Friday, June 17, 2011
குழந்தைகளா அடிமைகளா , முதலீடுகளா ?..
வாழ்க்கை எனப்து எதற்கு?.. மிக சந்தோஷமாக வாழணும் என்று இல்லாவிட்டாலும் ஓரளவு திருப்தியாக வாழணும்..
முடியுமா?.. நிச்சயமாக முடியும்.?.
எப்படி.?.. ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அளவோடு வைத்துக்கொண்டோமானால்..
ஆனால் என்ன ஆகியுள்ளது?.. அளவுகோள்களே மாறிவிட்டது...
ஆசை பேராசையாக மாறியதை அறியவில்லை..
எதிர்பார்ப்புகள் திணிப்புகளாக மாறியதையும் அறியவில்லை..
சமீபத்தில் படித்திருப்பீர்கள் சரண்யா பார்த்தசாரதி பற்றி செய்திகளில்..
ஒரு காதலை ஏற்க முடியாமல் மருமகனை கொலை செய்த பெண்ணின் பெற்றோர்கள்..
இத்தனைக்கும் பெண்ணின் தாய் ஒரு ஆசிரியை..நம்பவே முடியாத செயல்..
தான் கொலை செய்வோம் என என்ணியிருப்பார்களா?..நிச்சயம் மாட்டார்கள்..
நல்ல ஒரு குடும்பமாகத்தான் இருந்திருக்கும்.. கஷ்டப்பட்டே குழந்தைகளை வளர்த்திருப்பார்கள்..
கொஞ்சி , கெஞ்சி நம்மைப்போலவே வளர்த்திருப்பார்கள்..
பணம் கொடுத்தே மெடிக்கல் சீட் வாங்கியிருப்பார்கள்.. குழந்தை படிக்க எல்லா உதவியும் தியாகமும் செய்திருப்பார்கள்..
ஆனால் எங்கே தவறு நடந்தது?..
அன்பு வைப்பதாக சொல்லி நம்மையறியாமலேயே அடிமைத்தனத்தை புகுத்துவதை நாமே அறிவதில்லைதான் சில சமயம்..
ஏனெனில் சுற்றமும் சூழலும் , நமக்கு அப்படி அமைகிறது.,.
மெடிக்கலோ , பொறியியலோ படித்தால்தான் வாழ்க்கை இனிமையாக அமையும் என எண்ண வைக்கப்படுகிறோம்..
இப்படி விழுந்து விழுந்து படிக்கும் குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்துள்ளீர்களா.?
எல்லாத்துக்கும் டியூஷன், அல்லது சிறப்பு வகுப்புகள் என நேர இடைவெளி இல்லாமல் படும்பாடு..
இதில் பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்வதால் அன்பா ஆதரவா உட்கார்ந்து பேசி குழந்தைகளிடம் மனம் திறந்து பேசக்கூட நேரமில்லை
இந்த வேகமான உலகில்..அதோடு நம் விருப்பப்படி பாடம் எடுத்து படிக்கும்போது வேண்டா வெறுப்பாகவும், பெற்றோரை எதிர்த்து பேச முடியாத மன அழுத்தமும்..
மொத்தத்தில் நம் பெருமைக்காக குழந்தைகளை ஒரு முதலீடாக ஆக்கிக்கொண்டு வருகிறோம்..
படிக்கவேண்டிய வயதில் படிக்கணும்தான்.. மறுப்பில்லை.. ஆனால் அதுவே திணிப்பாக இருந்திடக்கூடாது..
இதில் மட்டுமல்ல , மத திணிப்பும், கலாச்சார திணிப்பும், இன்னும் பலவித பழக்கவழக்க திணிப்பையுமே நாம் செய்கிறோம் சிந்திக்க விடாமல்..
இத்தகைய குழந்தைகள் வெளியில் பாசம் கிடைத்தால் அதையே காதல் என நினைத்து தவறிவிட வாய்ப்புகள் அதிகம்..
வருகிற சினிமா எல்லாமே காதலைத்தான் சொல்கிறது.. தொலைக்காட்சியிலும் அதே..
பருவ வயது வந்ததும் காதல் வயப்படலாம் என நாம் அறியாததா?.. அதை மறைத்துத்தான் வைக்க இயலுமா?
அடிமைகளாக வளர்க்கப்படும் குழந்தைகள் , தனக்கான மரியாதையும் அங்கீகாரமும் வெளியே கிடைக்கும் பட்சத்தில் அதையே பெரிதாக
எண்ணுவதில்லை வியப்பில்லை..
இதேதான் திருமணம் தாண்டிய உறவுகளிலுமே காண்கிறோம்..
அடிமைத்தனமும், அதிகாரமும் இருக்குமிடமெல்லாம் இதே போல நடைபெற வாய்ப்புண்டு.. இது ஒரு சமூக பிரச்னையாக பார்க்கப்படவேண்டிய
விஷயம்..
வாலிப வயது வந்ததுமே பிள்ளைகளைன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும்.. எரிச்சல் வரும் ஹார்மோன் மாற்றங்களால். நாம் சொல்வது எதுவுமே பிடிக்காது. நமக்கோ கோபம் வரும்.. நாம் நல்லதுதானே சொல்கிறோம் , இதுவரை நம் பேச்சை கேட்ட பிள்ளை நம்மை மதிக்கலையோ என்ற பயமும் ஈகோவும் நமக்கு..
கொஞ்சம் விட்டுப்பிடிக்கவேண்டிய வயது.. சில குழந்தைகளுக்கு வீட்டை விட்டு தப்பிச்சா போதும் என்ற எண்ணம்.. ( வெளியே போய்
பார்த்தால்தான் தெரியும் வீட்டிலுள்ள சுகம் ) .
நாம் மட்டுமே வளர்க்கவில்லை குழந்தைகளை. புற சூழலுமே சேர்ந்துதான் அவர்களை நாலாபக்கமும் இழுக்கின்றது..
முரண்டு பிடிக்கும்போது விட்டுப்பிடித்தும் கண்டிப்பை கொஞ்சம் பொறுமையாகவும் எடுத்தாள வேண்டும்.
இங்கே சரண்யா விஷயத்தில் அவர் தன் காதலை சொன்னதும் அவசரம் அவசரமாக அமெரிக்க மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்ததாலேயே அவர்
உடனே திருமணம் செய்துள்ளார் பெற்றோர் சம்மதமின்றி..
இதே போல பெற்றோர் மிரட்டியதும் , பிளாக் மெயில் செய்ததும் , அவசரப்பட்டதுமாய் ஏகப்பட்ட கதைகளுண்டு..
ஏன் இந்த நிலைமை?..
ஆழுமைதான் காரணம்.. குழந்தை எனக்கு சொந்தம் என்ற எண்ணம்.. இது மிக தவறு..
என்னதான் நாம் பெற்றாலும் நம் குழந்தை என்றாலும் சொந்தம் கொண்டாடுவதிலும் ஒரு அளவு இருக்கிறது..
இதை கலீல் ஜிப்ரான் மிக அழகாக சொல்கிறார் பாருங்கள்..
“Your children are not your children.
They are the sons and daughters of Life’s longing for itself.
They come through you but not from you,
And though they are with you, and yet they belong not to you.
You may give them your love but not your thoughts,
For they have their own thoughts.
You may house their bodies but not their souls,
For their souls dwell in the house of tomorrow,
which you cannot visit, not even in your dreams.
ஆசை ஆசையாய் வளர்த்த மகள் இன்று அழுதபடி கண்ணீரில்.. அப்பாவோ சிறையில்..
சமீபத்தில் படித்திருப்போம் பஸ் விபத்து பற்றி.. அதில் திவ்யா என்ற பெண் நிச்சயதார்த்ததுக்காக சென்றவர்.. அந்த மகளையும் இழந்துவிட்டதே
அந்த குடும்பம்..
ஆனால் விபத்து என்றால் ஏற்கும் மனம் காதல் என்றால் கொலைவெறி வருவது ஏன்?.
ஏழை, பணக்காரன், சாதி, மதம் , இனம் என பல்வேறாக நம்மை நாமே பிரித்துக்கொண்டு கோழைகளாக வாழப்பழகியுள்ளோம்..
எது வந்தாலும் அதை ஒரு சேலஞ்சாக எடுத்து வாழப்பழகவில்லை.. அப்படி பழகியிருந்தால் இந்த வித்யாசங்களெல்லாம் எப்பவோ அழிந்து
போயிருக்குமே..
சக மனிதனை மனிதன் என்ற அளவுகோல் மட்டுமே கொண்டு நேசிக்க பழகியிருந்தா இத்தனை சுயநலமும் வெறித்தனமா பணம் சேர்க்கும் எண்ணமும் வந்திருக்காதே...
நானுமே திணிக்கப்பட்டே வளர்ந்தவள்தான்..( மதம் , சாதி, படிப்பு என ) .. இருப்பினும் இப்பதான் விபரங்கள் புரிய ஆரம்பித்தது..
என் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் தருவதோடு , பொறுப்புகளை மட்டும் சொல்லித்தருவதும், எல்லா செயலுக்குமான விளைவுகள் பற்றியும்
எடுத்து சொல்வதுமே என் கடமை.. மற்றவை அவர்கள் பொறுப்பு..
லண்டனில் 16 வயதானதும் தனியே அனுப்பிடுவார்களாம் குழந்தைகள் பொறுப்பெடுக்க பழகிக்கொள்ள..அச்சமூகமும் அவர்களுக்கான
பாதுகாப்பையும் , பொறுப்பையும், ஊக்கத்தையும் அளிக்கின்றது.. பாலியல் குறித்த பயம் இல்லை.. ஒரே இடத்தில் ஆணும் பெண்ணுமாய் சேர்ந்தே
தங்குகின்றார்கள்.. இருவரின் பிரச்னைகளையும் புரிந்து கொள்கிறார்கள்.. சமாளிக்க பழகுகின்றார்கள்..
காமம் குறித்த தெளிவான பார்வையும் பாலியல் புரிதலும் இருக்கின்றது..
ஆனால் நமக்கோ ஆயுசுக்கும் குழந்தை என்றே கொஞ்சிக்கொண்டும் , அடிமைப்படுத்திக்கொண்டும் இருக்கிறோம்..அவர்களை சுயமாக சிந்திக்க
விடாமல்..வாழ்நாளெல்லாம் கைதியாக்கி சுமை சுமக்க வைத்து?..
நமக்கு பிடித்தமில்லாத காரியத்தை செய்துவிட்டு சிக்கலில் மாட்டினால் , சில நேரம் தோல்வி அடையவும் வாய்ப்பு கொடுங்கள்.. அவர்கள்
அதிலிருந்து மீண்டு வரும்போது துணையாக , ஆறுதலாக இருங்கள்.. அப்படி வளர்க்கப்படும் குழந்தை எல்லா சிக்கலையும் சமாளிக்கும் ..
தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் னு சும்மாவா சொன்னாங்க.. நம்மைவிட பல விஷயம் தெரியுது இக்கால குழந்தைகளுக்கு..
நாம் யாருமே தவறே செய்யாதவர்கள் இல்லையே.. தவறிலிருந்தே பல பாடங்களை கற்கிறோம்..
வாழ்நாள் முழுதும் இறுதி மூச்சுவரை கற்றுக்கொண்டே இருக்கிறோம்..நமக்கு எல்லாம் தெரியும் என்ற பிரமையிலிருந்து விடுபடுவோம்..
நாமுமே குழந்தைகள் தான் சில நேரம்..
நம்மிடம் இருக்க போவது சில வருடங்களே அவர்கள்,.. சிறகு முளைத்ததும் பறந்துவிடுவார்கள்.. இந்த குறுகிய காலத்தை இனிமையாக கழிப்போம்..
மெல்ல மெல்ல நாமும் மாறி நம்மை சுற்றியுள்ள இந்த போலி சமூகத்தை மாற்றுவோம்..
நீண்டு விட்டது பதிவு.. பொறுமையாக படித்தமைக்கு நன்றிகள்..:)
இது தொடர்பான பதிவை படிக்க - http://www.vinavu.com/2011/06/14/chennai-murder/
(படம் : நன்றி கூகுள்.. அலுவல் வேளை பின்னூட்டம் தவிர்க்கவும்.. )
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
They come through you but not from you,
இதை நாம் புரிந்து கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை .நாம் வளர்த்தோம் ,நாம் படிக்க வைத்தோம் என்று நாம் எல்லாவற்றிலும் உரிமை கொண்டாட போய் இந்த விவகாரங்கள் .
எங்க நாட்டிலும் பிள்ளைகள் குறிப்பாக பெண் பிள்ளைகள் பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் நண்பர்களாகச் சேர்ந்து வீடு எடுத்துக்கொண்டு போய் விடுகிறார்கள்.
நம்ம வீட்டில் துரும்பையும் எடுக்காதவள் அங்கே தன்னுடைய முறை வரும்போது பாய்ஞ்சு பாய்ஞ்சு வேலை செய்வதைப் பார்க்கக் கண் கோடி வேணும்:-))))
எல்லாம் ஒரு அனுபவமும் வாழ்க்கைக்கு ஏற்ற கல்வியும்தான்! அப்படியாவது வீட்டு வேலை செய்யக் கற்றுக்கொள்ளட்டுமே!
இந்தியாவில் இந்த இரண்டுவருசத் தங்கலில் கவனிச்சது பிள்ளைகள் முதலீடுகள் என்பதே:(
நல்ல பதிவு!கலீல் கிப்ரானின் மேற்கோள் அருமை!
என் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் தருவதோடு , பொறுப்புகளை மட்டும் சொல்லித்தருவதும், எல்லா செயலுக்குமான விளைவுகள் பற்றியும் எடுத்து சொல்வதுமே என் கடமை.. மற்றவை அவர்கள் பொறுப்பு..
பொறுப்புள்ள அம்மாவாகிய உங்களுக்கு எந்து வாழ்த்துக்கள்
விரிவான அலசல் பயணமும் எண்ணங்களும் பெற்றோர்கள் ஒரு சிலரை தவிர அவர்களுக்கே தெரியாமல் அவர்களுடைய எண்ணங்களை திணிப்பது பெரும்பாலும் நடக்கிறது. ஆகையால் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்த்தல் அதிகமாய் போய்விடுகிறது. இரண்டாவதாக பொருளாதார ரீதியாக ஒருவரை ஒருவர் சார்ந்திருந்தலும் ஒரு காரணமாய் போலும் வாழ்த்துகள்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவா ? நல்ல பதிவு சகோதரி.
மருமகனைக் கொன்ற பெற்றோரின் பின்னணியில் பலர் இருக்கக் கூடும் என நினைக்கின்றேன். பொதுவாக இப்படியான சம்பவங்கள் கிராமப் புறங்களில் தான் நடந்தன.. அதற்கு காரணம் இறுக்கமான சமூக கட்டமைப்பு மற்றும் போதிய உலகறிவின்மை தான்.
ஆனால் நகர் புறத்தில் இருப்பவர்களும் இறங்கியுள்ளது வேதனை தருவதாக இருக்கின்றது - எந்தப் பெற்றோரும் தன் பெண்ணின் தாலியறுக்கத் துணிய மாட்டார்கள்.
குற்றங்கள் மீதான அச்சக் குறைவு, வறட்டுக் கௌரவம் எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்க சீரியல்களின் தாக்கம் நிறையவே இருக்கு !!!
இந்தக் கோணத்தில் யாரும் இன்னும் யோசிக்கவில்லை. ? ஆனால் சீரியல்களின் தாக்கமும், பொருளாதார சுதந்திரமும், சட்டை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற மனக் கற்பனையும் ஒருவகைக் காரணங்கள் தாஅன்.
வருகையும் கருத்தும் தந்த அனைவருக்கும் நன்றி..
