Friday, February 22, 2008
லேசா லேசா பாகம் 9
இதோ கதைச் சுருக்கம்!
ரகு, மது, வேந்தன் என மூவர்.ரகு மதுவைக் காதலித்து மனைவியாக்கி, இப்போது விவாக ரத்து கோரும் நிலையில்! லண்டனில் இருந்து திரும்பிய, வேந்தன் கம்பெனியில் பணி புரியும் மதுவுக்கு இது அதிர்ச்சி அளிக்கிறது.வெள்ளைக்காரப் பெண்ணை மணந்து முறிவு பெற்று, இப்போது பெண்களை வெறுக்கும் வேந்தன்மது, ரகு இவர்களது காதல் நினைவுகள் இந்த பதிவுகளில்!தனக்குக் கீழே பனிபுரியும் மதுவைத் தான் மணக்க விரும்புவதாக ரகு சொல்ல, குழம்பிய நிலையில் இருக்கும் மதுவைப் பெண் பார்க்க ரகு வருகிறான், மதுவின் தந்தை, அவர்கள் குடும்ப டாக்டர் துணையுடன்! .ரகுவின் அம்மா விசாலம், மதுவையே பெண்ணாகக் கருதும் ஒருவர்,மதுவை திருமணத்துக்கு ரகுவிடம் பேசி மனதை மாற்ற அவன் கைபற்ற அவனோ விலக, பழைய ஞாபகம் சுவைக்கிறது.. அவன் கரம் பற்றிய முதல் பொழுதுகள்..மன்மத காதலுக்கு போட்ட விதைகள்... முன் 'ஜொள்ளிட்ட' முனீஸ் இவர்களும் ஒரு ஓரத்தில்... இக்கதையில்! இனி கதையை மேலே படியுங்கள்!:))))))))))).
பாகம் - 9
வேந்தன் மதுவைப்பற்றிய குழப்பத்திலேயே இருந்தான்... அவளை அப்பா சொல்வதுபோல்
உண்மையாக புரிந்துகொள்ளணும்.... பார்க்கலாம் திருப்பூர் ஆலை விஷயத்தில் என்ன சொல்கிறாள்
என்று... ஏற்கனவே அதை மூடிவிட்டு வேறு நல்ல தொழில் ஆரம்பிக்க புராஜக்ட் எல்லாம் ரெடி..
அப்பாவிடமும் விளக்கம் கொடுத்து சம்மதமும் அனேகமாக பெற்றாலும் , இறுதி கூட்டம் வரும் புதனன்று
கூட்டம் ஆரம்பித்தது.. எல்லாரும் பேசி முடித்ததும் வழக்கம்போல் பெரியவர்
" உன் கருத்து என்னம்மா..?.."
" எனக்கு முழு சம்மதம் , அந்த தொழிற்சாலையை மூடுவதற்கு அய்யா..."
வேந்தனுக்கு அதிர்ச்சி... அவளை மடக்கிவிடலாம் என்று எண்ணியவருக்கு ..
" அந்த பகுதி மக்கள் இந்த களிவு நீராலும், காற்றும் மாசு பட்டுள்ளது.. மூடுவேதே நல்லது..."
வேந்தனுக்கு ஒண்ணும் புரியவில்லை,, அவள் சிந்தனையே வேறாக இருக்கிறதே..
முதல் முறையாக அவள் மேல் மரியாதை வருகிறது...அவளும் அப்பாவும் சாதாரணமாக சிரித்துக்கொண்டு
வெளியே செல்கிறார்கள்.... அப்பாவிடமும் அவளைப்பற்றி சொன்னதும் மத்த எஸ்டேட்களையும் அவளுடன் சேர்ந்து
பார்த்து அவளிடமிருந்து விவரம் கற்றுகொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.
அடுத்த வாரமே அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார் வேந்தன்...மனதுக்குள் மது நினைப்பு..
--------------------------------------------------------------------------------------------------------------------------
அலுவலகத்துக்கு வந்த பின் எப்போதும் வீடு பற்றிய நினைப்பே இருக்காது மதுவுக்கு.. அன்று
மண்டையை குழப்புகிறது ரகுவின் நேற்றைய செயல்...இருந்தாலும் நாம் தாழ்ந்து போகலாம்,..
என் மேலும் நிறய தப்பு இருக்குதே.. ஒரு மனைவியின் கடமையை நான் முழுதாக செய்யவில்லையே..
அவன் கோபம் நியாமானதே.. பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கையில் தொலைபேசி அழைக்கிறது..
" நான் ரகு பேசுரேன்.."
" சொல்லுங்கப்பா.." சந்தோஷமாக...
" இன்னிக்கு சாயங்காலம் வக்கீல் அலுவலகத்தில் 3 மணிக்கு சந்திக்கணும்..."
" எதுக்கு ரகு.."
" நம்ம பிரிவு பற்றி முடிவெடுக்க..."
" ........."
" என்ன வர முடியுமா , இல்ல.."
" ரகு.. நான் சொல்ரத ..."
" ஜஸ்ட் டெல் மி, முடியுமா, முடியாதா..."
" சரி.ப்...பா.."
பிரமை பிடித்தவள் போல் மது தலையில் கைவத்து அப்படியே மேஜையில் தலை சாய்த்தாள்..
" மே ஐ கம் இன்.." வேந்தன்...
" சார்.. நீங்க.. ..சொன்னீங்கன்னா நானே வந்திருப்பேனே..."
" நன்றி. இன்றைய முடிவுக்கு.. அடுத்த வாரம் எஸ்டேட் போக நேரமுண்டா உங்களுக்கு..."
" போகலாமே..."
" நன்றி வருகிறேன்..."
