




ஏற்கனவே சில நாட்களாக வரலாறு காணாத வெள்ளம் பல மாவட்டங்களில் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வந்தனர்..
இந்நிலைமையில் பாங்காக் நகருக்குள் வருடந்தோறும் கறைபுரண்டு செழிப்பாக ஓடும் மிக பிரமாண்டமான " சவ் பிரயா " ஆற்றில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது..
அணைகள் நிரம்பி வழிவதால் இன்று மாலை 5 மணிக்கு எல்லாம் திறந்துவிடப்படும் நிலையில் பாங்காக் ஆற்றங்கரையின் அருகில் வசிக்கும் மக்கள் இந்த வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்..என்று அஞ்சப்படுகிறது..
தற்போது 2,333 கன மீ தண்ணீர் திறந்துவிடப்படுவதாகவும் இது 2,830 கன மீ ஆகும்போது நகரம் முழுதும் வெள்ளமயமாகும்..கரையோறம் வாழும் 1,273 குடும்பங்கள் உடனடியாக பாதிக்கப்படுவார்கள்..
40 லட்சம் மணல் பைகள் கொண்டு ஆற்றங்கரையில் வெள்ள தடுப்பு நடவடிக்கை தூரிதமாக நடந்துகொண்டிருக்கின்றது..
படகு போக்குவரத்து முக்கியமான ஒன்று இங்கே.. நகரத்தின் அதிகப்படியான டிராபிக் பிரச்னையிலிருந்து தப்பிப்பதற்கான வழி இந்த்தகைய படகு போக்குவரத்து.. இதுவும் நிப்பாட்டப்படும் வெள்ளம் வந்தால்...
( எங்கள் அடுக்ககம் ஆற்றின் கரையில் தான்.. காலையிலேயே இங்கு மழை வேறு.. மீண்டும் மழை வரக்கூடாதே என பிராத்தனை செய்யவேண்டியுள்ளது நிலைமை )
படம் : நன்றி கூகுள்..
2 comments:
அச்சச்சோ.........
கவனமாக இருங்கப்பா.
நன்றிம்மா.
நீங்கள் படம் எடுத்துக்கொண்ட ஆறு நியாபகமிருக்குமே அம்மா..:). நிரம்பி வழிகிறது..
Post a Comment