பெத்த கடன்.
உன் பிஞ்சு பாதம் பட்டு என் நெஞ்சு நிறைந்தது அன்று.
என் அஞ்சு பேரப்பிள்ளைகளின் பாதம் வேண்டி நெஞ்சு வலிக்குது இன்று.
என் கல்லறையிலாவது வந்து ஏறிவிளையாடச் சொல்,காத்திருப்பேன் என்றும்!.
என் அஞ்சு பேரப்பிள்ளைகளின் பாதம் வேண்டி நெஞ்சு வலிக்குது இன்று.
என் கல்லறையிலாவது வந்து ஏறிவிளையாடச் சொல்,காத்திருப்பேன் என்றும்!.
2 comments:
On 10/19/07, Sivasubramanian Gopalakrishnan sivanannamalai@gmail.com wrote:
பேரக்குழந்தைகளின்
பாத ஸ்பரிசத்திற்கு ஏங்கும்
என் அன்னையிடம் சொல்லிவிடு விதியே....
அன்று
அவள் அன்னை கூட
என் பாத ஸ்பரிசத்திற்கு
ஏங்கித்தான் போயிருந்தாளென்று....
இன்று
உனக்கிருக்கும் பாசந்தான்
அதன் ஏமாற்றந்தான்
அவளுக்கும் இருந்திருக்குமென்று...
பெத்தவங்கிட்ட எல்லாம் கடன் வைக்காதீங்கப்பா...
ரெண்டு கவிதையுமே பிரமாதமா இருக்கு..
V Ramesh
Post a Comment