக்குவமாகச்சொல்லாமல்..
" அம்மா நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க..."
" போதும் மா உங்க நாடகம்.. எதுவானாலும் என்னை ஒரு மனுஷீன்னு நினைத்து என்னையும் கலந்துக்கோங்க மா.."
" ரகுவிற்கு அதிகாரம் கொடுத்து பாதி நான் கெடுத்தேன்.. நீ அவனுக்கு அன்பும் , பணிவும் கொடுத்து முழுவதுமா கெடுத்துட்டேம்மா.."
" எல்லாம் நல்ல படியாக நடக்கும் னு எனக்கு தைரியம் சொல்லுங்கம்மா.. எப்பவும் போல.. .இப்பல்லாம் நான் ரொம்ப கோழையாயிடுவேன் போல் இருக்கும்மா."அணைத்துக்கொள்கிறார் மதுவை.,..பரிதாபப்பட்டு..
" ஒண்ணும் கவலைப்படாதேம்மா.. உன் எண்ணத்துக்கும் நீ பண்ற சேவைக்கும் அவனுக்கு , பைத்தியக்காரனுக்கு கொடுத்து வைக்கலைன்னு நினைச்சுக்கோ.." ஆறுதலளிக்கிறார்...
இருந்தாலும் அழுது முடித்ததும் புது தெம்பு பெறுகிறாள்.. தான் இனி அழக்கூடாது என்றும் முடிவெடுக்கிறாள்..
Wednesday, February 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment