Thursday, April 30, 2009

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 11

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 11
விரைந்து மருத்துவமனைக்கு வந்தவளை , அந்த பெரிய மருத்துவமனையில் அவ்வளவு எளிதாக உள்ளே விடாமல் ஆயிரம் கேள்விக்கணைகள்..
அதற்குள் ராஜ் விரைந்து வந்தார்... தன் அத்தானுக்கு சிறுநீரக கோளாறு ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் ஐசியு வில் அட்மிட் செய்திருப்பதாகவும் சொல்லி உள்ளே அழைத்து சென்றான்...
பக்கத்து அறையில் அவர் அக்கா..
நல்ல நாளில் பேச மாட்டாரே.. இப்ப ஆறுதலுக்கு பெண்கள் யாருமில்லை...என்ன செய்வது ஒரே குழப்பம் மலருக்கு..
கணவன் பின்னாலேயே சென்று அமைதியாக நின்றாள்..
" பிள்ளைகள் எங்கே..?" மெதுவாக கேட்டாள்..
" அவர்கள் இருவரும் வீட்டில்..." ராஜ் பதில் சொன்னார்.. பிள்ஸ் டூ படிக்கும் பெண்ணும் , 5 ம் வகுப்பு படிக்கும் பையனும்..
" அப்ப நான் வேணா அவர்களை கவனித்துக்கொள்ளட்டுமா?.. புவனாவுக்கு வேறு தேர்வு நேரமாச்சே...?"
இப்பத்தான் அவளின் கரிசனமான அக்கறை கண்டு அக்கா கொஞ்சமாய் நிமிர்ந்து பார்த்தார்..
அதையே சம்மதமாக எடுத்துக்கொண்டு அவளின் கை பிடித்தாள் மலர்.
" ஒண்ணும் கவலைப்படாதீங்க அண்ணி.. அண்ணாவுக்கு எல்லாம் சரியாகும்.. நான் குழந்தைகளை பார்த்துக்கொள்கிறேன்..இவர் உங்ககூட இருப்பார்."
அக்காவின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது...எதுவும் பேச முடியாமல்..
கண்ணாடி வழியே ஐசியு வில் இருக்கும் அந்த மஹா பெரிய தொழிலதிபரை பார்த்துவிட்டு உடனே புறப்பட்டாள் அக்கா வீட்டுக்கு..
கூட வருவதாய் சொன்ன ராஜிடமும்,
" அதான் அக்கா வீட்டு ஓட்டுனர் இருக்காரே.. நான் போய் குழந்தைகளை கவனிக்கிறேன்.. நீங்க இங்க இருந்து பெரிய மருத்துவர் வந்ததும் விபரம் கேளுங்கள்..
அக்காவையும் ஏதாவது சாப்பிட சொல்லுங்கள்...எதை பற்றியும் கவலை வேண்டாம்..."
ஆச்சர்யமாய் பார்க்கிறான் ராஜ்... " இவளுக்கு மனதில் எந்த வஞ்சனையும் கிடையாதா?...யார் என்றாலும் இறக்கப்படும் குணம் மட்டும்தானா?..
தன்னுடைய அலைச்சல், அசதி எதுவுமே பெரிதில்லையா இவளுக்கு?.."
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
மறுநாள் குழந்தைகளை பள்ளி அனுப்பிவிட்டு அப்படியே அலுவலகம் வந்து சுதிரிடம் எல்லாம் சொல்லிவிட்டு, வேலையில் மும்முரமாக இறங்கினாள்..
முடிக்க வேண்டிய வேலைகள் ஏராளம்...
அப்பப்ப மருத்துவமனைக்கு போன் செய்து அக்காவை சாப்பிட சொல்லியும் அத்தான் பற்றி விசாரித்துக்கொண்டும், தன் பெற்றோரிடம் தகவல் சொல்லிக்கொண்டும்..
இந்த சூழ்நிலையில் தன் தம்பி நீண்ட நாள் கனவாக ஜெர்மன் போவதற்கான விசாவோடு மகிழ்ச்சியோடு அவனும்...
மனசுக்குள் மகிழ்வாக இருந்தாலும், பெற்றோருக்கு இனி தான் மட்டுமே ஆதரவு அடுத்த ஒரு வருடம் என நினைக்கும்போது, கொஞ்சம் சங்கடமும்..
ஒரு பக்கம் அசதியாக இருந்தாலும் எல்லாத்தையும் தன்னால் சமாளிக்க முடியும் என்கிற தைரியமும் ..
யோசனையில் இருக்கும்போதே சுதிர் வந்தான்..
" மலர், நான் தேர்தல் செய்திகளை கவர் பண்ண எல்லா மாவட்டங்களுக்கும் விசிட் செய்வேன்.. நீங்க உடனே செய்திகளை அப்டேட் பண்ணிடுங்க இங்கிருந்து.."
"ம். சரி ."
"நம்ம முருகன் இருக்காரில்லையா .. அவரையும் , தேவைப்பட்டா தற்காலிகமா யாரையாவது துணைக்குப்போட்டுக்கொண்டு செய்யுங்க..
நீங்களே ஒருத்தராய் செய்யவேண்டாம்.."
" இல்லை சுதிர்.. இன்னொரு ஆள்கிட்ட இதை விளக்குவதற்குள் நானே செஞ்சிடுவேன்.. என்ன எனக்குத்தேவை கணினியும் தொலைபேசியும்...அது எப்பவும் என்கூடவே இருக்குமே.."
" சரி நளினா மேடம் கதை என்னாச்சு.?" எப்ப வருது?."
" அவர்கள் தன் மகனின் தொழிற்சாலைக்கு இடம் பார்த்துக்கொண்டிருப்பதில் பிஸி..."
" சரி அடுத்த முறை போகும்போது நானும் வருகிறேன்.. மற்றபடி அந்தப்பெண்கள் மூவரும் நல்மதானே.?"
புன்னகையோடு இப்ப சுதிரை பார்த்த பார்வையில் அசடு வழிந்தான்....
" சார் என்ன விஷயம்..?"
" ஹேய்ய்ய்ய்ய்,.. சும்ம சொன்னேம்பா...நீங்க வேற... அதில் ஒருவரை அன்று மின்சார அலுவலகத்தில் பார்த்தேன்.. ரொம்ப நன்றி சொன்னாள்..."
" ஒஹ்ஹோ டிராக் இப்படி போகுதா...?" சிரித்தாள் மலர்.
" அய்யோ கடவுளே.. நீங்க ஏதாவது கற்பனை பண்ணாதீங்க..."
" அதுக்கில்லை சுதிர், அந்த மூவரில் ஒருவரைத்தான் தன் மகனுக்கு முடிக்க இருக்கிறார் நளினா..."
" ஆனா மூவருமில்லையே..." என சொல்லிவிட்டு ஓடிவிட்டான்...
கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியில் மலர்.. ஆனாலும் அவன் நல்லெண்ணத்தை கண்டு உள்ளூர மகிழ்ந்தாள்...
-------------------------------------------------------------------------------------------------------------------------
மருத்துவமனைக்கு சென்றதும் மிக சோகமாக கணவரும் , அக்காவும்...
அக்கா இவளை பார்த்ததுமே, கட்டி பிடித்து அழ ஆரம்பித்துவிட்டார்..
எப்பவுமே பட்டு சேலையும் கழுத்து நிரம்ப நகைகளுமாய் இருப்பவர், சாதாரண நூல் சேலையில் நெற்றி நிறைய
விபூதியோடு தாலியோடு மட்டும்...
கண்களாலேயே கேட்டாள் என்னாச்சு என்று.?
அவளை மட்டும் வெளியே அழைத்து சென்று,
" அத்தானுக்கு டயாலிஸ் செய்வது அதிக நாள் பிரயோசனமில்லையாம்..
கண்டிப்பாக சிறுநீரகம் மாற்றியே ஆகணுமாம்..."
இடி விழுந்தது போல இருந்தது...
எப்படிப்பட்ட நல்ல மனிதர்...ஏழைகளுக்கு என்றால் அள்ளி அள்ளி உதவுபவர்.
யாரிடமும் அதிர்ந்து பேசாதவர்...
அடுத்த வாரம் முழுதும் பேப்பரில் விளம்பரம் கொடுப்பதும், தமக்குத்தெரிந்தவரிடம் எல்லாம் கேட்டுப்பார்ப்பதுமாய் இருந்தார்கள்..
உறவுகள் எல்லாருக்குமே பயம் தன் சிறுநீரகத்தை தானம் வழங்க..
பணத்துக்காக வந்த சிலரும் பொருத்தமாயில்லை என மருத்துவர் சொல்ல...
----------------------------------------------------------------------------------------------------------------------தன் மகன் நாளை வெளிநாட்டில் இருந்து வருகிறான் என்றதும் மனம் கொள்ளா மகிழ்ச்சி நளினாவுக்கு...
முடிந்தால் தான் பார்த்து வைத்திருக்கும் பெண்ணொருத்தியையும் விமான நிலையத்துக்கு துணைக்கு கூட்டி வருவதாகவும் சொல்லிவைத்தாள்..
மலருக்கு போன் செய்து தான் பார்த்திருக்கும் தொழிற்சாலை இடம் பத்தியும் , மகன் வந்ததுமே உதவியாளர்
தயாராக இருக்க வேண்டுமெனவும் தாழ்மையோடு கேட்டுக்கொண்டார்...
ஆனால் அன்று தான் மலருக்கு அலுவலில் ஏகப்பட்ட வேலை...சுதிர் வேறு இல்லை.
சாயங்காலம் கிளம்பும்போது முதலாளி வந்தார்..
" இந்த மாதம் முழுதும் இரவு நேரமும் வேலை செய்ய வேண்டியிருக்கும் .. சம்பளம் எல்லாருக்கும் இரு மடங்கு..தெரியுமோ.?"
ரொம்ப தாராள மனது மாதிரி...
" சாரி சார்.. எனக்கு வீட்டில் பொறுப்புகள் அதிகம் இப்ப.. என்னால முடியாது..."
" ஹஹஹா.. அது சரி அதுக்காக உடனே வேறு ஆளை பார்க்கவா நாங்க உனக்கு பயிற்சி கொடுத்திருக்கோம்..?"
" நினைத்த நேரம் வாகன்ம், பாதுகாப்பு, பணச்செலவு, ஆட்பலம் னு தண்ணியா செலவு செய்ததெல்லாம் எதுக்கு... ?.. இப்படி இக்கட்டான நேரத்தில் வேலை செய்யத்தான்.. புரியுதா.?"
மிரட்டும் தோரணையில்....
" சாரி சார். என்னால முடியாது.. ஆனா வீட்டிலிருந்தே பார்ப்பேன்..இல்லை நான் ராஜினாமா பண்ணுவேன் கட்டாயப்படுத்தினா... "
" எவ்வளவு தைரியமா முடியாது னு சொல்ற.?" அவள் தோள் மேல் கை வைத்து,
" இத பாரும்மா, நீ அனுசரித்தால் உன்னை எங்கேயோ கொண்டுபோய்டுவேன்...உனக்கு திறமையிருக்கு..." வழிந்தார்..
" சார் கையை எடுங்க..." அழுத்தமாக.
" " ஹிஹிஹி.."
" கை எடுங்க.."
" இரண்டு கையையும் இப்ப தோளில்...
" கைய எடுடா.."
" என்னடி பேச்சு மரியாதை இல்லாம...?. என் பலம் தெரியாம பேசுறியா.?.." அப்பவும் விகார சிரிப்போடு..
இதுக்குமேல் பொறுத்துக்கொள்ளாமல்,
அவர் தோள்மேலேயே மலர் கைவைத்து கால் முட்டை மடக்கி வயற்றுக்கு கீழே பலமாய் ஒரு குத்து விட்டாள்...
" அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ.. " என மிகப்பெரிய அலரலுடன், வயற்றைப்பிடித்துக்கொண்டு அப்படியே கீழே உட்கார்ந்தார் தரையில்...
இடுப்பில் கைவைத்து , தலையை அசைத்தயோசித்து எரிச்சலோடு, உடனே முருகனுக்கு போன் செய்து ஓட்டுனரையும்
மாடிக்கு வரச்சொல்லி அவரை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல சொன்னாள்..
தரையில் வலியால் துடித்துக்கொண்டிருந்தவரிடம்,
" பெண் என்றால் எதுக்கும் தயாராய் இருப்பாள்னு நினைச்சேயில்லை..?.. ஆனா இப்படி இதுக்கும் தயாராயிருப்பாள்னு நீ கனவிலும் நினைச்சுருக்க மாட்டேயில்லை..?"
கையிரண்டையும் தூசி தட்டுவது போல் தட்டிவிட்டு ஒரு புயலாய் புறப்பட்டாள்...-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments: