அக்கம் பக்கம் உள்ளவரிடம் பேசாதவர், நல்ல விதமாய் நட்பு பாராட்ட முடியாதவர்கள் கூட இணையத்தில் எளிதாக நட்பு பாராட்ட முடிகிறது..
எல்லோருக்குமான சம உரிமை இங்கே உள்ளது.. தத்தம் திறமைகளை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்படுத்தி பாராட்டும் ஊக்கமும் பெற முடிகிறது..
அண்டை வீட்டுக்காரர்களுக்கு , ஒரு துரும்பை கூட எடுத்து உதவ முடியாதவரெல்ல்லாம் இணையத்தில் நல்ல மனிதராய் நடிக்க முடிகிறது..
குழந்தை , குடும்பம் என மிகவும் அன்பான நிறைவான சூழலில் , ஏன் ