Tuesday, November 30, 2010

இறுதிவரை லிவிங்-டுகெதர் - சிறுகதை..

அமெரிக்காவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு அடையாரிலிருந்து பேசினாள் ஷான் என

செல்லமாக முன்னாள் கணவனால் அழைக்கப்படும் ஷாந்தினி.

வழக்கமான விசாரிப்புக்கு பின் ,

" சொல்லு ஷிவா. என்ன தயங்குற .?"

" எனக்கே என் மேல் அவமானமா இருக்கு ஷாந்தினி.."

" ஹேய்.. என்ன இது.. நான் உன்னோட பெஸ்ட் பிரண்ட் னு நினைச்சு சொல்லு."

" ம்."

" எ.......ன்...........ன. சொல்லு.?"

" நா.........ன் கீர்த்தி கி.........ட்ட புரோபஸ் பண்ண...............லாம் னு இருக்................கேன்.."

" ஹேய்.. வாட் எ சர்ப்ரைஸ்... ஐம் வெரி ஹேப்பி பார் யு.."

" நிஜமா.?"

" இல்ல பொய்யா..:))"

" அதில்ல ஷான் , என்னமோ உனக்கு துரோகம் செய்ராப்ல தோணுது.."

" என்ன இது.?. நாம பிரிஞ்சு 4 வருஷம் ஆகுது.. இன் ஃபேக்ட். நானே உனக்கு நல்ல பொண்ணு பார்த்துட்டு இருந்தேன்.."

" அம்மா கிட்ட சொல்லவா.?"

" வேண்டாம் ஷிவா. அம்மா பழைய காலத்து ஆள்.. அவங்களால இதை உடனே ஏத்துக்க முடியாது..லீவ் இட் டு மி.."

" சரி நம்ம பையன் கிஷன் கிட்ட.?"

" ஷ்யூர்.. அவன் கிட்ட கண்டிப்பா சொல்லு.. ஹி வில் ஆல்சோ பி வெரி ஹேப்பி.. ஃபார் யூ.."

" ஷான் அதுக்கு முன்னால சில செட்டில்மெண்ட்ஸ் பண்ணிறலாம் னு நினைக்கிறேன்.. "

" வாட். " கொஞ்சம் எரிச்சலோடு.

" அதான் , உன் பேர்லயும், கிஷன் பேர்லயும் சொத்துக்கள் வாங்கலாம்னு..." முடிப்பதற்குள் ,

" டோண்ட் பி ரப்பிஷ். ஷிவா.. நீ தேவைக்கும் மேல செய்துட்ட.. உன்னோட அம்மாவை என்கூட வாழ அனுமதிச்சிருக்க..எனக்கு விருப்பமான

இந்த டீச்சிங் புரொபஷன் க்காக இந்த பள்ளி ஆரம்பிச்சு கொடுத்த . உன்னோட அறிவியல் ஆராய்ச்சிக்காக அமெரிக்காவில் இருக்க விருப்பம் உனக்கு..

எனக்கு நம்ம நாட்டுல வாழணும்னு ஆசை.. எல்லாத்துக்கும் அனுமதிச்ச.. அழகான நட்போட பிரிஞ்சோம்..

பிரிஞ்சதிலிருந்து உன் மேல மரியாதை கூடிட்டேதான் இருக்கு.. நம்ம மகனை ஒரு நல்ல தகப்பனா வளர்ப்பதைவிட , ஒரு மிகச்சிறந்த நண்பனா பார்க்கிற..

என்னை விட அதிகமா நீதான் அவன்கிட்ட அமெரிக்காவிலிருந்து தினமும் பேசுற..வழிநடத்துற. லிசன் பண்ற அவன் பிரச்னைகளை... "

" அதுக்கில்ல ஷான்.. நாளைக்கே எனக்கு இன்னொரு குழந்தை வந்தப்புரம் நான் செய்ய முடியுமோ இல்லையோ.?"

" ஸ்டாப் இட் ஷிவா.. ஏன் இப்படிலாம் திங்க் பண்ற..?.. நான் செய்வேன் உன் குழந்தைக்கு.. ஏன் நம்ம மகன் செய்வான் . அவனை அப்படித்தானே கொடுக்க சொல்லி பழக்கி வெச்சிருக்கோம்..

ஹி வில் எஞ்சாய் கிவ்விங்.பணம் நமக்குள் எப்பவாவது பிரச்னையா வருமா என்ன.? "


" சரி அம்மா கிட்ட எப்ப சொல்றது.?"

" உனக்கு ஒரு குழந்தை பிறக்கட்டும்.. அப்ப இந்தியாவுக்கு கூட்டிட்டு வருவல்ல.. அப்ப சொல்லிக்கலாம். கிஷனோட தம்பி, தங்கைன்னு.. சரியா..?.. "

" உன்னை மாதிரி ஒரு நல்ல மனைவியை இழந்தாலும் , ஒரு நல்ல தோழியா ஆயுசுக்கும் நீ இருப்பன்னு நினைக்கும்போதே என் வாழ்க்கை பூரணமா இருக்கு ஷான்.."

" நான் தான் உனக்கு நன்றி சொல்லணும் ஷிவா.. உன்னோட உறவுகளையெல்லாம் எனக்கு கொடுத்தியே.. நம்ம மகனுக்கு ஒரு நல்ல தோழனா , வழிகாட்டியா இருக்கியே.."

" இருந்தாலும் ஒரு கில்டி ஃபீலிங்.. ஷான்."

" நோ..நோ.. நெவர் ஃபீல் லைக் தட்.. உனக்கு துணை அவசியம் னு எனக்கு நல்லா தெரியும்.. உன்னோட முன்னேற்றத்துக்கு அது தேவை.. ஆனா எனக்கு அப்படியில்ல.. தம்பத்யம் எனக்கு

முக்கியமல்ல னு உனக்கும் தெரியும்... சோ.வாட் ஸ்டில் வி ஆர் லிவிங் டுகெதர் அஸ் குட் பிரண்ட்ஸ்.. இனி கீர்த்தியும் என்னோட தங்கைதான்.. விஷ் யு போத் ஆல் த பெஸ்ட் திங்ஸ் இன் லைஃப்...."

" சரி ஷான். பிலீஸ் , கொஞ்சம் பணம் மட்டுமாவது அனுப்பி வைக்கிறேனே.."

" இதப்பாரு . நீதானே சொல்வே, பொன்ணுங்கல்லாம் சொந்த கால் ல நிற்கணும். னு. என்னை அப்படி நிற்க வெச்சுட்டு இப்ப கையேந்த சொல்றியே நீயே.. வேண்டாம் ஷிவா.. ஏதாச்சும் டிரஸ்டுக்கு

அனுப்பி வை. நிறைய பணம் வெச்சிருந்தீன்னா.." சிரித்தாள்..

" உன் மேல மதிப்பும் மரியாதையும் கூடிட்டே இருக்கு ஷான்.. யு ஆர் எ வெரி டிஃப்ரண்ட் பெர்சன்.. உன்னை மாதிரி ஒரு பெண் குழந்தை பெற்று வளர்க்கும் ஆசை வந்துடுச்சு."

" ஐ ஃபீல் ஹானர்ட் ஷிவா..."

