Tuesday, April 29, 2008





*பாகம் - 2*




நான் முக்கியமான வேலையில் இருக்கும்போது டேனிக்கு பிடித்த விளையாட்டு கணினி மேசை , சமயல் மேசை மேல் ஏறி அமர்வது..
சிலசமயம் மானிட்டர் மேலும்... கீழே இறங்கும்மா என்று கெஞ்சினாலும் " மாட்டேன் " என்ற கலகல சிரிப்போடு கூடிய பதில்தான்..
குழந்தையோடு கொஞ்சுவது பிடித்தமான வேலைதான் இருந்தாலும், சில நேரம், வேலையும் நடக்கணுமே.. அவனோடு பேசிக்கொண்டிருந்தால் ,
உப்பு போட்டேனா, சீனி போட்டேனா, என்று குழம்பிவிடுவேன்...அவனைக்கண்காணிப்பதில்...
அதனால் வேறு வழியின்றி, டாம் & ஜெரியில் வருவதுபோல்,
" மானிட்டர்/குக்கர் குள்ளா வெடி இருக்கு வெடிச்சுரும்.. கீழே இறங்கு.."
" ஏன் வெடிக்கும், யார் வெச்சா..?.."
" அதுமேல உக்காந்தா வெடிச்சுரும்.."
" ஏன் உக்காந்தா வெடிக்குது..?"அப்பாவியாக.
" ஏன்னா, அதுக்கு பிடிக்காது.."
" ஏன் அதுக்கு பிடிக்காது..?.." கண்ணை சுறுக்கிக்கொண்டு
" அய்யோயோயோ... ஏன் இப்படி கேள்வியா கேட்க...அம்மா இவ்வளவு நேரம் விளையாண்டேன்ல..?போய் விளையாடு.. வேலை முடிச்சு வாறேன்.."
" ஏன் கேக்கக்கூடாது...அம்மா?." சீரியஸாக
" ஹிஹி.."
"அம்மா. ஏன் சிர்க்கீங்க..?." பயத்துடன்
" ஹிஹி ஹஹ ஹிஹி..முடியலமா.."
" அம்மா, ஏன் சிரிக்க சொல்லு..." என் வாயைப்பொத்திக்கொண்டு..
" ஹஹஹஹஹஹஹஹஹஹஹாஹாஹா... அய்யோ யாராவது காப்பாத்துங்களேன்..."
" நிறய கேளுடா ஐயா, அம்மாகிட்ட...அறிவு வளரும்..." அப்பா...
" அப்பா என்ன கேக்கணும்...?.."மழலையில் அப்பாவியாக
" அய்யய்யோ, நான் மாட்டிக்கிட்டேன்.... கொஞ்சம் உன் அண்ணாகிட்ட போறியா?.."
" சிங்கண்ணா... சிங்கண்ணா...." உதவிக்கு கூப்பிடுகிறான்..( சிங்கு - பெரியவன்..)
" அம்மா , இப்ப டேனிய இங்க அனுப்பாதீங்க., பிளீஸ்.... நான் வீட்டுப்பாடம் செய்யணும்..."
****************தொடரும் ***********************************************

2 comments:

ரசிகன் said...

//ஹஹஹஹஹஹஹஹஹஹஹாஹாஹா... அய்யோ யாராவது காப்பாத்துங்களேன்..."
" நிறய கேளுடா ஐயா, அம்மாகிட்ட...அறிவு வளரும்..." அப்பா...//

ஹா..ஹா.. யாருக்கு அறிவு வளரும்ன்னு கேக்காம போச்சே குழந்தை.. ”அம்மாவுக்குத்தான்”ன்னு உண்மைய சொல்ல வேண்டி வந்திருக்கும்ல்ல.:)))))

ரசிகன் said...

நெசமாலுமே குழந்தைகளின் இயல்பான கேள்விகள் நம்மை பலசமயங்களில் சிந்திக்கச் செய்கின்றன.

நல்லாயிருக்குங்க.. படிச்சு ரசிச்சு சிரிச்சேன்.நன்றிகள்:)