Saturday, February 23, 2008


பாகம் - 10

மறுபடியும் அலுவலகம் வந்தவளை வேந்தன் தொலைபேசியில்..
" இன்று முக்கிய ஆலோசனை.உள்ளது... எங்கள் வீட்டில் இரவு விருந்தில் கலந்து கொள்ள முடியுமா?"
சரி என்கிறாள்.. வேறு வழியில்லை..


மாலை சென்றதும் பெறியவரை சந்திக்க அவரது அறைக்கு அழைத்துச்செல்லப்படுகிறாள்.
" இப்பதான் மா உன்மேல என் மகனுக்கு நம்பிக்கை வந்திருக்கு. எனக்கு ரொம்ப சந்தோஷம்..
" அவன கூட்டிட்டு நம்ம எஸ்டேட் எல்லாம் சுத்தி காண்பித்து விவரங்கள் தரணும் மா. அவன் ரொம்ப
நல்ல மனதுக்காரன் மா..என் மத்த பையன்கள் போல் அவனுக்கு சுயநலமில்லாதவன்.. "


" சரி ஐயா. "
" அம்மா மது அப்படியே அவனுக்கு இன்னொரு திருமணம் செய்ய நீதான் அவன் மனதை மாற்றணும்."
" ஹிஹி.. சரி அய்யா.."
அதற்குள் வேந்தனும் வந்து கலந்து கொள்கிறார்...எல்லா விஷயத்தையும் கலந்தாலோசிக்கின்றனர்.
சாப்பிட அழைப்பு வந்ததும், பெரியவர் எழும்ப முயல, மது கை கொடுத்து தூக்குகின்றாள்..


அவள் கை பிடித்தே நடந்தும் வருகிறார்.. வேந்தனுக்கு ஆச்சர்யம்.. யாரையும் அனுமதிக்காத அப்பா,
மதுவுக்கு மட்டும் ...அவள் அலட்டிக்கொள்ளாமல் அக்கறை கொள்ளும் விதமோ இன்னும் அருமையாயுள்ளது..
வேலை ஆட்கள் பலர் இருந்தாலும் மதுவே பார்த்து பார்த்து பரிமாறுகிறாள், தந்தைக்கு...
மறுபடி தனக்கும் இப்படி ஒருத்தி அமைந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நினைக்கிறார்..
அப்பாவிடம் உரிமையோடு நடந்தாலும் தன்னிடம் மிக அளந்தே பேசுகிறாள்...


நாம் அவளிடம் கொஞ்சம்
கடுமையாக நடந்துகொண்டோமோ என்று நினைத்து , இனி அவளிடம் நல்ல நட்பு பாராட்ட
வேண்டும் என்று நினைக்கிறார்.... சசல அலுவலக கோப்புகளை பார்க்க மாடிக்கு அழைத்துச்செல்கிறான் வேந்தன்..

அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் கோப்பைகளை , புத்தகங்களை, பெயிண்டிங்குகளை அதிசயத்துடன் பார்க்கிறாள்..

" இவையெல்லாம்.."

" ஆமா என் இள்மைக்காலத்தில் எனக்கு கிடைத்தவை.. புத்தகங்கள் என் தோழன்... தோட்டக்கலை, பெயிண்டிங் , இப்படி பல பொழுதுபோக்கு.."

புத்தகம் , எழுத்தாளர் பற்றி பேசுகிறார்கள்.. சந்தோஷமாக சிறு குழந்தைபோல புகைப்படங்கள் , எல்லாவற்றையும் காண்பிக்கிறார்.. இருவரும் கொஞ்ச நேரம் தத்தம் கவலை மறந்து பேசுகின்றனர்.


வேந்தனுக்கு ஆச்சர்யம்.. இதுவரை தனிமை விரும்பியாயிருந்த அவர் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக ஒரு பெண் தன் மனதை அலைக்களிப்பதை தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்.

மதுவுக்கு வேந்தன் நட்புமுறை பாராட்டுவது அலுவலகத்து பொறுப்புக்கு எளிதாகப்படுகிறது..மேலும் அய்யா சொன்னதுபோல் திருமணம் பற்றி அவரிடம் பேச ஏதுவாயிருக்கும் என நினைக்கிறாள்..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விருந்து முடிந்து வீட்டுக்குப்போகும் போது இன்று இரவு எப்படி போகுமோ , விசாலம் அம்மாவுக்கு தெரியுமோ, என்னாகுமோ என்று கலங்குகின்றாள்..அப்படியேதுமில்லை..

படுக்கும்போது மறுபடியும் ரகு ,

" ஏதாவது சொல்லணுமா.."

"..ம்.."

"என்ன.."

" யாருக்கும் இன்னும் கொஞ்ச நாள் தெரியவேண்டாம்.. அவர்கள் தாங்க மாட்டார்கள்.."

"..ம்.." அவன் சென்றுவிட மனசு கனத்தது..அலுப்பு அதிகமானதால் தலைவலியுடன் தூங்கியும் விட்டாள்..

--------------------------------------------------------------------

மறுநாள் சனிக்கிழமை.. விசாலம் அம்மா மகள் பரமுவை பார்க்க செல்வார்கள்.. சிலசமயம் மதுவும் கூட.
மதுவைக்கேட்கலாம் என்று சென்றவருக்கு நல்ல காய்ச்சலில் மது முனகிக்கொண்டிருப்பது தெரிகிறது...

" என்னம்மா ..இது.. எப்போதிருந்து ..எனக்குத்தெரியாதே.." பதருகிறார்..

மாத்திரை கொடுத்து வருடுகிறார்.. ரகு வருகிறான் ..

" அம்மா ., கிளம்புறேன்.."

" மதுவுக்கு காய்ச்சல்னு என்கிட்ட சொல்லக்கூடாதப்பா?..."

முழிக்கிறான் ரகு..

" இல்லம்மா , அவருக்கும் தெரியாது.. நான் சொல்லல..."

" வித்தியாசமாக உணர்கிறார்.. ரகு எப்பவும் பதருவானே..

" என்னமோ மா , நல்ல பொண்ணு, இப்படி காய்ச்சல் அடிக்குது...வேலை வேலைன்னு..."

"அதேதான் நானும் சொல்றேன் வேலைதான் அவளுக்கு முக்கியம்..மனுஷாள் இல்ல.."

" சரி இப்போ அவள குழப்பிட்டு இருக்காம டாக்டர்கிட்ட கூட்டிட்டு போ.."

" இல்லம்மா வேண்டாம். சரியாயிடும் ஓய்வு எடுத்தா... நீங்க கிளம்புங்க கோவிலுக்கு.."

அம்மா சென்றதும் , " ஏதவது உதவி வேணுமா "

" வேண்டாம் .. நன்றி.."

" இந்த திமிருக்கொண்ணும் குறைவில்லை.." எரிச்சலாய் போகிறான்..

புரியவில்லை , இவளுக்கு, வேறு என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறான்...

ஆனாலும் அவன் பேசிய , திட்டிய 2 வார்த்தை ஆறுதலாயிருந்தது.. என் ரகு கோபப்பட்டாலும் என்னிடம்தான் இருப்பான் என்ற தெம்பு வந்தது... அது பொய் என்று தெரியாமல்..

No comments: