Wednesday, March 2, 2011

கள்ளன் பெரிசா காப்பான் பெரிசா?.:






சினிமாக்களில் அன்றிலிருந்து இன்றுவரை பெண்ணை வன்புணர்ச்சி செய்தாலோ , அவளை கள்ளத்தனமாக ஓட்டை வழியாக அவள் உடம்பை பார்த்துவிட்டால்லோ ஏனோ குடியே முழுகியதுபோல் வெட்கி , தலை குனிந்து , அவமானப்பட்டு ,விரக்தியடைந்து , மனநோய் வந்து ,பித்து பிடித்து , உண்ணாமல் உறங்காமல் , இறுதியில் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்வதாக காட்டுவது ஏன்.?..


அதற்கப்புரமே வீரம் வந்து பழிவாங்கி , எதிரியும் செத்து , தானும் செத்து சுண்ணாம்பு ஆவதுதான் கதை..


இது இன்று யுத்தம் செய் வரையிலுமே..


தன்னை ஒருவன் தவறாக பார்க்கிறான் என்றால் அந்த இடத்திலேயே அவனை எதிர்கொள்ள பழக்காமல் தடுப்பது எது?.


நம் ஊர்களில் , ஆறு , குளத்தில் குளித்து விட்டு அப்படியே அதே ஈரத்துணியோடு நடந்து செல்வார்கள் குடும்பப்பெண்கள்.. எத்தனை பேர் தப்பா பார்த்தார்கள்..அப்படி பார்த்தவர்களையும் , ஏதோ கெட்ட வார்த்தை போட்டு திட்டிவிட்டு சபித்துவிட்டு செல்வார்கள்.. எங்கே இருந்து வந்தது அந்த துணிவு..?..


பெண் உடம்புக்கு மட்டும் கற்பு என்ற ஒரு அபத்தமான விலை வைத்ததன் விளைவா இது.?


சட்டத்தை நம் கையில் எடுக்க வேண்டியதுதான் சில நேரம்.. ஆனால் எல்லாமே காத்திருந்து வன்முறையாகவும் கொலையாகவும் இருக்கவேண்டியதில்லை..


நிர்வாணப்படுத்திவிட்டான் என்றதும் தற்கொலை செய்யவேண்டியதுமில்லை என்று சொல்லி வளருங்கள் குழந்தைகளை.. என்னடா செய்த, ஏன் பார்த்த, என தெருவுக்கு இழுத்து வந்து தர்ம அடி வாங்கித்தர பழகுங்கள்.. சமூகம் என்ன சொல்லுமோ , பெண் பிள்ளைக்கு வரன் அமையாதே என்ற முட்டாள்தனமான கவலையை ஒதுக்கினால் மட்டுமே நம் சமூகம் முன்னேறும்.. இப்படி தினமும் ஒரு பெண்ணாவது நிமிர்ந்து நின்றாள் என்ற செய்தி வந்தால் தன்னாலேயே மாற்றம் வரும்..




அதைவிட்டுவிட்டு , ரூமுக்குள் போய் குமுறி குமுறி அழுதுவிட்டு உடனே யாரையோ பழிவாங்குவதாய் நினைத்து செத்து தொலைய சொல்லி படம் எடுக்காதீர்கள்.. தயவுசெய்து அப்படியான கோழைப்படங்களை உங்க குழந்தைகளுக்கு காண்பிக்கவும் செய்யாதீர்கள்.. ,


என் வீட்டில் காமிரா வை னு சொன்னதையே ஆணாதிக்கவாதிகள் எப்படியெல்லாம் திரித்து பேசி தன் வக்கிர உணர்ச்சிகளுக்கு பசியாற்றினார்கள்.. இன்னும் அதை பேசி பேசி இன்பம் காண்கிறார்கள்..

ஆனால் இவர்கள் மறந்தது இவர்கள் வீட்டு பெண்ணையே இவர்கள் வன்புணர்கிறார்கள் என்பதுதான்...சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படியான வக்கிர புத்தியுடையவர்கள் அதையும் கண்டிப்பாக செய்வார்கள்..


சபலம் தட்டுவது போல உடை உடுத்தக்கூடாதுதான்.. ஆனால் நம்மூர் பெண்கள் ( நம் , அம்மா, நம் அத்தை , சித்தி , அண்ணி , அக்கா ) ஆற்றில் குளித்துவிட்டு உடம்பை ஒட்டிய ஆடையோடு அரைகுறையோடு எத்தனை துணிவோடு நடந்துவந்தார்கள்.. இன்றும் நடந்து வருகிறார்கள் என்பதை நினைவு கொள்வோம்.. கிராமத்து பெண்களுக்கு இருக்கும் துணிவுகூடவா நகரத்து பெண்களுக்கு இல்லை..?????


டெலிவரி பார்க்கும் ஆண் மருத்துவரை நம்பி திருமணமான பெண்களே உடலை தயங்காமல் சிகிச்சைக்கு ஒப்படைக்கும் காலமிது.. எனக்கு டெலிவரி இரண்டு முறை பார்த்ததும் ஆண் மருத்துவர்தான்..


ஒவ்வொருமுறையும் நாம் பாதுகாத்துக்கொண்டே இருந்தாலும் கள்ளன் நிப்பாட்ட போவதில்லை.. காப்பான் எப்பவும் கடைசியில்தான் வரமுடியும்.. அதனால் அப்பப்போ , அங்கங்கே எதிர்கொள்ள செய்யுங்கள்..


இவர்களை விட முக்கிய எதிரி, ஆபாத்தானவர்கள் நம்மை சுற்றியிருப்பவர்கள் சிலர்... அவர்களை சமாளிப்பதுதான் பெரிய விஷயம் பலருக்கு.. நாகரீகமற்று இது குறித்து வருத்தத்தோடு பேசுவது போல் நாடகமாடி தகவல் கறந்து பரப்பும் வேலை செய்பவர்கள்.. இப்படியானவர்களை மொத்தமாக வாழ்விலிருந்தே தவிர்த்திடணும்..


சம்பவம் குறித்து பேச வந்தாலே முகத்தில் அடித்தாற்போல் , "வேற பேசலாமா .?" என சொல்லிடுங்கள்.. எப்படியும் கெடுதல் எண்ணமுடையவர்கள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க போவதில்லை.. வம்பழத்து குதூகலிக்கும் கூட்டமாய் சேர்ந்து.. தூசியென பலரை அற்பர்கள் என துணிவோடு ஒதுக்கினால் மட்டுமே நல்லவர்களை நாம் காண முடியும்..நல்ல பக்குவமடைந்தவர் பலர் இருக்கின்றனர் . பயம் வேண்டியதேயில்லை..

நல்லவர்கள் பலர் அமைதியாக இருப்பதால் கெட்டவர்களின் ஆட்டம் பெரிதாக தெரிகிறது சமூகத்தில்.. அவர்களின் பெரும்பான்மை குறித்து எவ்வித அச்சமும் தேவையேயில்லை..

எல்லாரும் வாழத்தான் வாழ்க்கை இங்கே என்பதை புரிந்துகொண்டு சொல்லிக்கொடுங்கள்.. உதவிக்காக காத்திருப்பதைவிட , உதவ முன்வருவதை பழக்கிடுங்கள்.. எங்கே தப்பு நடந்தாலும் தட்டிக்கேட்க துணிவு தாருங்கள்..


அதற்கு பலனாக ஆபாச வார்த்தைகள் என நினைத்து , விபச்சாரி , ( இன்னும் பல கெட்ட வார்த்தைகள் தெரியவில்லை ) , என பல பட்டம் தருவார்கள்தான். அவற்றையெல்லாம் ஒரு புன்னகையோடு கடந்து சென்று அவ்வார்த்தைகளின் மதிப்பிழக்க செய்திடுங்கள்.. ஏனெனில் பாலியல் தொழிலாளியும் மனிதர்தான் என்று மனிதாபிமானத்தை பழக்காதவருக்கே , ஆணாதிக்கவாதிகளுக்கே அவை ஆபாசமாகத்தெரியும்..


*உடலிலல்ல கற்பு.. எண்ணங்களில் இருக்கு ." .. துணிவை கொடுப்போம் பெண்ணுக்கு..

( மகளிர் தினத்துக்கான பதிவு. )

( இன்றும் 8 வயது குழந்தை அனுசூயா கோவையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.. ஆழ்ந்த அனுதாபங்களும் , கண்டனங்களும்.. ஆபாச பதிவும் , எழுத்தும் செய்யும் வீரர்கள் ,ஊடகங்கள் , சினிமாக்கள் , சரோஜாதேவி புத்தகத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் , தொடர்ந்து நடத்துங்கள் உங்க சேவையை , உங்க வீட்டு கதவுகளை தட்டும் வரையிலும் .. இது ஒரு பக்கமிருக்க , ஆபாச பதிவர்களை பல ஆண் பதிவர்கள் துணிவாக எதிர்க்க முன்வந்திருப்பது மகிழ்வான விஷயம்.. வாழ்த்துகள்.. )


[ என் கணினியிலும், தொலைபேசியிலும், மிரட்டலும் , தொந்தரவும் வருகிறது.. பின்னூட்டங்களையும் மாற்றுகின்றனர்.. எனக்கு மரணத்தையே தந்தாலும் என் மனதின் எண்ணங்களை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதை புரிவீரா?..தொடரும் என் கருத்துகள்..நிலைபெற்றும் நிற்கும்.. சமூகத்தில் மாற்றம் கொண்டு வர முன்பைவிட அதிக துணிவை தருவதற்கு நன்றிகளும்.. எதிரிகள் யாரென்று தனியா சொல்லவேண்டியதில்லைதானே?..:)) ]



படம் : நன்றி கூகுள்..




.

6 comments:

Avargal Unmaigal said...

///எனக்கு மரணத்தையே தந்தாலும் என் மனதின் எண்ணங்களை ஒருபோதும் மாற்ற முடியாது ///



----நல்ல வரிகள்..தொடருங்கள் உங்கள் யுத்தத்தை. வெற்றி நிச்சயம்

சென்னை பித்தன் said...

”நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும்”
நிச்சயம் தேவை!

”நாணு மச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்!”

வாழ்த்துகள்!

எண்ணங்கள் 13189034291840215795 said...

வருக தமிழ்கை , சென்னை பித்தன் சார்..

// ”நாணு மச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்!” //

அழகாக நியாபகப்படுத்துனீர்கள்..

http://rajavani.blogspot.com/ said...

உறுதியும் நிலைப்பாடும் கொண்ட வார்த்தைகள் பயணமும் எண்ணங்களும்
எண்ணங்களோடு பயணம் தொடரவாழ்த்துகள்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

- Muted
http://thatstamil.oneindia.in/news/2011/03/01/tortured-tn-girl-died-kerala-aid0128.html
கேரளா: தமிழக சிறுமி நாய் கூண்டில் அடைத்து சித்ரவதை செய்ததில் பலி-4 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் வீட்டு வேலை செய்து வந்த தமிழக சிறுமியை நாய் கூண்டில் அடைத்து சித்ரவதை செய்துள்ளனர். சித்ரவதை தாங்கமுடியாத சிறுமி இறுதியில் பரிதாபமாக இறந்தாள்.

//

இப்படியான செய்தியை படிக்கும்போது வேதனையோடு வெட்கமாகவும் இருக்கு..

நாமும் இந்த நாட்டில் இருந்து இதை தடுக்க முடியலையேன்னு..

எப்ப தீரும் இந்த குழந்தை அடிமைத்தனமும் கொடுமைகளும்..

:((((((((

எண்ணங்கள் 13189034291840215795 said...

தவறு said...

உறுதியும் நிலைப்பாடும் கொண்ட வார்த்தைகள் பயணமும் எண்ணங்களும்
எண்ணங்களோடு பயணம் தொடரவாழ்த்துகள்.//

நன்றி தவறு..