---
//
நம்ம வீட்டில் துரும்பையும் எடுக்காதவள் அங்கே தன்னுடைய முறை வரும்போது பாய்ஞ்சு பாய்ஞ்சு வேலை செய்வதைப் பார்க்கக் கண் கோடி வேணும்:-))))//
ஆமா துளசிம்மா..:)
நாம் வளர்த்தோம் ,நாம் படிக்க வைத்தோம் என்று நாம் எல்லாவற்றிலும் உரிமை கொண்டாட போய் இந்த விவகாரங்கள் .//
ஆமாம் . ஆனால் நட்பாய் இருந்தால் பிரச்னையில்லை.
பொருளாதார ரீதியாக ஒருவரை ஒருவர் சார்ந்திருந்தலும் ஒரு காரணமாய் போலும்//
நீங்க சொல்வதும் சரிதான்.. பொருளாதார தன்னிறைவு இல்லாத அளவு தியாகமும் செய்வதுண்டு பெற்றோர்
// மொத்தத்தில் நம் பெருமைக்காக குழந்தைகளை ஒரு முதலீடாக ஆக்கிக்கொண்டு வருகிறோம்.. //
முற்றிலும் உண்மை...
// மத திணிப்பும், கலாச்சார திணிப்பும், இன்னும் பலவித பழக்கவழக்க திணிப்பையுமே நாம் செய்கிறோம் //
எதையும் திணித்தால் அது சிதறிவிடும் என்பதை அறியாதவர்கள்.
// குழந்தை எனக்கு சொந்தம் என்ற எண்ணம் //
பெற்றுவிடுவதாலும், வளர்த்துவிடுவதாலும் குழந்தைகள் பெற்றோருக்கு சொந்தமாகாது என்பதை பலர் உணரவேண்டும்.. நல்லதொரு பாயிண்ட் ...
// என் குழந்தைகளுக்கு முழு சுதந்திரம் தருவதோடு , பொறுப்புகளை மட்டும் சொல்லித்தருவதும், எல்லா செயலுக்குமான விளைவுகள் பற்றியும்
எடுத்து சொல்வதுமே என் கடமை //
உண்மை தான்.. நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமே ஒழிய ! அவர்களை முதுகில் சுமந்தபடி நாம் நீந்தக் கூடாது, ஏனெனில் சுமப்பவர் இல்லாத காலத்தில் மூழ்கிவிடுவார்கள் ...
// மெல்ல மெல்ல நாமும் மாறி நம்மை சுற்றியுள்ள இந்த போலி சமூகத்தை மாற்றுவோம்..
//
நிச்சயம் தடைகள் பல வந்தாலும் நாமும் மாறி நம்மை சுற்றியும் மாற்றங்களை உண்டுப் பண்ணுவோம். அருமையான ஒரு பதிவு
குற்றங்கள் மீதான அச்சக் குறைவு, வறட்டுக் கௌரவம் எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்க சீரியல்களின் தாக்கம் நிறையவே இருக்கு !!!//
கண்டிப்பா..பெண்களை இன்னும் முட்டாளாகவே ஆக்குது பல சீரியல்கள்..
அருவருப்பான குடும்ப சண்டைகள்..
நன்றி பூங்குழலி, தமிழ் கை , சென்னை பித்தன் ஐயா, இக்பால் செல்வன், தவறு , துளசிம்மா..
சீரியல்கள் நம்மை எப்பை ஆள்கொள்கின்றன என்பதை கொஞ்ச நாளாக அவதானித்தேன். எந்த சீரியலை நான் தொடர்ந்து பார்த்தேனோ அதே சீரியல் கதாப்பாத்திரங்கள் நம்மில் புகுந்து ஆட்டுவிக்கத் தொடங்குகின்றன. கொஞ்சம் நாள் சீரியலை மாற்றி நகைச்சுவை சீரியல்களைப் பார்த்ததும் அதே போல மாறியதையும் உணர்ந்தேன். டிவியும் சீரியல்களையும் நம்மால் விலக்க முடிவதில்லை.. அதனால் சீரியல்கள் தம்மை தாமே சுய பரிசோதனை செய்து நல்ல மனநிலையினை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களையும், கதைகளையும் தரவேண்டும். ஒரு பத்தாண்டுக்கு முன் இருந்த சீரியல்களில் இவ்வளவு வன்மம் இருந்தத்தாகத் தெரியவில்லை.
இப்போது எல்லாம் கொலை, கடத்தல், கள்ளக் காதல் , பழிவாங்குதல் என யதார்த்தங்களை தாண்டி போய்க் கொண்டு இருக்கு . குறிப்பாக சண் டிவி சீரியல்கள்
எந்த சீரியலை நான் தொடர்ந்து பார்த்தேனோ அதே சீரியல் கதாப்பாத்திரங்கள் நம்மில் புகுந்து ஆட்டுவிக்கத் தொடங்குகின்றன. //
மிக சரி..
நான் தொலைக்காட்சி கூட பார்ப்பதில்லை..
சினிமா பார்ப்பதில்லை..
செய்திகள் மட்டுமே. அல்லது ஸ்போர்ட்ஸ், நகைச்சுவை..
ஏன் பதிவுகளிலும் 100 ல் 5 மட்டுமே படிக்கும்படி இருக்கின்றது என் ஆர்வத்துக்கேற்ப.
பகுத்தறிவில்லாத பதிவுகளை படிக்க [படிக்க கோபமே வருது..:)
90 % சதவீதம் பேர் அங்கீகாரத்துக்காக எழுதுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.. அதனால் பல குப்பைகள்..
பதிவர் சந்திப்புகள் பற்றியும் எழுதணும்னு நினைத்தேன்..
நல்லவிஷயம் இருக்கு மறுப்பில்லை.. ஆனால் வக்கிரமா , ஆபாசமா, எழுதுபவனெல்லாம் நல்லவனாக அங்கீகரிக்கப்படுவது இந்த சந்திப்புகளின் சாபக்கேடு..:)
தமிழ் தெரிந்தா போதும் என்ன வேணா எழுதலாம் னு ஒரு பொறுப்பில்லாம எழுதுபவனெல்லாம் இன்று சந்திப்பில் பெரிய ஆள்..
நாடு முன்னேறுமா பின்னடைவா?..
இப்படியே போனா , சினிமா தொலைக்காட்சி மட்டுமல்ல பதிவுலகிலும் சமூக விரோத கும்பலின் ஆக்ரமிப்பு அதிகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை..
சமூக பார்வையோடு எழுதும் பதிவுகள் மிக குறைவு..
ஒரு பெண் பதிவர் எழுதுறார் திருமணத்துக்கு [பின் கணவன் குடித்தால் முழு காரணமும் மனைவியாம்..
என்ன ஒரு முட்டாள்தனமான கருத்து..
ஏன் னா ஆணிடமிருந்து பாராட்டு பெற இப்படி எழுதுவது.. இப்படி உண்மைக்கு மாறாக எழுதுபவர்கள் இங்கே கொண்டாடப்படுவார்கள்.. ஏன்னா 90 % அப்படியானவர்களே இங்கே..:)
அரசு டாஸ்மாக் வைத்து கூவி கூவி அழைக்க்ம் அவலம் தெரியல.. குடியால் சீரழியும் குடும்பம் தெரியல, குடும்ப பிரச்னைகள் பற்றி எந்த ஞானமுமில்லை..
எடுத்தேன் கவிழ்த்தேன் னு எழுதுவது.. அதை தட்டிக்கேட்காமல் ஆதரிப்பது என அருவருப்புகள் தொடருது..
சில சமூக குழுமம் னு சொல்லிட்டு ஆபாச பதிவெழுதுபவனையெல்லாம் பேட்டி கண்டு போட்டு ஹிட்ஸ் ஏற்றுவதிலேயே குறியாக இருக்கும்போது எங்ங்அனம் முன்னேற.. கூட்டம் வேணா சேர்க்கலாம் இந்த 90% ஆதரவோடு..
:)
//மொத்தத்தில் நம் பெருமைக்காக குழந்தைகளை ஒரு முதலீடாக ஆக்கிக்கொண்டு வருகிறோம்..//
இது தான் உண்மை.. இப்போது குழந்தைகளுக்காக நடத்தப்படும் டீவி நிகழ்ச்சிகள் அதற்கு உதாரணம்.. ):
வாங்க நாடோடி . சரியா சொன்னீங்க..
// நான் தொலைக்காட்சி கூட பார்ப்பதில்லை..