எல்லாவற்றையும் மூடிவிட்டு, யோசிக்கிறாள்... ரகு என் மேல ஏன் இவ்வளவு கோவம்?..
சரி என்னை விவாகரத்து பண்ணிவிட்டு என்ன பண்ணப்போரீங்க?.. மறுமணமா?... எப்படி முடியும் ரகு....
என்னை உங்கள் மனதிலிருந்து நீக்குவது அவ்வளவு எளிதா...?. இல்லை நடிக்கிறீர்களா?..
ஏன் இவ்வளவு அவசரம், அனக்கேதும் அவகாசம் குடுக்காமல், என்னிடம் பேச விரும்பாமல்..
என்னை தண்டிப்பது மட்டுமே உங்கள் நோக்கமாகத் தெரியுது.. கண்டிப்பா இன்னொரு திருமணத்துக்கு
நீங்கள் தயாரில்லை என்று எனக்குத் தெரியாதா?. சிரிப்புதான் வருகிறது.. ஆனாலும் நான் என்ன செய்தாலும்
உங்கள் வேகம் அதிகரிக்குமே தவிர குறையாது...
முள் மேல் விழுந்த சேலை, மெதுவாகத்தான்
எடுக்கணும்.. யாருக்கும் காயமின்றி.. ஆனால் நான் மிகவும் தளர்வாய் ஆகிவிடுகிறேனே, உம்
ஆதரவின்றி.. என்னைத்தவிர்ப்பது தாங்க முடியாத கொடுமையாக உள்ளதே.. யாரிடமும் பகிர கூட முடியாதே..
எல்லாரும் உன்னைத்திட்டி உன் கோவந்தான் அதிகரிக்கும் என்மேல்.. மனதுக்குள்ளேயே வைப்பது அதனினும் கொடுமை..
" நிஷா, நான் சொல்லப்போர விஷயத்தை கேட்டுக்கோ, ஆனா யாரிடமும் , முக்கியமா, எங்க வீட்டுக்கும்,
அவர் வீட்டுக்கும் தெரியக்கூடாது...மனச்சுமை இறக்கத்தான் உன்னிடம்...நீ உடனே பயப்படாதே .. சரியா?.."
" அய்யோ என்ன விஷயம் னு சொல்லு சீக்கிரம்... இப்பவே பயமாயிருக்கு.."
" ரகு என்னை பிரிய விரும்புகிறார்..."
" பைத்தியாமா என்ன அவருக்கு.. நான் பேசுகிறேன் இப்பவே...விளையாடுவாராயிருக்கும்..."
" சொன்னேன்ன்ல, அவசரப்படாதே.... பார்க்கலாம் கடவுள் சித்தம் என்னன்னு..."
" எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிட்டு..." அழுகிறாள்..நிஷா.
" நீ ஏன் அழுகிறாய்.. ச்ச். நீ எனக்கு தைரியம் சொல்லுவாய் என்று நினைத்தால்... மொதல்ல
அழுரதை நிப்பாட்டு... எனக்கும் அழுகைவருது.........."
"........."
"..........."
" சரி பெரியவ என்ன பண்ணுகினறாள்..." பேச்சை மாற்றிவிட்டு, மது சாப்பிட பிடிக்காமல் காஃபி
மட்டும் குடித்துவிட்டு அலுவலக வேலைகளில் மூழ்குகிறாள்..
--------------------------------------------------------------------------------------------------------------------------
மாலை 3..00 மணி..
ரகுவும் மதுவும், ஒரே அறையில் காத்திருக்கிறார்கள்...ரகுவாகப்பேசட்டும்.. என்று மது.. அவளைப்
பார்த்தாலே பேசவேண்டிவரும் என்று செய்திதாளில் ரகு...
என்ன ஒரு அசிங்கமான சூழல்.... வக்கீல் அழைத்து விசாரித்து 6 மாதமாவது இருவரும் தனியாக
இருக்குமாறு சொல்கிறார்... இருவரும் விரும்பிதானே பிரிகிறீர்கள் என்று கேட்கிறார்..
இல்லை என்று சொல்லகூட மதுவுக்கு முடியவில்லை.. ரகு அங்கேயே கத்த ஆரம்பித்துவிடுவான்..
கோவத்தின் உச்சியிலிருக்கான்... இப்போதைக்கு அவன் வழி சென்று நிதானமாக செயல்படுவோம்
என்று பிரம்மையில் எல்லாவற்றுக்கும் தலையாட்டுகிறாள்... அவளுக்கு கவலையெல்லாம் எப்படி விசாலம் அம்மாவிடமும்
பிள்ளைகளிடமும் மறைப்பது என்பதுதான்..
இப்போது முதல்முறையாக கோவம் வருகிறது அவளுக்கு
அவளின் இயலாமை குறித்து...எல்லா பேப்பரிலும் வெறியோடு கண்ணீரோடு உஅதட்டைக்கடித்துக்கொண்டு
கையெழுத்து போட்டுவிட்டு ரகுவை திரும்பி கூட பார்க்காமல் வெளியேற,
" மது .. .."
"...."
" மது... இப்ப பேசலாம்....."
" இனி என்ன பேச ரகு...சந்தோஷம்தானே...." கண்ணீருடன் சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு
காரில் ஏறி செல்கிறாள்....
காரில் குலுங்கி குலுங்கி முதல் முறையாக அழுகிறாள்.......
---------------------------------------------------------------------------------------------
மறுபடியும் அலுவலகம் வந்தவளை வேந்தன் தொலைபேசியில்..
" இன்று முக்கிய ஆலோசனை.உள்ளது... எங்கள் வீட்டில் இரவு விருந்தில் கலந்து கொள்ள முடியுமா?"
---------------------------------------------------------------------------தொடரும்........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment