Wednesday, August 25, 2010

புனைவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வாருங்கள்.- 2

தொடர்ச்சி -2
----------------


ஆரம்பத்திலிருந்தே ஆண்களோடான என் படிப்பு , என் கட்டட பொறியாளர் வேலை , அதன் பின் ஐடி வேலை எல்லாமே ஆண்களோடு மட்டும்தான்.

ஒரு நல்ல புரிதல் இருந்தது. சொல்லப்போனால் பெண்களை விட ஆண்களிடம் பழகுவது , கற்பது எளிதானது..

ஐடி வேலையில் தீயணைப்பு வீரனைப்போல எந்நேரமும் தயாராய் இருக்கணும் 24x7(x365 ).

இரவு நேர வேலைக்கு சென்று வந்தால் காதுபடவே ஏதோ பாலியல் தொழிலுக்கு சென்று வருவதை போல கிசுகிசு பேசும்

தமிழ்ப்பெண்கள் கூட்டம். ( பின்னர் அவர்கள் பிள்ளைகளுக்கு பாட விஷயமாக அணுகியதுமுண்டு )

வெளியூர் வேலை என்றால் பாஸ் கூட பயணம் செய்வது அவர் தங்கியிருக்கும் விடுதியில் தங்குவது என எப்பவோ நான் பெண் என்ற மன நிலை தாண்டியவள்.

42 வயதானவள்.. என் பிள்ளைகள் தமிழ் கலாச்சாரத்தில் வளர்க்கப்படவில்லை. நல்ல மனிதாபிமானமுள்ளவர்களாக மட்டுமே.

( மகனை வளர்த்தது ஈழத்தமிழ் சகோதர சகோதரிகள் பலர் )


99% நிர்வாணமான பெண்களோடு நீச்சல் குளத்தில் குளிக்க முடிந்த என் பிள்ளைக்கு தமிழ்படத்தை பார்க்க முடிவதில்லை.

எது ஆபாசம்.?..எது வக்கிரம்?..என புரிய முடியாத குழப்பும் சமூகத்தில் பெண்களை அடிமைப்படுத்தி போகப்பொருளாய் வைத்துள்ளோம்.

பெண் திறமையாயிருந்தால் இங்கு எடுபடாது..

அவள் சமையல் குறிப்புகளை மட்டுமே எழுதிவிட்டு நல்ல பிள்ளையாய் ஒதுங்கிடணும்..

தப்புகளை தட்டி கேட்கக்கூடாது. கேட்டால் அவளைப்பற்றி கதை கட்டுவோம். ஓட செய்வோம்..

[ ஒரு அப்பாவி பெண்ணிடம் " படுக்க வாரியா ' னு கேட்டான் கயவன் பதிவர் ஒருவன் . அவனை தட்டி கேட்டதிலிருந்து ஆரம்பித்தது இந்த துவேஷம்.)


இப்படி பல்வேறு தரப்பினரின் பிரச்னைகளை ஆழமாக அறிந்தவள்..

வாழ்க்கையின் பல பிரச்னைகள் எனக்கு துணிவையும் போராடும் சக்தியையும் தந்துள்ளது..

அதனால் மட்டுமே என்னால் ஒரு பாலியல் தொழிலாளியையும் , கொலைகாரனையும் சகோதர நேசத்துடன் பார்க்க முடிகிறது.

ஆனால் எனக்கே இப்படி ????.. !!!!!

ஆனால் இங்கு வலையுலகில் நடமாடும் சில நச்சு மனிதர்கள் அவர்களையெல்லாம் விட பன்மடங்கு கொடூரர்கள்..

இவர்களை சகித்துக்கொண்டோ, ஒதுங்கிக்கொண்டே போகலாம் தான்.

ஆனால் எத்தனை மன உளைச்சலை தருகிறது இவர்களின் நடவடிக்கைகள்..

எல்லாராலும் திரும்ப அடிக்க முடியாது என்கிற தைரியம்தானே?..

எல்லாரும் பொறுமையா செல்ல ஒரு காரணம் இருக்குது..குடும்பம் , வேலை இருக்குது என்ற இளக்காரம் தானே?..

" பூக்காரி" என்று எங்கு வாசித்தாலும் அந்த நியாபகம் வருதே வலி தருதே.வார்த்தைகள்...

அதனால் ஏற்பட்ட பின் விளைவுகள் .?. நமக்கு தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் அடி பட்டவருக்கு?...

சரி மன்னிப்போடு முடிந்தது என பார்த்தால் மன்னிப்பு கொடுத்ததுதான் தவறு என்பது போல இப்ப புதுசு புதுசா முளைக்கும் காரணம் ?..

அதைவிட என்னைப்பற்றிய அந்தரங்கங்களை வெளியிடுவதாய் மிரட்டல் வேறு..

என்னதான் செய்துவிடுவீர்கள் ?. உங்கள் நோக்கம் என்ன?.

என்னைப்பற்றிய தனிப்பட்ட விஷயத்தில் நுழையும் உரிமையை யார் கொடுத்தது ?..

நான் அப்படி என்ன கொடுமை செய்தேன்?.

மிஷ நரி என எழுதியதை கண்டித்தேனே அதற்காகவா?..

ஏழை எழுத்தாளர்களை எள்ளி " கெண்டைக்கால் மயிர் பிடுங்காதவன் " என நகையாடியதை கண்டித்தமைக்கா?

அருவருப்பான வக்கிரமான ஜோக்குகளை , கதைகளை பொதுவில் வாசிக்க நேர்ந்ததை சொன்னதற்கா.?( அதை பிரைவைட் வீயுவிற்கு வைக்கலாமே )


சமீபத்தில் என்னைப்பற்றி வந்த 2 புனைவு..


[[ மெனுவை எழுதி சர்வ் செய்த தாய்லாந்து பெண்ணிடம் வேறு வழியில்லாமல் தர.இப்படியே சாப்பிடும் போதெல்லாம் அவன் மராத்தி கவிதை ஒன்று ஒன்றாக அவளிடம் போக. அவள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஜான்சி அக்காவையும் கூப்பிட்டுக் கொண்டு வந்து விட்டாள்.
அவள் முப்பது நாளில் மராத்தி புத்தகம் வாங்கி படித்து அவனை காதலிக்க ஆரம்பித்து விட்டாளாம். அவளுக்கு முதலிலேயே அவன் தமிழ்ப்பிளாக்கன் என்று தெரிந்திருந்தால் தமிழ்
கற்றிருப்பேன்.இன்னும் முப்பது நாள் அவகாசம் தர சொல்ல சிபாரிசுக்கு ஜான்சி அக்காவை அழைத்து வர,மிரட்டத்தான் வந்தார்கள் என்று நினைத்து விட்ட முகிலனிடம் கூட
சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விட்டான்.மிரட்டல்களால் தான் அவன் ஓடி விட்டான் என்று முகிலன் எல்லோரிடமும் சொல்வி வைத்து விட்டார். தூரத்தில் இருந்து பார்த்தாலே
இதுதான் பிரச்சனை.எப்படி பேசியது காதில் விழும். இதுதான் இந்த தமிழ் சமுதாயத்தின் நிலை.
----------------------------------------------------------------------------
xxxxxxx பொண்ணுகளுக்கும் ராசியே இல்லை. இப்பிடித்தான் பாருங்க ஒரு தாய்லாந்து பொண்ணை ரொம்ப நாள் ரூட்டு விட்டுக்கிட்டு இருந்தாப்ல. அந்தப் பொண்ணு
போறப்ப வர்றப்ப எல்லாம் எதாவது கவிதை எழுதி அவ மேல் தூக்கி எறிவாப்ல. அதுவும் பொறுக்கிக்கிட்டு போயிரும். ஆனா ஒரு பதிலும் சொல்லாது.

ஒரு நா அந்தப்பொண்ணு ஜான்சி அக்காவைக் கூட்டிக்கிட்டு வந்திருச்சி. எனக்கும் ஷங்கருக்கும் அல்லு விட்டிருச்சி. ஏன்னா ஜான்சி அக்கா பயங்கரமான ஆளு.
ஜான்சி அக்கா கையில அரவிந்து இது வரைக்கும் எழுதுன கவிதைத் துண்டு எல்லாம் இருக்கு. வந்தவுக அரவிந்த விட்டு லெஃப்டு ரைட்டு வாங்கிட்டாங்க.
நான் என்.சி.சியில இருந்தவ. துப்பாக்கி சுடுறதுல ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கேன்.

]]

இதை குறித்து கருத்து சொல்ல அழைக்கிறேன்.. உங்கள் பெயர் பின்னூட்டத்தில் வராது....


இந்த மன உளைச்சல் இனி எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது...

20 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

கடுங்கோபம் வருகிறது .. வக்கிர பிசாசுகள் .. இவனுங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் விடுவதுதான் சரி..
எல்லா இடங்களிலும் இதைபோன்ற தாக்குதல்களை தாண்டித்தான் பெண்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்கிறார்கள்...

யாசவி said...

:(

நாடோடி said...

திருந்தாத‌ ஜென்ம‌ங்க‌ள் இருந்தென்ன‌ லாப‌ம்?..

மங்களூர் சிவா said...

:((

சென்ஷி said...

:-(


கேவலமான ஜென்மங்கள்.. காறித்துப்பினாலும் ஆத்திரம் அடங்கமறுக்கிறது.

புன்னகை தேசம். said...

சென்ஷி said...

:-(


கேவலமான ஜென்மங்கள்.. காறித்துப்பினாலும் ஆத்திரம் அடங்கமறுக்கிறது.
-----------------------------------------
என்னங்க பண்ண முடியும்.. தமிழ்நாட்டில் பெண்ணாக பிறந்ததே சாபம்..


அத்தனை பெண்களையும் சாவடித்துவிடலாம் , இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் கொல்வதைவிட.....

SanjaiGandhi™ said...

என்ன நடக்குது இங்க? யார் இப்டி எல்லாம் எழுதி இருக்காங்க? யாரைப் பத்தி எழுதி இருக்காங்க? தலை சுத்துது..

SanjaiGandhi™ said...

:(

மங்களூர் சிவா said...

/
[ ஒரு அப்பாவி பெண்ணிடம் " படுக்க வாரியா ' னு கேட்டான் கயவன் பதிவர் ஒருவன் . அவனை தட்டி கேட்டதிலிருந்து ஆரம்பித்தது இந்த துவேஷம்.)
/

யார் அந்த அப்பாவி பெண் யார் அந்த கயவன் பதிவர்

ஜோதிஜி said...

வக்கிர எண்ணங்கள் பெண்களிடம் மட்டுமல்ல. இன்று குழந்தைகள் வரைக்கும் வந்து சேர்ந்துள்ளது. ஐயோ இது குழந்தை என்பதோ, தவறோ முக்கியமல்ல.

அவர்கள் வக்கிரம் அடங்க எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஒரு நாகரிக உலகில் தான் நாம் வாழ்ந்து கொண்டுருக்கிறோம்.

படிக்காதவர்களிடம் இது போன்ற ஈனப்புத்தி இருபபதை விட படித்தவர்களிடம் தான் அதிகமாக இருக்கிறது.

தியாகு said...

இம்மாதிரி வக்கிர சிந்தனை உள்ளவர்களை மனநிலை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்

டம்பி மேவீ said...

சமுதாயத்தில் இருக்கும் சில கட்டுபாடுகளை உடைக்கவில்லை என்றால் ...இந்த மாதிரியான சொற்புனர்வுகள் நடந்து கொண்டே தானிருக்கும் .

ஆணாதிக்க சிந்தனை அவர்களின் அப்பா அம்மாவை பார்த்தே வருகிறது.

இவர்களெல்லாம் இப்படி எழுதி தன்னை தானே தாழ்த்தி கொள்ளுகிறார்கள் ....

(இருக்கிற கோவத்திற்கு இன்னும் மோசமாக அவர்களை திட்டி இருப்பேன் ....)

புலவன் புலிகேசி said...

//என்னங்க பண்ண முடியும்.. தமிழ்நாட்டில் பெண்ணாக பிறந்ததே சாபம்..


அத்தனை பெண்களையும் சாவடித்துவிடலாம் , இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் கொல்வதைவிட..... //

அப்புடியெல்லாம் சொல்லாதீங்க. பெண் என்ற என்னத்தை விடுங்க. இது போன்ற பிரச்சினைகள் தைரியமாக எதிர் கொள்ளப் பட வேண்டும். இதுக்காக எல்லாரையும் கொன்னுடுங்கன்னு சொல்லாதீங்க. ரௌத்ரம் பழகு!

இந்த மிருகங்களின் கொட்டங்கள் வெளிக் கொணரபட வேண்டும். முகத்திரைகள் கிழிக்கப் பட வேண்டும். வக்கிரப்புத்திக் காரனுங்க பெண்களை இன்னும் ஏளனமாக நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

புன்னகை தேசம். said...

தனிமடலிலும் , பின்னுட்டத்திலும் ஆறுதலளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிங்க..


இதுவே கடைசியாய் என்னோடு போகணும்...

மன உளைச்சல் சொல்லி மாளாது..:((

ஏழர said...

http://www.google.com/profiles/yesbalabharathi#buzz

இது பாலபாரதியின் பஸ் முகவரி இதில் முக்கிய விவாதங்கள் உள்ளன அனைவரும் அதை ஷேர் செய்து பலரை சென்றைடைய வைக்கவும்

புன்னகை தேசம். said...

Blogger ஏழர said...

இது பாலபாரதியின் பஸ் முகவரி இதில் முக்கிய விவாதங்கள் உள்ளன அனைவரும் அதை ஷேர் செய்து பலரை சென்றைடைய வைக்கவும்
---------------------------

அர்விந்த் என்னிடம் பேசிய சாட் கள் என்னிடமும் இருக்கு..


முகிலனின் மடல்களும்..


தேவைப்பட்டவரிடம் மட்டுமே விளக்கப்படும்.

அதைவிடுத்து அவர் பக்கமாய் என்ன விளக்கினாலும் அந்த சாட் பார்க்காமல் அவருக்கு சார்பாக பேசுவது வேஸ்ட்..

இது காவல்துறைக்கோ அல்லது சைபர் க்ரைமுக்கோ போவதே நல்லது..

எனக்காக அல்ல.

என்னால் மன்னித்திட முடியும்தான்..

மறக்க முடியாவிட்டாலும்.

என் வயது 42..

ஆனால் இளம்பெண்கள் எழுத வந்தால்?..

இது தொடர்ந்தால்..

கண்டிப்பாக நியாயம் கிடைத்தே ஆகணும்...

இங்கு சில விஷயங்களை விளக்கிட முடியாது... இது திசை திருப்பப்படும்...

பிரச்னையின் போக்கு மாறும்..

சந்தனமுல்லைக்கு நடந்தது போல..

சந்தனமுல்லைக்கு நடந்தபோது எனக்கு பிரச்னை தவறாக திரிக்கப்பட்டது..

இப்போதுதான் உண்மை நிலைமை புரிகிறது..

நீர்த்து போக செய்யும் முயற்சி மட்டுமே இது..

நான் எனக்கு நேர்ந்த மன உளைச்சலை , வருத்தங்களை சொல்லிட முடியாது..சட்டப்படி நியாயம் கிடைக்கும்வரை போராடுவேன்..இனியொரு பெண்ணுக்கு இந்நிலைமை வரக்கூடாது என்பதற்காகவே...

புன்னகை தேசம். said...

ஏழர .http://twitter.com/ezharai - [ ஒரு அப்பாவி பெண்ணிடம் " படுக்க வாரியா ' னு கேட்டான் கயவன் பதிவர் ஒருவன் . } அரவிந்து இந்த கயவன் பதிவருக்கு எதுக்கு இப்ப நீங்க சொம்பு தூக்கறீங்க? நீங்க அந்த கயவன் பதிவருக்கு ஏன் காவலரா இருக்கீங்க?2:15 pm-----------

இந்த கயவன் பதிவர் அந்த அப்பாவி பெண்ணிடம் மட்டுமல்ல., மதார் என்ற பெண்ணிடமும் தாகத முறையில் பேசியதாய் குழுமத்திலே சொல்லியபோதுதான் நான் தெரிய வந்தேன் அவன் பலரிடம் இப்படி தாகாத முறையில் பேசியிருக்கான் என..

அப்ப மதார் என்னை அர்விந்திடம் பேச சொல்லி கட்டாயப்படுத்தவே

நான் அர்விந்திடம் பேசினால் அந்த கயவனை தனக்கு பிடிப்பதாகவும் சொன்னார்..

அப்பவே எனக்கு புரிந்தது..

உங்களுக்கு புரிந்ததா?..ஏன் சொம்பு தூக்கினார் என?...மதாரிடம் கயவன் என்ன பேசினார் னு குழுமத்தில் அல்லது மதாரிடம் கேளுங்கள்...

பிரியமுடன் பிரபு said...

again?!?!........

smart said...

[[வெளியூர் வேலை என்றால் பாஸ் கூட பயணம் செய்வது அவர் தங்கியிருக்கும் விடுதியில் தங்குவது என எப்பவோ நான் பெண் என்ற மன நிலை தாண்டியவள்.

99% நிர்வாணமான பெண்களோடு நீச்சல் குளத்தில் குளிக்க முடிந்த என் பிள்ளைக்கு தமிழ்படத்தை பார்க்க முடிவதில்லை.]]

ஆகிய விஷயங்கள் எனக்குத் தெரியாமலிருந்தால் இந்த நிகழ்ச்சிக்கு எனது கண்டனங்களை பதிவு செய்திருப்பேன்.

smart said...

இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் அந்த நிகழ்வுக்கு எனது வருத்தங்கள்.