குழந்தையின் கும்மி.. - 5
அன்று வார விடுமுறை ..ஷாப்பிங் போயே ஆகணும்.. என்ன சட்டை போட்டாலும் பிடிக்காதாம்.. அதாவது பரவாயில்லை.. நான் என்ன உடுத்தினாலும் " இது வேனாமா. வேற போடு.. இப்படியே 4 முறை மாற்றியாச்சு..."
அவுக அப்பா கூட சொன்னதில்லை...இப்படி.
ஒருவழியா கிளப்பி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சென்றோம்.
எப்போதும் வண்டிக்குள்ள தூக்கி போட்டாதான் நான் சாமான் வாங்க முடியும்...
இன்னிகு பிடிவாதம் .. கீழே விடுன்னு.. இறக்கி விட்டா அவனும் ஒரு கூடையை எடுத்துக்கொண்டு, என் பின்னாலேயே கண்ட சாமானும் ( அவனுக்கு பிடித்ததை ) எடுத்துப்போடுகிறான்..
அண்ணாவும் அப்பாவும் சொல்லி பாத்து , கெஞ்சிப்பாத்தாலும் முடியலை..
"சரி விடுங்க.. ஏதோ உடையாத சாமான் எடுக்கானான்னு மட்டும் பாருங்க..."
அவனுக்கு நான் சப்போர்ட் பண்றதுக்கு நன்றியா உடனே எனக்கு ஒரு முத்தமும், .....
அய்யோ என்ன இது... இப்ப என் வண்டியையும் சாமானால் நிறப்ப ஆரம்பிக்கிறான்..
கேக்கணுமா அண்ணாக்கும் அப்பாக்கும் சிரிப்பை.. மெதுவாக கழண்டுகொண்டார்கள்..நீயாச்சு பையனாச்சு என்று.
" என்னங்க.. ஏய் தம்பி..கொஞ்சம்.. /..."ம்கூம்.. ஆள காணோம்..இப்ப டபுள் வேலை...சின்னவன மேய்க்கணும்.. சாமனன்களை ஞாபகமா வாங்கணும்.. அப்பப்ப அவன் கீழே போடுறதை எடுத்து குடுக்கணும்.. எங்கயும் இடிக்காம சர்க்கஸ் பண்ணனும்..முக்கியமா, கவுண்டரில் அவன் வாங்கிய சாமானை அவனுக்குத்தெரியாமல், மறக்காமல் எடுத்துவிடணும்.. சிலசமயம் வீடு வந்தபிந்தான் தெரியும் , இது எப்படி வந்தது என்று..?.
ஒருவழியா வாங்கியதும் உணவு செக்ஷன்..
அங்கே சாம்பிளுக்கு ஒரு கேக்கை பல துண்டா வெட்டி வெச்சுருந்தாங்க.. நான் எவ்வளவு நல்லா ( ????) கேக் பண்ணினாலும் வாசம் கூட பிடிக்காதவன், அந்த பொண்ணு குடுத்ததும் வாங்கிக்கொண்டான்.. ஆச்சர்யம்.. ஓ அவ அழகா இருக்கான்னா.. ?//.
அவள் மேலும் மேலும் கொடுக்க வாங்கி சாப்பிடுறான்.. அங்கே வந்த அண்ணாவுக்கும் அப்பாவுக்கும் ஆச்சர்யம்.. எனக்கோ சந்தோஷம் , பிள்ளை புதுசா கேக் சாப்பிடுறானேன்னு.. அண்ணாக்கு கோவம் வருது.." அம்மா , போதும்.. முழுதும் சாப்பிடுவான் போல.. என்ன நினைப்பாங்க.."
" பரவாயில்லை மா.. நான் காசு கொடுக்கிறேன்...ஒரு சின்ன துண்டுதானே மா"
" அய்யோ அம்மா.. எனக்கு அசிங்கமா இருக்கு..."
" சரி நீ அப்ப கொஞ்சம் ஒதுங்கிக்கோ. எனக்கு என் பிள்ளை சாப்பிடுறதே பெரிசப்பா..புதுசா ஒன்று கத்துக்கொண்டிருக்கிறான் தொந்தரவு செய்யவேணடாமே.."
அதே கேக் ஒரு பார்சலும் வாங்கிக்கொண்டேன்..வீட்டுக்கு வந்து அத தொட்டுகூட பாக்கலங்கறது வேற விஷயம்...
அடுத்து நான் காய்கறி வாங்க, அவனோ திராட்சை பார்த்துவிட்டான்..ம்.. ரொம்ப பிடிக்கும்.. அதுவும் கடையில் இருந்தால் மட்டும்..
திராட்சை கொத்தில் ஒன்றினை மட்டும் பிய்த்துவிட்டு, ஒடுகிறான், பணம் செலுத்துமிடம்..
பின்னாலே நானும்.. ஓடினேன்...கவுண்டரில் வைக்கிறான் அந்த ஒரு திராட்சையை, ரொம்ப உத்தமனாட்டம்.. அவளோ சிரிக்கிறாள்.. அதற்குள் அப்பா ஒரு பையில் திராட்சையுடன் வந்து பணம் செலுத்த, அவன் திராட்சைக்கு மட்டும் அவன் கையில் பணம் தந்து. அதையும் ஒரு சின்ன பையில் போட்டு கொடுத்ததும் ஏதோ சாதித்த சந்தோஷம் .. ஆனா அண்ணாவுக்குதான் இதெல்லாம் பிடிக்கவில்லை... அவர் செய்த குளப்படிகள் மறந்து விட்டாரே.......
அடுத்து ஐஸ்கிரீம்... அப்பாவுக்குத்தெரியாமல் வாங்கணுமே... இல்லாட்டி திட்ட ஆரம்பித்தால் என் பரம்பரை பல்லின் பெருமையெல்லாம் இழுபடுமே....
************************தொடரும்..******************
Sunday, August 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment