Monday, December 3, 2007

கேள்வியும் பதிலும்..
================
தினம் ஒரு கனவு!. வேளைக்கொரு கேள்வி!.

இரவு படுக்குமுன் பரமனிடம், சில பல்லவி!

வீட்டை அலங்கரிக்க , கைவளை ,கால்கொலுசு பூட்ட,
பூச்சூட ஒரு பெண் தேவதை கேட்டு நான் மன்றாட!,

கிரிக்கெட், கால்பந்து, விளையாட ,சண்டைபோட ,
நீச்சலடிக்க அம்மாவிடம் கலாட்டா பண்ண தம்பியை அவன் கேட்க!,

மன்றாடி முடிந்ததும் சந்தேகமாய் கேட்கிறானய்யா ஒரு கேள்வி.?..
இருவர் ஜெபத்திலும் இறைவன் யாருக்கு சாய்ப்பான் செவி?
மடியில் அமர்த்தி குழந்தையிடம் தான் கேட்பான் இறைவன் முதலில்...!!

அப்படியென்றால் வீணாக நீங்கள் வேண்டாது,
கலராக குழந்தை கேளுங்கள் , நான் கறுப்பென
பள்ளியில் பட்ட கஷ்டம் தம்பி பட வேண்டாமே
என மடக்குகின்றான் என் பதிலில்..!!

பெற்றோரைவிட படைத்தவனையே நம்பு ஜெபம் மூலம், என் வளர்த்துவிட்டேனே கடவுளே பதில் உண்டு உன்னிடம்..

என உறங்கச்செல்கையில் அம்மா பிளீஸ் இன்னொரு கேள்வி?
தம்பிவந்ததும் யாரை துளியாவது அதிகம் நேசிப்பீர்கள்?
குழந்தைக்கே ஏன் நமக்கும் இன்றும் அன்பில் உள்ள போட்டி குணம்..

நீதானடா செல்லம், என இப்போதைக்கு சொல்லி வைத்தேன்,
கடைக்குட்டி விவரம் அறிந்து இக்கேள்வியை கேட்கும் வரை...

-------முதல் குழந்தையின் கேள்விகளுக்கு விடை சரியா?., அல்லது, நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள் சொல்லுங்கள்,

2 comments:

N Suresh said...

இந்த நல்ல பதிவிற்கு ஒரு பின்னூட்டம் கூட இல்லையே!

இறைவன் பார்வையில் எல்லோருமே
குழந்தைகள் தான்.

ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் இருப்பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குழம்பு வைக்கச் சொன்னால் அந்த வீட்டுத் தாய் என்ன செய்யக் கூடும் அதைத் தான் அன்போடு நமது தாயும் தந்தையுமான இறைவன் மிகவும் அன்போடு செய்வார்.

முதல் குழந்தை, அம்மா என்னை அதிகம் பிடிக்குமா, பாப்பாவை அதிகம் பிடிக்குமா என்று கேட்டால், அதறும் மறுகேள்வியாக
"அன்பு மகனே உன்னோடு தானே நான் அதிக காலம் நான் இருக்கிறேன்..கணக்கிட்டுப் பாரு.. அம்மா யாரோட அதிக நேரம் செலவு செய்தார்களென்று??? - என்று செல்லமாக கேட்கலாம்

அன்புடன்
என் சுரேஷ்

ரிதன்யா said...

அக்கா,
கடவுள் முதலில் கடவுளுக்குத்தான் செவிசாய்ப்பான்.

எத்தனை துன்பமிருந்தாலும், பெண் ஆசை போகவில்லை தானே. ஆம் அக்கா நான் விரும்பிகேட்டது பெண்தான். ஏனெனில் ஒரு குடும்பம் தழைக்கவேண்டும் என்றால் பெண்ணால்தான் முடியும்.
குழந்தைக்கடவுள் குழந்தைகளின் ஜெபத்தை தான் முதலில் நிறைவேற்றுவான், நிறைவேற்றி இருக்கிறான்.