Monday, December 6, 2010

இணைய நட்பு முழுதும் தீங்கானதா?..இணைய நட்பு முழுதும் தீங்கானதா?..

இன்று "

இது கண்டனம் அல்ல விழிப்புணர்வு....!"


என்ற ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவை கெளசல்யா போட்டிருந்தார்..நன்றி..

http://kousalya2010.blogspot.com/
----------

பெண்களின் பலவீனத்தை பயன்படுத்தி மன உளைச்சல் கொடுப்பதும் , மிரட்டுவதும் தொடற்கிறது.

எல்லாருக்குமே ஏதோ ஒரு நேரம் மனசு விட்டு பேச ஒரு நல்ல நட்பு வேண்டிதானிருக்கிறது..

குடும்ப விஷயங்களை கூட நம்பிக்கையானவர்களிடம் சொல்வதில் தப்பில்லை..

இதுவரை என்னிடம் சாட் செய்தவர்கள் நூற்றுக்கணக்கில்.. எத்தனை எத்தனை குடும்ப பிரச்னைகள்?...

ஒரு சகோதரன் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கூட துணிந்த கதையுண்டு..

அந்த நேரத்தில் " எதைத்தின்னா பித்தம் தெளியும் ' என்ற கதையில் ஆறுதல் தேடி அலையத்தான் செய்யும் மனம்..

அந்த நண்பருக்கு அவரை விட கஷ்டத்தில் இருக்கும் நபர்களை பற்றி எடுத்து சொல்லவேண்டியிருந்தது..நானும் பகிர்ந்து ஆறுதல் அடைந்துள்ளேன் மிக மிக நல்ல தோழி , நண்பர்களிடம்..

ஆக எல்லாருமே மோசம் இல்லை.. பழகும் போது அந்த நபர் அவர்கள் குடும்ப விபரம் தெரிந்து வைப்பதும் , அவர் குடும்பத்தினரிடம் எத்தகைய மரியாதை வைத்துள்ளார் என்பதையும் புரிந்துகொள்ளணும்..

என் நட்புகளை குடும்பத்தோடு அறிமுகம் செய்ய முடிந்தால் மட்டுமே தொடருவேன்..

வருடா வருடம் இந்தியா செல்லும்போது குடும்பத்தோடு சந்திப்பதுமுண்டு...

ஜொள்ளு விட வரும் நட்புகளிடமும் நீங்கள் தேடும் பெண் நான் இல்லை என சொன்னால் நிச்சயம் மரியாதையாக விலகிடுவதுண்டு.. அல்லது மன்னிப்புடன் நல்ல நட்பாக மாறுவதுமுண்டு... சில விஷயங்கள் நம் கையிலும்..கெட்டவர்களை கூட நல்லவர்களாய் மாற்றுவதும் கூட சில சமயம்..


இதில் சில கெட்டவரும் இருக்கலாம்.. என்னைப்பொறுத்தவரை 1000ல் ஒண்ணு அப்படி இருக்கும்..

ஆக எல்லோருமே மோசம் என எண்ண வேண்டியதில்லை..

எனக்கு பதிவுலகில் பிரச்னை என்றதும் உதவியதில் பலர் ஆண்கள் தான்..பெண்களுமுண்டென்றாலும்.. ( என் நன்றிகள் )

இதையும் மீறி தப்பு நடந்திருந்தாலும் ஒன்றும் பயப்பட வேண்டாம்..ஒரு அனுபவம் அவருக்கு.. மன உளைச்சலே வேண்டாம் என ஆறுதல் சொல்லுங்கள்.. துணிந்து பதிவுகளை எழுத சொல்லுங்கள்.. அதுவே சிறந்த மருந்தும்... ஓடி ஒளிவதே இத்தகைய கயவருக்கு வெற்றி.. அடுத்து வேறொரு பெண்ணுடன் ஆரம்பிப்பார்... ஆக அவர் யாரென்று பெண் பதிவர்களுக்காவது தெரியப்படுத்திடுங்கள்...


அதுவும் வெளிநாட்டில் இருக்கும்போது நட்பு கூடுதலாய் தேவைப்படலாம்..அனைவருக்குமே..

இதை " மித்ர மை பிரண்ட் " என்ற படம் கூட அழகாக சொல்லியிருக்கும்..


பெண்கள் கொஞ்சம் மென்மையானவர்கள் என நினைத்து இல்லாத குடும்ப கஷ்டத்தை சொல்லி பணம் கேட்பவரும் உண்டு..

ஒருமுறை ஒரு நண்பர் என்னிடம் அப்படி கேட்டபோது நான் அவர் அக்கவுண்ட் எண் , வேலை செய்யும் அட்ரஸ் கேட்டேன்.. கொடுத்தார்..

இப்ப கொஞ்ச நேரத்தில் பணம் போடுகிறேன் என்றேன்..

சிறிது நேரங்கழித்து என்ன போட்டாச்சா என்றார்..

இருங்க எங்க வீட்டு பசங்க சென்னையில் தான் பலர் இருக்காங்க அனுப்பி வைக்கிறேன் உங்க அலுவலகத்துக்கு என்று சொன்னதும் அழ ஆரம்பித்தார்

மன்னிச்சுடுங்க என் வேலை போயிடும் என.. மன்னித்துவிட்டேன்..

எந்த பிரச்னை என்றாலும் துணிவாக பதிவுலக நட்புகளை முக்கியமா பெண்களை நாடுங்கள்..

பெண் பதிவர் சந்திப்பும் அப்பப்ப நடத்திடுங்கள்.. அப்ப பயம் இருக்கும் இத்தகைய ஆண்களுக்கு..

அதுமட்டுமல்ல நாங்கள் அன்புடன் குழுமத்தில் இருந்த போது குறிப்பிட்ட ஒரு ஆணின் பெயரை கெடுக்க அவரைப்போலவே சாட் செய்து அதை பெண்கள் எல்லாருக்கும் அனுப்பியும் வைத்தார் ஒரு அனானி..

நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்..அதில் எல்லா பெண்களை பற்றியும் விமர்சிக்கப்பட்டிருந்தது.. பின் அவரை கூப்பிட்டு கேட்டபோது இது அவர் எதிரியின் வேலை என தெளிவுபடுத்தினார்..

ஆக சாட்களை கூட மாற்றி இப்படி அனானி பேரில் அனுப்பி துன்புறுத்துவது ...

பெண்களுக்கு மட்டும் பிரச்னை இல்லை .. பொறாமையால் சில ஆண்களுக்குமே பிரச்னை உண்டுதான்..

அப்பெண் பதிவர் எழுத தொடங்கட்டும் பிரச்னை முடிந்ததும்.

இணையம் மூலம் அறிமுகமான இரு பெண் நட்புகள் தாய்லாந்து வந்ததும் நாங்கள் ஊர் சுற்றிப்பார்த்ததும் நல்ல அனுபவங்கள்.. அதே போல நான் இந்தியா சென்ற போது எங்களை குடும்பத்தோடு கூடன்குளம் மின் நிலையம் அழைத்து சென்று சுற்றிக்காட்டிய முன்பின் அறிமுகமில்லாத நண்பர்..இப்படி பல விஷயங்களை சொல்லலாம்..கயவர்களை மட்டும் களை எடுப்போம்.... நல்ல நட்புகளை ஆரோக்கியமாக வளர விடுவோம்...
( மேலேயுள்ள குழந்தைகள் படம் வாசகத்தோடு அளித்த நண்பர் க்கு மனமார்ந்த நன்றிகள்... )
படம் : நன்றி கூகுள்..

31 comments:

வார்த்தை said...

//பெண்கள் கொஞ்சம் மென்மையானவர்கள் என நினைத்து இல்லாத குடும்ப கஷ்டத்தை சொல்லி பணம் கேட்பவரும் உண்டு..//

நல்லாதான் யோசிக்குறாங்க......

புதுகைத் தென்றல் said...

முழுவதும் தீங்கானது இல்லை என்பதே என் அனுபவம். அருமையா சொல்லியிருக்கீங்க. பலருக்கும் உதவும்

தவறு said...

நம்முடைய விழிப்புணர்வு பொறுத்தவிசயம் இதுங்க பயணமும் எண்ணங்களும்.

வருண் said...

முழுதும் தீங்கா இருக்கனும்னு ஒண்ணு இல்லை. கொஞ்சம் தீங்கே போதும் இது போல பிரச்சினைகளுக்கு.