" கீர்த்தி என்ன செய்றாங்க.?.. எப்போ கல்யாணம்..?"

" அவங்க ஃப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட்.. திருமணம் இப்ப இல்ல.. இப்போதைக்கு லிவிங் டுகெதர் மட்டும் .கொஞ்சம் எனக்கு என்மேல பயம்தான். :) "


" எனக்கு உன் மேல அதிகமா நம்பிக்கை இருக்கு. நீ நிச்சயமா ஒரு நல்ல கணவனா இருப்ப னு .. கோ அஹெட்.. "
.


படம் : நன்றி கூகுள்..
.

43 comments:

dondu(#11168674346665545885) said...

ரொம்பவும் ஐடியலைஸ் செய்யப்படும் கற்பனைப் பெண்ணின் கற்பனைக் கதை. ஆனால் இவளிடமும் சராசரி சமூகப் புரிதல்தான் உள்ளது.

1. ஆணும் பெண்ணும் பெற்ற குழந்தைக்கு தாயே எல்லாம் செய்ய வேண்டும் எனச் சொல்லும் சமூகத்தின் கோட்பாட்டுக்கு இணங்க இவள் தன் பையனை தூக்கி வருகிறாள்.

2. ஏன் ஆணிடமே விட்டிருக்கலாமே?

3. அப்படியும் ஆண் தனது பங்கைத் தர முயற்சிக்கும்போது பையன் சார்பில் மறுக்க இவளுக்கு யார் உரிமை தந்தது?

4. பிற்காலத்தில் இவளும் இறந்து போக, தந்தையிடமும் ஒன்றும் பெற முடியாமல் போகும் நிலை வந்தால் (//" அதுக்கில்ல ஷான்.. நாளைக்கே எனக்கு இன்னொரு குழந்தை வந்தப்புறம் நான் செய்ய முடியுமோ இல்லையோ.?"//) அக்குழந்தையே இவளை சபிக்குமே.

5. தான் மட்டுமே தியாகம் செய்வது தனது ஆண் துணை ஒன்றுமே செய்யக் கூடாது என நினைப்பதும் ரிவர்ஸ் சுயநலமே. அதற்குக் காரணமே தாய்க்குத்தான் அதிகப் பொறுப்பு எனக் கூறியதை ஷாந்தினி சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறாள் என்பதுதான்.

6. இப்போதைக்கு எல்லாமே நன்றாக இருந்தாலும் தான் எப்போதுமே சாஸ்வதம் இல்லை என்பதை ஷாந்தினி நினைக்க மறுப்பது டூ மச். அந்த மனநிலையில் இருப்பவர்கள் இன்ஷூர் எல்லாம் செய்து கொள்ள மாட்டார்களா என்ன?

ஆக, நீங்கள் கூறும் சினேரியோ ஐடியலைஸ்ட் கற்பனையே. அதுவும் ஷாந்தினி செய்வது அராஜகம். ஆணுக்கு குற்ற உணர்ச்சியையே அதிகரிக்கும் அது. அந்த வகையில் அவள் குற்றவாளியே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

RMS Danaraj said...

என்ன சொல்ல வருகிறீர்கள்?

ஆண் விட்டுச் சென்றாலும் குழந்தையை த்ன்னம்பிக்கையோடு வளர்க்கும் தாயின் தனன்ம்பிக்கையை சொல்கிறீர்களா?

பிரிந்த கணவனிடம் நட்பாக பேசுகிறாள் சரி.அவனுடைய பொருளுதவியை மறுக்கிறாள் அதுவரைக்கும் பாராட்டலாம்.

அவன் இன்னொரு பெண்ணுடன் ( ஒன்றி வாழ்தல்தான்) வாழ்க்க்கை அமைத்துக் கொள்வேன் என்றால் உனக்கு என்ன இஷ்டமோ செய் ஏதாவது பொதுவான விஷயங்களை பற்றி மட்டும் பேசுன்னு சொல்லாமல் அவனிடம் அம்மா கிட்ட சொல்லாதே,அவன் குழந்தையையும் பார்ப்பேன் என்பது சரியான முன் உதாரணமாக தெரியவில்லை.

ஒரு கன்ன‌த்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டும் பெண் கடவுளா?

கண்ணகியை விட்டு மாதவி பின் சென்றாலும், அவனை வெறுக்க்காத கண்ணகியின் நவீன உருவமா?

பயணமும் எண்ணங்களும் said...

ஆக, நீங்கள் கூறும் சினேரியோ ஐடியலைஸ்ட் கற்பனையே. அதுவும் ஷாந்தினி செய்வது அராஜகம். ஆணுக்கு குற்ற உணர்ச்சியையே அதிகரிக்கும் அது. அந்த வகையில் அவள் குற்றவாளியே.//


:))


உங்கள் பயம் புரிகிறது சார்.. அதிலுள்ள பொறுப்புணர்ச்சியையும் பாராட்டுகிறேன்..

நிற்க..

//1. ஆணும் பெண்ணும் பெற்ற குழந்தைக்கு தாயே எல்லாம் செய்ய வேண்டும் எனச் சொல்லும் சமூகத்தின் கோட்பாட்டுக்கு இணங்க இவள் தன் பையனை தூக்கி வருகிறாள்.

2. ஏன் ஆணிடமே விட்டிருக்கலாமே?//


ஆண் கிட்ட ஏன் விட்டு வரணும்.?.. ஆசையா பெருமையா வளர்க்க ஆசைப்படுகிறாள்.. போட்டி ஏதுமில்லை.. சம்மதத்துடனே.. கணவர் இங்கே வேலைக்கு ( ஆராய்ச்சிக்கு ) முக்கியத்துவம் கொடுப்பவர்..

சமூகத்துக்கு பயந்து அல்ல..

பயணமும் எண்ணங்களும் said...

அப்படியும் ஆண் தனது பங்கைத் தர முயற்சிக்கும்போது பையன் சார்பில் மறுக்க இவளுக்கு யார் உரிமை தந்தது?//

ஒரு குழந்தைக்கு தேவை பணமும் சொத்தும் மட்டும் அல்ல.. அவன் ஒரு நல்ல மனிதனாக வாழ்க்கையை வாழ பழக்குதல் அதைவிட முக்கியம்..

தாய் சொல்கிறாளே , நம்ம மகனே கொடுப்பான் என்று,..

ஆக அவர்கள் வளர்ப்பு பணத்துக்கு முக்கியமானதல்ல..

பயணமும் எண்ணங்களும் said...

.// பிற்காலத்தில் இவளும் இறந்து போக, தந்தையிடமும் ஒன்றும் பெற முடியாமல் போகும் நிலை வந்தால் (//" அதுக்கில்ல ஷான்.. நாளைக்கே எனக்கு இன்னொரு குழந்தை வந்தப்புறம் நான் செய்ய முடியுமோ இல்லையோ.?"//) அக்குழந்தையே இவளை சபிக்குமே.//


எது நேர்ந்தாலும் சொந்தக்காலில் நிற்கும்படி வளர்க்கப்படும் குழந்தை..

பெற்றோர் சம்பாதியத்தை /பணத்தை மட்டுமே நம்பும் குழந்தையல்ல இவன்...

நிச்சயம் சபிக்க மாட்டான்.. மற்றவருக்கும் செய்யக்கூடிய அளவில் வளர்க்கப்படும் குழந்தை...

பயணமும் எண்ணங்களும் said...

5. தான் மட்டுமே தியாகம் செய்வது தனது ஆண் துணை ஒன்றுமே செய்யக் கூடாது என நினைப்பதும் ரிவர்ஸ் சுயநலமே. //

செய்யக்கூடாது என்பதல்ல.. அவனின் மாரல் சப்போர்ட் என்றும் இருக்கு.. அதுதானே முக்கியம்..?

மனைவிக்கு ஒரு பள்ளி ஆரம்பித்து தந்தவன் மகனுக்கு செய்ய மாட்டானா என்ன?.. இது பெருந்தன்மை..மட்டுமே..சார்.


//அதற்குக் காரணமே தாய்க்குத்தான் அதிகப் பொறுப்பு எனக் கூறியதை ஷாந்தினி சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறாள் என்பதுதான்.//

குழந்தை வளர்ப்பு என்பது மிகப்பெரிய ஆசீர்வாதம் சார். அது ஒருபோதும் தாய்க்கு சுமை அல்ல.. ஏழை என்றாலும்...

ஆக இது விரும்பிய சுகமேயன்றி சுமையல்ல...மேலும் தகப்பனின் வேலை நிமித்தம் தாயோடு விரும்பி இருப்பது..

ராணுவத்திலுள்ள நம் சகோதரர் பிள்ளைகளை தாய்மார் விரும்பி வளர்ப்பதுண்டுதானே?.. சுமையல்லவே?..

பயணமும் எண்ணங்களும் said...

ஆக, நீங்கள் கூறும் சினேரியோ ஐடியலைஸ்ட் கற்பனையே. அதுவும் ஷாந்தினி செய்வது அராஜகம். ஆணுக்கு குற்ற உணர்ச்சியையே அதிகரிக்கும் அது. அந்த வகையில் அவள் குற்றவாளியே.//


:))

வருகைக்கு நன்றி டோண்டு சார்..

இதே போல பெண்கள் நம்மில் உண்டு சார்..

அராஜகம் அல்ல அதீத அன்பு..:)

பயணமும் எண்ணங்களும் said...

RMS Danaraj said...

என்ன சொல்ல வருகிறீர்கள்?

ஆண் விட்டுச் சென்றாலும் குழந்தையை த்ன்னம்பிக்கையோடு வளர்க்கும் தாயின் தனன்ம்பிக்கையை சொல்கிறீர்களா?//

வருக தன்ராஜ்..

அதேதான்..தன்னம்பிக்கை..

பயணமும் எண்ணங்களும் said...

RMS Danaraj said...

அவனிடம் அம்மா கிட்ட சொல்லாதே,அவன் குழந்தையையும் பார்ப்பேன் என்பது சரியான முன் உதாரணமாக தெரியவில்லை.

ஒரு கன்ன‌த்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டும் பெண் கடவுளா?

கண்ணகியை விட்டு மாதவி பின் சென்றாலும், அவனை வெறுக்க்காத கண்ணகியின் நவீன உருவமா?//


எப்ப ஒருவர் மேல் நமக்கு வெறுப்பு வரும்?..

நாம் ஒருவரை சொந்தம் கொண்டாடி நமக்கு மட்டுமே சொந்தம்னு நினைக்கும்போதுதானே?.. அது பொஸஸிவ்நஸ்..

எல்லா துணையும் குழந்தை பெத்துகிட்ட ஒரே காரணத்துக்காக மல்லுகட்டிகிட்டு கடைசி வரை அடிச்சு பிடிச்சு வாழ்வதை விட ஒருஅவ்ருக்கொருவர் நட்பாய் பிரிந்து இறுதிவரை ஒருவருக்கொருவர் நட்போடு துணையாக இருக்கலாமே...?..

அதுக்கு நிறைய அன்பும் பொறுமையும் தேவை...அப்பதான் விட்டுக்கொடுக்க முடியும்...

மனதுள் வெறுப்போடு ஒன்றாய் இருப்பதைவிட நட்போடு பிரிந்து உதவியாய் இருக்கலாம் என்பதே கதை...

நன்றி தன்ராஜ்..

dondu(#11168674346665545885) said...

//ராணுவத்திலுள்ள நம் சகோதரர் பிள்ளைகளை தாய்மார் விரும்பி வளர்ப்பதுண்டுதானே?.. சுமையல்லவே?..//
அந்த சகோதரர் செத்தால் ஆட்டமேட்டிக்காக அவரது சொத்து அவரது பிள்ளைக்கு வரும்.

உயில் எழுதாமல் ஒருவன் செத்தால் அவனது சட்டபூர்வமான மனைவிக்கும் வாரிசுக்கும்தான் அவனது சொத்து போகும்.

//நிச்சயம் சபிக்க மாட்டான்.. மற்றவருக்கும் செய்யக்கூடிய அளவில் வளர்க்கப்படும் குழந்தை...//
அவனுக்கு பிற்காலத்தில் கொம்புசீவிவிட பலர் வருவார்கள். அது யதார்த்தம். எது எப்படியானாலும் ஆண் விரும்பித் தருவதை அப்பையன் சார்பில் மறுப்பது அராஜகம், அதீத கற்பனையே.

அது சரி, இதுவே கற்பனைக் கதைதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பயணமும் எண்ணங்களும் said...

அந்த சகோதரர் செத்தால் ஆட்டமேட்டிக்காக அவரது சொத்து அவரது பிள்ளைக்கு வரும்.

உயில் எழுதாமல் ஒருவன் செத்தால் அவனது சட்டபூர்வமான மனைவிக்கும் வாரிசுக்கும்தான் அவனது சொத்து போகும்.//

மிக சரி..


//அவனுக்கு பிற்காலத்தில் கொம்புசீவிவிட பலர் வருவார்கள். அது யதார்த்தம்.//

இந்த கொம்பு சீவிகளான சமூகத்தைத்தான் தவிர்க்கணும்..

எல்லா வாழ்க்கையும் சட்ட திட்டத்தினால் மகிழ்ச்சியாக வாழ்வதில்லை.. நம் மனமும் தான் காரணம்..

கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதுதான் சட்டத்தின் உதவியை நாடுவது...

அதுக்கு முன் இந்த கொம்பு சீவிகளை பற்றி சொல்லி வளர்ப்போம் குழந்தைகளை..

//ஆண் விரும்பித் தருவதை அப்பையன் சார்பில் மறுப்பது அராஜகம், அதீத கற்பனையே.//

சார் ஒரு தகப்பன் , தன் பிள்ளைக்கு பணம் தருவது மட்டும்தான் கடமையா பொறுப்பா?.. அதைவிட மேன்மையானது தகப்பனின் அன்பும் வழிகாட்டுதலும்...

அதை செய்ய தவறவில்லை இந்த தகப்பன்..

நம்மூர் திருமணத்தில்தான் , அப்பன் செத்தாலும் பரவாயில்ல , சொத்து பிள்ளைக்கு வந்திடணும்னு ம்,

அன்ணன் எப்ப சாவன் , திண்ணை எப்ப காலியாகும் என்ற எண்ணமும்..

இதை மாற்றுவோம் நல்ல குழந்தை வளர்ப்பின் மூலம்..

துளசி கோபால் said...

சாந்தி,

'கதை' & கற்பனை நல்லாத்தான் இருக்கு. ஆனால்..... பிரிஞ்சுபோன மனைவியை இந்த அளவுக்கு மதிச்சு நட்பு பாராட்டும் பெருந்தன்மை உள்ள இந்திய ஆண் இனத்தை பார்க்க முடியுதா நிஜ வாழ்க்கையில்?

அவளை என்ன செய்யறேன் பார்! நிம்மதியா வாழ விடமாட்டேன்!

இப்படித்தான் நடக்குது எனக்குத் தெரிஞ்சவரையில்:(

தவறு said...

ஆணோ பெண்ணோ முழுமையான சுதந்திரத்தோட வாழ வேண்டியது தான்.
கட்டிகிட்டேன் என்கிற பிணைப்புகாக கடைசி வரையும் கஷ்டபடுன்னுமா பயணமும் எண்ணங்களும்.

ஜோதிஜி said...

இப்படித்தான் நடக்குது எனக்குத் தெரிஞ்சவரையில்:

பயணமும் எண்ணங்களும் said...

Blogger துளசி கோபால் said...

சாந்தி,

'கதை' & கற்பனை நல்லாத்தான் இருக்கு. ஆனால்..... பிரிஞ்சுபோன மனைவியை இந்த அளவுக்கு மதிச்சு நட்பு பாராட்டும் பெருந்தன்மை உள்ள இந்திய ஆண் இனத்தை பார்க்க முடியுதா நிஜ வாழ்க்கையில்?

அவளை என்ன செய்யறேன் பார்! நிம்மதியா வாழ விடமாட்டேன்!

இப்படித்தான் நடக்குது எனக்குத் தெரிஞ்சவரையில்:(//


ஆமா நிஜம்தான் துளசிம்மா..

பெண்ணும் சரி ஆணும் சரி நட்பா பிரிய பழகிக்கணும்...

கடினமென்றாலும்..:)

பயணமும் எண்ணங்களும் said...

தவறு said...

ஆணோ பெண்ணோ முழுமையான சுதந்திரத்தோட வாழ வேண்டியது தான்.
கட்டிகிட்டேன் என்கிற பிணைப்புகாக கடைசி வரையும் கஷ்டபடுன்னுமா //

அதேதான்.

கருத்துக்கு நன்றி தவறு

பயணமும் எண்ணங்களும் said...

ஜோதிஜி said...

இப்படித்தான் நடக்குது எனக்குத் தெரிஞ்சவரையில்//

எப்படித்தான் னு சொல்லாம விட்டுட்டீங்க..

துளசிம்மா சொல்ற மாதிரின்னா ஆமா..

மாற்றுவோமே..

என் தோழி ஒருத்தி இங்கு கணவனை விவாகரத்து செய்த பின்னும் நட்பாக டென்னிஸ் விளையாடுறாங்க ..

சேவை செய்றாங்க...

சென்னை பித்தன் said...

இப்படிப்பட்ட பெண்ணோ ஆணோ இல்லையென்று மறுக்கமுடியாது. இத்தகைய ஒரு உறவையும் நினைத்துப்
பார்க்கும் போது நிறைவாகத்தான் இருக்கிறது.இதில் ஆண் குற்ற உணர்வுக்கு ஆளாகிறான் என்றால்,அவனிடம் மனோதத்துவ ரீதியான ஏதோ குழப்பம் இருக்கிறது.பெண் தெளிவாகத்தான் இருக்கிறாள்,உங்கள் எழுத்தைப் போல்.

பயணமும் எண்ணங்களும் said...

சென்னை பித்தன் said...

இப்படிப்பட்ட பெண்ணோ ஆணோ இல்லையென்று மறுக்கமுடியாது. இத்தகைய ஒரு உறவையும் நினைத்துப்
பார்க்கும் போது நிறைவாகத்தான் இருக்கிறது.இதில் ஆண் குற்ற உணர்வுக்கு ஆளாகிறான் என்றால்,அவனிடம் மனோதத்துவ ரீதியான ஏதோ குழப்பம் இருக்கிறது.பெண் தெளிவாகத்தான் இருக்கிறாள்,உங்கள் எழுத்தைப் போல்.//

ரொம்ப நன்றி சென்னை பித்தன் சார்.

நல்ல புரிதல்..

virutcham said...

கதை வெறும் ஒரு மண முறிவோடு நிற்கவில்லை. வேறு ஒரு சேர்ந்து வாழ்தலில் தொடர்கிறது.

இதுவும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான்.
மென்மையான வெளிப்பாடு.
டோண்டு பதிவில் வெளியிட்ட என் கருத்துக்களை இங்கேயும் பதிகிறேன்
---

இதில் இன்னொரு விஷயமும் இருக்கு. ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ தனக்கு இந்த துணை தேவை தேவை இல்லை என்று முடிவு செய்ய உரிமை இருக்கு. ஆனால் அந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சட்ட ரீதியான சமூக ரீதியான பாதுகாப்பு அவசியமில்லை என்ற முடிவை இவர்களே எடுத்து விடும் உரிமை இவர்களுக்கு இல்லை என்பது என் கருத்து. அந்த வகையில் இந்த சேர்ந்து வாழ்தல் முறை சரியில்லை.

உறவுகளை மாற்றிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும் போது, ஒருவர் உறவை இயல்பாக முறித்துக் கொள்ள இன்னொருவர் தொடர நினைக்கும் போது அது பெரும் சிக்கலில் கொண்டு விடும். இப்போ அமெரிக்கா போன்ற நாடுகளில் talk shows பார்த்தால் அதில் பெண்கள் தனது குழந்தைகளுக்கு தந்தையை நிரூபிக்க திண்டாடுவதை காணலாம்.

சட்ட ரீதியான மற்றும் சமூக ரீதியான பாதுகாப்பை எதிர்காலத்துக்கு அதாவது குழந்தைகளுக்கு கொடுக்க முடியாத உறவுகள் குழந்தைகளுக்கு செய்யும் மிகப் பெரிய அநீதி.
இப்போ பிரபல உதாரணம் பிரபு தேவா நயன்தார ரமலத். ரமலத் உடனான தன திருமணம் முறையாக பதியப் படவில்லை அதனால் அது திருமணமே இல்லை என்று சொல்லி அந்த பெண்ணையும் கேவலப் படுத்தி இறந்து போன மூத்த மகன் மற்றும் இருக்கும் இரு குழந்தைகளையும் கேவலப் படுத்தி இருக்கிறார் பிரபு தேவா.
இப்படி ஒரு சூழலை ரமலத் அந்த உறவின் ஆரம்பத்திலோ அல்லது இந்த சிக்கல் தொடங்குவதற்கு முன்னோ நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

virutcham said...

பெண்ணை இயல்பான தியாகியாகவும் மட்டும் அல்ல அதுக்கும் மேலே சித்தரிப்பது தெரிகிறது (அதாவது குழந்தையை மட்டும் அல்ல அவன் அம்மாவைக் கூட இவளே பார்த்துக் கொள்வாளாம் ), அந்த ஆணை ஒரு குற்ற உணர்வுடன் தடுமாறுபவனாகவும், தடுமாற்றம் எல்லாம் வேண்டாம் go ahead என்று அந்த பெண் சொல்லுவதாகவும் காட்டுவதே தியாகிப் பட்டதை பெண்கள் மேல் சுமத்தவே முயலுவதையும், இங்கே ஆணின் அடுத்த வாழ்கை குறித்த கவலையும் அக்கறையும் திருமண அல்லது உறவு முறிந்த பின்னும் பெண் தொடர வேண்டும் என்று நினைப்பதும், ஆண் பொருளாதார ரீதியான அக்கறை மட்டுமே தன் முன்னாள் பந்தத்தின் மேல் செலுத்தி விட்டாலே அது அதிகபட்ச அக்கறையாக கொள்ளப் படுவதையும் காண முடிகிறது.
திருமண பந்தத்தையே சுலபமாக முறிக்க தயாரான ஆணை இன்னொரு பெண் நம்பி சேர்ந்து வாழ தயாராக வேண்டும் என்ற அவனது நிச்சயமற்ற தன்மையும் தெரிகிறது. அதாவது அவனுக்கே அவன் மேல் நம்பிக்கை இல்லாத காரணத்தால் அவன் சேர்ந்து வாழ்தலை முன் வைப்பதாக சொல்லுகிறான். அந்த முடிவையும் இங்கே அவனே எடுக்கிறான். இந்த அசட்டு தியாகி குழந்தை பெற்றுக் கொண்டு வா. உன் அம்மாவிடம் அப்புறம் சொல்லிக் கொள்ளலாம் என்கிறது. இங்கே மூன்று பெண்களை (அம்மா, முன்னாள் மனைவி, இந்நாள் காதலி ) மற்றும் இரண்டு குழந்தைகளை (பிறந்த, பிறக்கப் போகும் ) இவனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இவன் அட்ஜஸ்ட் செய்ய நேரடியாக கூட அல்லாமல் அவர்களது நல்ல குணத்தின் வாயிலாக அவர்களயே செய்ய வைக்கிறான்.

பெண்கள் சேர்ந்து வாழ்தலை எப்படி பார்க்கிறார்களோ? ஆனால் ஆண்கள் அதை தன் சுயநலத்துக்கு வசதியாக துணை போகும் விஷயமாகவே பார்ப்பதாக நினைக்க வைக்கிறது

virutcham said...

பெண்களின் இயல்பான விஷயமாக சித்தரிக்க விரும்புவது அது அதன் அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும் என்று விரும்புவதும்.
இங்கே உங்கள் கதையின் கதா நாயகி கணவனோடு ஆன உறவை சுமுகமாக பிரிய ஏற்றுக் கொண்டு அந்த உறவின் மூலம் பெற்ற குழந்தையை அவனது தாயையும் சேர்த்து ஏற்றுக் கொண்டு, அவளுக்கு ஒரு துணை தேவை இல்லை என்ற முடிவுக்கும் வந்து அதோடு நில்லாமல் அவனுக்கு ஒரு துணையை தானே தேடும் முயற்சியிலும் ஈடுபட்டு, அவன் காதல் தெரிந்து குதூகலித்து, அது திருமணம் இல்லை சேர்ந்து வாழ்தல் என்று தெரிந்ததும் அதற்காக கொஞ்சமும் அந்த பெண் (இவள் பார்த்திராத அந்தப் பெண் பின்னால் இந்த உறவு முறிந்தால் இயல்பாக ஏற்கும் பக்குவம் உள்ளவளா என்பது இவளுக்கு தெரிய வாய்ப்பில்லை ) பற்றி யோசிக்காமல், போதாதற்கு குழந்தை பெற்றுக் கொண்டு வா, உன் அம்மா ஏற்றுக் கொள்வாள் இல்லை நான் ஏற்க வைக்கிறேன் என்று , அப்பப்பா, இதெல்லாம் தியாகம் இல்லை சுமை இல்லை விரும்ப்பி ஏற்கிறாள் என்று வேறு சப்பை கட்டு. இதில் அவன் அம்மாவை அவளோடு வைத்துக் கொள்ள அவன் அனுமதித்ததுக்கு நன்றி வேறு சொல்கிறாளாம். அவன் நன்றி சொல்லணுமா, அவளா?
நான் கூறியது மாதிரியே அவனது கொஞ்சம் கில்டி பீலிங்க்ஸ் மட்டுமே அவன் நல்லவன் என்பதன் அடையாளமாக நீங்கள் சித்தரிக்க விரும்புகிறீர்கள்.

தனக்கு குழந்தை பிறக்காது என்று தெரிந்த உடன் கணவனுக்கு தானே முன்னின்று திருமணம் நடத்தி வைத்து தன் மொத்த வாழ்வையும் தன் சொத்துக்களையும் அவனின் புது குடும்பத்துக்கு கொடுத்து எல்லாம் இழந்து தியாகிப் பட்டம் கட்டி நிற்கும் பெண்களை நிஜ வாழ்விலும் அது மாதிரி கதைகளை திரையிலும் நிறைய பார்த்து இருக்கிறோம்.
இது அதில் இருந்து கொஞ்சம் நீட்சி அவ்வளவே. இன்னும் சில ஆண்டுகள் கழித்து நீங்கள் எழுதினால் அது கணவனை தலையில் கூடையில் தூக்கி சென்ற நளாயினி கதையின் நவீன மயக் கதையாக இருக்கும்

virutcham said...

அம்மா intial என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம் தான். MS சுப்புலட்சுமி எந்த அரசாங்க அங்கிகாரமும் இல்லாமல் தன் தாயின் பெயரை தன் இனிஷியலாக வைத்துக் கொண்டார்.

ஆனால் நீங்கள் முன் வைக்கும் விஷயம் முன் காலத்து தாய் வழி சமுதாயத்தின் நவீன பாணி மட்டுமே. சேந்து வாழ்தலில் இருக்கும் அதிகப் பட்ச ஆணிய சலுகளைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ மட்டுமே முன்வைக்கிறீர்கள்.
சுயமாக இருக்க முடிந்த பெண்களை அவர்களது பலத்தையே ஆண்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் மட்டுமே

பயணமும் எண்ணங்களும் said...

வருகைக்கு நன்றி விருட்சம்.

--

உங்க கேள்விகளுக்கு விரிவான பதில் விரைவில் தருகிறேன்..

அதுவரை காத்திருப்பதற்கு நன்றியும்..

பயணமும் எண்ணங்களும் said...

ஆனால் அந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சட்ட ரீதியான சமூக ரீதியான பாதுகாப்பு அவசியமில்லை என்ற முடிவை இவர்களே எடுத்து விடும் உரிமை இவர்களுக்கு இல்லை என்பது என் கருத்து. .//

மிக சரி

பயணமும் எண்ணங்களும் said...

. இப்போ அமெரிக்கா போன்ற நாடுகளில் talk shows பார்த்தால் அதில் பெண்கள் தனது குழந்தைகளுக்கு தந்தையை நிரூபிக்க திண்டாடுவதை காணலாம்.//

புரியவில்லை...

நவீன அறிவியல் வந்தபின்னுமா?.

பயணமும் எண்ணங்களும் said...

சட்ட ரீதியான மற்றும் சமூக ரீதியான பாதுகாப்பை எதிர்காலத்துக்கு அதாவது குழந்தைகளுக்கு கொடுக்க முடியாத உறவுகள் குழந்தைகளுக்கு செய்யும் மிகப் பெரிய அநீதி.//

மிக சரி..

//இப்போ பிரபல உதாரணம் பிரபு தேவா நயன்தார ரமலத். ரமலத் உடனான தன திருமணம் முறையாக பதியப் படவில்லை அதனால் அது திருமணமே இல்லை என்று சொல்லி அந்த பெண்ணையும் கேவலப் படுத்தி இறந்து போன மூத்த மகன் மற்றும் இருக்கும் இரு குழந்தைகளையும் கேவலப் படுத்தி இருக்கிறார் பிரபு தேவா.//

இதில் கேவலப்படுத்துவது எப்படி ?.. நிஜத்தை சொல்லியுள்ளார்.. இதனால் எல்லாம் கேவலம் என்பது சமூக கற்பிதம் மட்டுமே.. பிரபுதேவா அவர்கள் தன் குழந்தைகள் இல்லை என மறுத்தாரா.?..


//இப்படி ஒரு சூழலை ரமலத் அந்த உறவின் ஆரம்பத்திலோ அல்லது இந்த சிக்கல் தொடங்குவதற்கு முன்னோ நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.//

இதுதான் நிதர்சனம்.. ரம்லத் கவனமாக இருந்திருக்க வேண்டாமா?..ஏன் பதிவு செய்யவில்லை.?..

நான் கதையில் சொல்லும் பெண் ரம்லத் போன்றவர் அல்ல.. ரம்லத் தன் கணவர் தன்னோடு ஆயுசுக்கும் வாழணும்னு விரும்புபவர்...

பயணமும் எண்ணங்களும் said...

பெண்ணை இயல்பான தியாகியாகவும் மட்டும் அல்ல அதுக்கும் மேலே சித்தரிப்பது தெரிகிறது (அதாவது குழந்தையை மட்டும் அல்ல அவன் அம்மாவைக் கூட இவளே பார்த்துக் கொள்வாளாம் )//

இதெல்லாம் தியாகமா நண்பரே?..

அப்படியென்றால் நாம் அதிக நட்பை சம்பாதிப்பதும் தியாகமா?.

கணவனோடு தன் உறவை முறித்துக்கொண்டாலும் தனக்கு உரிமையில்லாத மாமியாரை தன்னோடு வைத்துக்கொள்ள நினைப்பதை பேராசை என்றும் சொல்லல்லாமே அப்ப..?..

மனிதர்கள் வித்யாசமானவர்கள்.. சிலருக்கு தனிமை பிடிக்கும். சிலருக்கு கூட்டமாய் இருப்பது பிடிக்கும்...

அன்பை செலுத்தவுமே ஆட்கள் தேவை இக்காலத்தில்..

பயணமும் எண்ணங்களும் said...

அந்த ஆணை ஒரு குற்ற உணர்வுடன் தடுமாறுபவனாகவும், தடுமாற்றம் எல்லாம் வேண்டாம் go ahead என்று அந்த பெண் சொல்லுவதாகவும் காட்டுவதே தியாகிப் பட்டதை பெண்கள் மேல் சுமத்தவே முயலுவதையும், இங்கே ஆணின் அடுத்த வாழ்கை குறித்த கவலையும் அக்கறையும் திருமண அல்லது உறவு முறிந்த பின்னும் பெண் தொடர வேண்டும் என்று நினைப்பதும், ஆண் பொருளாதார ரீதியான அக்கறை மட்டுமே தன் முன்னாள் பந்தத்தின் மேல் செலுத்தி விட்டாலே அது அதிகபட்ச அக்கறையாக கொள்ளப் படுவதையும் காண முடிகிறது.//

உங்கள் பார்வைக்கு நன்றி நண்பரே..

இது மிக சாதாரண சராசரியினரின் பார்வை என்பேன் நான்.

பெண்கள் மனதளவில் மிக துணிவும் பலமும் வாய்ந்தவர்கள்..

ஒரு நேர்மையான நட்பு இருக்குமிடத்தில் நல்லெண்ணமே ஓங்கி இரூக்கும்..

ஆயிரம் கற்பனையோடு பிரசவத்தில் காத்திருக்கும்போது ஒரு மனநலம் தவறிய குழந்தை பிறந்தால் நாம் தூர போட்டு விடுவோமா என்ன?..

எத்தனை பேர் மிக அன்போடு வளர்க்கின்றார்கள்.. அதை என்னவென்று சொல்வது..?

ஆனால் துணை என்ற உறவில் அது தியாகமாகிடுமா?..

நல்ல மனம் எல்லா இடத்திலும் எப்போதும் ஒன்றே..

பயணமும் எண்ணங்களும் said...

அவன் காதல் தெரிந்து குதூகலித்து, அது திருமணம் இல்லை சேர்ந்து வாழ்தல் என்று தெரிந்ததும் அதற்காக கொஞ்சமும் அந்த பெண் (இவள் பார்த்திராத அந்தப் பெண் பின்னால் இந்த உறவு முறிந்தால் இயல்பாக ஏற்கும் பக்குவம் உள்ளவளா என்பது இவளுக்கு தெரிய வாய்ப்பில்லை ) பற்றி யோசிக்காமல்//

அவன் மேல் அவளுக்கு அத்தனை நம்பிக்கை இருக்கு.. அவன் மிக நல்லவன் அவளைப்பொறுத்தவரை...

பயணமும் எண்ணங்களும் said...

போதாதற்கு குழந்தை பெற்றுக் கொண்டு வா, உன் அம்மா ஏற்றுக் கொள்வாள் இல்லை நான் ஏற்க வைக்கிறேன் என்று , அப்பப்பா, இதெல்லாம் தியாகம் இல்லை சுமை இல்லை விரும்ப்பி ஏற்கிறாள் என்று வேறு சப்பை கட்டு. இதில் அவன் அம்மாவை அவளோடு வைத்துக் கொள்ள அவன் அனுமதித்ததுக்கு நன்றி வேறு சொல்கிறாளாம். அவன் நன்றி சொல்லணுமா, அவளா?//

:)

இந்த குணத்தில்தான் பெண் வித்யாசப்படுகிறாள்..

பாலியல் தொழிலாளியை பலர் பூணர்வதை ஏற்கும் சமூகம்..

குடிகாரன் மனைவியை அடித்து போட்டு குழந்தையை கதற வைப்பான் .. அதை மிக சாதாரணமாக ஏற்கும் நம் சமூகம் ...

காதலித்தவர்களை வெட்டிப்போட்டு காவல் நிலையத்தில் சரணடைவதை வீரம் என ஏற்கும் நம் நோய்ப்பிடித்த சமூகம்..
--
பிறந்த பெண் குழந்தையை கொல்லும் சமூகம்..

--

பள்ளிக்கு ஆணை அனுப்பிவிட்டு பெண்ணை வேலை செய்ய சொல்லும் சமூகம்..:)

--

பெண் அதிக திறமையோடு, படிப்போடு அழகோடு இருந்தாலும் பணம் கொடுத்து மாமியார் வீட்டுக்கு வேலை செய்ய அனுப்பும் சமூகம் ...:)ஆனால்

ஒரு பெண் துணிவா எல்லாரிடமும் பாரபட்சமின்றி அன்பு காட்டுவதை , துணிந்து தனித்து முடிவெடுப்பதை , மட்டும் ஏற்காத , நம்பவே முடியாத சமூகம்...

