Tuesday, April 29, 2008
*குழந்தையின் கும்மி..*
இந்த பதிவு, என் குழந்தையின் சேட்டைகளை எனக்கு பின்னாளில் மறவாதிருக்க,வலையில் பதிவுசெய்யும் பொருட்டு, பயணத்தை தொடங்க உள்ளேன்... இதில் உங்களுக்குத் தெரிந்த , அல்லது நீங்கள் பண்ணிய கும்மியையும் தந்தால் மகிழ்வேன்... தற்பெருமைக்காக என நினைத்தால் மன்னியுங்கள்... கிடைத்த சின்னஞ்சிறு மகிழ்வுகளை, சோர்ந்திருக்கும் பொழுதில் ஞாபகப்படுத்திக்கொள்ள மட்டுமே...:-))... ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்...:-))
---------------------------------------------------------------------------­-----------
" *அம்மா மங்கி கத சொல்லு..."*
*" மொதல்ல பாட்டு, அப்புரம்தான் கத சரியா?..நீ மொதல்ல ஒழுங்கா படுக்கிறியா?... ?*
*3 தலையணை, முழுவதிலும் படுத்துக்கொண்டு அம்மாவின் தலைமுடியை கொத்தாக கையில் பிடித்துக்கொண்டு, அப்பாவின் முகத்தில் கால் போட்டுக்கொண்டு அராஜகம் பண்ணிக்கொண்டு இருக்கு...*
*" படுக்க மாட்டேன்..."*
*" அப்ப நான் மங்கி கத சொல்ல மாட்டேன்..."* *மெதுவா கீழே இறங்கி படுக்கிறான்.* ** *" அந்த கார் கொஞ்சம் மேஜையில் வெக்கிறியா?..இடைஞ்சலா இருக்கு.."* ** *" மாட்டேன்.. கார் பாவம்.."* ** *" கார் டயர்டா இருக்கும் கார் மேஜையில் தூங்கட்டும் .." முத்தம் கொடுத்து பை பை சொல்லிவிட்டு தருகிறான்.*
*" ஒரு ஊருல ஒரு மங்கி இருந்துச்சாம்.. அது ரொம்ப நாட்டி.( சேட்டை)..அது பேரு..?."*
*" அம்மா , நான் நாட்டியில்ல, நான் குட்..."*
*" ஆமா. நீ ரொம்ப குட்.. மங்கிதான் நாட்டி...அது என்ன பண்ணுச்சாம், அதோட வெளாட்டு சாமானெல்லாம் எறிஞ்சுச்சாம்..."*
*" அம்மா, டேனி எறியமாட்டான்.. டேனி ரொம்ப குட்.."*
**
*" ஆமா, டேனி எறியவே மாட்டான்...டேனி ரொம்ப குட்.."*
*இடையில் அப்பா " என்ன பேச்சு .. சீக்கிரம் தூங்கு.. நாளைக்கு ஸ்கூல் போகணும்.."*
*" அப்பா, பேட் பாய்.. ஷ்ஷ்ஷ்.. நீ தூங்கு...அம்மா, நீ குட், நீ சொல்லு.."*
*" அந்த மங்கி எறிந்த பொம்மைகார் கீழே காவலாளி மண்டையில் விழுந்து அடிபட்டு காவலாளி ஒரே அழுகையாம்.."*
*"..ம்..."*
*" காவலாளி நேரே மேலே வந்து, வீட்டு மணியை, டிங், டாங் தட்டி, மங்கியை பிடித்துச்சென்றானாம்..."*
*" அம்மா, டேனி போமாட்டான்..."என் முகவாயை பிஞ்சுக்கையால் பிடித்துக்கொண்டு..*
*" டேனியில்லை , மங்கி..... அதுதானே எறிந்தது.."*
*" மங்கிக்கு 2 அடிகுடுத்து அறையில் பூட்டி வைத்தான் காவலாளி..."*
*" பாவம் மங்கி.... அம்மா, டேனி சேட் ( sad) ஆயிட்டேன்..." இறுக கட்டி அணைத்துக்கொண்டான்..*
*" அப்புரம் ,மங்கி சாரி சொல்லிச்சாம்... மிட்டாய் குடுத்து இனி செய்யாதேன்னு சொல்லி காவலாளி அனுப்பிட்டான்.."*
*" அம்மா டேனி செய்யமாட்டான்...டிவிங்கில் ஸ்டார் பாட்டு பாடு.."*
*" அம்மாவுக்கு டயர்டா இருக்கு, கொஞ்சம் முடிய விடுறியா?.. அங்க பார் நிலவு வந்தாச்சு.. உள்ளே தேவைதைகளெல்லாம் உன் பிரேயருக்காக காத்திருக்காங்க... "*
*" நீ சொல்லு.பிரேயர..டேனி ரொம்ப டயர்டா இருக்கான்."*
*" அப்ப கடவுள் எனக்குதான் எல்லாம் தருவாங்க .. நீ சொல்லு..அப்பதான் நீ தூங்கும்போது காதுல வந்து மெதுவா பாடுவாங்க...பார், செடில உள்ள பூவெல்லாம் ஆட ஆரம்பிச்சாச்சு, வந்துட்டாங்க...."*
*" ம்ஹும்..ம்ஹூம்... காட் பிளஸ்..டேனி..........ஹப்பி..."முனகிக்கொண்டே..*
*" சரி கண்ண மூடிட்டு தூங்கு....."*
*" அம்மா, சுச்சூ...வருது.."*
*" பொய் சொல்லாத, இப்பதான போய்ட்டு வந்த..எத்தன வாட்டி போவ.?"*
*" அப்ப மங்கி கத சொல்லு.. "*
*" டேனி இப்ப நீ ,அடிவாங்கப்போற.. போ போய் அப்பாகிட்ட கேளு..."*
*" அப்பா, மங்கி கத சொல்லு..."*
*" நான் அப்பவே தூங்கிட்டேன்.." அப்பா.......*
********************************************************தொடரலாம்..*********­*****

1 comment:

ரசிகன் said...

//தற்பெருமைக்காக என நினைத்தால் மன்னியுங்கள்...//

நீங்க வேறங்க அக்கா. .. குழந்தைகளின் சேட்டைகளை ரசிப்பதை விட ஒரு இனிமையான பொழுதுபோக்கு இருக்க முடியுமா?

நாங்களும் படித்து ரசித்தோம்ல்ல்/. நல்லாயிருக்கு
தொடருங்க:))