கண்டவனோடயும் (நல்லவன்னு நெனைக்கிரவன் படு அயோக்கியனா இருப்பான். கெட்டவன்னு நெனைத்து ஒதுங்க நெனைப்பவன் ஓ கே யா இருப்பான். இதை எல்லாம் எதிர் பார்க்கனும்)), இ-மெயில் கரஸ்பாண்டென்ஸ் வச்சுகிறது, சாட் பண்றது போன்றவைகளில் இறங்காமல், தன் கருத்தை தன் தளத்தில் சொல்ல வேண்டியது, பிறர் தளத்தில் பின்னூட்டமிடுவது, என்று பப்ளிக் இண்டெராக்ஷன் மட்டும் வச்சுக்கிறது கல்யாணம் ஆன பெண்களுக்கு நல்லது.

இல்லை, நான் தைரியமானவள், என் கணவர் என்னை நல்லாப் புரிந்து கொண்டார் என்று நம்புறவங்க எதையும் எதிர் பார்க்கனும்.

Over all, the answer to your QUESTION is YES it is dangerous and harmful too!

I don't want to debate about this. But this is my opinion. DOT!

சென்னை பித்தன் said...

//கயவர்களை மட்டும் களை எடுப்போம்.... நல்ல நட்புகளை ஆரோக்கியமாக வளர விடுவோம்.//
அதுவே சரியான அணுகுதல்.சில வக்கிர மனம் படைத்தவர்களால் அனைவரையும் சந்தேகிப்பதும் தவறு;ஒதுங்கி ஓடுவதும் தவறுதான்.ஆனால் ஒரு பெண்ணாக நான் இருந்து பார்த்தால் வேறு விதமாக நினைப்பேனோ தெரியாது.

அம்பிகா said...

அவசியமான அனுபவ பகிர்வு.
நன்றி தோழி.

தமிழ் வினை said...

உங்கள் அனுபவமும், பக்குவமும், பதிவும் நன்றாகவே இருக்கிறது.

பயணமும் எண்ணங்களும் said...

கருத்துக்களுக்கு நன்றி வார்த்தை , புதுகைத்தென்றல் , தவறு , வருண் , சென்னைப்பித்தன் , அம்பிகா, தமிழ்வினை...


//Over all, the answer to your QUESTION is YES it is dangerous and harmful too!//

True.. It depends on the age of the women too..Young girls need to be more careful..

Avargal Unmaigal said...

ஒரு ஆண் தவறாக பார்க்கிறானா அல்லது பழகுகிறானா என்பதை பெண்கள் உள்ளூணர்வு மூலம் அறிந்து கொள்ள கண்டிப்பாக முடியும்.போன் நம்பர் தருவது தனியாக சந்திப்பது எப்போதும் கூடாது. எதிலும் அவசரம் கூடாது
எதுவும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர வேண்டும். ஆண் பெண் இருவரிலும் நல்லவர்களும் கெட்டவர்களூம் உண்டு. இதில் யாரவது ஒருவர் தவறாக அணுகும் போது ஆரம்பதிலேயே தைரியமாக அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதனால் நட்பு முறிந்தாலும் கவலைபடக் கூடாது.
"பெண்களுக்கு மட்டும் பிரச்னை இல்லை .. பொறாமையால் சில ஆண்களுக்குமே பிரச்னை உண்டுதான்..

" சரியாக சொன்னீர்கள்

Vinoth said...

இப்பொ என்ன சொல்றிங்கன்ன்ன...

பொண்ணுங்க எல்லாம் நல்லவங்க...
அப்பவியா ஏமாறறங்க...

ஆண்கள் சூழ்ச்சிகரஙக...திறமையாக ஏமத்தறாங்க...

இதெல்லம் பழய பட ஸ்கிரிப்டு...
நிஜத்துல... கே.டி. கிரிமினல் பொண்ணுக் நிறைய பேர்.

பிரியா பழகி பொழுது போக்கிடு...
ரி சர்ஜ் பன்னு, சுடிதார் வாங்குன்னு வசுல் பன்னிடே இருப்ப்ஙக... இது இல்லாம போன் பன்னு, துணைக்கு வா, ஈ.பி பில் கட்டுன்னு வேலை வாங்குவாங்க...

(என்னோட ஆபிஸ்ல எல்லருக்கும் 1 வாரம் ஆபிசியல் டிரைனிங் நான் தரனும். அப்ப்டி ஒரு பொண்ணுக்கு தரும்பொது.. சாக்லேட் வாங்கி வான்னு சொல்லுறாஙக்.. இது ஸ்டர்டிங் நான் .. நீ வச்சு இருந்தா கொடுன்னுனேன். அவ்வளவு தான். அப்புறம்..பேசுறதே இல்ல்லை..)

