Wednesday, March 9, 2011

உழைக்கும் வர்க்கத்தினரின் (பெண்கள் தின ) வாழ்த்துகள்






உலகத்தில் பெண்களின் உழைப்பு 66 சதவீதம் , ஆனால் அவர்கள் அடையும் பயன் 10% சதம் .

உலகின் மொத்த உணவு உற்பத்தியில் 50% பெண்ணின் பங்கு.. ஆனால் 1% நிலமே பெண்களுக்கு உரிமையாயிருக்கு..

உலக ஏழைகளில் 70% பெண்கள்.. மேலும் படிக்க
http://www.trust.org/trustlaw/womens-rights/womens-voices


??????.
பெண் விடுதலை பற்றி பலர் பேசணும் .. அப்படி ஒரு அவசர தேவை இங்கிருக்கு..




தாய்லாந்து மகளிர் பற்றிய கட்டுரை படிக்க ,










தாய்லாந்தின் புன்னகை அரசிகள்


சில கவிதை பெண் பற்றி .

----------------------------------

தும்மினால் தொண்ணூறும்
சிரிப்பானுக்கே சில நூறும்
மெளனத்துக்கு கூட மறுமொழியிட்டு
பதிவுக்கு பாராட்டுவிழாவே அரங்கேறுதென்றால்

அந்த நியாத்தின் வலிமை என்ன ?
ஆட்டுவிக்கும் வித்தை என்ன?.

மிரட்டலிட்டு கத்தி கதறி
மிஞ்சுகிறதாம் ஒப்பாரிவீடு
கூடி நின்று தொண்டை கிழித்தவர்கள்
ஆடி ஓய்ந்து அடங்கலாம் ஒருநாள்

தளராது முன்னேறுதாம் பெண்ணின் போராட்டம்
தந்த பரிகாசத்தையே பரிசாகக்கொண்டு..

கவிதை - 2

அஹிம்சை யை நாட்ட
ஆயுதமாய் எழுத்தை எடு
இகழ்வாரைக்கண்டால்
ஈயென :) இளித்துவிட்டுசெல்.
உதவாக்கரை பேச்சுக்கு
ஊக்கமளிக்காதே
எண்ணிய செயல்முடி
ஏசினாலும் பேசினாலும்
ஐயமா அப்டீனா என்னன்னு கேள்
ஒதுங்கினால் ஒடுக்கிடுவார்
ஓடட்டும் அவருன் கருத்தில்
ஒளடதம் என்பதிங்கு மாற்றம்
ஃதே படைத்திடு எழுத்தில்..

பெண் மொழிகள் : பெண்ணுக்கு மட்டும் .. ( மறைமுக மிரட்டலோடு சொல்லப்பட்டவை :) )
-----------------------------

அன்பா இரு ( அடி வாங்கு )
பண்பா இரு ( பகடி தாங்கு )
இரக்கப்படு ( இழிவை தாங்கு )
ஆறுதலாயிரு ( ஆசாபாசம் அடக்கு )
நாணப்படு ( நாட்டுநடப்பு அறியாதே )
வெட்கப்படு ( வெறுமை கொள் )
அச்சப்படு ( அடங்கிப்போ )
எனை நேசி ( எதிர்த்து பேசாதே )
கருத்தரி (கருத்துக்களை அறியாதே )
குத்துவிளக்கு ( எரிந்துகொண்டே இரு )


Some Quotes about women :
-----------------------------

Because I am a woman, I must make unusual efforts to succeed. If I fail, no one will say, "She doesn't have what it takes." They will say, "Women don't have what it takes."
~Clare Boothe Luce

I wish someone would have told me that, just because I'm a girl, I don't have to get married.
~Marlo Thomas


The thing women have yet to learn is nobody gives you power. You just take it.
~Roseanne Barr


Man endures pain as an undeserved punishment; woman accepts it as a natural heritage.
~Author Unknown


Men are taught to apologize for their weaknesses, women for their strengths.
~Lois Wyse




அனைவருக்கும் உழைக்கும் வர்க்கத்தினரின் ( பெண்கள் தின ) வாழ்த்துகள்..



படம் : நன்றி கூகுள்..



9 comments:

thiruchchikkaaran said...

பல துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகின்றனர்.

கணவன் தன் மனைவியின் திறமையை உணர்ந்து முன்னேற உதவி செய்வது அதிகரித்து வருகிறது. இசைத் துறையில் பெண்கள் கொடி கட்டிப் பறக்கின்றனர்.

ஆனாலும் ஆண்கள் இன்னும் மாற வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஆணும் தன் மனைவியின் வளர்ச்சியில் பெருமை கொள்வதும், அவள் தன்னை விட திறமைசாலியாக இருந்தால் அதை ஒப்புக் கொள்ளத் தயங்காதவனாகவும் எப்போது இருக்கிறானோ அப்போதுதான் உண்மையான் பெண் விடுதலை ஆகும்!

கணவன் மட்டும் அல்ல, அலவலகம், பொது இடம் எல்லாவற்றிலும் பெண்கள் என்று வித்யாசம் பார்க்காமல் திறமைக்கு உழைப்புக்கு ஏற்றவாறு நடத்தப் பட வேண்டும்.

இந்திய அரசியலில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக தைரியமாக செயல் படுகின்றனர்! ((அதற்காக அவர்கள் செய்யும் முறைகேடுகளை, அராஜகங்களை கண்டிக்காமலும் இருக்க முடியாது)

sivakumar said...

உங்கள் கட்டுரையை வினவில் படித்தேன். அடுத்த உயரத்தைத் தொட்டு விட்டீர்கள். நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்!. இரண்டாவது கவிதையும், பெண்மொழிகளும் சிறப்பு. "பெண் ஏன் அடிமையானாள்" என்ற பெரியாரின் நூலைப் படித்ததுண்டா? இல்லையெனில் அதை முதலில் செய்யவும். உங்களைப் போன்ற அனைவரும் படிக்கவேண்டிய முதல் நூல் அதுதான் என்று பரிந்துரைக்கிறேன்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

((அதற்காக அவர்கள் செய்யும் முறைகேடுகளை, அராஜகங்களை கண்டிக்காமலும் இருக்க முடியாது)//

வாங்க திருச்சிக்காரர்.. மிக சரியாக சொன்னீர்கள்.. எல்லா ஆணும் ஆதிக்கம் செலுத்துபவரில்லை.. எல்லா பெண்ணும் சம் உரிமையை மதிப்பவருமில்லை.. அதை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொள்பவருண்டு..

எண்ணங்கள் 13189034291840215795 said...

"பெண் ஏன் அடிமையானாள்" என்ற பெரியாரின் நூலைப் படித்ததுண்டா? இல்லையெனில் அதை முதலில் செய்யவும்.//

நன்றி தமிழ்வினை..

நான் தமிழ் ஓவியா , தமிழச்சி , இன்னும் பலர் மூலம் பெரியார் கருத்துகளை படித்தே வருகிறேன்.. சொல்லப்போனால் சமீபமாக ( கடந்த 3 வருடத்தில் )தான் பெரியார் பற்றி அறிந்தேன்.. இன்னும் நிறைய வாசிக்கணும் , எழுதணும்..

ஊக்கத்திற்கு மிக்க நன்றிங்க.

நீங்க ச்ஒன்ன திருத்தங்களுக்கும் மிக்க நன்றி சரி செய்கிறேன்..

கருத்தறி என்பது பெண்ணை தாயாகும் பொறுப்பு மட்டுமே உனக்கு கருத்துகள் அறிந்து சபை ஏறி பேசாதே என்றளவில் பெண்மொழியாக சொல்லி வைத்துள்ளார்கள் என பதிந்தேன்..

தவறென்றால் மாற்றுகிறேன்..

sivakumar said...

அடடா ! மறுபடியும் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

உங்கள் கருத்தில் பிழை சொல்லவில்லை, எழுத்துப்பிழை மட்டுமே சொன்னேன். அந்தக்கவிதையில் அந்த வரிதான் இன்னும் நச்சென்று இருந்தது. ஏன் நீக்கினீர்கள்.
//கருத்தறி ( கருத்துகள் அறியாதே )//

இங்கு "கருத்தறி" என்பது கர்ப்பமடைவதுதானே, "கருத்தரி" என்பது சரியானது,

இதில் "றி" என்பதற்குப் பதிலாக "ரி" என்பதைச் சேர்க்கவும் என்றேன். முன்பே விளக்கியிருக்கலாம்.

"கருத்தறி" = கருத்தை + அறி ( அதாவது, கருத்தை அறிந்து கொள்) என்று பொருள்படும்.
கருத்தறி (கருத்துக்களை அறியாதே ) எனும்போது படிப்பவர்களுக்குப் அவ்வரி புரியாது அல்லவா ? எனவேதான் அந்த ஒரு எழுத்தை மட்டும் மாற்றச் சொன்னேன்.

//கருத்தறி என்பது பெண்ணை தாயாகும் பொறுப்பு மட்டுமே உனக்கு கருத்துகள் அறிந்து சபை ஏறி பேசாதே என்றளவில் பெண்மொழியாக சொல்லி வைத்துள்ளார்கள் என பதிந்தேன்//

ஆம். மற்றபடி அந்தவரியின் பொருள் எனக்கு நன்றாகவே புரிந்தது. அதில் நானும் உடன்படுகிறேன்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

மிக்க நன்றி தமிழ் வினை..

எனக்காக இத்தனை நேரம் நீங்கள் ஒதுக்குவதே என்னை குற்றவுணர்ச்சிக்கு தள்ளுது.. மன்னிக்கவும்..:)

உங்க விளக்கம் பலருக்கும் தெரியவே இந்த பின்னுட்டம் வெளியிட்டேன்.

நிரூபன் said...

உங்களின் அகர வரிக கவிதை மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் அரிய பல தகவல்களைச் சொல்லி நிற்கிறது. தொட்ர்ந்தும் நிறையப் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்!

http://rajavani.blogspot.com/ said...

உங்கள போல சிந்தனைகளை எதிர்கால சந்தியினருக்கு விதைக்க அன்புடன் வேண்டுகிறேன் பயணமும் எண்ணங்களும்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

நீரூபன் , தவறு வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

//தொட்ர்ந்தும் நிறையப் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்!//

செய்கிறேங்க..

//உங்கள போல சிந்தனைகளை எதிர்கால சந்தியினருக்கு விதைக்க அன்புடன் வேண்டுகிறேன்//

கண்டிப்பாங்க..