படம் அருமையா எடுக்கப்பட்டிருக்கு..
குழந்தை , குமரனின் வலிகள் , அவர்கள் பயணங்கள் , சந்திக்கும் மனிதர்கள் , அவர்களின் நிலைகள் , சுவாரஸ்யமானவை..
வித்யாசமான படம்..
குத்துபாட்டு , அடி தடி நம்ப முடியாத பைட்டுகள் , சுவிஸ் பாடல்கள் இல்லாமல் இது போல படங்கள் கருத்தை , வலிகளை சொல்வதாய் பார்க்க நன்றே..
இசையும் கூடுதல் பலம் .
ஆனால் கரு.?
தமிழ் சினிமா யாருக்காக எடுக்கப்பட்டிருக்கோ அதில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்...
நான் எழுத நினைத்த விஷயங்களை மிக அழகாக இரு பதிவர்கள் ஏற்கனவே எழுதிவிட்டதால் , ( அதிலும் இவர்கள் ஆண்கள் என்பது மிக முக்கியமான விஷயம் )
அவர்கள் லிங் இங்கே..
அதெப்படி ஒரு பெண்ணின் பார்வையை ( வலிகளை ) எளிதில் சில ஆண்களால் மட்டுமே புரிய முடிகிறது?.
சிலருக்கு புரிந்தாலும் பயம்.. எங்கே ஆட்டு மந்தைகளின் கூட்டத்தை விட்டு விலக்கப்படுவார்களோ என.. ( அப்ப அவர் ஆணா னு கேக்கப்டாது )
சிலர் புரியவே மாட்டோம், இதுவே வசதியாகத்தான் இருக்கு.. இந்த பண்பாட்டிலேயே ( பெண் பலியாவதே ) இன்னும் ஒரு 1000 ஆண்டுகள் கடத்திடுவோம் னு பிடிவாதமாய்..
என் குடும்பத்தில் இதே போல இரு சகோதரர்கள் ( ஒருவர் அதிகம் படித்தமையால் , இன்னொருவர் விபத்தால் ) இருப்பதால் என்னால் அவர்கள் வலியை மிக எளிதாக புரிய முடிந்தது..
பெரிய சகோதரர் ( சித்தப்பா மகன் ) இன்னும் மருத்துவமனையில்..( விடுதி மாதிரி.. தன்வந்த்ரி ஹோம் ).. அசாம் ஐஐடியில் கைட் ன் அராஜகத்தால் , மூத்த மகன் என்ற வீட்டுப்பொறுப்பால் விட்டுவிட்டும் வர முடியாமல் , வருத்தங்களை மனசுக்குள் அமுக்கி...மனநிலை தவறியது..டாக்டர் பட்டம் வாங்கிய கையோடு.. )
வருடா வருடம் சென்று சந்திக்கும்போது அவன் அறைக்குள் என்னை பாதுகாப்பாக அழைத்து செல்லும்போது அப்படி ஒரு பயம் அப்பிக்கொள்ளும்...
அவன் அறையில் தங்கியிருந்த ஒரு வாலிபன் , குழந்தை போல் வந்து என்னை தொட்டு சென்றதும் கட்டில் மீதேறி மகிழ்ச்சியில் குதித்ததும் , உலக வாழ்வே வெறுக்க செய்த நிமிடங்கள் அவை.. விவரிக்க வார்த்தையில்லை...:(((
தம்பி ஒரு விபத்தில் பெங்களூரில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்தும் மன நிலை குழந்தையாக மாறிப்போனது.. :(
இவ்வலிகள் எப்போதும் எந்த மனநிலை சரியில்லாதவரை பார்க்கும்போதும் என் சகோ வாய் எண்ண வைக்கும்...
ஏற்கனவே காயப்பட்டதால் கண்ணீர் வரவில்லை.. சகோதரர்கள் நியாபகம் மட்டுமே..
குழந்தை அம்மாவை தேடும் ஒவ்வொரு சொல்லும் வயற்றிலிருந்து தொண்டைக்கு கொண்டு வந்து அமிழ்ந்த வலியை விவரிக்க முடியாது...தான்..
ஏனோ கண்ணீர் வருவதில்லை இபோதெல்லாம்..:)
பாலியல் தொழிலாளியை வைத்து மட்டும் இன்னும் எத்தனை தரம் --------------------?...
வலிகளுக்காக பார்க்கலாம் ...முடிந்தால் ஒரு மனநோயாளியையும் சென்று .
இதோ நான் ரசித்த இரண்டு விமர்சனங்கள்..
நந்தலாலா : தாய்மைச் சுமை
http://makalneya.blogspot.com/2010/11/blog-post_29.html
நந்தலாலா -ரசிகனுக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம்
http://vennirairavugal.blogspot.com/2010/11/blog-post_30.html
படம் : நன்றி கூகுள்..
.
12 comments:
உங்களோட விமர்சனத்தையும் சொல்லி இருக்கலாம்
கவிதை காதலன் said...
உங்களோட விமர்சனத்தையும் சொல்லி இருக்கலாம்//
கொஞ்சம் இணைத்துள்ளேன்..
வித்யாசமான படம்..
குத்துபாட்டு , அடி தடி நம்ப முடியாத பைட்டுகள் , சுவிஸ் பாடல்கள் இல்லாமல் இது போல படங்கள் கருத்தை , வலிகளை சொல்வதாய் பார்க்க நன்றே..
நியாயமான கருத்து
அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/
படத்தின் கருவுடன் உடன் படாவிட்டாலும்,படம் அருமையா வந்திருக்கு என்று நடுநிலைமையுடன் எழுதி ’ஒருபால் கோடாத’ விமர்சகர் தாங்கள் என்று காட்டி விட்டீர்கள்.
வாழ்க.
நன்றி கவிதை காதலன் பார்வையாளன் ம.தி.சுதா சென்னை பித்தன் சார்.
படம் சுமார் என்று ஒரு தளத்தில் படித்தேன்
வருக தொப்பி..
அவரவர் ரசனயை பொறுத்துன்னு நினைக்கிறேன்..
உங்கள் பார்வையில் இருக்கும் கருத்துக்களை அப்படியே ஏற்று கொள்கிறேன் ஷாந்தி...:))
ur blog header is so nice...:))
ஆனந்தி.. said...
உங்கள் பார்வையில் இருக்கும் கருத்துக்களை அப்படியே ஏற்று கொள்கிறேன் ஷாந்தி...:))//
நன்றி ஆனந்தி..
// ur blog header is so nice...:))//
இது "அவர்கள் உண்மைகள் " என்ற பதிவர் செய்து தந்தது.. பொதுவில் நன்றி சொல்லலாமான்னு தெரியலை..
இருப்பினும் இதை சாக்காக வைத்து சொல்கிறேன்..
நன்றி நண்பரே...
நன்றி ஆனந்தி.
Post a Comment