இந்த 32 கேள்விகள் சங்கிலியில் என்னையும் இணைத்துவிட்ட தலைவி பூங்குழலிக்கு நன்றி1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
எங்க வீட்டில் அனைத்து பெண்களின் பேரும் "தி' யில் முடியும்...
அதானால் இந்த பெயர்...மேலும் நான் கடக்குட்டி என்பதால் மங்களம் பாட நினைத்து " மங்களா ' என்ற பெயரும்... ஒரு தம்பி தங்கை இருந்திருக்கலாம்...:)
உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?
சின்ன வயதில் சாந்தி , பூந்தி னு தோழிகள் கிண்டலடிப்பார்கள்..
விபரம் தெரிந்து அர்த்தம் புரிந்து பிடித்தது...எனக்கு அமைதியானவர்கள் , ஆர்ப்பாட்டமில்லாத எளிமையானவர்களை பிடிக்கும்...அதேபோல் இந்த பேர் சொல்லி அழைக்கும்போதெல்லாம்...
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
ம். 2 நாளுக்கு முன்னால்..குழந்தையை திட்டிவிட்டு நான் அழுதேன்...
திரைப்படம் பார்க்கும்போது , தொலைக்காட்சியில் கொடூர செய்தி பார்க்கும்போது , ரோட்டில் விபத்து பார்த்தால் அழுகை வரும்.
3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
பள்ளியில் கையெழுத்து அழகாக இருந்தே ஆகவேண்டிய கட்டாயம்...
ஆங்கில எழுத்து அழகாக இருப்பதாக சொல்வார்கள்.. பெரிதாக இருக்கும்...ஆனால் தமிழ் எழுத்து சகிக்காது...அதற்காக கைமொழியில் அடி வாங்கியுள்ளேன்...
4. பிடித்த மதிய உணவு என்ன?
சூப் வகைகள் , தாய்லாந்து வந்ததிலிருந்து.. உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதேயில்லை எப்போதும்...
5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?
கண்டிப்பாக இல்லை... விலகி இருக்கவே பிரியப்படுவேன் ...எனக்கென்று தனியாக நட்பு வைத்துக்கொள்வதைவிட எல்லோருடனும் கலகலப்பாக இருப்பதையே விரும்புவேன்....
நட்பென்று சொல்லி என்னை அடைத்துக்கொள்ளவோ, அடுத்தவரை உரிமை கொள்ளவோ பிடிப்பதில்லை..
6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
இரண்டுமே என் பால்ய காலந்தொட்டு அதிகமாய் அனுபவித்திருந்தாலும் , ஓடும் ஆற்றில் எதிர்நீச்சல் போடுவது ஓடி விளையாடுவது த்ரில்லிங்...
7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?
கண்ணும் ( பார்வையும் ) , அவர் புன்னகையும்....
எளிமை என்றாலும் சுத்தமாக இருக்கணும்..
8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன?பிடித்தது - நிறைய ( துணிவு, கடின உழைப்பு, உதவும் எண்ணம், எதிர்பார்க்காத நேசம் , மரியாதை, குழந்தைகளை கொஞ்சுவது, கலகலப்பு, ஊக்கமளிப்பது , கடவுள் பக்தி...கலைத்திறன்., விட்டுக்கொடுத்தல் )
பிடிக்காதது -சோம்பல் ,முன்கோபம் ,பிடிவாதம்.. ( மற்றதை மற்றவங்கதான் சொல்லணும்..)9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?பிடித்தது -கடின உழைப்பு , அதீத அன்பு, அதீத எளிமை , அழகான சிரிப்பு ( கன்னத்தில் விழும் குழியோடு..) .. அடுத்தவர் விஷயத்தில் மூக்கு நுழைக்காதது... மிக சுத்தமாய் இருப்பது..
பிடிக்காதது -முன்கோபம் , கொஞ்சம் சமூகப்பார்வை குறைவு...10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?
என் குடும்பத்தார், என் அத்தை, என் பக்கத்து வீட்டு ஆன்டி...மொத்தத்தில் இந்தியாவில் உறவினர் , தோழிகள்....:(
11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?பிங் சேர்ட் , புல் ஹேண்ட் , கருப்பு பேண்ட். ( அலுவலில்)12. என்ன பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
வீணை வாத்திய இசை...ரொம்ப பிடிக்கும்...
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?
பிங்க் அல்லது புல்லின் பச்சை
14. பிடித்த மணம்?பச்ச குழந்தையின் மணம்....மிளகு ரசம் , சூப், பேக்கரி மணம் , திருமண வீட்டின் மல்லிகை மணம்.,15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?
என் தங்கை மரியா .. அருமையான பெண்.. மென்மையான மனது.. உதவுவதில் ஆர்வம், கடுஞ்சொல் பேச தெரியாது, துன்பத்தை சுமந்துகொள்ளும் பக்குவம்...அவளின் இறை பக்தி, பணிவு...
சொல்லிட்டே போலாம்..
அடுத்து என் மகன் ரிஷி.. அவரை பற்றி நான் என்ன சொல்ல?.. அழைத்ததும் வருவாள் மம்மி , மம்மி பாடாத குறைதான்... மம்மி ஆன்லைன்ல இருந்துகிட்டே ஏன் குட்மார்னிங் சொல்லல நு சண்டை பிடிக்கும் என் 4 வது மகன்.. ( டூ மச் ஆணாதிக்கம்பா..:)) )
கிரிஜா மணாளன் சார்.. அடுத்தவரை சிரிக்க வைப்பது மகிழச்செய்வது எளிதல்ல . 40 வருடமாக செய்து வரும் மஹா மனிதர்.. என்னை இணையதளத்தில் அதிக மகிழ்ச்சியோடிருக்க செய்தவர்..எளிமையானவர்.. இறக்ககுணமுடையவர்.. பல கலைஞர்களை ஊக்குவிக்கும் பெருந்தன்மையானவர்..
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு
நேரமில்லை என்ற கவிதை மிக அருமை... இவர் ஒரு சிறப்பான பெண்...
அனைவருக்கும் அருமையாக பின்னூட்டம் போட்டு ஊக்குவிப்பவர்...
மருத்துவ துறைக்கு மிக பொருத்தமானவர்...
கலகலப்புக்கு பஞ்சமில்லாத அறிவாளி...
தமிழுக்கும் , நட்புக்கும் இனிமை சேர்ப்பவர்...
17. பிடித்த விளையாட்டு?
பேட்மிண்டன், ஸ்குவாஷ்., டேபில் டென்னிஸ் , குழந்தையோடு யானை , சவாரி முதுகில்
சில சமயம் சமையலும்..:))
18. கண்ணாடி அணிபவரா?
இதுவரை இல்லை ..கண்ணு போடாதீங்க..
19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
நகைச்சுவை படங்கள் சர்வர் சுந்தரம் போல..
உணர்ச்சிமிக்க குடும்ப படங்கள் சிந்து பைரவி போல
கண்ணியமான காதல் படங்கள் ரோஜா , நிலாவே வா பாட்டு போல ( என்ன படம் அது?)
20. கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க - நன்று, அனந்த தாண்டவம்... எங்க ஊரை மிக அழகா ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது...
21. பிடித்த பருவகாலம் எது?
வெயில் முடிந்து மழைக்காலம் அரம்பிக்கும் இடையில்
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
புத்தகம் படிக்க வழக்கமேயில்லை , படிப்பு புத்தகம் தவிர....:( ( ஆவி, குமுதம் புத்தகமில்லைதானே??)
மகனுக்காக அடோப் பயரொர்க்ஸ் படிக்கிறேன்..
23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?
ஒருபோதும்...ஆனா வீட்டில் புலிக்குட்டியோடு உள்ள படத்தை போட்டு பயங்காட்டுகிறார் மகன்..
24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?பிடித்த சத்தம் - பக்கத்து ஆற்றில் சொட்டு சொட்டாய் விழுந்து ,சோரென்று பெய்யும் மழை, குழந்தையின் சிரிப்பொலி, அழுகை, கோவில் மணியோசை.
பிடிக்காத சத்தம்- இடி , தொலைக்காட்சி கத்தல் , மென்மையில்லாத எதுவும்...25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?
பல கிழக்காசிய நாடுகள்...
26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?கொஞ்சம் எழுத்து ,கொஞ்சம் பேச்சு, கொஞ்சம் நடனம் , குழந்தை வளர்த்தல் , ஒரு நாள் முழுதும் கார் ஓட்டுவது , எந்த இடத்துக்கும் துணிந்து செல்வது... எதையும் அனுசரிப்பது.., எதற்கும் ஆசைபடாதது..( உணவு, உடை, நகை , வசதிகள் போல...)27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்?
ஏழை என்பதற்காக இழிவாய் நினைப்பது...
எல்லாம் இருக்கு என அகந்தை கொள்வது..கண்ணியமற்ற பேச்சு...
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?
சோர்வு, உலகத்தை வெறுப்பது , தப்பை தட்டிகேட்பது , சோம்பல்..இப்படி நிறைய
29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?தாய்லாந்து- காஞ்சனாபுரி படகு வீடும் அறுவியும்...30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?அன்பா அதே சமயம் நியாயத்தோடு...இரக்கத்தோடு கூடிய கண்டிப்பு..31.கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?அனேகமா அப்படி ஏதுமில்லை..
அவர் இருக்கும்போது செய்யதான் நிறைய இருக்கு...
பெரியவருக்கு பாடம் நடத்தும்போது தலையில் உட்காரும் சின்னவரை வெளியே கூட்டி செல்லணும்..
எனக்கு உடம்பு சரியில்லாத சமயமாவது கதை சொல்லி பாட்டு பாடி தூங்க பண்ணனும்...
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.
நல்ல மனிதர்கள், நல்லெண்ணங்களோடு பயணித்தால் வாழ்வு சுகமே...அன்பை பெறுவதை விட கொடுக்க தெரிந்தவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்...வாழ்வை நேசிக்க அறிவாளியா இருக்க அவசியமில்லை...
அதிர்ஷ்டசாலிகளுக்கே இவ்வுலகம்...
அடுத்த ஜென்மத்திலாவது பெண்ணா பிறக்க கூடாது..அதுவும் தமிழ்நாட்டில்..:))))
பிரச்னையில்லாத நாட்டில் , ஊரில், வீட்டில் பிறந்ததால் மட்டும் வாழ்வு சுவையா?..இல்லவே இல்லை...
சமத்துவமில்லாத இவ்வுலகம் தேவையேயில்லை. இதற்கு பதில் மிருகமா பிறக்கலாம்..
3 comments:
மனம் நிறைந்த பதில்கள்! நான் அழைக்கும் முன்பே பூங்ஸ் அக்கா கூப்பிட்டுட்டாங்க!
நன்றி தம்பி.. அலுவல் அவசரத்தில் எழுதி தள்ளிட்டேன்...
வணக்கம் சாந்தி ..
ரொம்ப அழகா.. அருமையா சொல்லி இருக்கீங்க..
ஆயினும் இறக்கம், அறுவி போன்றவைகளில் ர, ற வுக்கான கவனம் தேவை.
ஃ : இரக்கம், அருவி.
Post a Comment