Wednesday, April 27, 2011

ஏழை என்ற இளக்காரம்?.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-school-urges-parents-to-protest-against-RTE/articleshow/8085252.cms

மேலே உள்ள சுட்டியில் ஏழைகள் வசதியான பள்ளியில் ஒதுக்கீடு முறையில் கல்வி கற்கும் உரிமையை மறுக்க ஒரு பள்ளி அழைப்பதாக செய்தி..

Admitting poor students may bring down discipline and the quality of education and also demoralize teachers, says Sri Sankara Senior Secondary School.


ஏழைகள் எல்லாரும் மொத்தமா நாடு முழுக்க வேலை நிறுத்தம் செய்தா என்னய்யா பண்ணுவீங்க?.. முட்டாள்கள்.

ஏழை என்றால் ஒழுக்கமில்லைனு உங்களுக்கு யார் சொல்லித்தந்தா.?

In a circular issued to students by the Adyar-based school, principal Subala Ananthanarayanan has linked a student's performance to his/her economic status and asked parents to protest against the Right To Education Act.

ஒழுக்கத்த சொல்லித்தரவேண்டிய உங்ககிட்டயே ஒழுக்கமில்லையே..

வன்மையாக கண்டிக்கத்தக்கது..

எத்தனை துணிவு..?.. இதை சொல்ல?..

டிசிப்பிளீன் னா எது?,.. இந்த இங்கிலிபீசுல கெட்ட வார்த்தை பேசிட்டு அது சரின்னு அர்த்தம் சொல்ற கேவலமா?..

இல்ல பெரிய படிப்பு படிச்சுட்டு வொயிட்காலர் பிராடுதனம் , லாபியிங் பணறதா?..
குடிச்சுட்டு வேகமா கார் ஓட்டி பாதசாரிகளை கொல்வதா?.. ஈவ் டீஸிங் செய்து தற்கொலைக்கு தூண்டுவதா?.. எழுத்தில் விபச்சாரம் செய்வதா?..ரேகிங் ல் மாணவனை துண்டு துண்டாக வெட்டுவதா?.. நீதிக்கு 15 வருடம் காத்திருக்க வைப்பதா?.. எதை சொல்லுவோம் டிசிப்ளின் என.?..



ஆமா அது தெரியாதுதான் ஏழைகளுக்கு.

"All this will make all schools perform exactly like government schools in quality and discipline. //

குவாலிட்டியா?.. மாநில ரேங்க் எடுக்குது அரசு பள்ளிகள்..

(http://www.dinamalar.com/News_detail.asp?Id=19020, http://www.dinamalar.com/news_detail.asp?Id=215485 : குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிரின்டிங் டெக்னாலஜி, மருத்துவ ஆய்வகம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது,http://article.wn.com/view/WNAT7d5d8a4fa74cee7b251d08ec41ba41d9/ தாமரன்கோட்டை அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை.http://silakurippugal.blogspot.com/2008/06/blog-post.html ).

இந்த மாணவ/மாணவிகள் ஆசிரியர்கள் கேள்விப்பட்டால் எத்தனை வருத்தம் வரும்.. இதைவிட கேவலப்படுத்த முடியுமா இவர்கள் உழைப்பை..???

Is this why we have admitted our children in this or any good school?" the circular asks.

குட் ஸ்கூல் கு அர்த்தம்/அளவுகோல் என்னென்ன?.. காமிராவில் சக மாணவியை படம் பிடித்து இணையத்தில் போடும் பிள்ளைகள் படிக்கும் பள்ளியா?..போதை மருந்துக்கு அடிமையாகும் குழந்தைகள் படிக்கும் பள்ளியோ.?.

இதை சொல்பவர் வீட்டில் சமையல்காரர், தோட்டக்காரர் , ஓட்டுனர், இவர்களெல்லாம் ஒழுக்கமற்றவர்களா?.. அப்படி இருந்தால் இவர்களால் இன்று இப்படி பேசமுடியுமா?..