சினிமா பார்ப்பதில்லை..
செய்திகள் மட்டுமே. அல்லது ஸ்போர்ட்ஸ், நகைச்சுவை..
ஏன் பதிவுகளிலும் 100 ல் 5 மட்டுமே படிக்கும்படி இருக்கின்றது என் ஆர்வத்துக்கேற்ப.
பகுத்தறிவில்லாத பதிவுகளை படிக்க [படிக்க கோபமே வருது..:) //
உண்மை தான் சகோ. ஆனால் சினிமா பார்ப்பதை நிறுத்த வேண்டாம் .. தமிழில் சரி மலையாளத்தில் சரி.. இன்னும் பற்பல மொழிகளில் அருமையான படங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.. அவற்றைப் பார்த்து உள்வாங்கிக் கொள்வது மிகவும் அவசியம் என நினைக்கின்றேன். பற்பல படங்களை நான் பார்ப்பதுண்டு, ஆனால் பதிவில் எழுதுவதில்லை. அவற்றையும் எழுத வேண்டும் ஏனெனில்..
உலக சினிமா எழுதும் பலரும் பதிவுலகில் - காமம் சார் சினிமாவைத் தாண்டு வேறொன்றையும் பார்ப்பதும் இல்லை, எழுதுவதும் இல்லை. சென்னையில் நடக்கும் உலக சினிமா திரையிடலில் கூட தோல் தெறியும் சினிமாவுக்கே பலரும் வருவார்கள் ... மனம் சார்ந்த சினிமாவைப் பார்ப்போர் குறைவு தான்
நிச்சயம் தமிழ் மட்டுமல்ல அனைத்து மொழி வலைப்பதிவுகளிலும் 90 சதவீதம் குப்பையே.. ஆனால் நல்ல பதிவுகளை திரட்டி தொகுத்து வகைப் பிரித்துக் கொடுக்கும் முயற்சியை செய்தால் நல்லாருக்கும்.. அது சாத்தியம் குறைவு தான் ... இருந்தாலும் நல்லப் பதிவுகள் குப்பை மேட்டினில் மூடிப் போய் விடக் கூடாது ...
சினிமா, ஆபாசம் எழுதுவோரையும் பின் நவீனத்துவ வாதிகளின் அலப்பறையும் தாங்க முடியவில்லை... என்ன செய்ய சகித்து கொண்டு தான் போக வேண்டும்
// திருமணத்துக்கு [பின் கணவன் குடித்தால் முழு காரணமும் மனைவியாம் //
யாரந்த புதுமை ( அடிமை ) பெண் ... பின்நவீனத்துவம் மிளிர்கின்றது.. இன்னொருத்தர் எழுதினார் - மலேசியாவில் பெண்கள் கொத்தடிமையாக இருக்க ( சில பினநவீனத்துவ ஊதுகுழல்கள் ) விரும்பும் செய்திவை வைத்துக் கொண்டு நல்ல கலாச்சாரமான பெண்ணுக்கு இலக்கணம் என.. எப்படி இப்படி யோசிக்க முடியுது என எனக்குத் தெரியவில்லை ? :(
உண்மை தான் சகோதரி ... ஆபாசம் விற்பனையாகும் .. இந்தியர்களின் ஜீன்களில் அது நன்றாகவே பதியப்பட்டுள்ளது .... சிந்திக்க வேண்டியதொரு ஒன்று !!!
கணுக்காலைப் பார்க்காதவனுக்கு முழங்காலே வெறியூட்டும் என்பதற்கு இந்திய ஆண்கள் பலரே நல்ல முன்னுதாரணம் ... !!!
இப்படியான ஆபாச சமூக சிக்கல்கள் குறித்து ஏன் பலர் எழுத தயங்குகின்றார்கள். கேரள பெண்பதிவர்களுக்கு இருக்கும் முற்போக்கு எண்ணமும் சமூக சிக்கல்களை வெளிக் கொணர்ந்து கருத்து மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் பல பெண் பதிவர்களுக்கு இல்லாமல் போகின்றது ... ( பல ஆண்களுக்கும் தான் )
தெரியலைங்க .. என்ன சொல்றதுனு எனக்கு தெரியல.. நான் எழுதுவே பலதும் குப்பை தான்.. இருந்தால் பல சமூக சிக்கல்களை வெளிக் கொணர முயல்கின்றேன்.. ஆனால் ஆதரவு மிகவும் குறைவு தான் .. பார்ப்போம் தொடரும் வரை தொடருவேன் !!!
// பல சமூக சிக்கல்களை வெளிக் கொணர முயல்கின்றேன்.. ஆனால் ஆதரவு மிகவும் குறைவு தான்//
உங்களை போன்ற பதிவர்களை ஊக்குவிப்பதே என் கடமையாக செய்கிறேன்..
உலக சினிமா எழுதும் பலரும் பதிவுலகில் - காமம் சார் சினிமாவைத் தாண்டு வேறொன்றையும் பார்ப்பதும் இல்லை, எழுதுவதும் இல்லை. சென்னையில் நடக்கும் உலக சினிமா திரையிடலில் கூட தோல் தெறியும் சினிமாவுக்கே பலரும் வருவார்கள் ... மனம் சார்ந்த சினிமாவைப் பார்ப்போர் குறைவு தான் //
அதே வருத்தம் தான் . மலையாள படம் சில வேளை பார்ப்பேன். எவ்வித அலங்காரமும் இல்லாமல் கதை நிதர்சனத்தை சொல்லும்..
சினிமா, ஆபாசம் எழுதுவோரையும் பின் நவீனத்துவ வாதிகளின் அலப்பறையும் தாங்க முடியவில்லை... என்ன செய்ய சகித்து கொண்டு தான் போக வேண்டும் //
:)) மக்களை முட்டாளாய் வைக்கிறார்களே என்ற வருத்தம் தான் ..
உண்மைதான். நேத்து ஒரு மலையாளப்படம் பார்த்தேன். இவிடம் ஸ்வர்கமாணு.
எப்படியெல்லாம் அடுத்தவன் நிலத்தைக் கொள்ளையடிக்கிறாங்க. இதுலே அரசியல்வாதியும் போலீஸும் எப்படி கூட்டுச்சேருதுன்னு நல்லாச் சொன்னாங்க. மோகன்லால்தான் கதைநாயகன்.
கேரளத்துலே நடக்கும் கதை என்றாலும் நம்ம தமிழ்நாட்டுக்கு ஆயிரம் மடங்கு பொருத்தம்.
ஒரு பாட்டோ நடனமோ இல்லாம கொம்ப்ளீட் நீட் கேட்டோ!
ஒரு பாட்டோ நடனமோ இல்லாம கொம்ப்ளீட் நீட் கேட்டோ! //
:))அப்போ ,ஞான் உடனே பாக்கும் அம்மே
// திருமணத்துக்கு [பின் கணவன் குடித்தால் முழு காரணமும் மனைவியாம் //
யாரந்த புதுமை ( அடிமை ) பெண் ... பின்நவீனத்துவம் மிளிர்கின்றது..
--------------
கொளசல்யா என்ற பதிவர் .. அதிர்வது போனேன் ..பெண்ணுக்கு பெண்ணே எதிர். என்ன சொல்ல..??:((
மலேசியாவில் பெண்கள் கொத்தடிமையாக இருக்க ( சில பினநவீனத்துவ ஊதுகுழல்கள் ) விரும்பும் செய்திவை வைத்துக் கொண்டு நல்ல கலாச்சாரமான பெண்ணுக்கு இலக்கணம் என.. எப்படி இப்படி யோசிக்க முடியுது என எனக்குத் தெரியவில்லை ? :( //
-----
Ya I also read that " Obedient wives club "
http://news.yahoo.com/s/ap/20110605/ap_on_re_as/as_malaysia_obedient_wives
http://gawker.com/5808670/sexy-new-obedient-wives-club-not-a-hit-with-everyone
Obedient Wives Club clari fies 'better than a first-class prostitute' statement"
மிக அருமையான பதிவு, மிக சரளமான நடை , பாராட்டுகள் சாந்தி !!!
Post a Comment