:)

மொத்தத்தில் மாற்றம் வர விரும்பாத சமூகம் ..


வாழ்க வாழ்க வாழ்கவே..:)

பயணமும் எண்ணங்களும் said...

அம்மா intial என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம் தான். MS சுப்புலட்சுமி எந்த அரசாங்க அங்கிகாரமும் இல்லாமல் தன் தாயின் பெயரை தன் இனிஷியலாக வைத்துக் கொண்டார்.//

ஆம் அக்காலத்திலேயே புரட்சி செய்தார்..

//ஆனால் நீங்கள் முன் வைக்கும் விஷயம் முன் காலத்து தாய் வழி சமுதாயத்தின் நவீன பாணி மட்டுமே. சேந்து வாழ்தலில் இருக்கும் அதிகப் பட்ச ஆணிய சலுகளைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ மட்டுமே முன்வைக்கிறீர்கள்.//


இப்படியும் ஒரு பார்வை ஏற்படக்கூடும் என புரிந்துகொண்டேன் நண்பரே..ஆனால் என் கருத்தெல்லாம் பெண்ணால் தனியாக வாழ முடியும் என்பதே..

//சுயமாக இருக்க முடிந்த பெண்களை அவர்களது பலத்தையே ஆண்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் மட்டுமே//

எப்ப ஆண் அதை சாதகமாக எடுக்கிறானோ அப்ப அங்கேயே அவனின் மேல் மதிப்பு குறைந்துவிடும்.. நட்பும் முறிந்துவிடும்..

இங்கே அவனும் அவளும் நட்பாகவே பிரிந்துள்ளதால் இருவருக்குமான புரிதல் நன்றாக இருப்பதால் மதிப்பும் உள்ளது..


இருப்பினும் , உங்க கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...

மாற்றுக்கருத்துகள் , சந்தேகங்கள் பிடித்தே இருந்தது..

நன்றி நண்பரே..

பயணமும் எண்ணங்களும் said...

பெண்கள் சேர்ந்து வாழ்தலை எப்படி பார்க்கிறார்களோ? ஆனால் ஆண்கள் அதை தன் சுயநலத்துக்கு வசதியாக துணை போகும் விஷயமாகவே பார்ப்பதாக நினைக்க வைக்கிறது//

திருமணமும் அப்படித்தானே நண்பரே.?

ஆணுக்கு சாதகமாய் தானே இருந்து வந்தது.?

பெண்தானே ஆண் வீட்டுக்கு எல்லாத்தையும் விட்டு சென்றாள்..?

லிவிங்-டுகெதரில் சம மதிப்பும் மரியாதையும் தேவை... அதை தர முடிந்த ஆணால் மட்டுமே தொடரும்..

எல்லா ஆணும் மோசமில்லை... அவனுக்கும் குழந்தை குடும்பம் என்ற பாசமில்லையா?...

virutcham said...

உங்கள் வாதங்கள் எல்லாமே அழகு சாதனப் பொருட்களின் அலங்காரங்கள் மாதிரி.
பெண் தனித்து வாழ்தல் என்பதையோ அவளது தன்னம்பிக்கையையோ தன குடும்பம் தன்னால் உருவான குடும்பம், தன கணவன் குடும்பம் ( பிரிந்து சீன்ற பின்னும் கூட) ஏற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழ்தல் என்பதையோ நான் விமர்சிக்க வில்லை.
இதில் இருக்கும் ஆணிய சலுகைகள் காரணமாகவே ஆண்கள் இதை வரவேற்கிறார்கள் என்பதே என் வாதம்.

பெண்ணே சதி, நீயே தெய்வம் என்று பொறுப்புகளை சகிப்புத் தன்மையை அவள் மேல் ஏற்றி விடும் காரணங்களுக்கும் உங்கள் நவீன அலங்காரத்துக்கும் அதிகம் இடைவெளிகளே இல்லை. எது எனது பிற்போக்கு எண்ணம் என்று நீங்கள் கூறுகிறீர்களோ எது சமூக பலவீனம் என்று கூறுகிறீர்களோ மாற்றங்கள் விரும்பாத சமூகம் பழம் பஞ்சாங்கம் என்று கூறுகிறீர்களோ அதன் அலங்கார தன்மையை தான் நீங்கள் முன் வைத்துக் கொண்டு முற்போக்கு சிந்தனை பட்டம் கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நான் சொல்லுவது.

virutcham said...

திருமண பந்தம் பெண்ணுக்கு பல இழப்புகள் தருகிறது என்பதும் ஆணியம் என்பதும் மேலோட்டமான சிந்தனை. அப்படியே அது சில பல இடங்களில் இருந்தாலும் அதன் ஆரோக்கிய பக்கத்துக்கு அது நகர்ந்து கொண்டும் இருக்கிறது. பெண் தனியாக வாழ முடியும் தான். ஆனால் அது அதிகரிக்கும் போது அது உருவாக்குவது பாதி அனாதைகளை. டெலிபோன் அப்பாக்கள் எல்லாம் அப்பாக்கள் ஆகிவிட முடியாது. அது யாரால் பிறந்தது அந்தக் குழந்தை என்பதை மட்டுமே ஊரறிய சொல்லிக் கொள்ள உதவும்
பாதி அனாதைகள், பாதி சகோதர்கள்(half brothers and sisters) என்ற ஒரு புதிய சமூகம் உருவாக உதவும் இதன் மறுபக்கத்தையும் யோசிக்கவும்

பயணமும் எண்ணங்களும் said...

இதில் இருக்கும் ஆணிய சலுகைகள் காரணமாகவே ஆண்கள் இதை வரவேற்கிறார்கள் என்பதே என் வாதம்.
//

சரிதான்.. ஆனால் இதில் ஈடுபடப்போகும் பெண் நிச்சயம் முட்டாளாக இருக்க மாட்டாளே..

மேல்நாட்டில் லிவிங்-டுகெதர் என்றாலும் அவர்கள் சட்டப்படி ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார்கள்..( cohabitation agreement ) .

அதே போல குழந்தை பிறக்குமுன்பே குழந்தைக்கான ஒப்பந்தமும் ( திருமணத்துக்கு முன்பான ஒப்ப்பந்தமாய் ) போட்டுக்கொள்கிறார்கள்..

ஆக பிரச்னை வந்தால் எவ்விதத்திலும் குழந்தை பாதிப்படையக்கூடாது என்பதே இதன் நோக்கம்.. மேலும் பண விவகாரம் , , சொத்து விபரம் , வரவு செலவு எல்லாவற்றையுமே அக்ரிமெண்ட் செய்துகொள்கிறார்கள்..Prenuptial agreements / premarital agreements ).

ஆக இதில் ஆணுக்கு அனுகூலம் என்பதெல்லாம் இல்லை.. சும்மா அப்படியே எஸ்கேப் ஆகிட முடியாது.. கோர்ட்டில் பதில் சொல்லணும்..

நம்மூர் திருமணம் தான் நம்பிக்கை அடிப்படையில் மட்டுமே நடத்தப்படுகின்றது...

பயணமும் எண்ணங்களும் said...

எது சமூக பலவீனம் என்று கூறுகிறீர்களோ மாற்றங்கள் விரும்பாத சமூகம் பழம் பஞ்சாங்கம் என்று கூறுகிறீர்களோ அதன் அலங்கார தன்மையை தான் நீங்கள் முன் வைத்துக் கொண்டு முற்போக்கு சிந்தனை பட்டம் கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நான் சொல்லுவது.//

ஒரு குழந்தையை வளர்த்தெடுக்க ஆணுக்கு ஆசை இருக்கவே இருக்காதா?.

சமீபத்தில் அர்விந்த்சாமி வழக்கில் அவரே குழந்தைகளை வளர்க்க ஒப்புக்கொண்டதாய் தீர்ப்பு ..

ஆக குழந்தை வளர்ப்பு என்பது இங்கே ஆசையில் செய்யப்படுகின்ற ஒன்றே தவிர பொறுப்புகளை பெண்ணின் மேல் ஏற்றி வைக்கப்படவில்லை.. மாமியாரையும் அதே போல் விரும்பி ஆசையோட ஏற்கிறாள்..

வசதி உள்ளவர்களுக்கு நிறைய ஆட்கள் இருப்பது எப்படி சுமையாகும்?..

அதுவும் ஒரு பள்ளி நடத்துபவளுக்கு.. ?.

இதில் அவளுக்கு சுயநலம் இருக்கலாமே.. எப்படின்னா , தன் குழந்தை வேணும் . தன் குழந்தைக்கு உரிமையா உறவாட மாமியார் வேணும்..அவன் நல்வாழ்வில் அக்கறை கொண்ட அவன் தகப்பனின் நட்பு வேண்டும்.. இதையெல்லாம் பெண் விரும்பினால் அது பிற்போக்குத்தனமாக எப்படி இருக்க முடியும்.?

ஏன் அந்த ஆண் தன் குழந்தையை , தன் அன்னையை , அவர்களின் அன்பை , தன் ஆராய்ச்சிக்காக விட்டுக்கொடுக்கும் அனாதையாகத்தானே இருக்கிறான் இங்கே?. அவன் பாவம் இல்லையா?..:)


எப்ப பெண் சொந்தக்காலில் நின்று முடிவெடுக்கிறாளோ அப்பவே அங்கே சம உரிமை வந்திடுது.. இதே பெண் கணவனிடம் குழந்தையை அனுப்பவும் செய்வாள்.. அல்லது கணவனை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு வேலைக்கும் செல்வாள்..

மேல்நாட்டில் , ஈராக் போரின் போது கணவனை போருக்கு அனுப்பிவிட்டு குழந்தைகளை மனைவியர்தான் பார்த்துக்கொண்டனர்.. அதற்காக பிற்போக்குத்தனம் எனலாமா?..அது ஒரு புரிதல் அவ்வளவே...

பயணமும் எண்ணங்களும் said...

திருமண பந்தம் பெண்ணுக்கு பல இழப்புகள் தருகிறது என்பதும் ஆணியம் என்பதும் மேலோட்டமான சிந்தனை. அப்படியே அது சில பல இடங்களில் இருந்தாலும் அதன் ஆரோக்கிய பக்கத்துக்கு அது நகர்ந்து கொண்டும் இருக்கிறது.//

அதனால் தான் எனக்கும் இன்னும் அதன்மீது மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது..

நான் லிவிங்-டுகெதரை முழுதுமாக ஆதரிக்கவோ, நம் திருமண முறைகளை எதிர்க்கவோ இல்லை.. நான் சொல்ல விழைவது லிவிங்-டுகெதர் என்பது மோசம் இல்லை.. நம் திருமண முறைதான் புனிதம் என்றும் இல்லை..

மேலும் லிவிங்-டுகெதரும் திருமணத்தை நோக்கியே முன்னேறுது..

பயணமும் எண்ணங்களும் said...

பெண் தனியாக வாழ முடியும் தான். ஆனால் அது அதிகரிக்கும் போது அது உருவாக்குவது பாதி அனாதைகளை. டெலிபோன் அப்பாக்கள் எல்லாம் அப்பாக்கள் ஆகிவிட முடியாது. அது யாரால் பிறந்தது அந்தக் குழந்தை என்பதை மட்டுமே ஊரறிய சொல்லிக் கொள்ள உதவும்
பாதி அனாதைகள், பாதி சகோதர்கள்(half brothers and sisters) என்ற ஒரு புதிய சமூகம் உருவாக உதவும் இதன் மறுபக்கத்தையும் யோசிக்கவும்//

கண்டிப்பா ஏற்க கூடியதே.. நல்லது கெட்டது கலந்தே இருக்கு.

ஆனாலும் இந்த பாதிஅனாதைகளை வளர்க்கும் பெற்றோர் தன்னம்பிக்கை ஊட்டக்கூடியவராய் இருப்பர்.. பிளான் செய்தே பிள்ளைகள் பெற்றிருப்பர்.

நம் திருமணத்திலும் , ஒரே இரவில் உறவுகொண்டு , புரியாமலே வரிசையா பிள்ளை பெற்று, சண்டை போட்டு இயலாமையில் பிள்ளை வளர்த்து , குழந்தைகளுக்கும் மனச்சிதைவு ஏற்பட்டு , சிலர் சமூக விரோதிகளாய் வளரவும் வாய்ப்புண்டு..

ஆனால் இவையெதுவும் வெளியே தெரியவும் தெரியாது பல இல்லங்களில்.. ஏனெனில் சமுக பயம். மதிக்காதே என்ற அச்சம் .. தெரிந்தால் கேவலம் என்ற கூச்சம்..

இவைகளும் களையப்படவேண்டும்..

RMS Danaraj said...

அதாவது இந்த கதையுஇன் நாயகி அளவிற்கு தெளிவும்,தன்னம்பிக்கையும், உள்ளவர்கள் மட்டுமே இந்த ஒன்றி வாழ்த‌லில் ஈடுபட முயற்சிக்கலாம் என்று கூறலாமா?

பயணமும் எண்ணங்களும் said...

RMS Danaraj said...

அதாவது இந்த கதையுஇன் நாயகி அளவிற்கு தெளிவும்,தன்னம்பிக்கையும், உள்ளவர்கள் மட்டுமே இந்த ஒன்றி வாழ்த‌லில் ஈடுபட முயற்சிக்கலாம் என்று கூறலாமா?//


மிக சரி தன்ராஜ்..

நம் திருமண முறைகளில் , அன்பவத்தின் மூலமே நம் பெண்களுக்கு தெளிவும்,தன்னம்பிக்கையும் கிடைக்கிறது..


இங்கே மாறுதலாக..

தெளிவும்,தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் முன் ஜாக்கிரதையோடு வாழ்வில் ஈடுபடுதல்...

Layman said...

இது போன்ற புரிதல் ஏற்படுவது மிக கஷ்டம்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

Layman said...

இது போன்ற புரிதல் ஏற்படுவது மிக கஷ்டம்.//

ம்..

எனக்குண்டு என்பதால் இப்படி எழுதினேனோ என்னமோ.?:)