கல்வி என்பது என்ன?..

அறிவியலும், பூகோளமும் , பொருளாதாரம் பற்றி படிப்பது மட்டுமா?.. வாழ்வில் பணம் சம்பாதித்து வெற்றி பெற்று பின் மன அமைதியின்றி வாழ்நாளெல்லாம் மருத்துவரே கதி என அலைவதா?..

நல்ல கல்வி வாழ்க்கைக்கான பாடமாக இருக்கணும்.. உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் சக மனிதனை மனிதத்தன்மையோடு நேசிக்க, அவனும் சுவாசிக்க வழி வகுக்குமாறு கல்வி இருக்கணும்..

முரண்களை ஏற்றத்தாழ்வுகளை ஏற்கும் பக்குவம் சொல்லித்தருவதாக அல்லவா இருக்கணும்.?

சிறு வயதிலேயே பிரிவினையை போதிக்கும் கூடங்களை மூடிவிட்டால்தான் என்ன?..

ஜப்பானில் சுனாமி வந்தா பதறாம இருக்கிறார்கள்.. ஏன்.. எப்படி வந்தது அந்த பொறுமை..?. பெருந்தன்மை..?.. எப்படியும் மண்ணுக்குள் போக போறோம்.. இப்பவோ எப்பவோ.. என வாழ்நாள் முழுதும் குழந்தைப்பருவத்திலிருந்தே தயார்படுத்தப்படுகின்றனர்.. வாழும் நாட்களில் நம்மால் முடிந்ததை சக மனிதருக்கு செய்யணும் என்ற ஆவல் அங்கே பழக்கப்படுத்தப்படுகிறது..


நம்மூர் தமிழர்கள் மலேஷியாவில் கழிப்பறை சுத்தம் செய்யும் வேலை செய்வதை பார்த்தேன்.. மகிழ்ச்சியாக , மரியாதையாக நடத்தப்படுவதாக சொல்கிறார்கள்.. நம் நாட்டில்.?.. எப்ப இந்த மாற்றம் வரும்.. யார் செய்யப்போகிறார்கள்..?

டிஸ்கவரி சேனலில் , காட்டில் ஒருவன் அகப்பட்டுக்கொண்டால் பாம்பை தின்று ஓடையில் ஓடும் நீர் குடித்து, மரணித்த ஒட்டகக்கறியை பிச்சி எடுத்து தின்பதாக காண்பிக்கின்றார்கள்.. ஆக மரணிக்கும் சூழல் வந்தால் அடுத்தவனை கொன்றாவது நாம் பிழைக்கணும் எனும் என்ணமுள்ள அல்ப மனிதர்களே நாம்.. ஆனால் நாகரீகம் என்ற பேரில் பல விதங்களில் மனிதன் முன்னேற்றம் அடைந்தாலும், எண்ணம் இன்னும் கீழ்த்தரமான சக மனிதனை பிரித்து பார்க்கும் விதமாக அல்லவா போய்க்கொண்டிருக்கிறது..

எத்தனை மதம் வந்தாலும், நான் மதவாதி என சொல்லத்தான் பெருமைப்பட்டுக்கொள்கிறோமே தவிர அதிலுள்ள நல்ல விஷயங்கள் நம் கண்ணில் படாமலே இருப்பது விந்தைதான்..

யோகா , ஆன்மீக சொற்பொழிவெல்லாம் யார் கேட்கிறார்கள் னு கவனித்துள்ளீர்களா?.. ஏழைகளின் யோகா, ஆன்மீகம் எது?.. ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக வயல் வேலையோ மற்ற வேலையோ ஈடுபாட்டுடன் செய்கிறார்கள் வெள்லந்தி மனதோடு.?.. ஏனெனில் அடுத்தவனை கெடுத்து , போட்டுக்கொடுத்து வாழ்க்கையில் எப்படி முன்னேற என்ற எண்ணம் அவர்களை அரிப்பதில்லை.. தெளிவா இருக்காங்க.. இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் னு தெரியுது.. உயர்தர சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதில்லை..ஆனாலும் எதையும் ஏற்கும் பக்குவம் அவர்களிடமல்லவா இருக்கிறது..

கிலோமீட்டர் கணக்கில் நடக்க முடியும்.,. ஆனா நாம் வீட்டுக்குள்ளேயே மெஷின் வாங்கி வைத்து அதே நடையை வெட்டியாக நடக்கிறோம்.. உலகத்தை அவர்கள் சுமக்கிறார்கள்.. நம்மைப்போன்றவர் நவீன உபகரணங்களால் பாரமாக்குகின்றோம்..மின்சாரம் இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது.. அவர்களுக்கு அப்படியில்லை.. எச்சூழலிலும் வாழ முடியும்.. யார் பலசாலி?.. யாரிடமய்யா ஒழுக்கம் அதிகமிருக்குது.?..

பசிக்காக ஏழை திருடுகிறான்.. ஏழைப்பெண் பாலியல் தொழில் செய்கிறாள்.. படித்தவன் பெரிய அளவில் ஊழல் செய்கிறான்.. சீதாம்மா தன் எழுத்தில் சொன்னது போல சில பணக்காரன் ( அந்த காலத்திலேயே ) கார் கீயை மாற்றிக்கொள்கிறான்.. சினிமாவில் பெண்ணை போகப்பொருளாய் காண்பிப்பது , உடை குறைய குறைய அவளுக்கு பணத்தை புகழை அள்ளி அள்ளிக்கொடுப்பது மேல்தட்டு நாகரீகம்..???. அப்படித்தானே?.


ஏழைகளில் சேற்றில் கைவைக்காமல் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பதை ஒவ்வொரு முறை உண்ணும்போதும் எண்ணணும் என குழந்தைகளை பழக்குவோம்.. இனியாவது நாமும் திருந்துவோம், இதுவரை எப்படி இருந்தாலும்..

சுத்தப்படுத்தும் வேலையில் அவர்கள் இல்லையென்றால் நாடே நாறிவிடும் என்ற நியாபகமிருக்கட்டும் நமக்கு..

நல்லவர் கெட்டவர் எல்லா நாட்டிலும், இனத்திலும் , உண்டு.. அதுக்கு ஏழை என்ற அப்பத்தமான காரணம் சொல்லும் அருவருப்பை களைவோம்.. பணக்காரரிலும் நல்லவர் உண்டு.. பணக்காரர் எல்லாம் கெட்டவர் என ஏழை ஒதுக்குவதில்லையே..

*சக மனிதனை சமமாக பாவிக்காத, மனிதத்தனமை வளர்க்காத எந்த நாடும் அந்த மக்களும் , இல்லாமலே போகட்டும்*..


போலித்தனத்திலிருந்து இனியாவது வெளிவந்து சக மனிதனை நேசித்து ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாளில் ஏதாவது செய்தோம் என்ற மன நிறைவோடு மரணிப்போம்.. அப்போது யோகம் , தியானம் ஆன்மீகம் எதுவும் நமக்கு தேவையிராது...

( செய்தி பார்த்த அவசரத்தில் எழுதியது.. தவறிருப்பின் மன்னிக்கவும்..தயவுசெய்து அலுவலிலிருந்து பின்னூட்டம் தவிர்ப்போம்.. நன்றிகள்.)

லேட்டஸ்ட் செய்தி -




படம் .: நன்றி கூகுள்..

29 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையா சொன்னீங்க .

Anonymous said...

அனைத்து வித தனியார் பள்ளிகளிலும் எதோ ஒரு வகை discrimination இருக்கத் தான் செய்கின்றது. நான் படித்த பள்ளியில் ஒரு சாதரண தனியார் பள்ளி - 1000 மாணவருக்கு நான்கு மூத்திரசட்டியும், இரண்டு கக்கூசும் இருக்கின்றது. விளையாட்டு மைதானம் 6 அடி நீளம் 6 அடி அகலம் அதிலத் தான் பாதி சைக்கிள் நிற்கும். இப்படியான பள்ளியில் கூட - வசதியான மாணவர்கள் டுயுசன் படிப்பார்கள். அதனால் 9ம் வகுப்பு இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் போட்டு மெற்றிகுலேசன் னு பிரிப்பாங்க.. வசதிக் குறைந்த படிக்காத மாணவர்களை SSLC போர்ட் என்னும் வகுப்பில் போடுவாங்க... அவங்களை ப்ரைவேட் மாணவர்களாக இறுதித் தேர்வுக்கு அனுப்புவாங்க.... .. . படாத பாடு படுத்துவாங்க..

அப்புறம் பத்தாம் வகுப்பில் கம்மி மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நல்ல க்ரூப் பதினொன்றாம் வகுப்பில் சேர மின்விசிறி., டிவி, பணம் என லஞ்சம் வாங்கிக் கொண்டு சேர்பாங்க. வசதி இல்லாத படிப்பில் கொஞ்சம் சுமாரான மாணவர்களை காம்ர்ஸ் க்ரூப்பில் வலுக்கட்டாயமாக சேர்ப்பார்கள். இப்படி தனியார் பள்ளிகளினைப் பற்றி ஆயிரம் ஆயிரம் பக்கம் எழுதலாம்.... இல்லைங்க.. இப்படியான கொடுமைகளை கொடுமை எனவே உணராமல் தூங்கு நிலையில் தான் மாணவர்களும், பெற்றோர்களும் இருக்காங்க. கனடா வந்த பின் தான் நமது தனியார் பள்ளிகளின் மோசமான நிலையின் தீவிரத்தை என்னால் உணர முடிந்தது.

துளசி கோபால் said...

சாமி(யார்)களுமே ஏழைக்கு ஒருவிதம் பணக்காரர்களுக்கு ஒருவிதமா அனுகிரகம் பண்ணுவாங்க:(

துளசி கோபால் said...

சொல்லவிட்டுப்போச்சு.....

தோழி(?) ஒருத்தரும் அவுங்க மாமியாரும் ஒருத்தரைப்பற்றிச் சொல்லும்போது எக்ஸ்ட்ரா க்வாலிஃபிகேஷனா.... 'அவுங்க ரொம்பப் பணக்காரங்க'ன்னு சொல்வாங்க.

தலையில் அடிசுக்குவேன்....(தோழிக்குத் தெரியாமல்தான்)

எண்ணங்கள் 13189034291840215795 said...

கருத்துக்கு நன்றி நண்டு, இக்பால், துளசிம்மா..

//இப்படியான கொடுமைகளை கொடுமை எனவே உணராமல் தூங்கு நிலையில் தான் மாணவர்களும், பெற்றோர்களும் இருக்காங்க//

அதான் பரிதாபம். ஏற்க பழகிட்டோம். பழக்கிட்டோம்.. :(

எண்ணங்கள் 13189034291840215795 said...

எக்ஸ்ட்ரா க்வாலிஃபிகேஷனா.... 'அவுங்க ரொம்பப் பணக்காரங்க'ன்னு சொல்வாங்க.

சாமி(யார்)களுமே ஏழைக்கு ஒருவிதம் பணக்காரர்களுக்கு ஒருவிதமா அனுகிரகம் பண்ணுவாங்க:(//


:)) அதே.

கார்ப்பரேட் சாமிகளை வணங்குவது பேஷன்..ஆச்சே..

பணக்காரன், வெள்ளைத்தோலுடையவன் , உயர்ந்த சாதிக்காரன், மதபக்திக்காரன் னு தான் ஏமாந்து போறோம்..

இவர்களை அனுசரித்தாலே வாழ்க்கை என நம்ப வைக்கப்படுகிறோம்..

நம்மை நாமே ஏமாற்றவும்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

நல்லவேளை நான் கிறுஸ்தவ கான்வெண்டில் படித்தேன். அங்கே ஏழை மாணவிகள் அனேகர்.. எந்த வித்யாசமும் கிடையாது..

Yaathoramani.blogspot.com said...

தங்களின் தார்மீகக் கோபம் அனைவருக்குள்ளும்
எழுமாயின் நன்று
சமூக சிந்தனையுள்ள நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

எண்ணங்கள் 13189034291840215795 said...

சமூக சிந்தனையுள்ள நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கு , கருத்துக்கு நன்றி ரமணி சார்

http://rajavani.blogspot.com/ said...

ஒரு டம்ளர் தண்ணி குடிச்சிடுங்க பயணமும் எண்ணங்களும் அவ்வளோ கோபம் உங்க எழுத்துல...

ஒரு குடும்பத்துலயே யார் அதிகம் பணம் சம்பாதிக்கிறார்களோ அவர்களுக்கு முதல்மரியாதை அது தம்பி இருந்தாலும் கூட அண்ணன் உப்பு பெறா காசு மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு காதுபடவே வெம்மையாய் பேசி....

சமுதாயத்துல எனும்போது இதனுடைய பிரதிபலிப்பு ரொம்பவும் அதிகம் பயணமும் எண்ணங்களும்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

தவறு said...

ஒரு டம்ளர் தண்ணி குடிச்சிடுங்க பயணமும் எண்ணங்களும் அவ்வளோ கோபம் உங்க எழுத்துல...
//

:))))))))
ஹாஹா .

சரிங்க குடிச்சுக்கிறேன் முதல்ல..

எண்ணங்கள் 13189034291840215795 said...

தவறு said...



ஒரு குடும்பத்துலயே யார் அதிகம் பணம் சம்பாதிக்கிறார்களோ அவர்களுக்கு முதல்மரியாதை அது தம்பி இருந்தாலும் கூட அண்ணன் உப்பு பெறா காசு மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு காதுபடவே வெம்மையாய் பேசி....//

நிஜம்தான் தவறு.. அடிப்படியிலேயே மாற்றம் வரணும்..நான் என் குழந்தைகலை திட்டுவதையெல்லாம் பார்த்தால் மிலிட்டரி போல சிலருக்கு தோணுது.. :)..ஆனால் கொஞ்சவேண்டிய ஊக்கம் கொடுக்க வேண்டிய விஷயத்துக்கே கொடுக்கணும்..

புறக்கணிப்புகளை நாம் கடந்து வந்திருந்தாலும் சில நேரம் அதை மறக்க செய்யுமளவுக்கு சமூகம் நம்மை போலித்தனத்தில் இழுக்கிறதுதான்.. பெரிய சவால்தான் அதிலிருந்து விடுபடுவது..

-------------------------------------------


அதான் நான் உடனே கோபத்திலேயே பதிவை போடுவது..:)

நாடோடி said...

ந‌ம‌து நாட்டில் க‌ல்வி வியாபார‌ப் பொருளாகி விட்ட‌து..

ப‌ண‌ம் ப‌டைத்த‌வ‌னுக்கு ம‌ட்டுமே ந‌ல்ல‌க் க‌ல்வி என்ற‌ சூழ்நிலை உருவாகிடுச்சி..

நேற்று செய்தியில் ப‌டித்தேன்,

"கோவிந்த‌ராஜ் க‌மிஷ‌ன் ப‌ரிந்துரைத்த‌ ஸ்கூல் பீஸை விட‌ 75% அதிக‌மாக‌ வேண்டுமாம், த‌னியார் ப‌ள்ளி முத‌ல்வ‌ர்க‌ள் ஆர்பாட்ட‌ம்"

என்னைய்யா? ந‌ட‌க்குது, ஒரு க‌மிஷ‌ன் உருவாக்க‌ வேண்டிய‌து, அது ச‌ரியில்லையென்று விட்டுவிடுவ‌து... எதையும் உருப்ப‌டியா பாலோ ப‌ண்ண‌ ம‌ட்டீங்க‌ளா?.. உங்க‌ குழாய‌டி ச‌ண்டையில் பாதிக்க‌ப் ப‌டுவ‌து என்ன‌வோ ஏழை பெற்றோர்க‌ள் தான்...

எண்ணங்கள் 13189034291840215795 said...

உங்க‌ குழாய‌டி ச‌ண்டையில் பாதிக்க‌ப் ப‌டுவ‌து என்ன‌வோ ஏழை பெற்றோர்க‌ள் தான்.//

தட்டிக்கேட்டால் அழச்சிட்டு போங்க உங்க பிள்ளையை என்பார்கள்..

பயந்து அடிபணிந்து போவார்கள்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger நாடோடி said...

ந‌ம‌து நாட்டில் க‌ல்வி வியாபார‌ப் பொருளாகி விட்ட‌து..
//

அதே :(

இலவசங்களை ஒளித்துவிட்டு தரமான கல்வியை அரசே தந்தால் என்ன?..

அதை சொல்லாது எந்த கட்சியும்

சென்னை பித்தன் said...

வருத்தப் பட வேண்டிய செய்திதான். இப்படிப்பட்ட ஒரு சுற்றறிக்கையை எப்படி அனுப்பினார்கள்?

துளசி கோபால் said...

//இலவசங்களை ஒளித்துவிட்டு தரமான கல்வியை அரசே தந்தால் என்ன?..//

அனைவருக்கும் தரமான கல்வி, தரமான மருத்துவ வசதி, தரமான குடிநீர், தரமான சாலைகள், பொதுவான சட்டதிட்டங்கள் எல்லாம் கொண்டுவர்றோமுன்னு ஒரு கட்சி சொல்லுச்சா பாருங்க!!!!

உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் லட்சணம் இது:(

எண்ணங்கள் 13189034291840215795 said...

சென்னை பித்தன் said...

வருத்தப் பட வேண்டிய செய்திதான். இப்படிப்பட்ட ஒரு சுற்றறிக்கையை எப்படி அனுப்பினார்கள்?//


வாங்க சென்னை பித்தன் சார்.

அந்தளவு துணிவு வந்துள்ளது ஆச்சர்யம்தான்.. இவர்களளெப்படி பிள்ளைகளுக்கு நல்ல கல்வி தர முடியும்?.

எண்ணங்கள் 13189034291840215795 said...

அனைவருக்கும் தரமான கல்வி, தரமான மருத்துவ வசதி, தரமான குடிநீர், தரமான சாலைகள், பொதுவான சட்டதிட்டங்கள் எல்லாம் கொண்டுவர்றோமுன்னு ஒரு கட்சி சொல்லுச்சா பாருங்க!!!!//

சொல்லுவாங்களா துளசிம்மா..


வேணா குடிக்க இலவசம் கொண்டு வருவாய்ங்க..

shanmugavel said...

கல்வி பாடப்புத்தகத்துக்கு வெளியே இருக்கிறது என்று சொல்லப்படுவதே சரி.தனியார் பள்ளிகளின் நோக்கமெல்லாம் பணம்தான்.

சாமக்கோடங்கி said...

மிகவும் வருத்தம் தரும் செய்தி..

//*சக மனிதனை சமமாக பாவிக்காத, மனிதத்தனமை வளர்க்காத எந்த நாடும் அந்த மக்களும் , இல்லாமலே போகட்டும்*..//

இதற்காகவே உங்களுக்கு ஒரு தனி சல்யூட்..

சாமக்கோடங்கி said...

//கனடா வந்த பின் தான் நமது தனியார் பள்ளிகளின் மோசமான நிலையின் தீவிரத்தை என்னால் உணர முடிந்தது.//

சரியாகச் சொன்னீர்கள்.. நானும் நம் நாட்டில் நடக்கும் பல விஷயங்களை ஜெர்மனி வந்த பின் தான் உணருகிறேன்.. இங்கே இருக்கும் சில விஷயங்களை நம்மாட்கள் தலை கீழாக நின்றாலும் செய்ய முடியாது.. வாழ்க இந்திய ஜனநாயகம்...

வெளிநாடு வந்து நம்மூர் பற்றி பேசினால், ஓ,, இவர் பெரிய ஆளு,, வெளியூர் போனவுடனே நன்றி மறந்து போச்சோ என்று படித்தவர்களே கேட்கிறார்கள்.. அடப்பாவிகளே நமது நாட்டின் ரத்தம் ஓடுவதால் தான் அந்தப் பாசம் இருப்பதால் தான் இதனைச் சொல்கிறோம் என்று சொன்னால் அவர்களுக்கு விளங்காது..

Avargal Unmaigal said...

வணிகப் பொருளாக கல்வி மாற்றப்பட்டுள்ளாதால். ஆசிரியர்களும் விற்பனையாளராக மாறி விற்பனை செய்கின்றனர். பொருளீட்டுகின்றனர். இடைத் தரகர்களும் ஆசிரியர்களை கூலிக்கு அமர்த்தி விளம்பரம் செய்து விற்பனையைக் கூட்டுகின்றனர். இவர்களை நாம் குறை சொல்லி பயனில்லை. இதற்கெல்லாம் காரணம் நம் அரசியல் சட்டமும் நம்மால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களும்தான் காரணம். இதை கூட பெரியகாரணம் என்று சொல்ல முடியாது. இதற்கு மிக முக்கிய காரணம் பொதுமக்களே ஆவார்கள். இலவச ஆடம்பர பொருடகளூக்கு ஆசைப்பட்டு தம் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு இப்போது கதறினால் என்ன கதறாவிட்டால் என்ன? மக்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வு இல்லாத வரை இந்தமாதிரி அறிவிப்புகள் வரத்தான் செய்யும்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

அடப்பாவிகளே நமது நாட்டின் ரத்தம் ஓடுவதால் தான் அந்தப் பாசம் இருப்பதால் தான் இதனைச் சொல்கிறோம் என்று சொன்னால் அவர்களுக்கு விளங்காது.. //

ஹிஹி.

பல்பு வாங்கினீங்களா நீங்களும்..:)

நிஜம்தான் பிரகாஷ்.. நம் நாட்டையும் இப்படி மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் ஆவலும்தான் நம்மை பேச, கோபப்பட செய்கிறது..

திருப்பி திருப்பி எழுத்து மூலம் சொல்லிக்கொண்டே இருப்போம்.. ( எத்தனை அடிச்சாலும் தாங்குவோம்ல.. :) )

எண்ணங்கள் 13189034291840215795 said...

Avargal Unmaigal said...

இலவச ஆடம்பர பொருடகளூக்கு ஆசைப்பட்டு தம் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு இப்போது கதறினால் என்ன கதறாவிட்டால் என்ன? //

நிஜம்தான் .. ஒருவித மாயையில் தள்ளப்பட்டு வருகின்றோம். ஐஐடி யில் படிச்சால் தான் படிப்பா , வாழ்வா மகிழ்ச்சியா?... முடியாத குழந்தைகளைகூட கடின பயிற்சி கொடுத்து முக்கி முக்கி படிக்க செய்வது.. அதன் பாதிப்பு பலருக்கு பின்னாளில் தான் தெரியுது..

நீங்க சொன்னது போல பெற்றோர்களாகிய நாம் முதலில் மாறணூம்..தெளிவடையணும்..

வெளிநாட்டில் ஏழை பணக்காரன் என்ற வித்யாசம் அதிகமாய் பார்க்க முடியலையே என்ற வருத்தம்தான்..

டூரிஸ்டுகளை நாம் பார்த்திருப்போம்..சாதாரண உடை, ஒரு பை போட்டுக்கொண்டு பல இடத்துக்கு நடந்தே செல்வார்கள்.. குழந்தைகளும் கூட.. சில நேரம் கிடைக்கும் பஸ், ரயிலில்..போலித்தனம் இல்லை.. அடுத்தவர் மதிக்கமாடார் எனற பயமில்லை..

அடுத்தவரை பொருட்படுத்துவதில்லை..

சுதந்திரமா வாழ்க்கையை சக மனிதனை மதித்து வாழ்கிறார்கள்.. தெருவில் உள்ள சின்ன சின்ன வியாபாரிகளையும் கட்டி பிடித்து மகிழ்ச்சி பரவ செய்கிறார்கள்..அதிசயமா இருக்கும்..

http://www.youtube.com/watch?v=gqXYS1tG5yU&feature=player_embedded#at=264

எண்ணங்கள் 13189034291840215795 said...

கருத்துக்கு , வருகைக்கு நன்றி, பிரகாஷ், அவர்கள் உண்மைகள்..( உங்க பக்கம் வந்து நாளாச்சு எனக்கு .. )

எண்ணங்கள் 13189034291840215795 said...

எனக்கு அந்த செய்தியை படித்ததுமே ரத்தம் கொதித்தது நிஜம்தான்..

முக்கிய காரணம் , ஏழைகளை இழிவுபடுத்துவதோடு பணக்கார பிள்ளைகளுக்குமே இவர்கள் எப்படி நல்ல வாழ்க்கை பற்றி சொல்லித்தர போகிறார்கள் என்ற ஐயப்பாடும்..

என் பிள்ளைகள் இங்கே பணக்கார பள்ளியில் படிப்பதனால் அதன் அவஸ்தைகளை நான் மிக நன்றாகவே உணர்ந்துள்ளேன்.. எல்லாமே நுகர்வு கலாச்சாரம் நோக்கிய கல்வியே.. குழந்தைகள்தான் பாவம் இரண்டுகெட்டான் சூழலில்.. எது சரி எது தவறு என புரியாத நிலைமை..

நம் வீடு ஏன் மற்றவர் வீடு போல் ஆடம்பரமாக இல்லை என கேட்கிறார்கள்.. எளிமை என்பது கூட புரியாத பரிதாபம்.. தேவை தாண்டி ஆடம்பரமே ஆக்கிரமித்திருப்பது வருத்தத்துக்குறியது...ஊரோடு உலகோடு ஒத்து வாழணும்னா போலித்தனம் தேவை .. அப்ப சக மனிதனை பற்றி எப்போது நினைப்பார்கள்.. நினைக்க சொல்லித்தருவோம்?..அவர்களுக்கா பேசுவோம்?. குரல் கொடுப்போம்.?.


பணக்கார மாணவன் ஒரு ஏழை மாணவனோடு படிக்கையில் மெல்ல மெல்ல சக மனிதனின் துயர்களை , சாபத்தை புரிந்துகொள்ள முடியும்.. அது பணக்கார குழந்தைக்கே வரப்பிரசாதம்.. திடீரென வாழ்வில் ஒரு சிக்கல் வரும்போது அந்த பணக்கார மாணவனால் சமாளிக்க முடியும்.. அதைவிடுத்து காரில் ஏறி பள்ளியில் இறங்கி ஏழை வாசமே அறியாமல் வளரும்போது , திடீர் கஷ்டம் அக்குழந்தையை நிலைகுலைய செய்யும்..

சொல்லப்போனால் ஏழை குழந்தைக்கே இதில் வருத்தம், ஏக்கம் வர வாய்ப்பு அதிகம்..

இதுபோன்ற தவறுகளை முளையிலேயே கிள்ளிவிடணும்

ADMIN said...

சும்மா சொல்ல்கூடாது. பின்னிட்டீங்க... !

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றிங்க தங்கம்பழனி