


கற்பனை
செய்யதெரிந்தவருக்கு காதல் இன்பம்
தியாகம்
புரிய துணிந்தவருக்கு சாதலும் இன்பம்..
வாழ்வை
ருசிக்கத்தெரிந்தவருக்கே கடமை இன்பம்
சாவை
அஞ்சாதவனுக்கு சாதிக்க இன்பம்
வளர
நினைப்பவனுக்கு வலியும் இன்பம்
மன்னிக்க
எண்ணுபவனுக்கு மறதி இன்பம்
தனிமையானவனுக்கு
உரிமையோடான கண்டிப்பும் இன்பம்
அனுபவிக்க
தெரிந்தவனுக்கே துன்பமும் இன்பம்..
இன்னும் வளர்க்கலாம் ..................
நன்றி : படம் கூகுள்
12 comments:
உங்கள் கவிதைகளை படிப்பதே ஒரு தனி இன்பம்தான் :-)
உங்கள் கவிதைகளை படிப்பதே ஒரு தனி இன்பம்தான் :-)
நன்றிங்க..
ஆனாலும் இது ஓவர்..
இதெல்லாம் ஒரு கவிதைன்னு....:)))
இத கேட்டு ஆராச்சும் ஏதாச்சும் செஞ்சிட்டா சங்கம் பொறுப்பேற்க்காது.:)
Happy Raksha Banthan.....
//ஆனாலும் இது ஓவர்..
இதெல்லாம் ஒரு கவிதைன்னு....:)))
//
நான் சாந்திக்காவ வழிமொழிஞ்சிங்
ஒருமுறை என் தம்பியுடன் போகும்போது வழியில் உள்ள பிச்சைகாரர்களைப் பார்த்து, இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு அவர்கள் தற்கொலை செய்து கொள்வது மேலல்லவா என சொன்னேன். அதற்கு தம்பி, அது தவறு அண்ணே, இவர்கள் இந்த வாழ்க்கையும் விரும்பிதான் வாழ்கிறார்கள் என்று சொன்னார். அதற்குப் பின் " நான் கடவுள் " பாலா அவர்களின் வாழ்வை காட்டியிருப்பார் ..
என் வாழ்வை நான் மிகவும் சுவாரஸ்யமாக வாழ ஆரம்பித்தது இதற்குப்பின்தான்... உங்கள் கவிதையும் இதைதான் சொல்கிறது .. பாராட்டுக்கள் ...
நல்ல அர்த்தமுள்ள கவிதை.
நன்றிங்க செந்தில்..
[[என் வாழ்வை நான் மிகவும் சுவாரஸ்யமாக வாழ ஆரம்பித்தது இதற்குப்பின்தான்... ]
அதே தாங்க.. இது என் வாழ்வு.. ஒருமுறை கிடைத்தது என நினைத்து வாழணும்..
Blogger கபீஷ் said...
நான் சாந்திக்காவ வழிமொழிஞ்சிங்
:))
க்ர்ர்ர்ர்ர்ர்
ஒரு பேச்சுக்கு சொன்னா வந்துடுவாங்களே பல்பு கொடுக்க... :)
இதுக்காகவே கவிதை எழுத தொடங்கிடலாம் போல..
Blogger Robin said...
நல்ல அர்த்தமுள்ள கவிதை.
-------------------
நன்றிங்க.ராபின்
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Happy Raksha Banthan.....
---------------------
ஆமால்ல..
வாழ்த்துகள் தம்பி.எல்லா வளமும் பெற்று நிறைவான வாழ்க்கை வாழணும்..
இணையத்தில் உள்ள அனைத்து தம்பி,.அண்ணாக்களுக்கும் ரக்ஷ பந்தன் வாழ்த்துகள்...
நல்லா இருக்குங்க.. :)
நன்றிங்க முத்துலெட்சுமி..
Post a Comment