Wednesday, February 27, 2008

பாகம் - 12

மறுநாள் அலுவலகம் வந்த வேந்தன் காதுக்கு மதுவின் விவாகரத்து விஷயம் மூத்த வக்கீலின் மூலம் எட்டுகிறது..
அதிர்ச்சியாயிருந்தாலும், அதுபற்றி தெரியாதவர்போல் காட்டிக்கொண்டார்... அவள் மேல் கரிசனம் கூடியது... இவ்வளவு பிரச்சனைக்கு
நடுவில் அலுவலக வேலைகளையும் கருத்தாக செய்கிறாளே...


அவளுக்கு முடிந்த அளவு உறுதுணையாக இருக்க நினைத்தான்..
அடுத்த வார பயணத்தை ஒத்திப்போட கூட வேண்டாமென்கிறாள்...
வேந்தன் பயணத்தில் மதுவும் கலந்து கொள்ள, சுகமாகவே இருக்கு ...அவளுக்காக, அவளுக்கு பிடித்த எழுத்தாளர் புத்தகம் ஒன்றினை பரிசாக அளிக்கிறார்.. அவளுக்கு சந்தோஷம்.. அதை வைத்து பேசுகிறார்கள் மலை பயணத்தின்போதே...திடீரென்று..கார் நின்றது...


" அய்யா எதோ வண்டியில் பிரச்சனை..கொஞ்சநேரம் இருங்கள் .என்னவென்று பார்க்கிறேன்.."

" மொதல்லே பார்க்கக்கூடாதா .." என்று சொல்லிவிட்டு கீழிறங்கினால் அழகிய வயல் சூழ்ந்த கால்வாயோடு பசுமையான இடம்..அள்ளிச்செல்கிறது மனதை அந்த இடத்தின் ரம்மியம்...

இருவரும் காலார நடக்கின்றார்கள்.. தன்னைப்பற்றியும் அமெரிக்க வாழ்க்கை பற்றியும் மது கேட்காமலே பகிர்கிறார் வேந்தன்..

"உங்களைப்பற்றி விருப்பமிருந்தால்......"

மதுவும் தன் ஆசைக்கணவரைப்பற்றி சொல்கிறார்...முடிவில் ஒரு பெருமூச்சு...கண்களில் கலக்கம்.. சமாளிக்கிறாள்..

மெளனம்... வேந்தனுக்கு அவளை தைரியப்படுத்தவும் , சமாதானப்படுத்தவும் ஆசை.. ஆனால் எப்படி சொல்வது தனக்குத் தெரியுமென்று..?

"நீங்கள் இனி எனக்கு ஒரு நல்ல தோழி... என்ன உதவியோ என்னிடம் தயங்காமல் கேளுங்கள்.. உங்களுக்குச் செய்வது என் கடமைபோல.."

" கண்டிப்பா சார்..."

" இன்னும் சார் தானா..?.. தயவுசெய்து வேந்தன் என்றே சொல்லுங்கள் மது.."

" சரி...நீங்களும் இனி என்னை ஒருமையில் அழைக்கலாம் அப்படியென்றால்..."
"சரி மது..."


" ஏன் இன்னொரு திருமணம் பண்ணக்கூடாது..."

" நீங்களுமா... என்னவோ தோணவில்லை.. என் மனதுக்கு பிடித்த அப்படி ஒரு பெண் இதுவரை கிடைக்கவில்லை..."

" அது என்ன "அப்படி ஒர் பெண்..?. எப்படியாம்...?" கிண்டலாக மது அவர் மனதை நோட்டம்விட்டு அப்படி ஓர் பெண் தேடலாம் என்ற நோக்கில்...
"எப்படின்னா................ம்...........ம்........ம்..........உங்களைப்போல....''


" விளையாட்டு வேண்டாம் .. உண்மையா சொல்லுங்கள்.. அமெரிக்காவில் படித்தவர்... அதுபோலவா..."

" உண்மையாகத்தான் சொல்கிறேன்..நான் பெண்களிடமே குறைவாக பேசுவேன்.. ஏனோ உங்களிடம்தான் இவ்வளவு பேசியுள்ளேன்...அதனால்தான் சொல்கிறேன், உங்களைப்போல் ஒரு பெண் என்று.."

" சரி பார்க்கிறேன்.. " என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு காரில் மேற்கொண்டு பயணத்தை தொடர..

