Friday, July 16, 2010
சம்மர் வகுப்பு + சுற்றுலா..- பாகம் 2
சும்மா விளையாட்டுக்கு ஆரம்பித்த சம்மர் வகுப்புகள் மிக சிறப்பாக நடப்பது எனக்கே ஆச்சர்யம்தான்...
என்னை யாரென்றே தெரியாத , எனக்கு யாரென்று தெரியாதவர்கள் எல்லாம் தொலைபேசியில் அழைத்து எங்கள் குழந்தைகளையும் அனுப்பட்டுமா என்று கேட்டு அனுப்புகின்றனர்..
பணம் எவ்வளவு ? இதுதான் அனைவரின் கேள்வியும்..
இல்லீங்க இலவசம்தான் னு சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க... பணம் இல்லாமல் எப்படி அனுப்புவது .?
உங்களுக்கு தொந்தரவா இல்லையா?.. கொஞ்சமாவது வாங்கிக்கோங்களேன்...
இல்லீங்க இதனால் நானும் என் குழந்தையும் பயனடைகிறோமே...னு பல காரணத்தை சொல்லி சமாதானபடுத்த ( ஆமா படுத்த ) வேண்டியுள்ளது..
ஆக ஆரம்பித்து 18 நாட்களானதால் ஒரு பிக்னிக் கூட்டிட்டு போகாட்டி எப்படி.. குழந்தைங்க கோச்சுக்காதா?.. ( முக்கியமா எனக்கு )
அதனால் இந்த வெள்ளிக்கிழமை பிக்னிக் போகலாம்னு முடிவு செய்தோம்..
குழந்தைகளோடு பொழுதை கழிப்பது மிக சுவாரஸ்யமானது..
" ஆண்ட்டி , இந்த சட்டை நல்லாருக்கா.?"
" ஆண்ட்டி நான் கீழ விழுந்துட்டேன்."
" ஆண்ட்டி நான் கலர் பண்ணிட்டேன்.. சாக்லேட் தாங்க.."
" இந்த ஜூஸ் எனக்கா.?"
" கேக் வாங்கி வெச்சிருக்கீங்களா."
இப்படி உரிமையான கேள்விகள்..
அதுல ஒரு குட்டிப்பெண் பட்டுப்பாவாடை போட்டு வந்து அப்படியே கொள்ளை கொண்டது.. ( ம்ம்.. பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தை கிளப்பி விட்டது :) )
முதலில் 9 மணிக்கு ஆரம்பித்த வகுப்புகள் ,
" ஆண்ட்டி 9.30 க்கு ஆரம்பிக்கலாமே."
" இல்ல நான் 10 மணிக்குத்தான் எழும்புவேன் .. பிளீஸ் ஆண்ட்டி.." அப்படி இப்படீன்னு இப்ப 11 - 1 .30 மணி வரை வருகிறார்கள்..
வந்ததும் கொஞ்சம் படம் வரைதல் , கலரிங் , கதை புத்தகம் படித்தல்..
அடுத்து ஓரிகேமி - காகிதத்தில் பூக்கள், தொப்பி, கிறுஸ்மஸ் மரம் , ஹேண்ட்பேக் , அன்னம் , என ஏதாவது ஒன்று தினமும் சொல்லித்தரப்படும்..( கூகுளய்யா வாழ்க )
அப்புரம் ஹிந்தி பாட்டு போட்டா ஒரே டான்ஸ் தான்...( இன்னாமா ஆடுறாய்ங்க..????. டேன்ஸ் மாஸ்டர் கிட்ட படிக்கிறாங்களாம். )
இப்ப டயர்டா ஆனதும் எல்லாரையும் அமர வைத்து கையில் ஆளுக்கொரு கீரைக்கட்டு.. அல்லது கேரட் துண்டு ...
எதுக்கு ?..
இப்ப தான் முயலார் ஃபீடிங் டைம்...
அவரை உள்ளே இருந்து கதவை திறந்து விட்டு மாப்பிள்ளை மாதிரி அழைத்து வந்தால் ,
ஒரே கூச்சல் ..
முண்டியடித்துக்கொண்டு நான் நீ என போட்டி போட்டு கீரை , கேரட் கொடுப்பதில் முயலார் பயந்து ஓட , இவுக பின்னால் துரத்த..
அதனால் இப்ப யாரும் எழும்ப கூடாது அமர்ந்து இருங்கள்.. முயலார் வந்து வாங்கி சாப்பிடுவார் னு சொல்லி கண்ட்ரோல் பண்ணுவதற்குள்.......... ஹாஆஆஆ............
அதற்குள் குழந்தைகளை அழைத்து செல்ல ஆயாக்களும் அம்மாமாரும் வருவாங்க.. ஆனா போக மாட்டாங்க... பிடிச்சு இழுத்துட்டு போகணும்.. ( நம்ம வேலையும் பாக்கணுமே..)
இன்று வெள்ளிக்கிழமை... பிக்னிக் . அருகிலுள்ள பூங்கா.. போனால் பகல் பொழுது அடைப்பார்களாம்.. உடனே கொஞ்சம் தூரமுள்ள பூங்கா சென்றோம்.. அங்கு விளையாடிவிட்டு வெயிலாக இருந்ததால் அதன் மிக அருகிலுள்ள மரங்கள் அதிகமுள்ள பூங்கா சென்று விளையாடிவிட்டு கொண்டு வந்த உணவுகளை குழந்தைகள் சாப்பிட்டார்கள்..
அருகில் ஒரு விஷ்ணு மந்திர் இருந்தது அங்கும் சென்றோம்..
எல்லா குழந்தைகள் போல என் குழந்தையும் அவர்களை பார்த்து கீழே விழுந்து நமஸ்கரித்தார்..
ஏன் இவுங்க ஜீஸஸ் வேற மாதிரி இருக்கார்..? - மகன்..
அப்புரம் உள்ளே ஒரு அடி அளவில் கோவில் மணிகள் சுமார் 6 தொங்கவிட்டிருந்தார்கள்.. அதிலேயும் சாமி சிலைகள்..
அதிலிருந்து கயறு தொங்கியது... எல்லா குழந்தைகளும் அந்த மணியை இழுத்துவிட்டு கைகள் குவித்து பிராத்தனை செய்ய மகனாரும் அதையே பின்பற்றினார்...
கோவில் மிக உயரத்தில்..கீழே மண்டபம்.. ஏதோ பூனூல் விசேஷம் போல நடந்தது... ஹீரோ/மாப்பிள்ளை ? மொட்டை போட்டு உச்சியில் குடுமி வைத்திருந்தார்.. ஆனா அவருக்கும் அழகு கலை நிபுணர் அலங்காரம் செய்தார்.. ஹால் நடுவில் 4 வாழைமரம் கட்டி, பூ அலங்காரம் செய்து புரோகிதர் ஓதிக்கொண்டிருந்தார்..( இதெல்லாம் எப்படி பார்த்தீங்கன்னு கேட்பீகளே.. ? ஜன்னல் வழியா தெரிந்தது... ) பர்மா காரர்கள் கூட்டமாய் இருந்தார்கள்..
கீழே இந்திய கடை இருந்தது.. ஒருவர் சூடா சமோசா போட்டு தந்தார்.. குலாப்ஜாமூன் இருந்தது.. விரும்பலை குழந்தைகள்..
பின்பு பிக்னிக் முடிந்து திரும்பியதும் அரட்டையோடு தாங்கள் எடுத்த மலர்களை ( புல்லில் விழுந்தது) வீட்டுக்கு கொண்டு செல்வதை பற்றி மகிழ்ச்சியா பேசிக்கொண்டே வந்தனர்...
இப்படியாக என் பொழுதுகள் மிக இனிமையாக உபயோகமாக சென்றதோடு என் குழந்தைகால நியாபகத்தையும் மீட்டியது......
நான் சிறு குழந்தையாக இருந்தபோது பெரிய விடுமுறைக்கு பாட்டி வீடு செல்வதென்றால் அத்தனை இஷ்டம்... பெரிய காம்பவுண்ட் வீடு.. உள்ளே சுமார் 12 குடித்தனங்கள் வாடகைக்கு இருந்தார்கள்..
அதன் பின்புறம் பெரிய மாட்டுத்தொழுவம்..மாட்டு வண்டிகள்... கூடவே கோழிகளும் , நாய்களும்...புளியமரம் , அதில் ஊஞ்சல்... அருகில் தாமிரபரணி ஆறு..நினைத்த போது குளியல்.. கணக்கில்லாமல்...
வாடகைக்கு குடியிருப்பவர் வீடுகளில்தான் முழு நேரமும் விளையாட்டு.. கேரம்போர்ட் , தாயம் , சோளி , சீட்டுகட்டு , கோலிக்குண்டு ,குச்சிகம்பு , என வகை வகையாக.. பின்னர் இரவானதும், முற்றத்தில் அனைத்து வீட்டு குழந்தைகளும் நிலாச்சோறு...அதன்பின் அங்குள்ள அக்காக்கள் கதை சொல்ல அங்கேயே தூங்கிடுவோம்... அத்தைகள் வந்து எழுப்பும் வரை..
அவர்களெல்லோரும் இப்ப எங்கெங்கு இருக்காங்களோ தெரியாது.. ஆனால் அந்த நினைவுகள் மிக சுகமானவை... இப்படி பணம் ஏதும் செய்யாமலே வருடா வருடம் 2 மாதங்கள் பணிவிட செய்துள்ளதை நினைக்கும்போது , அவர்களுக்கு மனதில் மட்டுமே நன்றியை செலுத்த முடிகிறது..
வாழ்வில் சில வருடங்கள் உழைக்க , சம்பாதிக்க , நம் கடமைகள் செய்ய என சென்றாலும் எப்போதாவது சில நாட்கள் /வேளைகள் தான் நிஜமாக வாழ்வதைப்போல ஒரு எண்ணம் ஏற்படும்.. அதைப்போல " நானும் வாழ்ந்தேன் ".
குழந்தைப்பருவம் மட்டுமே சுமைகள் இல்லாதவை...
இக்குழந்தைகளும் சில இனிய நினைவுகளை சேமிக்கட்டும்...
( புலம்பல் வகை.. பின்னூட்டத்துக்கு நேரம் செலவிட வேண்டாமே...:) )
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
குழந்தைகள் உலகமே ஒரு அலாதி. அதற்கு ஈடு இணையே இல்லை.
வாழ்த்துகள்.
vaazhthukkal
குழந்தைகளுக்குத்தான் மத வேறுபாடு இல்லை.
எப்படிப் பார்த்தாலும் எல்லாம் ஒன்னுதானே!
மகிழ்ச்சியா இருப்பதைக் காண்பதும் ஒரு மகிழ்வுதான்.
நன்றி சூர்யா , ரமேஷ் , துளசிம்மா...
ஆமாம்மா எல்லாம் ஒண்ணுதான் னு சொல்கிறேன் குழந்தைகளிடம்..
Post a Comment