Wednesday, August 25, 2010
புனைவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வாருங்கள்.- 1
புனைவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வாருங்கள்.
இணையத்தில் நுழையும்போது ஏதும் அறியாத வெகுளிச்சிறுமியாய் நான்..
என் 38 வயதில் நான் கற்றுக்கொள்ளாத விஷயங்களை நான் கடந்த 3 வருடத்தில் பன்மடங்கு கற்றுக்கொண்டேன்..
எத்தனை நல்ல உள்ளங்கள் , ஆறுதல் தந்த இதயங்கள் , வழிநடத்திய , தமிழ் ஆர்வத்தை தூண்டிய நட்புகள்..?
தனிமை காரணமாக தமிழில் பேசினால் நல்லா இருக்குமே என்ற ஒரே காரணத்துக்காக இணையத்தில் நுழைந்தவள் நான்.
அதுவரை குடும்பம் , குழந்தைகள் , வேலை மட்டுமே என் உலகமாயிருந்தது பரந்து விரிந்தது.
எத்தனை குழுமங்கள் , எத்தனை விஷயங்கள் , எத்தனை பெரியவர்கள்...? வயது வித்தியாசமின்றி எல்லோரும் குழந்தை போல பழகி, நம்மையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த , சிந்தனையை தூண்டிய ஆக்கபூர்வமான கருத்துகளை பறிமாறிக்கொண்டவை அளவிட முடியாதே..
முக்கியமா சொல்லணும்னா , பாலர் பள்ளிக்கூடம் என்ற இழை அன்புடன் குழுமத்தில் ஆரம்பித்து 1000 தாண்டியும் ஓடிக்கொண்டே இருந்தது.. அதில் பங்கேற்ற சிறுவர்கள் யார் தெரியுமா?.. மதிப்பிற்குறிய சீனா ஐயா , கிரிஜா மணாளன் சார் , சக்தி ஐயா , சுரேஷ் அண்ணா, விசாலம் அம்மா , காந்தி அக்கா , தமிழ்த்தேனி ஐயா இப்படி எத்தனை அத்தனை பெரியவர்கள்..? ..
எங்கெங்கிருந்து.. ( அனைத்து நட்புகள் பெயரையும் குறிப்பிட இயலாமைக்கு மன்னியுங்கள் ). என்றும் நீங்கா இன்பம் தரும் நிகழ்வு அது..
அடுத்து முத்தமிழ் குழுமத்தில் என்னை வளர்த்த வேந்தன் ஐயா, சீதாம்மா , செல்வன் , ஷைலஜா அக்கா, கீதாக்கா, சிவா , காமேஷ் இன்றும் தொடற்கிறது தமிழமுதம் குழுமம் மூலம்..( இங்கும் அனைத்து நட்புகள் பெயரையும் குறிப்பிட இயலாமைக்கு மன்னியுங்கள் ).
நிற்க..
இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இணையம் என்பது எனக்கு பாடசாலை... மிக அதிக பயனுள்ள இடம்.
1000 மடல்களை தாண்டி கருத்தாடல்கள் செய்த இடம்.. அதிகப்படியாக விரைவாக வாசிக்க கற்றுத்தந்த இடம்.. படிப்பதிலே போட்டியை வளர்த்த இடம்...
வேண்டாம் என்று சொன்னாலும் வந்து குமிந்த நட்பு வட்டம்..
விடிகாலை 3 மணிக்கு விமானம் சென்னை வந்தாலும் குடும்பத்தோடு வந்து காத்துக்கிடந்த நட்புகள்...
என் பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டே ரயிலில் கூட வந்த நட்புகள்..
என்னை பிரமிக்க மட்டுமல்ல திகைக்க , செய்தது செழிக்க செழிக்க தந்த அன்பு..
நான் என்ன செய்தேன் அவர்கள் அன்பை பெற.? மிஞ்சிப்போனால் கொஞ்சம் ஆறுதலாய் இருந்திருப்பேன் அவர்கள் பிரச்சனைக்கு..
வெளியில் சிரித்து பேசும் பலருக்கு உள்ளே எத்தனை எத்தனை பூகம்பம் என அதிர்ச்சியடைந்துள்ளேன்..
இப்படி பல சூழலில், சந்தர்ப்பங்களில் எழுத வரும் நட்புகளுக்கு வலையுலகில் இப்ப புதிதாக வந்துள்ளது தான் இந்த புனைவு என்ற சோதனை..
முக்கியமாய் பெண்களுக்கு...
தொடரும்.....
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
புனைவு எழுதுற கிறுக்கன்களை விட்டுத் தள்ளுங்கள் சகோ...
இப்பவே என் அக்கவுண்ட் ஹேக் பண்ணும் முயற்சி நடக்குது..
நடவடிக்கை எடுப்பது எனக்காக மட்டுமல்ல சகோதரரே..
இனி வரும் அனைத்து பெண்களுக்காகவும்..
நாம் எடுக்கப்போகும் இந்த நடவடிக்கை பாடமாக அமையட்டும்..
:((
சாந்திக்கா...இன்னைக்கு உங்களின் பழைய பதிவுகள் சிலவற்றை எடுத்து படிச்சு ஆச்சர்யம் அடைஞ்சேன்...இவ்வளவு தைரியம்..தெளிவான உறுதியா னு வியந்தேன்...ரொம்ப சந்தோஷம் உங்களை மாதிரி பதிவர்களின் பதிவுகளை படிப்பது...பொங்கல் நல் வாழ்த்துக்கள்...
நன்றி மா ஆனந்தி.. இனிய பொங்கல் வாழ்த்துகள் தங்களுக்கும் குடும்பத்தார்க்கும்...
Post a Comment