Friday, February 29, 2008

பாகம் - 16 - நீ காற்று நான் மழை என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

காலையில் எழுந்ததும் கணினியில் மெயில் பார்த்தால் ரகுவிடமிருந்து... ஆசையுடன் திறந்தவளுக்கு ஒரு வரியில்,

" வேந்தனுடன் உன் மறுமணத்துக்கு ,எனக்கு சம்மதம்..."அடக்கமுடியா கோபம் ..போனில் அழைக்கிறாள் அவளே

"ரகு, உங்களுக்கு, என்னை பிடிக்கலைன்னு சொல்ல உரிமையுண்டு, என்கூட வாழமுடியாதுன்னு சொல்லவும் உரிமையுண்டு,என்னைத் திட்ட, அடிக்க,உதாசீனப்படுத்த எல்லாத்துக்கும் உரிமையுண்டு.. ஏன்னா இன்னும் உங்க மேல் பாசமிருக்கு எனக்கு. ஆனா எனக்கு மாப்பிள்ளை பார்க்க உங்களுக்கு உரிமையில்லை...என்னை மறுமணம் செய்ய சொல்ல நீங்க யார்....???...""அழுகைவந்துவிடும் என பயந்து போனை வைத்துவிடுகிறாள்.

முதன்முறையாக அசிங்கமான வெறுப்பும் வருகிறது ரகுமேல்..ரகுவோ, உனக்கு அப்படி என்னை பிடித்திருந்தால்தான் வேலையை எனக்காக விட்டிருப்பாயே என்று பிடிவாதமாக நினைக்கிறான்

.------------------------------------------------------------------------------------------------------------------------------------

பல நாட்களாக தன்னிடம் எதுவும் பேசாமல் தன்னை உதாசீனப்படுத்துவது வேந்தனுக்கு வருத்தமாயுள்ளது.. இன்று ரகுவுடன் மீட்டிங் வேறு.. ரகு வந்ததும் அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, மதுவை ஒரு நிமிடம் தன்னுடைய அறைக்கு வருமாறு அழைக்கிறார்..

வேண்டாவெறுப்பாக அறைக்குள் சென்றவளுக்கு அதிர்ச்சி , ரகுவுடன் வேந்தன்..

" தயவுசெய்து, அமருங்கள்..." வேந்தன்..இருவரையும் மாறி மாறி முறைத்துவிட்டு, கதவை படாரென்று சாத்திவிட்டு கோபத்தை காண்பித்துவிட்டு பேசாமல் வெளியேறுகிறாள்..

ரகுவிடம் மன்னிப்பு கேட்டு அவன் சென்றதும், மதுவின் அறைக்கு கோபமாக வேந்தன் வருகிறார்..

அவள் தன் வேலையை தொடர்கிறாள்.

" ரகு ஏன் வந்தார் னு கூட தெரிஞ்சுக்காம , நீயா கற்பனை பண்ணிகிட்டு ,எங்களை அவமானப்படுத்தினா எப்படி?..""......" பதிலில்லை..வேலையை தொடர்கிறாள், அவரைக் கண்டுகொள்ளாமல்..

" ப்ரீத்தியை அமெரிக்காவுக்கு அனுப்பி சிறப்பு டென்னிஸ் பயிற்சி கொடுக்கும் விஷயமாக,நான்தான் வரச்சொன்னேன்.அதுக்கு உன் சம்மதம் அறியவே.."கணினியிலிருந்து பார்வையை வேந்தனிடம் செலுத்துகிறாள்.

வெட்கி, ஆச்சர்யத்துடன் , புருவம் உயர்த்தி .எழுகிறாள்..

" ஓ .. மன்னிக்கவும்..." சொன்ன மதுவுக்கு பதிலேதும் கூறாது வேந்தன் வெளியே செல்கிறார்..தன் மீதே வெறுப்பு வருகிறது..

எல்லாம் தப்பாக தெரிகிறதே...இருந்தாலும் என்னிடம் முன்னரே சொல்லியிருக்கலாமே..!

--------------------------------------------------------

வார இறுதி மீட்டிங் அறையில் கூட இருவருடன் வேந்தன் . மதுவின் விளக்க உரை முடிந்ததும் கேள்விகளால் துளைக்கிறார்..

அப்படியாவது தன்னிடம் அவள் பேசட்டும் என்றும், தன் கோபத்தை காட்டிவிட்டோம் என்றும், மனதுக்குள் சிரிப்பு..மற்ற இருவரையும் போகச்சொல்லிவிட்டு, மதுவை மட்டும் இருக்கச்சொல்கிறான், தனக்கு சில சந்தேகம் இருப்பதாக,

" ஏன் என்னிடம் பேசாமல் உதாசீனப்படுத்துகின்றாய்..நான் உன்னை கட்டாயப்படுத்தவில்லை..நீ சாதாரணமாக பேசலாமே..எனக்கு மிகவும்வருத்தமளிக்கிறது உன் செயல்...இப்படி தொடர்ந்தால் நான் சீக்கிரம் அமெரிக்கா செல்ல வேண்டிவரும்....' அமைதியாகவே எச்சரிக்கிறார்.

" நீயும் ரகுவும் பிரிவதென்பது முடிவானது... ஆனாலும் நான் உன்னை கட்டாயப்படுத்தவில்லை உடனே மறுமணத்துக்கு...என்னிடம் எப்போதும் போல் பேசு..."

------------------------------------------------------------------------------------------------------

மிகுந்த கலக்கத்துடன் மது.. அடுத்த வாரம் விவாகரத்து முடிவுக்கு வரும்..எந்த வித முன்னேற்றமுமில்லை.. பெண்ணின் பெற்றோர் கூட்டத்துக்காக பள்ளிக்குச் செல்கிறாள்... தூரத்தில் ரகுவும்...

இவளைப்பார்த்ததும், கன்னியாஸ்திரி வேகமாக வந்து கட்டி அணைத்துவிட்டு அழைத்துச் செல்கிறார்... பெண்ணையும் அழைத்துவரச்சொல்கிறார்... பெண் தூரத்தில் வரும்போதே ரகு ஆசையுடன் காத்திருக்க, பெண்ணோ, அப்பாவை பார்த்து சிரித்துவிட்டு அம்மாவை நோக்கியே வருகிறாள்..

மது பதருகிறாள்.. ' மொதல்ல அப்பாகிட்ட போம்மா .."

" அம்மா..ஒரு நிமிடம்..."

' நீ அப்பாகிட்ட பேசிவிட்டு என்னிடம் வாம்மா...அவர் வருத்தப்படுவார் இல்லயா?.." கன்னியாஸ்திரி இரக்கத்தோடு பார்க்கிறார் மதுவை...

" என்னுடைய சிறந்த மாணவி நீ.. அதேபோல் உன் மகளும்... ஆனால் உன் வாழ்க்கையில் இப்படி ஒரு சோதனை...கடவுள் ஆசீர்வதிப்பார். கவலைப்பாடாதே.."

கன்னியாஸ்திரி ரகுவையும் அழைத்து தன் அறைக்குள் சென்று குடும்பத்தோடு பேசுகிறார்...டென்னிஸ் பயிற்சி பற்றியும், வேந்தனின் பங்கெடுப்பு குறித்தும்..பின் ப்ரீத்தியை அனுப்பிவிட்டு சமாதானம் பண்ண முயலுகிறார்...

இதுவும் மதுவின் ஏற்பாடோ என்று ரகு நினைத்து..

' மன்னிக்கணும், சிஸ்டர், அதை குறித்து நான் எதுவும் பேசுவதற்கில்லை.. எல்லாம் உறுதி ஆன நிலையில்.."

இனி வழியேயில்லை என்று மதுவுக்கு புரிகிறது.... ஆண்களில் தான் எத்தனை வகை??.


***************************************************************அடுத்து கடைசி பாகத்துடன் முற்றும்..***************************

No comments: