Wednesday, July 28, 2010

மீண்டுமொரு த்ரில்லர் பயணமும் கடவுள் நம்பிக்கையும்..


சில பயண அனுபவங்களை வருங்காலத்தில் திருப்பி பார்க்க சேமிக்கும் முயற்சிதான் இக்கட்டுரை.
.

வாசகர்களுக்கு போர் அடிக்கலாம் என் பெருமைகளும் , புலம்பல்களும் ( சொறிதல் - வலையுலக வார்த்தையில்)

அதனால் தொடராமல் இங்கேயே நின்றுகொள்ளவும். :)

-------------------------------------------------------


4 நாள் தொடர்ந்தார்போல் லீவு என்றாலே குழந்தைகள் பிளான் போட ஆரம்பித்துவிடுவார்கள்..

அப்பாவுக்கும் பெரியவனுக்கும் எப்போதும் கடற்கரை வேணும்.

எனக்கோ ஆறு , அருவி , மலை , மரங்கள் இருக்கணும்.குழந்தைகளுக்கு படிப்பினையாகவும் அட்வென்சர் பயணமாகவும் இருக்கணும்.

மேலும் கடற்கரை 200 கிமீ . மோட்டார் வேயில் சென்றால் 1.30 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.அதனால் திட்டமிடாமலே எப்போதும் செல்லலாம்..

மலைக்கு அப்படியல்ல , 100 கிமீ என்றாலும் போய் சேர 3 மணி நேரமாகும்..

பயணத்துக்கு முந்தினம் கொஞ்சம் மிக்சர் முறுக்கு செய்தால் நன்றாயிருக்குமே னு கணவர் சொல்ல உடனே மார்க்கெட் சென்று அரிசி மாவு வாங்கி வந்து கடலை மாவு கலந்து

அதையும் தயார் செய்தாச்சு.

குழந்தைகள் பற்றி பிரச்னையில்லை.. தாய் உணவுகள் உண்பார்கள் விரும்பியே,.எனக்கு தண்ணி,ஆப்பிள் இருந்தா போதுமானது..

சனிக்கிழமை மதியம் கிளம்பலாம் என் முடிவு செய்து இன்னும் நேரமிருக்குதே என புதிதாக வாங்கிய கணினியை ஆன் செய்தால்

திரையில் ஒண்ணும் வரலை.

அடிப்படை டிரபிள்ஷூட்டிங் செய்தும் பயனில்லை..

வாங்கி 7 நாளுக்குள் திருப்பி கொடுக்கணும்.. வேறு வழியேயில்லை..

போட்டதை போட்டபடி , குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கணினியை பேக் செய்துவிட்டு கடைக்கு சென்றோம்.

எல்லாம் பரிசோதித்து விட்டு விஜியே கார்ட் பெயிலர் என்றார்.

காம்பேக் சிஸ்டம். புது மாடல்.. பின்பு மாற்றி தந்து காப்பி செய்ய 2 மணி நேரமானது.

உடனே வீட்டுக்கு வந்தால் வீடு பூட்டியிருக்கு.

அப்பதான் நியாபகம் வந்தது வேலையாளிடம் , முயலுக்கு சாப்பாடு கொடுக்க திங்களன்று வர சொல்லி அவளிடம் ஒரு சாவியை

கொடுத்தேன்.

அவளோ வேலை முடிந்ததும் வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டாள்.. சாவியை லாபியில் கொடுக்காமல்..


அப்புரம் அவளை அழைத்து வீட்டை திறந்து படபடவென பாக்கிங் செய்து புறப்படுவதற்குள் மணி 4 ஆனது..

இருட்டிய பிறகு கார் ஓட்ட எனக்கு பிடிப்பதில்லை.. கண் கூசும் ..

புதிதாக வந்துள்ள பாட்டுகளை ஓடவிட்டு , வண்டியை கொஞ்சம் வேகமா செலுத்தி மலைவாசலை சென்றடைந்தோம்.6 மணிக்கெல்லாம்.

நல்லவேளை இருட்டவில்லை.. டிக்கெட் வாங்கிவிட்டு ஹேர்பின் பெண்ட் வளைவுகளை ரசித்தபடியே மலை ஏறினோம்..

6.30 க்கு போய் மலை உச்சியில் சேர்ந்தோம்.

இரவு சஃபாரிக்காக லைன் நின்றது.

உடனே அதை விசாரிக்கவும் கடைசி வண்டி 7.30 க்கு இருப்பதாக சொல்லவும் டிக்கெட் வாங்கிவிட்டு அருகிலுள்ள உணவகத்தில் கொஞ்சம் சூடா சூப் குடித்தோம்.

குளிர் ஆரம்பித்தது மெதுவாக இருட்டவும்.

உணவருந்தி வெளியே வரும்போது ஏதோ ஒன்று துள்ளி ஓடியது..

பார்த்தால் அழகிய மான் குட்டி ஒன்று...

பின் சஃபாரிக்கு திறந்த ஜீப்பில் ஏறி நின்றுகொண்டும் உட்கார்ந்துகொண்டும் பயணித்தோம்.. ஸ்பாட் லைட் வைத்து காட்டுக்குள் அடித்துக்கொண்டே வந்தார்கள்

பல இடங்களில் மான்கள் கூட்டம் கூட்டமாய்.. யானை , புலி, தென்படவில்லை.. குரங்குகள் இருந்தன.

குளிர் தாங்க முடியவில்லை... குழந்தைகளுக்கு.

சின்னவருக்கு மட்டும் தலையை மூடினேன். பெரியவர் வேண்டாமென்றார்.

அடுத்து அங்கு தங்க இடம் எளிதாக கிடைக்குமென பார்த்தால் எல்லா இடமும் நிரம்பி வழிந்தது..

நமக்கு எப்பவுமே பாஸிட்டிவ் எண்ணம்தான்.,. எப்படியும் நமக்கென ஒரு இடம் இருக்கும் னு.

சுமார் 20 விடுதிகப்புரம் தங்க ஒரு இடம் கிடைத்தது 2 மடங்கு விலையில்..

அழகான ரோஜா தோட்டம் இருந்தது..

ஆனால் ரசிக்க முடியாமல் அசதி வர நானும் பெரியவரும் தூங்கினோம்.. சின்னவரும் அப்பாவும் ஓனரோடு பேசிக்கொண்டிருந்தார்களாம்.

அப்பப்ப ரோஜாவை பறித்து வந்து அம்மா இந்தாங்கன்னு சொல்லிக்கொண்டிருந்தார்.. அத பறிக்க கூடாதும்மா னு கனவுலேயே திட்டிக்கொண்டிருந்தேன்.

காலையில் எழுந்ததும் வீர சாகச விளையாட்டுகள் நிறைந்த கவ் பாய் இடத்துக்கு செல்லலாம் னு எண்ணியிருந்தோம்..

ஆனால் முனகல் சத்தம் கேட்டது..

பெரியவருக்கு பயங்கர காய்ச்சல்..

என்னாச்சு னு கேட்டா பேச முடியலை தொண்டை வலி..

நீங்க வேணா சுத்திட்டு வாங்க நான் இங்கே இருக்கேன் னு சொன்னார்..

" அட வந்ததே உங்க இருவருக்காகத்தான்.. இப்ப பாரு மருந்து வாங்கி தர்வேன் எல்லாம் சரியாயிடும்" னு பாஸிட்டிவா உற்சாகம் கொடுத்துவிட்டு

தாமதியாமல் , எழுந்து குளித்து காஃபி அருந்திவிட்டு மெடிகல் ஷாப் தேடி சென்றேன்... அது கொஞ்சம் கிராமம் போன்ற இடம்..

சில நபர்களிடம் விசாரித்து ஒரு நீண்ட சாலைக்குள் நுழையும்போது , சந்தேகத்தோடு வழி கேட்கலாமான்னு பார்க்க ஒரு பெண்மணி கையசைத்தார்..

கண்ணாடியை இறக்கிவிட்டு மெடிகல் ஷாப் இருப்பதை உறிதிசெய்யும்போது , அவர்,

" நானும் உங்ககூட வந்து மருந்து எடுத்து தருகிறேன் நான் அங்குதான் செல்கிறேன் என்றார்.

எனக்கு தூக்கி வாரி போட்டது...

என்ன சொல்றார் இவர்.?

அவர் தொடர்ந்தார் , " நான் மருத்துவர் . இந்த கிராமத்துக்கு ஞாயிற்றுகிழமை மட்டும் வருவேன்.. ஒரே ஒரு மருத்துவமனை.."

எனக்கு பாதி நம்பிக்கை மட்டுமே..தெரியாத ஊரில் என்ன செய்வது..?. மருத்துவர் என்றால் ஏன் காரில் செல்லவில்லை.?.

பொது பேருந்துக்கு நிற்கிறார்?.

ரொம்ப கேஷுவல் உடை வேறு..

இங்க போ, அங்க திரும்பு என வழிக்கட்டினார்.. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் போய்க்கொண்டிருந்தேன்.

கடைசியில் நிப்பாட்ட சொன்னார். இறங்கி ஒரு சந்துக்குள் அழைத்து சென்றார்.

அங்குள்ள கடையின் 2 ஷட்டரை திறந்தார்,.

அப்பாடா நிம்மதி.. அது கிளினிக் தான் இரண்டு படுக்கையோடு...

கடவுளாய் பார்த்து தக்க நேரத்தில் மருத்துவரையே என் கூட அனுப்பி வைத்திருக்கார்..

கூட வரும்போதே பையன்/ காய்ச்சல் பற்றி தகவல்கள் சொல்லியிருந்தேன்..

அதற்குள் ஒரு பெண்மணி குழந்தையோடு பைக்கில் வந்து ஊசி போட்டு சென்றார்..

அதை முடித்துவிட்டு மருந்துகளை எடுத்துக்கொண்டு என்னோடு புறப்பட்டார் , அந்த கும்பிட போன தெய்வம்...

ஊசி போட்டு மருந்தும் கொடுத்தார்.. பின் அவரை கொண்டு விட்டுவிட்டு , வந்து உணவருந்திவிட்டு கிளம்பினோம்.

http://www.google.co.th/images?hl=en&q=khao+yai&um=1&ie=UTF-8&source=univ&ei=ldlPTPP3NYSYrAewnfiSDg&sa=X&oi=image_result_group&ct=title&resnum=7&ved=0CEoQsAQwBg

http://www.khaoyai.com/khaoyai.htm

http://en.wikipedia.org/wiki/Khao_Yai_National_Park

The park is the second largest in Thailand. It covers an area of 2,168 square kilometers, including evergreen forests
and grasslands. Its altitude mostly ranges from 400 to 1000 m above sea level. There are 3,000 species of plants,
320 species of birds like red junglefowl and green peafowl and 67 species of mammals, including Asiatic black bears,
Asian elephants, gaur, tigers, gibbons, Indian sambar deer, crab-eating macaque, Indian muntjac, dholes, and wild pigs.
Its waterfalls include the 80 metre Heo Narok, and Haeo Suwat made famous from the film The Beach.

http://www.thongsomboon-club.com/

Love the rush as you soar 50 ft above ground on this scenic zipline.
Not for the faint of heart or the weak of grip.

Got to know who can really put the pedal to the metal? Show off your driving skills by circling our smooth course.

Think you’re too young to ride? Think again.
We offer another track for all those young and excited.

----------------தொடரும்...7 comments:

துளசி கோபால் said...

என்னங்க இது...... காய்ச்சல் சரியாச்சா ?

இன்னிக்குத்தான் சின்னவரோடு சுத்துனதை எழுதி இருக்கேன்.

புன்னகை தேசம். said...

சரியாயிடுச்சு அம்மா.

மதியத்துக்கு மேல் அவரும் அம்யூஸ்மெண்ட் விளையாட ஆரம்பித்தார்..

அப்படியா படிக்கிறேன் ..

மிக சுவையா விவரமா எழுதுறீங்க ஒவ்வொண்ணையும்..

பூங்குழலி said...

த்ரில் மட்டுமில்ல தில்லான அனுபவம் தான் .அந்த நேரத்துல கார் ஓட்டி மலையில ஏறுரதுன்னா சும்மாவா ?டிரைவிங் வழக்கம் போல நீங்க தானே ?

புன்னகை தேசம். said...

வாங்க பூங்குழலி..

ஆமா நானேதான்...:)

அடுத்து அருவியில் மேலிருந்து தண்ணீரில் குதிச்சதையும் எழுதணும்..

:)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

பரவா இல்லை.. உங்கள் குழந்தைகளுக்கு பாசிடிவ் எண்ணங்களை விதைக்கிறீர்கள்.. தக்க நேரத்தில் உதவுபவர் தான் கடவுள் என்பதையும் சொல்லிக் கொடுத்து விடுங்கள்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

எந்த மலைக்குப் போனீங்க...?

புன்னகை தேசம். said...

ஆமாம் பிரகாஷ்...


இப்படி அடிக்கடி நடந்திருக்கு..

மலை பற்றிய லிங் கீழே கொடுத்தேன்

http://www.khaoyai.com/khaoyai.htm

http://en.wikipedia.org/wiki/Khao_Yai_National_Park

The park is the second largest in Thailand. It covers an area of 2,168 square kilometers, including evergreen forests
and grasslands. Its altitude mostly ranges from 400 to 1000 m above sea level. There are 3,000 species of plants,
320 species of birds like red junglefowl and green peafowl and 67 species of mammals, including Asiatic black bears,
Asian elephants, gaur, tigers, gibbons, Indian sambar deer, crab-eating macaque, Indian muntjac, dholes, and wild pigs.
Its waterfalls include the 80 metre Heo Narok, and Haeo Suwat made famous from the film The Beach.