அப்படிய்யெ ரிசார்ஜ் பன்னினாலும் ஆண்களை கூப்பிட மிஸ்டு கால் தான் வரும்.

24X 7 X 52 எல்லா நாளும் எல்லா நேரமும் கொடுத்துகிட்டே இருக்க முடியுமா ?

கொடுக்கும்வரை என்ன செஞ்சாலும் ஓகே தான். ரத்திரி 2 மணி வரை போன் பேசுவது சாதரணம்.

பீரியட்ஸ் டேட் வரை சொல்லி உசுபேத்துவ்ங்க..சன் டே எங்க வேண்ணலும் போலாம் என்ன வேண்ணலும் செய்யலாம்..ஆன ஷாப்பிங் உட்பட எல்லம் ஆண்களின் செலவு. ஊட்டி போய் 3 டே நைட்
தங்கினவஙள எனக்கு தெரியும்..

இனி..கொடுக்க மாட்டன்னு தெரிஞா போன் பன்னினா கூட எடுக்க மாட்ங்க...
என்ன ஏன்னு கேட்ட.. உனக்கும் எனக்கும் கெமிஸ்டிரி சரி இல்லம்பங்க..

இல்லைன்ன.. நான் உங்ககிட்ட நட்பா தான் / அண்ணன நினைச்சு தான் பழகினேன்..னு சொல்வாஙக..


ஒரு வேளை இவனை விட வசதியான பார்ட்டி கெடச்ச இடையில்லே கழட்டி விடுவாஙக..

கேள்வி கேட்ட, பிரச்சனை பண்ணுவான்னு தெரிஞ்சா ஈவ் டிசிங் கேஸ் தருவாங்க..


நட்பு. காதல் , க்ள்ள காதல் எல்லாதுலையும் இது இருக்கு.

ஒரே நேரத்துல 2 பேரை லவ் பண்ணின பொண்ணை பார்த்து இருக்கேன்.

1 வருசத்துல 2 பேரை மாத்திய பொண்ண்னை பர்த்து இருக்கேன்.

ஒரே ஒரு விஷயம் தான். கொஞ்சம் பார்கிற மாதிரி இருந்தா போதும்.. பொண்ணுக் பண்ணுர வேலை எல்லாம் எழுத கூட முடியாது..

அதன் காரனமாகவும் அவஙளுக்கும்
அவங்க கூட இருக்கும் அப்பாவிகளுக்கும் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு

எல்லா பொண்களும் இப்படின்னு நான் சொல்லல... ஆன உஙக பதிவு எல்லா பொண்களும் அப்பாவின்னு இருக்குது.
அதான் இந்த பதில்..

Muthumani said...

நாம் பழகும் , பேசும் விதம், நண்பர்களை தேர்ந்தெடுக்கும் விதம் போன்றவற்றில் இருக்கிறது.நமது நண்பர்களின் குடும்பங்களை பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம். அவர்கள் நம்மை மதித்து கேட்கும் கேள்விகளுக்கு ஆலோசனை வழங்குவதும் அது அவர்களது மனதை புண் படுத்தாத வகையில் புரிய வைக்கும் தன்மையும் நண்பர்களாகிய நமக்கு தேவை என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பயணமும் எண்ணங்களும் said...

கருத்துக்களுக்கு நன்றி "அவர்கள் உண்மைகள் " , வினோத் , முத்துமணி..

வினோத் நீங்க கெளசல்யா பதிவுக்கான பதிலை இங்கே இட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்..

நான் பெண்களை மட்டும் ஆதரிக்கவில்லை.. ஆண்களி உயர்த்தியே சொல்லியுள்ளேன்..

ஆணுக்கும் இதே பிரச்னை உண்டே.

Avargal Unmaigal said...

வருஷத்தில் எத்தனைப் ஆண்களை பெண்கள் மாற்றுகின்றார்கள் என்பது பற்றி இந்த பதிவு கூறவரவில்லை.கெட்ட எண்ணத்துடன் பழகி வருபவர்களால் என்ன பிரச்சனைகள் வரும் அதில் இருந்து பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றுதான் இந்த பதிவு கூறுகிறது. ஆண்கள் எல்லோரும் மோசம் பெண்கள்தான் நல்லவர்கள் என்றும் கூறவில்லை இங்கு...

வருண் said...

Vinod:

Nobody claims that all women are perfect. As per Kousalya's post some married woman blogger's life got ruined because of internet interaction with one guy.

Don't you feel sorry for her? Why are you bringing up all these nonsense?

You need to understand that lots of people really dont know some of the problems associated with internet interaction.

sriram said...

சகோதரி
என் கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன். கூடவே பாதிக்கப்பட்ட சகோதரிக்கு வருத்தங்களையும்.
இந்த மாதிரி நடக்குதுன்னு கேள்வி பட்டிருக்கிறேன். இப்படிப் பட்டவர்களை பொதுவில் வைத்து அவமானப் படுத்துவதே சரியாக இருக்கும்.
சும்மா கிடைக்காது சுதந்திரம். பாதிக்கப் பட்ட பெண்கள் தைரியமாக வெளியில் வந்து புல்லுருவிகளை அடையாளம் காட்ட வேண்டும். குறைந்த பட்சம் ஓரிரு
பதிவர்களிடமாவது சொல்லி மேலும் பலர் பாதிக்கபடுவதிலிருந்து காக்கணும். செய்யுங்க, தோள் கொடுக்க நாங்கள் இருக்கிறோம்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.

பயணமும் எண்ணங்களும் said...

வருகைக்கு நன்றி ஸ்ரீராம்..

நீங்க சொல்வது மிக சரி..

கயவர்களை தோலுறிக்கணும்..

ஆனா அதுக்கு வரிஞ்சுகட்டிகிட்டு சிலர் கூடவே கூட்டமா வருவாங்க..

நான் தனிமடல் அனுப்பியும் கூட எனக்க்கு இன்னும் பதில் வரவில்லை...

நானும் சில பதிவர்களை பற்றி சொல்லவேண்டியுள்ளது..


பல அரசியல் இங்கே உள்ளது ஸ்ரீராம்..

கயவர்களை தப்பிக்க வைப்பதற்கே பெருங்கூட்டம் இங்கே இருக்கு...இதுக்கு சில பெண்களும் ஆதரவுன்னா நம்புவீங்களா?..

பஸ் ல் சென்று பாருங்கள் அவர்கள் பேச்சும் , கொட்டத்தையும்....ஆண்களை விட மிக மோசமாய் , தேவையில்லாமல் அடுத்தவர்களை வம்பிழுத்து வீணாக பேசுவதை என்ன சொல்ல?..:)

பயணமும் எண்ணங்களும் said...

நன்றி " அவர்கள் உண்மைகள் & வருண் ," வினோத்துக்கு புரிய வைத்தமைக்கு..

sriram said...

அப்புறம் சகோதரி, பெண் பதிவர்கள் ஒரு குழு அமைத்து ஏன் ஒரு உருவாக்கக் கூடாது? ஒரு உதாரணத்துக்கு சொல்றேன். பொற்கொடி, அப்பாவி தங்கமணி, ஷைலஜா, அனன்யா, கெக்கு பிக்கேணி போன்ற பெண் பதிவர்கள் என்னுடன் பின்னூட்டம் தாண்டி இல் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் என்னைப் பத்தி
ஒரு அபிப்ராயம் வைத்திருப்பார்கள். இதுபோன்று ஒவ்வொரு பெண் பதிவருக்கும் சில பல பேர் மீது அபிப்ராயங்கள் இருக்கும். இதை ஒன்று திரட்டி database
உருவாக்கலாம் அல்லது பெண்பதிவர்கள் சந்திப்பு நடத்தி பகிர்ந்து கொள்ளலாம். பூனைக்கு மணி கட்ட யார் தயார்?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பயணமும் எண்ணங்களும் said...

அன்பின் ஸ்ரீராம்,

இதை நீங்களே ஏன் செய்யக்கூடாது தலைமை தாங்கி..?

நிச்சயம் எமக்கு இப்படி ஒரு குழு தேவைதான்..

எனக்கே நிறைய விஷயங்கள் பகிர வேண்டியுள்ளது...மனம் விட்டு...

என்னிடம் சில பெண்கள் சில பதிவர்களை பற்றி கூறியதுமுண்டு..

கண்டிப்பா அலர்ட் செய்யணும்...

முக்கிய்மா சில பதிவர்களின் ஆபாசத்தை வைத்தே புரிந்துகொள்லலாம் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என...ஓரளவு...

அதே போல சில வக்கிரமான பின்னூட்டங்களை வைத்தும்...

பயணமும் எண்ணங்களும் said...

ஸ்ரீராம் , இதை குறித்து தலைப்பிட்டு தனிப்பதிவு போடுங்களேன்... எல்லாரும் இணையலாம்...

sriram said...

//இதை நீங்களே ஏன் செய்யக்கூடாது தலைமை தாங்கி..?//
சகோதரி, எதை நம்பி இக்காரியத்தை ஒரு ஆணிடம் விடுகிறீர்கள்? இதுதான் பெண்களிடம் நாம் காணும் குறைபாடு, எடுத்த உடனே ஒரு ஆணை நம்பி விடுவது, அப்புறம் குய்யோ முய்யோ என்று கதறுவது. நீங்க கொஞ்சம் தைரியமான பெண்ணாகத் தெரிகிறீர்கள். நீங்களோ வேறு யாராவது ஒரு பெண் பதிவரோ இதை செய்வதே நலம்.
யாரும் முன்னெடுக்க முன் வராத பட்சத்தில் நான் தயார். எதுக்கும் ஒரு முறை யோசிங்க. இன்னொரு விசயமும் சொல்லிடறேன். நானும் ஜாக்கி சேகரும்
நல்ல நண்பர்கள். நான் முன்னெடுக்கும் பட்சத்தில் அவன் மட்டுமல்ல வேறு எந்த ஆண் பதிவரிடமும் பகிரப்படமாட்டது. பெண் பதிவர்கள் சொன்னால் நான் பொறுப்பல்ல.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பயணமும் எண்ணங்களும் said...

சகோதரி, எதை நம்பி இக்காரியத்தை ஒரு ஆணிடம் விடுகிறீர்கள்? இதுதான் பெண்களிடம் நாம் காணும் குறைபாடு, எடுத்த உடனே ஒரு ஆணை நம்பி விடுவது, அப்புறம் குய்யோ முய்யோ என்று கதறுவது.//

ஆண்கள் எல்லாம் மோசமானவர்கள் இல்லை ஸ்ரீராம்..

சொல்லப்போனால் ஆண்களிவிட மிக மோசமான பெண்கள் பதிவுலகில் என்னால் காண்பிக்க முடியும்.. அவர்கள் எழுத்துக்களையும்..

ஆனால் பிரச்னை திசை திரும்பி நேர விரயம் தவிர்க்க இதை தவிர்ப்போம்..

நீங்க ஜாக்கிக்கு நல்ல நண்பர் என தெரியும்..

நான் மட்டும் ஜாக்கிக்கு எதிரியா ?.. அவர் ஆபாத பதிவுகளுக்கு நிச்சயமா என் கண்டனங்கள் உண்டு.. ஜாக்கி என்ற தனிமனிதன் மீதல்ல.. ஆனால் அவரும் சில அரசியலில் சிக்கி சும்மா கிடந்த சங்கை ஊதி மாட்டிக்கொண்டார் அவ்வளவே... :)


நிறைய விபரமாக பேசலாம்..

பதிவுலகில் ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகணும் என்றால் சில கெட்ட விஷயங்கள் கட்டாயம் நீக்கப்படணும்...

இதுக்கு சுயநலமற்ற மனதுடையோர் தேவை..

இவர்கள் ஓட்டுக்கோ பின்னூட்டத்துக்கோ கூட்டம் கூட்டவோ ஆசைப்படாதவர்களாய் இருக்கணும்..( கூட்டம் சேர்ந்தாச்சுன்னலே போச்சு ..:) அங்கே நியாயம் இருக்காது..எடுபடாது..)

அப்படி சிலர் அமைதியாக இருக்கிறார்களோ...அவர்களை வைத்து ஒரு குழு அமைக்கலாம்,.,.

பயணமும் எண்ணங்களும் said...

முக்கியமான விஷயம் இங்கே பல நல்லவர்களும் இந்த பின்னூட்ட புகழ் போதையில் சிக்கியிருப்பதால் , எங்கே தன் புகழ் குறைந்திடுமோ என அஞ்சியே நியாயத்துக்கு குரல் கொடுப்பதில்லை..

தட்டிக்கேட்பதில்லை...

பலருக்கு அச்சமும் காரணம்... குடும்ப கெளரவம் கெடுமோ , தன் பேர் ரிப்பேராகுமோ என்ற பயம்..

எனக்கு அப்படி ஏதும் பயமில்லை... நான் எந்த ஒரு கூட்டிலும் இல்லை.. தனி ஆள்தான்...

இப்ப்பகூட நீங்க இதில் முழுமையா இறங்குவீங்களான்னு எனக்கு தெரியலை... எதையாவது சொல்லி உங்களையும் கூட கலைத்திடுவார்கள் பாருங்கள்..:)

sriram said...

//சுயநலமற்ற மனதுடையோர் தேவை..

ஓட்டுக்கோ பின்னூட்டத்துக்கோ கூட்டம் கூட்டவோ ஆசைப்படாதவர்களாய் இருக்கணும்//

இவை மட்டுமே தகுதிகள் என்றால் நான் Qualify ஆவேன் என நினைக்கிறேன். Why don't you discuss with few female blogger and let me know if I need to be involved.

பயணமும் எண்ணங்களும் said...

இவை மட்டுமே தகுதிகள் என்றால் நான் Qualify ஆவேன் என நினைக்கிறேன். //

இது போதுமே.. இதுவே அதிசயம்தான்..

நான் துளசி அம்மாவிடம் , பேசிப்பார்க்கிறேன்.. இன்னும் சில பெண்களிடமும்...

ஒரு பதிவும் போடுகிறேன்...

அமுதா கிருஷ்ணா said...

//சகோதரி, எதை நம்பி இக்காரியத்தை ஒரு ஆணிடம் விடுகிறீர்கள்? இதுதான் பெண்களிடம் நாம் காணும் குறைபாடு, எடுத்த உடனே ஒரு ஆணை நம்பி விடுவது, அப்புறம் குய்யோ முய்யோ என்று கதறுவது//.

ஸ்ரீராம் சொல்வது கரெக்ட்..
பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையா யார் பெயரையும் சொல்லவே மாட்டார்கள் ஸ்ரீராம்.ஏனெனில், சாட் செய்த போது பேசியதை பத்திரப்படுத்தி வைத்து இருப்பார்கள் சிலர். பேசும் போது ஜாக்கிரதையாக இல்லாமல் தனக்கு திடீரென்று பிடிக்கவில்லை என்ற போது சம்பந்த பட்ட ஆண்களை குற்றம் சொல்லி என்ன பயன். இதில் பெண்களின் தப்பும் நிறைய இருக்கிறது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_08.html

பயணமும் எண்ணங்களும் said...

அமுதா கிருஷ்ணா said...

இதில் பெண்களின் தப்பும் நிறைய இருக்கிறது.//

சரியாக சொன்னீர்கள் அமுதா...

பயணமும் எண்ணங்களும் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_08.html//

வாங்க ராம்சாமி..

அப்படியா.. பார்க்கிறேங்க.. நன்றி..

Vinoth said...

வரூண், கௌசல்யாவின் பதிவில் சொல்லியுள்ளது போல்,ஆண் பதிவர்கள் திருமணமான சில பெண்கள் வாழ்க்கையில் குறுக்கிடுகின்றனர் என்றால், அதை நான் மறுக்கவில்லை,கௌசல்யவின் பதிவை படித்து பாருங்கள், அதில் அப்பாவியாக சும்மா இருக்கும் பெண்களை ஆண்கள் மட்டும் திட்டமிட்டு ஏமாற்றுவதுபோல் இருக்கும்.

அதற்குதான் நான் பதில் சொன்னேன்.
இன்னுமொறு விஷயம்,

திருமணமான பெண்கள், தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவர்களின் கடமை ஆகும். இதை வேறு யாரும், அவர்க்ளின் கணவன் உள்ளிட்ட யாரும் செய்ய முடியாது.

ஒன்று வேண்டுமானால் செய்யலாம்.
இது போன்ற பாலியல் தொல்லைகள்,
பொருளாதார குற்றங்கள், என பல பிரச்ச்னைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி என யாராவது ஒரு பதிவர் அல்லது பதிவர் குழு தொடர் பதிவு இடலாம் மற்றவர், அப்பதிவுக்கும் தமது தளத்தில் இருந்து லிங்க் தரலாம். பாதிக்கபட்டவர்களின் அனுபவததைய்ம் தந்தால் மேலும் பயன் உள்ளதாக இருக்கும்.


அப்போது பாதுகாப்ப்பு குறிப்புகள் அனைவரையும் சென்று சேரும்.

S பாரதி வைதேகி said...

நல்ல பயனுள்ள பதிவு. நன்றி