வேந்தனுக்கு சந்தோஷம் நம் விருப்பத்தை தெரிவித்துவிட்டோம் என்று...மதுவுக்கோ, அட எவ்வளவு எளிமையா தன் விருப்பத்தை சொல்கிறார்.. நல்ல பெண்ணாக பார்க்கணும் என்று மனதினுள்..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேந்தனும் மதுவும் மலையில் உள்ள தொழிலாளர்களுடன் அவர்களின் குடியிருப்பு தோட்டத்திலேயே கூட்டம் வைத்துள்ளனர்..


மது சாதாரணமாக ஒரு பாறையின் மீது அமர்ந்து அவர்களின் நலன் விசாரிப்பதும், அவர்களோடு வித்தியாசமில்லாது பழகுவதும், அவள் மீது மதிப்பும் , மரியாதையும் கூடுகிறது...

" ஏன் மது, இங்குள்ளவர்களுக்கு விளையாடுவதற்கு நல்ல முறையில் மைதானம் ஒன்று அமைத்துத் தரணும்." ஆச்சர்யத்துடன் மது..

" செய்யலாமே, வேந்தன்.. எனக்குத் தோணவில்லை பாருங்கள்..." சந்தோஷப்படுகிறாள், அவனின் முழுமையான பங்கேற்பு குறித்து...

ரகுவுடன் ஒரே வீட்டில் எதிரிகள் போல் பேசாமல் வாழும் நரகத்தை மறந்தாள் சிறிது.. தொழிலாளர்களுடன் உணவு உண்டபின் ரம்மியமான எஸ்டேட்டை சுற்றிப்பார்க்கின்றனர் இருவரும்..

அதிக குளிர்.. மதுவோ சாதாரண காட்டன் புடவையில்.. தன் மேல்கோட்டை தருகிறான் வேந்தன்..

" நீங்கள் குளிர் தாங்கமாட்டீர்கள்.. தயவுசெய்து..." அவன் கரிசனம் பெரியவர் போன்றே உள்ளது.. என்ன அவர் இவளை திட்டுவார் சம்மதிக்க வைக்க..பிடிவாதமும் அவருக்கு..

அழகாக மறுக்கிறாள்.., தனக்கு இந்த குளிர் பிடிக்குமென்று....சிரித்துகொள்கிறார் அவள் சமாளிப்பதை ..
இரவு தான் கொடுமையாக உள்ளது . விசாலம் அம்மா, குழந்தைகளுடன் பேசியதும் , தூங்கலாம் என்றால் நினைவுகள் வாட்டுது..

ஏன் ரகு இப்படி என்னிடம் பேசாமல்....??? நடந்துகொண்டே இருந்தவள் வெளியே வேந்தன் நடப்பதைப் பார்க்கிறாள்..

"என்ன தூங்கவில்லையா?... " " இல்லை.. தூக்கம் வரலை.. உங்களுக்கு?" " எனக்கும்தான்... "
" சரி பேசிக்கொண்டிருக்கலாமே... "அப்படியே மேஜை மேல் உற்சாக பானம் இருப்பதை கண்டு முகம் மாறுவதை பார்க்கிறார்..

" இது அமெரிக்கா இல்லையே. தவிர்க்கலாமே..உடல்நலத்துக்கு நல்லதில்லையே..."

" உங்களுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்" என்று எடுத்துச்செல்ல சொல்கிறார், வேலையாளிடம்..அவளின் அக்கறை குறித்து மகிழ்கிறார்..

தன்னை யாரும் இதுவரை சொன்னதில்லை... மதுவுக்கோ அவர்மேல் மரியாதை கூடுகிறது, பானத்தை தான் சொன்னதும் தவிர்த்ததால்..

இருவரும் நேரம்போவது தெரியாமல் பேசிக்கொண்டிருக்க,,பின் தூங்க சென்றனர். தூங்கும்போது பழைய நினைவுகளில் மீண்டும் ரகுவுடன் முதன்முறையாக திருமணம் முடிந்து தேனிலவுக்கு வந்தது ,ஞாபகம் வந்து தூக்கத்தை தொலைத்தாள்.... அதேபோல் வேந்தனும் தூங்க மனமின்றி...........

*************************************************************************************************தொடரும்...

No comments: