Wednesday, October 20, 2010
சின்ன சின்ன தகவல்கள்,..
குழந்தையின் பள்ளியில் ஆசிரியர் பெற்றோர் சந்திப்பு நாள் நேற்று..
உள்ளே சென்றால் நம்ம வீட்டு வாலு ,வரிசையில் ஜிம்னாஸ்டிக் வகுப்புக்கு சென்றார், பின்னால் கையை கட்டிக்கொண்டு..
டாடா காண்பித்தால் கூட கண்ணாலே பேசிவிட்டு புன்னகையை பொத்திவைத்துக்கொண்டு சென்றார்..
அதற்கப்புரமும் 1 மணி நேரம் ஆடிட்டோரியத்தில் பிரின்சிபால் பேச்சு , நம்ம ஃபீட்பேக் , காஃபி நேரம் எல்லாம் முடிந்து
அந்தந்த ஆசிரியரை சந்திக்கும் நேரம்.. அப்பதான் நம்ம கிட்ட குழந்தைகளை ஒப்படைக்கின்றார்கள்..
நாங்கள் பேச ஆரம்பிக்குமுன்பே ஆசிரியர் வருத்தப்பட ஆரம்பிக்கின்றார்..
" கிளாஸ் ஒர்க் எல்லாம் கச்சிதமா செய்வானே.. நீங்க கூட அவன் நோட்புக் பார்த்திருப்பீங்களே.. ஆனா பாருங்க , தேர்வில் தப்பு செய்திருப்பதை..:(( "
"பரவால்ல சார். நான் இந்த தேர்வுகளை பொருட்படுத்துவதில்லை.. தினமும் படிப்பதுதான் மிக முக்கியம் என ஆறுதல் சொல்லவேண்டியதாயிற்று..:)
முக்கியமா பையன் நடவடிக்கை , ஒழுக்கம் எப்படி இருக்கிறது என கேட்டபோது , ஆச்சர்யத்தோடு ( யாரும் இப்படி கேட்டதில்லையாம் ) " மிக கச்சிதம்.. ரொம்பவே ஒழுங்கும் பயமும் கொண்டவன்.." என சொல்லிவிட்டு நிப்பாட்டிவிட்டு சிரித்தார்.. " என்ன விஷயம் " என கேட்டதும், சிரித்துக்கொண்டே,
" சேட்டை செய்வதுக்கும் பெர்மிஷன் கேட்கிறார்.. அதாவது வகுப்பில் ஓட, விளையாட..."
நாங்களும் சிரித்துவிட்டு விளக்கினோம்.. அவன் இதுவரை அமெரிக்கன்/ப்ரிட்டிஷ் பள்ளியில் படித்ததும், அங்கு குழந்தைகள் பின்னால்தான் ஆசிரியர்கள் ஓடணும்.. குழந்தைகள் போக்கிலேயே பாடங்கள் நடத்தப்படுவதும் , எவ்வித கட்டுப்பாடுமின்றி இருக்கும்..பெயர் சொல்லி அழைப்பார்கள் ஆசிரியர்களை...:)
இப்ப புதிதாய் கட்டுப்பாடு உள்ள இந்திய பள்ளி என்றதும் சின்னவருக்கு புரியலை..
இருப்பினும் மகிழ்ச்சியாயிருந்தது... எல்லாம் பேசி முடிந்ததுமே ஆசிரியர் கேட்டார், " நீங்க தமிழா.?"
" ஆமா. சார்.. " .
எமக்கு அவர் தமிழ் என முன்பே தெரியும். இருந்தாலும் அதையும் அனுகூலமாக கொண்டு பொதுவில் பேசவேண்டாம் என நினைத்திருந்தோம்..
மதிய உணவில் காய்கறி அதிகம் சேர்த்து இறைச்சி தவிர்க்க சொன்னால் , ஆசிரியரே பரிதாப்பப்படுகிறார்.குழந்தைக்கு ஆதரவாய். என்னத்த சொல்ல..:)
இடையில் வகுப்பு ஆசிரியர் ஓடி வந்து " தயவுசெய்து பெர்ஃபியூம் போட்டு அனுப்பாதீங்க என கேட்டுக்கொண்டார்.. ".
எனக்குமே பிடிக்காதது .. பாவம்தான் ஆசிரியர்களும்.. விதவிதமான மணம் தலைவலி உண்டு பண்ணும்..
சீக்கிய பள்ளி.. தாளாளர் பேசுகையில் " நான் வளர்ந்ததெல்லாம் கிறுஸ்தவ பள்ளியில்.. அவர்கள் என்னை ஒரு நல்ல சீக்கியனாக வளர்த்தெடுக்க உதவினார்கள்.. ஆக நாங்க இக்குழந்தைகளை நல்ல இந்துவாகவும் , இஸ்லாமிய, கிறுத்துவ ,புத்தமதத்தவனாகவும் வளர்த்தெடுக்கும் பொறுப்பு உள்ளது " என்றார்..நன்று..
இந்திய பாரம்பர்யத்தை , கலாச்சாரத்தை , பண்பாட்டை கட்டிக்காக்கும் , லாபநோக்கில்லாத நகரின் மிகப்பெரிய பள்ளி என்றால் மிகையாகாது..
மொத்தத்தில் திருப்தியான சந்திப்பு..
-----------------------------------------------------------------------------------------------------------------------
பெரியவருக்கு கணக்கு டியூஷன் வைக்கணுமாம்.. பேரதிர்ச்சி...
ஊரில் உள்ள பிள்ளைக்கெல்லாம் நான் சொல்லி கொடுக்க ரெகமண்டேஷன் வருது.. ( ஏற்கனவே எடுத்துள்ளேன் தோழமைக்காக மட்டும் )
" ஏன் எனக்கு தெரியாத கணக்கா.. சொல்லு உடனே செய்திடலாம்.".. ( பெருமை பெருமை..)
" ஹ. எங்க சாருக்கே தெரியலை .. உங்களால முடியுமா..?"..( சவாலை பாருங்கள்..!! )
BP ஏறியதை சொல்லணுமா..?
Inverse matrix, Det, Cofactors...Algebra .. 10 நிமிடத்தில் படித்துவிட்டு 15 நிமிடத்தில் சொல்லியும் கொடுத்தாச்சு..
ஆனாலும் டியூஷன் போகணுமாம்..( ஒரு மணி நேரத்துக்கு 600-700 ரூபாய்..க்ர்ர்ர்ர்ர்ர்ர்)
இனி வேற வழியில்லை , பக்கத்தில் உள்ள அவன் வகுப்பு பையனை அழைத்து அவனுக்கு ஃப்ரீயா இனி சொல்லி கொடுக்கணும்னு முடிவு செய்திருக்கேன்.. ( என் அண்ணாகிட்ட என் பொறியியல் கல்லூரி வகுப்பு நட்புகள் கணினி கற்க வருவார்கள்.. நான் ஒருநாளும் கற்றதில்லை... வேறென்ன ஈகோதான்.. இப்ப நம்ம பசங்க நம்மகிட்ட காண்பிக்கிறாங்க.:)). )
-------------------------------------------------------------------------------------------------------------
தாய்லாந்து நாட்டில் பல மாவட்டங்களில் வெள்ளம்.. 50 ஆண்டுகள் காணாத தண்ணீர் , சேதம்...:(((
ஆனாலும் அரசும், தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு உடனே சென்று சேவை செய்வதும் மீட்பு பணியில் ஈடுபடுவதும் நெஞ்சை நெகிழ வைக்கிறது...( 24 மணி நேர நேரடி ஒளிபரப்பு)
பல வாகனங்கள் முழுதுமாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டும் மூழ்கியும்..
மலைப்பாம்புகள் கார் எஞ்சினில் அடைக்கலம் தேடி கிடப்பதும், வீட்டின் மாடியில் நிற்பவர்களுக்கு பொருள்கள் விநியோகிப்பதும், பார்க்கும்போது த்ரில்லர் படம் போல இருந்தாலும், அச்சூழலில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என எண்ணிபார்க்கும்போது மிக வலிதருகிறது...
6 வயது குழந்தையிலிருந்து 90 வயதினர் வரை உற்சாகமாக பொருள்களை சேகரிக்க உதவுவதை, சேவை செய்வதை பார்க்கும்போது இம்மக்கள் மீது மதிப்பு பன்மடங்கு உய்ர்கிறது...நாமும் பங்கேற்கணும்னு ஆவல் வருது..
----------------------------------------------------------------------------------------------------------
பதிவுலகின் சலசலப்பும் அராஜகமும் அடங்கி ஓய்ந்தது.. அடாவடித்தனம் இனியும் செல்லுபடியாகாது என நிரூபிக்கப்பட்டுள்ளது...
இந்த களையெடுப்பில் இறுதிவரை துணை நின்ற அனைவருக்கும் மிக்க நன்றி.. முக்கியமாய் வினவு தோழர்களுக்கு...
இனி ஒரு ஒழுங்கு வரும் பதிவுலகில்..
---------------------------------------------------------------------------------------------------------
படம் : நன்றி கூகுள்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment