Friday, February 29, 2008

பாகம் - 17- கல்யாணத் தேன் நிலா
=============================
மதுவுக்கு அலுவலகத்துக்கு செல்வதே மிகவும் சோதனையாக உள்ளது .. வீட்டுக்கு வந்தால் ரகு.. அனேகமாக இந்த வாரத்துக்குள் பிரிவு உறுதி....


எந்த வித முன்னேற்றமுமில்லை ... நிம்மதியில்லாமல் ஆனால் வெளியில் சிரித்த முகத்துடனே...அதிக மனச்சுமை ஆளை வாட்டுது...

உடம்புக்கு முடியாமல் விடுப்பு எடுக்கிறாள்.., சரியாகிற மாதிரி தெரியவில்லை ஒரு வாரம்... ஆனால் வேந்தன் நம்பவில்லை. அவள் வேண்டுமென்றேதான் வரவில்லை என்றே நினைக்கிறார்...

அவன் போன் நம்பர் வந்தாலே இவள் பதிலுரைக்காமல் யாரிடமாவது கொடுத்து பதில் சொல்கிறாள்... திடீரென்று பெரியவர் வீட்டிலிருந்து அழைப்பதாக ...மதுவும் செல்கிறாள்..

" எப்படிம்மா இருக்கே... எல்லா விஷயமும் எனக்குத் தெரிந்தது.. சந்தோஷப்படவா, வருந்தவான்னு தெரியலை... உன் விவாகரத்து என்னால் எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியவில்லை...எங்களால் உனக்கு எவ்வளவு கஷ்டம்.."

" அய்யா அப்படியெல்லாம் இல்லை.. எல்லாம் கடவுள் திட்டம் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.. நீங்கள் வருந்தாதீர்கள்.."

" எனக்கு இப்போது அடுத்த கவலை, வேந்தன்... உன்னிடம் பழகியதிலிருந்து குடியை விட்டவன், இப்போது மீண்டும் அதிகமாக..அருந்துகிறான். உன்னை சந்தித்தபின் தான் எத்தனை மாற்றம் அவனிடம்.எங்கள் இல்லமே ஒரு பூங்காவனமாக மாறியது அவன் கைவண்ணத்தில்.. அவன் திறமை வெளிவர ஆரம்பித்தது உன்னால்.இப்போது எல்லாம் மறுபடியும்..." வருந்துகிறார்.

' இப்ப என்னன்னா, அவன் நாளை மறுபடியும் அமெரிக்கா கிளம்புகின்றானாம்...."

" அய்யோ ஏன்..?.... என்ன இப்படி.. " பதறுகிறாள்...

" எல்லாம் உன் கையில்தான் உள்ளது மா. எனக்கு உன்னிடம் யாசிப்பது தவிர வேறு வழியில்லை... நீ எங்கள் மகளாக இந்த வீட்டுக்கு வரவேண்டும் . இப்போதைக்கு அவ்வளவே...."

" அய்யா என்ன இது.. பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு..." என்று பேசிக்கொண்டிருக்கும் போதே

" அதெல்லாம் தேவையில்லை அப்பா, என்னால் அவளுக்கு ஒரு தொந்தரவும் வேண்டாம்,, . அவளை கம்பெனிக்கு வரச்சொல்லுங்கள் மறுபடியும்... என்னை பார்க்கவோ , பேசவோ பிடிக்கவில்லையென்றால் நானே செல்கிறேன்.. அங்கிருந்தே அலுவல்களை கவனிக்கிறேன்..."

" வேந்தன் என்ன இது சிறுபிள்ளைத்தனமான பிடிவாதம்...நான் முடியாமல் இருந்ததால் பேசவில்லை.. சரி நாளை வருகிறேன் அலுவலுக்கு, அங்கு பேசிக்கொள்ளலாம்.. அய்யாவை குழப்ப வேண்டாம்..."

" நீங்கள் கவலைப்படாதீர்கள் அய்யா, மீண்டும் நாளை பார்க்கலாம்..." என்று வெளியே சென்றவளிடம் ஒரு புத்தகத்தை பரிசளிக்கிறார் வேந்தன்....

" நன்றி.. எல்லாத்துக்கும்.. அலுவல் சம்மந்தமாக என் உதவி எப்போதுமிருக்கும் உங்களுக்கு...வாழ்த்துகள்.." ஒரு பெருமூச்சுடன் ஏதும் பேச முடியாமல் விடைபெறுகிறாள்...

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விவாகரத்து ஆகி ஒரு வாரமாகிவிட்டது... ரகுவோ அன்னையிடம் தான் ஒரு பெண் பார்த்திருப்பதாக தெரிவிக்கிறான்...

யாருக்கும் உடன்பாடில்லை.. மதுவுக்கோ அதை கேட்கக்கூடாது என்றாலும் மீண்டும் மீண்டும், அதுதான் நினைவுக்கு வருகிறது...

வெளிவேஷமிட்டாலும் உள்ளே வலிக்கிறதே... குழப்பத்திலிருந்தவளுக்கு தொலைபேசி அழைப்பு...பெரியவரிடமிருந்து...

" இதோ உடனே வருகிறேன் அய்யா" அங்கு சென்றால் வேந்தன் கிளம்பி ஏர்போர்ட்டுக்கு சென்றுவிட்டார்... போன் யாரும் பேச வேண்டாம் என்றும் தானே விமானம் கிளம்புமுன் பேசுவதாகவும் சொல்லிவிட்டதால் தொலைபேசி தொடர்பும் இல்லை..

வேறு வழியில்லை, அய்யாவையும் அழைத்துக்கொண்டு விரைவாக, ஏர்போர்ட் செல்கிறார்கள்..தடுத்து நிறுத்த , சிறப்பு அறிவிப்பு மூலம் வேந்தனை பெயர் சொல்லி அழைத்து வருவிக்கின்றார்கள். அப்போதும் தூரத்திலிருந்தே தொலைபேசி மூலமாகவே பேசுகிறார்...

" என்னை தடுக்காதீங்க.. மது சம்மதம் சொன்னால் மட்டுமே திரும்புவேன்... நேரமாகிறது.."

" மொதல்ல வெளியே வாங்க வேந்தன் , பின்னர் பேசிக்கொள்ளலாம்...'"

" இல்ல மது.. எனக்கு நேரமில்லை இன்னும் 10 நிமிடத்துக்குள் நான் உள்ளே சென்றாகணும்.. "

" தயவுசெய்து திரும்பி வாருங்கள் , அய்யாவுக்காக.."

" மன்னிக்கணும், உன் சம்மதம் என்ற ஒருவார்த்தை தவிர நான் வரப்போவதில்லை.."

" அய்யோ.. ஏன் இப்படி ஒரு பிடிவாதம்.."

' சரி பை.. நேரமாச்சு..."

" கொஞ்சம் பொறுங்கள்.. "

' . ம். சீக்கிரம்..."

" சரி திரும்பி வாருங்கள்.."

" அப்படின்னா?.."

" அப்படின்னா.. சரின்னு அர்த்தம்.."

" சம்மதம் னு சொல்லு..."

"சரி. சரி. சம்மதம்.. போதுமா. மொதல்ல வெளியே வாங்க.." சிரித்துக்கொண்டே அருகில் வேந்தன் வந்ததும் மது,

" எனக்கு உங்களைப் புரிந்து கொள்ள கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்னுடன் இருந்து. பிறகு என் முடிவைச் சொல்கிறேன்' எனச் சொல்ல, அதற்கு வேந்தன் 'லேசா லேசா' இது ஒரு நல்ல முடிவுக்கு வரும் என்று சம்மதிக்கிறார்..

" நான் வெளியே வரமுடியாது.. நீதான் இப்ப உள்ள வரணும்.. நாம இரண்டு பேரும் இப்ப அடுத்த கண்காட்சிக்காக ஸ்விட்சர்லாந்து போகிறோம்...உன் பாஸ்போர்ட், விசா, டிக்கெட் எல்லாம் சரிபார்த்தாச்சு.. சீக்கிரம்... அங்கே பார்.."

அங்கு விசாலம் அம்மா, தன் குடும்பத்தார், நிஷா, சுந்தர், டாக்டர், சீதாம்மா, அனைவரும் மலர்ச்சியுடன் "உன் சந்தோஷம் தான் பெரிது மது" , " நீயில்லாமல் வாழ்வது லேசா என்பதுபோல் பார்த்து கையசைக்க,

" நேரமாச்சு, கிளம்பலாம், " என்று சொல்லிவிட்டு அனைவரிடமும் ,ஆசீர்வாதம் வாங்கிவிட்டு மதுவிடம் விசாலம் அம்மா,

" இதுவரை என் மருமகளான நீ , இன்று என் மகளாக சந்தோஷமாக அனுப்பி வைக்கிரேன் மா. சென்று வா மகளே " என்று அணைத்துக்கொள்கிறார்.

" மது, ஒண்ணும் கவலைப்பாடாதே.. வேந்தன் சரியில்லைன்னா, கவலையில்லை, இன்னும் நானும் ரெடியாதான் இருக்கேன் இன்னொரு கல்யாணத்துக்கு..." டாக்டர் சங்கர் ..

" அய்யோ அங்கிள். என்ன இது...நீங்களுமா " மது வெட்கப்பட , நேரமாச்சு மது என்று அவளை அழைத்துக்கொண்டு வேகமாக, சந்தோஷமாக ,குசும்பாக வேந்தன்...

------------------------------------------------------------------------------------------------- விமானத்துள், வேந்தனுக்கு , மதுவுக்கு இருக்கை எண் , 18 A, 18 C .. ஒரே ஒரு ஆளுக்காக அனைவரும் காத்திருக்க, அப்ப்ப்ப்ப்பப்ப்பப்ப்பாபாபா..அலுத்துக்கொண்டே

" லொள்ளு தாங்க முடில ரசிகைங்ககிட்ட.." முனீஸ்.. விமானப்பணிப்பெண்கள், அவனிடம் ஆட்டோகிராப் வாங்குகின்றார்கள்..

முனீஸ் இருக்கை எண்- 18 B முனீஸ் சீட்டை தேடி கண்டுபிடித்து வேந்தனுக்கும் , மதுவுக்கும் நடுவில் வந்து அமர்கின்றான்.

" நீ.......யா.....????"''

" வேந்தன் " " முனீஸ் " " மது "

*************************************மு ற் று ம்....*****************************

No comments: