Friday, February 29, 2008

முடிவு - 2 . பாகம் - 17- கல்யாணத் தேன் நிலா. =============================================
மதுவுக்கு அலுவலகத்துக்கு செல்வதே மிகவும் சோதனையாக உள்ளது .. வீட்டுக்கு வந்தால் ரகு.. அனேகமாக இந்த வாரத்துக்குள் பிரிவு உறுதி....

எந்த வித முன்னேற்றமுமில்லை ... நிம்மதியில்லாமல் ஆனால் வெளியில் சிரித்த முகத்துடனே...அதிக மனச்சுமை ஆளை வாட்டுது...
உடம்புக்கு முடியாமல் விடுப்பு எடுக்கிறாள்.., சரியாகிற மாதிரி தெரியவில்லை ஒரு வாரம்... ஆனால் வேந்தன் நம்பவில்லை.

அவள் வேண்டுமென்றேதான் வரவில்லை என்றே நினைக்கிறார்...
அவன் போன் நம்பர் வந்தாலே இவள் பதிலுரைக்காமல் யாரிடமாவது கொடுத்து பதில் சொல்கிறாள்...

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வேந்தனுக்கு மிகவும் வேதனையளிக்கிறது.. நம்மால் தான் மதுவுக்கு இந்த நிலைமை..வருத்ததுடன் நேராக ரகுவிடம் செல்கிறான்..ரகுவுக்கு அதிர்ச்சி..

" ரகு, என்னால மதுவோட நிலைமையை பார்க்க சகிக்க முடியலை...யார் சரி , யார் தவறுன்னு நான் பேச வரல....என்ன செய்தால் உங்களுக்கு விருப்பமோ அதை நான் செய்கிறேன்.. அவர்கள் 5 மனிக்குமேல் உங்கள் மனைவியாக உங்களுடன் இருப்பார்கள்... வீட்டிலேயே அலுவலகத்தை நான் அமைக்கிறேன்.. வெளிநாடு செல்லும் பொறுப்புகளை, மற்றும் அனைத்து அலைச்சல்களும் இனி நான் பார்த்துக்கொள்வேன்... கிட்டத்தட்ட வேலையை விட்டது போலவே... மதுவின், அறிவும், அன்பும் தான் எங்கள் தொழிலின் மிகப்பெரிய சொத்து... அதற்கு முதலில் மது சந்தோஷமாக இருக்கணும்.. அதுக்கு என்ன வேண்டுமோ அதை செய்ய நான் தயார்..."

ரகுவின் கைகளை பிடித்துக்கொண்டு..

" அய்யோ என்ன இது வேந்தன்.. இப்படியெல்லாம் ..." ரகு..

" நீங்கள் விருப்பப்பட்டால் மதுவுடன் கூட எங்கள் அலுவலகத்திலேயே வேலை செய்யலாம்..வெளிநாட்டு பயணம் இருவருமே செல்லலாம்... வழி இல்லாமலில்லை.. ரகு.. இதையெல்லாம் நான் ஏன் செய்ரேன்னா, நான் மதுவை விரும்பினேன், ரகு, ஆனால் அவள் மனது பூரா நீங்கதான் நீக்கமற நிறைந்துருக்கீங்க. அந்த அன்பு எனக்கு ஒருபோதும் கிடைக்காது கோடி கொடுத்தாலும்..என் ஆயுசுக்கும்.... ஆனா உங்ககூட சேர்த்துவைக்க என்னால் முடிந்ததை நான் பண்ணுவேன்..அதுவே என் சந்தோஷம்.."

ரகு யோசிக்கிறான்..

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விவாகரத்து ஆக ஒரு வாரமுள்ளது.... ரகுவோ அன்னையிடம் தான் ஒரு பெண் பார்த்திருப்பதாக தெரிவிக்கிறான்... சாயங்காலம் பெண் வீட்டார் வருவதாகவும் சொல்கிறான்.. காதில் விழாததுபோல் காட்டிக்கொண்டாள் மது...அலுவலகமும் கிளம்பிவிட்டாள்..

சாயங்காலம் வீட்டுக்குள் வந்தால் , கீதாம்மா, அப்பா, நிஷா, டாக்டர், சுந்தர், எல்லோரும்... ஒஹோ, எல்லோரையும் கூப்பிட்டுள்ளாரோ, நல்லபிள்ளையாட்டம்... மரியாதைக்காக சிரித்து வரவேற்றுவிட்டு , மாடிக்கு செல்கிராள்..

" மது, நீயும் சீக்கிரம் வாம்மா.. நீ வந்துதான் சரி சொல்லணும்.."விசாலம் அம்மா.. நான் ஒரு பேச்சுக்கு ரகுவுக்கு பரிஞ்சா, ஏன் இப்படி, பெரியவங்களும்...

" இதோ...வரேன் மா.." கீழே வந்தால், ஆளாளுக்கு போட்டோவை வியந்து பேசுகிறார்கள்..

" பொண்ணு அழகுதான்.."

" கொஞ்சம் மூக்கு நீளம்.."

" சிரிச்ச முகம்.."

" ரெட்டை நாடியோ.??.. யோகக்காரி..." அய்யோ நிப்பாட்டமாட்டீர்களா என்றிருந்தது...மதுவுக்கு...

" மது நீயும் ஒருமுறை பார்த்துவிட்டு சம்மதம் சொல்லு...." ரகு... என்ன திமிர்... இருந்தாலும் எல்லோர் முன்னாலும் என்ன சொல்ல, தயங்கி.,

" ...ம்.. உ...ங்க....ளுக்கு ச....ரி......ன்னா, எ...ன.....க்கும்.. ர..கு.." " இல்ல ஒருமுறை பார்த்துவிடு..." நீட்டுகிறான் போட்டோவை...

வாங்கி பார்த்தவள்..,,ஒன்றுமே பேசமுடியாமல் , வெட்கமும், படபடப்பும் சேர்ந்துகொள்ள, கொஞ்சும் கோவத்துடன் , எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு , வழிகிற புன்னகையுடன், நேராக சென்று, ரகுவின் சட்டயைப்பிடித்து முறைத்து, திட்டிவிட்டு செல்லமாக கோபித்துக்கொண்டு மாடி ஏறி சென்றுவிட்டாள்..... எல்லோரும் சிரிக்க , ரகுவும் மாடி ஏறுகின்றான்..

" நான் வேணுமின்னா துணைக்கு வரவா, மதுவை சமாதானப்படுத்த...?." டாக்டர்..சொல்லிக்கொண்டே மாடிப்படி ஏற முயல , எல்லாரும் அவரைப்பிடித்து இழுக்க,

----------------------------------------------------------------------------------------------------------

மது சமாதானமாகி புதுப்பெண் வெட்கத்தில் கீழே வர,

" இதுக்கெல்லாம் காரணம் யார்னு வெளியே பார் மது..." அங்கு அவள் அலுவலகம் அமைக்க பத்து எஞ்சினியர்களுடன் வேந்தன் மும்மரமாக... உள்ளே வருகிறார்..

' ரகு, எல்லாம் ரெடி, இன்னும் மூன்று மணி நேரத்தில் ஸ்விட்சர்லாந்து விமானம் கிளம்பிடும்...சீக்கிரம் கிளம்புங்க உங்க இரண்டாவது தேனிலவுக்கு... நேரமிருந்தா அப்படியே எங்கள் அலுவலக கண்காட்சியும் பார்த்து வாங்க...மது வந்ததும் எனக்கு பெண் பார்க்கும் வேலை இருக்கு, சீக்கிரம் .." என்று சிரித்துக்கொண்டே , டிக்கெட், பாஸ்போர்ட் அனைத்தையும் தருகிறார்.. இன்ப அதிர்ச்சியில் மது..

------------------------------------------------------------------------------------------------------------------------------

விமானத்துள், ரகுவுக்கு , மதுவுக்கு இருக்கை எண் , 18 A, 18 C .. ஒரே ஒரு ஆளுக்காக அனைவரும் காத்திருக்க, அப்ப்ப்ப்ப்பப்ப்பப்ப்பாபாபா..அலுத்துக்கொண்டே

" லொள்ளு தாங்க முடில ரசிகைங்ககிட்ட.." முனீஸ்.. விமானப்பணிப்பெண்கள், அவனிடம் ஆட்டோகிராப் வாங்குகின்றார்கள்..முனீஸ் இருக்கை எண்- 18 B முனீஸ் சீட்டை தேடி கண்டுபிடித்து ரகுவுக்கும் , மதுவுக்கும் நடுவில் வந்து அமர்கின்றான்.

" நீ.......யா.....????"''


" ரகு " " முனீஸ் " " மது "

இரக்கப்பட்டு, முனீஸ் இடம் மாறுகிறான்.......ரகுவின் பக்கத்தில்..

" முனீஸ் " " ரகு மது "

****************************************மு ற் று ம்....*****************************

No comments: