Friday, November 19, 2010
லிவிங் - டுகெதர் னா என்ன.?.+ என் பயணமும். + , ஜெனரேஷன் கேப்... இத்யாதி
லிவிங் - டுகெதர் னா என்ன.?.+ என் பயணமும். + , ஜெனரேஷன் கேப்... இத்யாதி..
25 வருசத்துக்கு முன்னால முதன்முறையா இருபாலினர் சேர்ந்து படிக்கும் கல்லூரியில் காலடி வைக்கும்போதே சொந்தங்கள் எல்லாம் வரிசையா வந்து
அறிவுறை என்ற பேரில் கலாச்சார அட்வைஸிட்டு போனாங்க..அதென்ன அப்படி?.
" நம்ம வீட்டு புள்ளங்க எல்லாம் இந்த பிகாம், பிஏ படிச்சா போதாதா?... பொறியியல்தான் படிக்கணுமா?.. படிச்சு என்ன செய்ய போறா ?..ஒருத்தனுக்கு பொங்கி ஆக்கி குடுக்க இதெல்லாம் தேவைதானா?..
அதிலும் ஆம்புள புள்ளங்க கூட சேர்ந்து படிக்கணுமாமே?.. "
கஷ்டப்பட்டு விடிய விடிய படிச்சு டியூஷனுக்கு எஸ்கார்ட்டோட போய் அதிக மதிப்பெண் எடுத்து அரசு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்ததை விட அன்னையிடமிருந்து கிடைத்த அந்த பெருமிதமான நெற்றி முத்தம்.. இதெல்லாம் வீணாகிடுமோ னு கவலை பட்டாலும், பல எதிர்ப்புக்கிடையில் அன்னை மட்டுமே துணிந்து சொன்னார்.
" நீ பொறியியல் படிக்கிற .. யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே.நான் இருக்கேன்.."
ஆனா ஒரே ஒரு கட்டளை மட்டுமே..
" இப்ப எப்படி உன்னை அனுப்புறேனோ , அதே மாதிரி நல்ல பிள்ளைன்னு பெயர் எடுத்து வரணும்... " ( அதாங்க நல்ல புள்ளன்னா காதல் கீதல் னு விழாம )
" கண்டிப்பா மா. நீங்க பெருமை படும் அளவுக்கே வருவேன்.. இது சத்தியம்.. " ( சத்தியத்தை காப்பாத்தி பெருமையும் படுத்தினோம்..நாம யாரு கோடு தாண்டாத சீதை பரம்பரையாச்சே.. )
அப்பாவுக்கு கூட சம்மதமில்லை.. என்ன மதிப்பெண் வாங்கியிருக்கேன் என்ற கவலையுமில்லை.( கட்டிகொடுக்கபோர பொண்ணு என்ன படிச்சா என்ன ) . ஆனால் நல்ல மதிப்பெண் என்று பள்ளி வந்து கையெழுத்திடும்போது தெரிந்ததும் மகிழ்ந்து உடனே விலையுயர்ந்த ஐஸ்க்ரீம் பார்லர் அழைத்து சென்றாங்க...மனம் மாறினாங்க.. படிக்கும்போது விடியக்காலை 4 மணிக்கே எழுந்து பால்காரனை துரத்தி எனக்காக பால் வாங்கி வந்து காப்பி போட்டு நாங்க இருவர் மட்டும் குடித்துவிட்டு என்னை 5 மணி ரெட்டியார்பட்டி பஸ் சில் பிஸிக்ஸ் டியூஷனுக்கு ஏத்திவிடுவார்..
பஸ் ல் நான் மட்டுமே,.,. பஸ் ஓட்டுனரும் கண்டக்டரும் பழக்கமானர் அப்பாவுக்கு..
அதுமட்டுமல்ல , அதிகாலை வேளையில் அங்குள்ள டீக்கடை டீ மாஸ்டரிலிருந்து பழக்கடை தாத்தா வரை..
யாரும் " ஏன் பெண்ணை இந்த நேரத்தில் இப்படி படிக்க அனுப்பித்தான் ஆகணுமா " னு கேட்காமல் எனக்கு உதவுவதிலேயே இருந்தார்கள்..
பஸ் முந்தி வந்துவிட்டாலும் எனக்காக காத்திருக்கும்..
டியூஷன் வாத்தியார் வீட்டுக்கு தூரத்தில்தான் பஸ் ஸ்டாப் ஆனாலும் பஸ் வாத்தியார் வீட்டு பக்கமே நிற்கும்.. நான் வீடு நுழையும் வரை கூட சில நேரம் ஓட்டுனர் வண்டி எடுக்க மாட்டார்.. ( மார்கழி மாசம் விடிந்திருக்காது ) ..
எனக்கு உதவி செய்த இவர்கள் யார்?..எந்த விதத்தில் கடமைப்பட்டிருக்கின்றார்கள்..?
அதில் ஒருத்தருக்கு கூட பாலியல் வெறி இருந்திருக்குமானால் , நான் தப்பித்திருப்பேனா?..
சாயங்காலம் கெமிஸ்ட்ரி வகுப்புக்கு அக்ரகாரம் செல்லணும்.. கூடவே பாடிகார்ட் வாலிபர்கள் வருவார்கள்.. தொந்தரவோ கிண்டலோ கிடையாது.. ஆனா பின் தொடர்ந்து வருவதே எத்தனை எரிச்சல்.. வீட்டில் சொன்னால் பிரச்னையாகுமே , அய்யோ பாவமே அந்த பசங்கன்னு தோணும்.. ஆனால் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் வீட்டிலும் சொல்லி வைத்தோம்..
அதிலிருந்து யாரோட அம்மாவாவது வந்து வாத்தியார் வீட்டில் காத்திருந்து கூட்டி செல்வார்கள்.. ( ஆனாலும் பசங்க விடாக்கொண்டன்கள்)
அப்புரம் அது யார் வீட்டு பசங்கன்னு விசாரிச்சு தகவல் அனுப்பி தடை போடப்பட்டது ஒரு கதை..
இப்படி ஒரு பெண் படிக்க செல்லவே ஏகப்பட்ட இடைஞ்சல்கள்..
இதையெல்லாம் நீங்க நம்புவீங்களோ இல்லையோ , என் பிள்ளைகள் நிச்சயம் நம்பமாட்டார்கள்.. ஏனெனில் அவர்கள் பார்க்கும் அம்மா இப்ப முற்றிலும் வேறு..
கிட்டத்தட்ட ஒரு லேடி ஜேம்ஸ்பாண்ட்..:)
எப்படி இத்தனை மாற்றம்.?.. நானும் உள்ளூரிலேயே இருந்திருந்தா கழுத்து நிறைய நகை போட்டுகிட்டு பழங்கதை பேசிகிட்டு ஜாலியா இருந்திருப்பேனாயிருக்கும்...
வெளிநாட்டு வாழ்க்கை என்னை முற்றிலும் புது கோணத்தில் சிந்திக்க வைத்தது..
காதல் என்ற சொல்லே சொல்ல முடியாது கதைக்குகூட டேஷ் டேஷ் போட்டே பேசிய காலம் அது...
ஒரு பையன் பெண்ணை பார்க்கிறான் என்றால் அது அந்த பெண்ணின் தவறே.. அவள் ஏன் இடம் தருகிறாள் என்றுதான் கேள்வி..
வருடத்துக்கு ஒரு படம் .. அதுவும் சங்கராபரணம் , அல்லது கடவுள் படம்.. அதுகூட இரண்டாவது காட்சின்னா பரவாயில்லை..
என் அன்னைக்கு படிக்கும் வாய்ப்பு 8ம் வகுப்போடு தடை பட்டதால் அவருக்கு தன் பிள்ளைகளை படிக்க வைக்கணும் என்கிற வெறி வந்தது..
அது மட்டுமல்ல , அப்பா குடும்பத்தில் ( படித்தவர்கள் ) எல்லாரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து ஆங்கிலத்தில் பேசியபோது தம் பிள்ளைகளும் அப்படி பேசணும் என ஆசைப்பட்டார்..
அதனால் நாங்கள் தப்பித்தோம்.. எல்லா கஷ்டத்திலும் இடைஞ்சலிலும் போராடி படிக்க வைத்தார்..
படிப்புக்காக யார் காலிலும் விழ தயாராக இருந்தார்.. ( இப்பவும் அதையே எமக்கும் சொல்லுவார்.. உங்களால் முடிந்த கல்வி உதவி செய்ய மறக்காதீர்கள்.. என்று )
பெண் பிள்ளைகளை படிக்க வைக்கணுமா என்ற கேலி பேச்சையெல்லாம் சட்டையே செய்யாதவர்..
கான்வெண்ட் கன்னியாஸ்திரிமார் அனைவருக்கும் நல்ல பழக்கம்.. அவர்களுக்கு சுகவீனம் என்றால் சூப் செய்து அனுப்புவார் என்னிடம்..
ஆக கான்வெண்டிலும் நாங்க பிள்ளைகள் 6 பேரும் கண்காணிக்கப்பட்டோம்.. அங்க இங்க திரும்பிட முடியாது கடிவாளம் போட்ட மாதிரி வளர்ப்பு..
பள்ளி அருகில் என்பதால் அனேக ஆசிரியர்கள் வீட்டை சுற்றி.. பலர் வீடு திரும்பும்போதே அன்னையிடம் வந்து பேசிவிட்டு காப்பி குடித்துவிட்டு செல்வார்கள்..
பிரசவம் வரை பார்த்ததும் உண்டு.. குழந்தைகளை விட்டு செல்வார்கள் எங்கள் வீட்டில்.. இப்படி பழக்கம் வைக்காதவரே இல்லை எனலாம்..
உதவின்னா ஓடி போய் முதலில் செய்வார்.. ஆக ஜாதி வித்யாசம் அதிகம் இருந்த எங்க ஊரில் இவர் எல்லோருடனும் பழகி வந்தார்..
அப்பவே எமக்கு ஜாதி மத வித்யாசமெல்லாம் பார்க்க கூடாது என கற்று தந்தார்..தன் செயல்கள் மூலம்..
படித்தவர்களோடு வலிய சென்று பழக்கம் வைத்துக்கொண்டார்.. ( அப்படியே ஜனாதிபதி வெங்கட்ராமன் அவர்களை சந்தித்ததும் தனி கதை )..
தினமும் செய்தித்தாளை வரி விடாமல் படிப்பார்.. அவர் மாதிரி அரசியல் , சமூகம் பேச முடியாது.. அப்படி ஒரு நியாபகசக்தி..
ஆக ஒரு நல்ல சூழலை உருவாக்கி தந்தார்..இப்ப அவரை தவறாக பேசியவர்களும் கூட தம் பிள்ளைகள் படிப்பு விஷயத்தில் அன்னையை பின்பற்றினர்..
இதெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால் , தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் எது நல்லது என்பதில் மிக தெளிவாக இருந்தார் ..
சமூகம் என்ன சொல்லும் , கலாச்சாரம் என்னாகும் , குடும்ப பெயர் கெடுமா என நினைத்து பயப்படவில்லை...
முதன்முதலாய் 15 வருடமுன்பு என்னை வெளிநாட்டுக்கு மணமுடித்து அனுப்பும்போதும் பலத்த எதிர்ப்பு ..
வெளிநாட்டு பையன் னா எப்படி இருப்பானோ , என்னென்ன பழக்கமோ னு குழப்பு குழப்புன்னு குழப்புவார்கள்...
துக்க வீடு மாதிரி வந்து விசாரித்து " அய்யோ பாவம் நீ ..எப்படி சமாளிக்க போற " என்று பார்த்து சென்றவருண்டு..
ஆனால் அப்ப எதிர்த்தவர்கள் குடும்பத்தில் இப்ப அனேகர் அமெரிக்காவிலும் பல நாடுகளிலும்..:).
முதன்முதலில் நான் வண்டி ஓட்டியதும் , ஜீன்ஸ் போட்டதும் , நடனம் ஆடியதும் , வந்த எதிர்ப்பு எல்லாத்தையும் அன்னைதான் சமாளித்தார்..
தன் 4 பெண் பிள்ளைகளை பற்றி சுமையாக நினைக்காமல் பெருமையாக நினைத்தார்..
அன்னையோட வெற்றிக்கு முதல் காரணமாய் நான் நினைப்பது அவரின் தாழ்ச்சியும் மரியாதையும்..
சின்னவர்களை கூட ஐயா, அம்மா என சொல்லி வாங்க போங்க என்று தான்அழைப்பார்.. சின்னவர்களிடம் கூட நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆவல்..
என் பிரச்வத்துக்கு இங்கு வந்தபோது எனக்கே தெரியாமல் இருந்த அக்கம் பக்க இலங்கை தமிழ்ர்களிடம் மிக நட்பாகி
தினமும் அந்த பொடியன்கள் அம்மாவை தேடி வருவதும், தேநீர் அருந்த அழைப்பதும்.. அம்மாவிடம் கதைக்க வருவதும்..அப்படித்தான் இலங்கைத்தமிழர்களே எனக்கு
பழக்கமானார்கள்...( நான் அப்பல்லாம் ரொம்ப பயந்த சுவாபம்.. ரிசர்வ்டு.. )
தாய் பாஷை தெரியாவிட்டாலும் கூட வேலையாளிடம் சைகையாலேயே சமாளிப்பார்.. கற்றுக்கொள்வார்.. இருவரும் சிரிக்க வைப்பார்கள்...
அவரிடமிருந்தே கற்க முயன்றேன் இந்த " கலாச்சாரம் எனும் அன்பை.."..
ஆனா என் பிள்ளை வளரும்விதம்?.. எனக்கே பல விஷயம் சொல்லி கொடுக்கிறார்கள்..
மார்க்கெட் சென்றால் , அங்குள்ள ஊர்வன , பாத்து நான் முகம் சுழித்தால் திட்டுவான் . " அம்மா அப்படி செய்யாதீங்க.. அவங்க ம்அனசு கஷ்டப்படும்.."
' சாரி மா. நான் வேணும்னு செய்யலை.. என்னால் பார்க்க சகிக்க முடியல.. அருவருப்பா இருக்கு.. மன்னிச்சுக்கோ.."
" இதுக்கே இப்படின்னா இதை நான் சாப்பிட விரும்புகிறேன் எப்ப சமைக்க போறீங்கன்னு "அடுத்த குண்டை தூக்கி போடுறார்..
" அய்யோடா சாமி.. வெளில வாங்கி சாப்பிட்டுக்கோ. வீட்டுக்குள்ள கொண்டு வராத.."
"பாட்டி ரொம்ப நல்லவங்க கோழி சாப்பிடாட்டியும் உங்களுக்கெல்லாம் சமச்சி தந்தாங்கல்ல..."
" க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.."
இன்றும் கூட நாங்க தடுப்பதை பேரப்பிள்ளைகளுக்கு சாதகமா பேசுபவர்..
விட்டுப்பிடி என்பதே அவர் தத்துவம்..
தொடருவேன்..
படம் : நன்றி கூகுள்
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
இப்போதும் பெண் பிள்ளைகளை ஏன் படிக்க வைக்கின்றனர் என்ற சொல் வருகிறது வேற ஒரு வீட்டுக்கு போக போரவ தானே...என்று சொல்கிறார்கள்
சில விஷயங்களில் இன்னும் மாற்றம் வரவேண்டும்
தொடருங்கள்...
அற்புத மனுஷி உங்க அம்மா!!!!
என் வணக்கங்கள்.
உங்க அம்மாவிற்கு எனது வணக்கமும், அன்பும்.
சௌந்தர் said...
இப்போதும் பெண் பிள்ளைகளை ஏன் படிக்க வைக்கின்றனர் என்ற சொல் வருகிறது வேற ஒரு வீட்டுக்கு போக போரவ தானே...என்று சொல்கிறார்கள்
சில விஷயங்களில் இன்னும் மாற்றம் வரவேண்டும் //
ஆமா செளந்தர்.. எங்க வீட்டிலேயும் மேல்படிப்பு படிக்க தடைதான் இருந்தது..
மாப்பிள்ளை கிடைக்கமாட்டார் /அல்லது சம்மதிக்க மாட்டார் என்ற பயத்தில்.:)
துளசி கோபால் said...
அற்புத மனுஷி உங்க அம்மா!!!!
என் வணக்கங்கள்.//
மிக்க நன்றி அம்மா..
ஒரு புரட்சி பெண்மணி தான் அவர்..
அவரளவு எனக்கு இன்னும் கூட துணிவில்லைன்னுதான் சொல்வேன்..
கும்மி said...
உங்க அம்மாவிற்கு எனது வணக்கமும், அன்பும்.//
நன்றிங்க கும்மி..
உங்கள் அம்மா மேல் எனக்கும் ஒரு இனம்புரியாத நேசம் தோன்றுகிறது.
உங்கள் பயணம் சவால்கள் நிறைந்ததுதான்...
சந்தனமுல்லை said...
உங்கள் அம்மா மேல் எனக்கும் ஒரு இனம்புரியாத நேசம் தோன்றுகிறது.
உங்கள் பயணம் சவால்கள் நிறைந்ததுதான்...//
வாங்க முல்லை..
ஆமாம் . என் பாட்டி அம்மாவை விட துணிச்சலானவர்..
மிகுந்த சவால்கள் நிறந்த வாழ்க்கைதான்..:)
A Soundar - " இதுக்கே இப்படின்னா இதை நான் சாப்பிட விரும்புகிறேன் எப்ப சமைக்க போறீங்கன்னு "அடுத்த குண்டை தூக்கி போடுறார்..///
சரி அதை செய்து கொடுத்தீங்களா...?//
- ஹஹா
அவர் கேட்டது என்னன்னா பயந்து ஓடுவீங்க..
shells , oyster, scallops ..
அதுமட்டுமல்ல இங்கு தவளைகளை கூட மிக அழகாக உரித்து வைத்திருப்பார்கள்.. ஏன் சாப்பிடக்கூடாது?.. கோழி சாப்பிடும்போது என கேட்பார்..ஐய்ய..
Shrimp, crab சமைப்பேன்..
அவர்கூட சேர்ந்து இப்ப Beef, pork பழகியிருக்கேன் சாப்பிட மட்டும்..
வீட்டுக்காரர் கிட்டவே வரமாட்டார்..
பள்ளி பசங்க கூட சேர்ந்து இப்பழக்கமெல்லம்..
இன்னும் பாம்பும் தேளும்தான் பாக்கி..அய்யோ....
பள்ளியில் சுவாலஜி லேப் ல் மண்புழு எடுத்து வர சொல்லுவார்கள்..
அதுக்கே பயந்துகொண்டு யாரையாவது தொங்கிக்கொண்டு திரிவேன்..
கரப்பான் பூச்சு, தவளை அறுக்கும்போதும் மயக்கமே வரும் எனக்கு...
எனக்கு வந்து இப்படி பிள்ளைகள் ...!!!!!!
பல எதிர்ப்புகளிடையில் ஒரு ஆண் பிள்ளையையும் பொறியியல் படிக்க அம்மா கஷ்டப்படும் கதை..என் அம்மாவின் கதை.
Blogger Udayakumar Sree said...
பல எதிர்ப்புகளிடையில் ஒரு ஆண் பிள்ளையையும் பொறியியல் படிக்க அம்மா கஷ்டப்படும் கதை..என் அம்மாவின் கதை.//
வணக்கங்கள் உங்கள் அன்னைக்கும் உதயகுமார்...
அவர் கனவு நனவாகட்டும்..வாழ்த்துகள்
தொடர்ந்து எழுதுங்க,தெரிஞ்சிக்குவோம்.
எங்யேயாவது யாருக்காவது தேவைப்படலாம்...
வாங்க Thekkikattan சார்.
எழுதுறேன் விரைவில்..
உங்க அம்மா உண்மையிலேயே கிரேட்.
ஜெயந்தி said...
உங்க அம்மா உண்மையிலேயே கிரேட்.//
நன்றிங்க ஜெயந்தி..
ஆனா இப்ப நாங்க 3 பெண்கள் அம்மாமேல கோபத்தில்.:)
( ஏன்னா ஒரு அக்காவோடு மட்டும் அதிகமா இருக்காங்க னு எமக்கு பொறாமை :) )
உங்க அம்மா மாதிரி எனக்கு அப்பா இருந்தாங்க.
வாங்க கிரி..
அப்பான்னா இன்னும் அதிக துணிவோடு இருந்திருக்கணும்...
நன்று.
உங்கள் பதிவு என் அன்னை அந்தக்காலத்தில் தன் பெண்ணைப் படிக்க வைப்பதற்கு எவ்வளவு கஷடப்பட்டர்கள் என்பதை நினைவு கூற வைத்தது.
பெண்கள் மேற்படிப்பு படிப்பது மட்டுமல்ல, பெண்கள் பள்ளிக்குச் செல்வதே தேவையற்ற காலமாகக்
கருதப்பட்ட காலம் 1940 முதல் 1950 வரை. அதற்கு முன்னே அது பற்றி சிந்திப்பதே தவறாக இருந்ததாம்.
எனது தந்தை அட்வகேட் . கல்லூரியில் தமிழாசிரியராக சிறிது காலம் பணியாற்றிய பின் பி.எல். சென்னை
சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞர் தொழிலுக்கு வந்தவர். அன்னையோ உ.வே.சுவாமினாத ஐயரின்
திண்ணைப்பள்ளி மாணவி.
நீங்கள் எழுதியது போலவே என் தந்தைக்கு என் இளைய சகோதரி (அவள் வயதுக்கு வந்ததும்) தொடர்ந்து
பள்ளிக்கு அனுப்ப விருப்பமில்லை. என் தாயார் மிகவும் கஷ்டப்பட்டு, என் தந்தைக்குத் தெரியாமல், அவ்ளைப்
பள்ளிக்கு அனுப்பி வைப்பார். பணம் அப்பா தரமாட்டார் என்பதால், வீட்டில் உள்ள பாண்டங்களை அடகு வைத்து
கூட பள்ளிக் கட்டணம் செலுத்தி, புத்தகங்கள் வாங்கித் தந்த நினைவு இருக்கிறது. மற்ற விஷயங்களில் , குறிப்பாக,
சாதி விஷயங்களில் அவர் முற்போக்குக் கருத்துக்ள் கொண்டவர்.
ஒரு கட்டத்தில் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல இயலாது என்ற நிலை ஏற்பட்ட பொழுது, வீட்டிலேயே தூர வழிக் கல்வி
வழியே ( ஆந்திரா பல்கலைக் கழகம் ஒன்று தான் இத்துறையில் அந்தக் காலத்தில் இருந்ததாக நினைக்கிறேன்.) என் தங்கை யை படிக்கவைத்து, என் அப்பாவுக்குத் தெரியாமல், சொந்தக்காரர் வீட்டிற்கு செல்கிறேன் என்று அப்பாவிடம்
சொல்லிவிட்டு, அம்மாவும் தங்கையும் குண்டூருக்குச் சென்று எஸ்.எஸ்.எல்.சி. எழுதிவிட்டு வந்தது ஒரு 50 வருடங்களுக்கு இல்லை 60 வருடங்களுக்கு முன் நடந்த கதை.
என் தங்கையின் இரு பெண்களும் தற்பொழுது கல்லூரி படிப்பு மட்டுமல்ல, எம்.ஃபில், படித்து கல்லூரியில் விரிவுரையாள்ராக இருக்கிறார்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கதை.
சுப்பு ரத்தினம்.
வணக்கம் சுப்பு ரத்தினம் சார்.
என்ன கஷ்டம் அடைந்திருப்பார்கள் என புரிய முடிகிறது..
உங்கள் அம்மா நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்..
ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் தந்தது
Post a Comment