Thursday, February 21, 2008

லேசா லேசா நீயில்லாமல் பாகம் - 8
================================


வேந்தன் அப்பாவின் அழைப்பின் பேரில் அவரைக் காணச் செல்கிறான்..


" என்னப்பா உன் மலைப்பயணமெல்லாம் சிறப்புதானே..?"

" ஆமாப்பா. உங்கள் உடல்நலம்...?"

" எனக்கென்னப்பா.. எப்பவும் இளமைதான் மனதில்.. உடம்புக்கென்ன . எனக்கு கவலையெல்லாம் உன்னைப்பற்றிதான்..

நீ ஏன் இன்னொரு திருமணம் செய்து குழந்தை, குட்டின்னு, நல்லமுறையில் இருக்கலாமே...உன் தனிமை எனக்கு
பயமளிக்கிறதே..."


" ஹாஹாஹா. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. எனக்கு நல்ல பொழுதுபோக்குகள், புத்தகங்கள், என்று நிறய உள்ளதே.

இன்னொரு திருமணம் பற்றி பேச்சுக்கே இடமில்லை அப்பா.. அது குறித்து நீங்கள் வருந்தாதீர்கள், தயவுசெய்து அது பற்றி
பேசவும் வேண்டாமே....என்னுடைய வாழ்க்கை இனி இந்த தொழில் முன்னேற்றத்தில்தான்...திருப்தியும் கூட...
ஆனால் என்ன என் அலுவல் இந்த மதுகோட இருப்பது மட்டுமே கொஞ்சம் சிக்கலாய் உள்ளது"சிரித்துக்கொண்டே கூற,


" இல்லை இல்லை, உனக்கு அவளைப்பற்றி அதிகம் தெரியாது... அவளைவிட புத்திசாலிகளை பார்த்திருப்பாய்.. மறுக்கவில்லை..
ஆனால் அவளுடைய மனிதத்தன்மையுள்ள செயல்பாடுகளும், கடின உழைப்பும், அனுசரித்துப்போகும் குணமும், வித்தியாசமானவை .."


" நீ வேணா பாரேன், கொஞ்ச நாளில் உனக்கும் புரியும்..."

" ..ம்...சரி..."என்று மட்டும் தலையசைத்தான்..." அப்பா வயதானவர் .. திருத்த முடியாது என்று நினைத்துக்கொண்டு..

இருவருமே கொஞ்சம் கனத்த மனதுடன் விடைபெறுகிறார்கள்..
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ரகுவின் முடிவு விளையாட்டாகவே இருக்கும் , நாம் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டாள்.
என்ன இருந்தாலும் என் கணவ்ர் தானே, எத்தனை எத்தனை பிரச்சனைகளை கடந்து வந்துள்ளோம் இருவரும்... எத்தனை முறை ஆறுதலாய்
தந்தையாய் , அண்ணனாய், நல்ல தோழனாய் துணை இருந்தான் ரகு... தன் பிரசவத்தின் போது ஒரு தாய்க்கும் மேலாக பாசம் காட்டி பார்த்தாரே..
என்ன ரகுவுக்கு குழந்தை போல் கோவம் வரும் அடிக்கடி.. அதுவும் பின் சரியாகிவிடும்...சகஜம் தானே...


இன்று நாமே சென்று வலிய
அவனுடைய பிரச்சனை பற்றி கேட்க வேண்டும்... அலுவலகத்தில் மலையளவு பிரச்சனை வந்த போது சமாளிக்கவில்லையா?..
ரகுவின் தங்கை, திருமண பிரச்சனை எவ்வளவு பெரியது.. நடத்தினோமே...


தனக்குத்தானே தைரியப்படுத்திக்கொண்டு, கடவுளிடம் வேண்டிக்கொண்டு
அன்று இரவு படுக்குமுன் பேசிட தயாரானாள்..


ரகு கணினியில் மும்மரமாயிருந்தான்...

எப்படி அணுகுவது , ஆரம்பிப்பது என்று தயக்கம்.. பொறுத்து பொறுத்து அறைமணிநேரமாகுது... இதயம் வேகமாகத்துடிக்குது...
தன்மேல் நம்பிக்கை குறையுது.. பயம் வருது..


இறுதியில் குழந்தைபோல் ஆகுது மனம்... மெதுவாக அவனருகில் சென்று அவன் கையை மட்டும் பிடிக்க அவளைப்பாராமலே கையை மட்டும் தருகிறான்..

முதல் தோல்வியாய் படுகிறது அவளுக்கு...

10 நிமிடத்துக்குப்பின் அவன் கையை தானாகவே விடுவித்துக்கொள்கிறான்...
இரண்டாவது தோல்வி..


இருந்தாலும் மனம் தளராமல்,

" ரகு நாம் இப்போது பேசலாமா , சிறிது நேரம்.."

".." பதிலில்லை..

" ரகு..."

" ம்.."

" எனக்காக கொஞ்ச நேரம்..."

" எனக்கு நேரமில்லை... என்னைத்தொந்தரவு செய்யாதே தயவுசெய்து...."
கடினமாக...வருகிறது...

ஏமாற்றத்தில் அதிர்ந்துதான் போகிறாள்....என்னுடைய உரிமைகள் இழக்கின்றேனே ...சுயபச்சாதபம் வருமுன் தூங்கிவிடலாம்
என்றெண்ணி கீதையில் இரண்டு வரி வாசித்துவிட்டு படுக்கச்செல்கிறாள்...இதே கைகள் முதன்முதலில் பற்றியபோது..


---------------------------------------------------------------------------------------------------------------------------------
ரகு நிச்சயம் முடிந்ததும் கீதாம்மாவிடம் மதுவைப்பற்றி மேலும் தெரிந்துகொண்டு, அவள் மேலே என்ன செய்யவேண்டும் என்று
பேசிவிட்டு, தினமும் சாயங்காலம் தான் கொண்டுவந்துவிடுவதற்கு சம்மதம் பெறுகிறான்...


அடுத்த நாள் அலுவலகத்தில் இருவரும் சந்திக்கும் போது இருவருக்குமே பேச வரவில்லை... முதல் நாளே ஒருவழியாக சமாதனாமாகிவிட்டாள்
மது.. குறை என்று சொல்ல ஒன்றுமேயில்லை.. எல்லோருக்கும் சந்தோஷம்..


தன் ஒருத்தியின் பிடிவாதத்தை விட்டுக்கொடுப்பதில் தவறில்லை..
டாக்டரிடம் மட்டும் நேரம் கிடைத்தால் சண்டைபிடிக்கணும் என்று சிரித்துக்கொண்டாள்..


ரகுவிடம் தொலைபேசியில் தயவுசெய்து அலுவலகத்தில் யாருக்கும் சீக்கிரம் தெரியவேண்டாம் என்று கேட்டுக்கொண்டாள்..

"அப்படின்னா நீ முனீஸ் கிட்ட பேசாதே " என்று கண்டிஷன் போடுகிறான் ரகு... சிரித்துக்கொண்டார்கள் இருவரும்...

சாயங்காலம் மிக மகிழ்ச்சியாக அவளை அழைத்துக்கொண்டு செல்லும்போதும் மெளனமே நிலவ...எப்படி ஆரம்பிக்க,

என்ன பேச .. தெரியவில்லை இருவருக்கும்... வெட்கம் ..

" காஃபி ஷாப் போகலாமா..?.."

" வேண்டாம் சார்.. அம்மா தேடுவாங்க..."

" சாரா..?.. என்ன இது.. ரகுன்னு சொல்லு.."

" எனக்கு வராது.."

" வரணும்.." அழுத்தமாக...

" வேண்டாம் .. சார்.. அப்புரம் சொல்ரேனே.."

" நொ. இப்ப சொல்லணும்.."

" சொ.. ல்......லு . கால் மி ரகு.."

" அப்போ நான் இறங்கி போயிடுவேன்.."

" அப்பா . இதுக்கொண்ணும் குறைவில்லை.."

" ஒகே. ஒகே.. . ஆனா இனி ரகுன்னு தான் கூப்பிடணும் சரியா.."

தலையாட்டிவைக்கிறாள்..அதற்குள் அவள் வீடு வந்ததும்.. கை நீட்டுகிறான் ரகு..

பதரித்தான் போகிறாள்..அப்படியே இருக்கையில் சாய்கிறாள்..பார்வை வெளியே பார்த்துக்கொண்டு..

என்ன இது இப்படி கஷ்டப்படுத்துகிறானே....

" ..ம் .." மறுபடியும் இவள் கை கேட்கிறான்...

பெண்ணின் தயக்கம் , பயம் அறியாயோ ரகு,.. அதுவும் என் வீட்டருகில்...

" என் வீடு வந்துவிட்டது.. நான் போகணும்..."

" தெரியும்.. கைகொடுத்தா என்ன குறை...சீக்கிரம்...இல்லாட்டி போக மு..டி..யா..து..."

என்னவோ செய்கிறது பலமிழந்து..." நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.." வெளியில் பார்த்துக்கொண்டு,
அவனைப்பார்க்க முடியாமல். முதன்முறையாக மென்மையாக அவள் கரம் பற்றுகின்றான் ரகு...


அவன் விரல்கள் , கண்கள் , ஆயிரம் கவிதைகள் , கதைகள் சொல்லுது அவனின் காதல்...

அவளின் கண்களிலோ கண்ணீர்.. போதும் அவளை இனிமேலும் தர்மசங்கடத்தில் ஆளாக்கக்குடாது என்று..

விடுதலை கொடுக்கிறான்....இப்போது அவளுக்கு விட மனமில்லை... இவனல்லவோ என் துணைவன்...

மென்மையானவன்...முதன் முறையாக காதல்வயப்படுகிறாள் மது...

-----------------------------------------------------------------------------தொடரும்......


No comments: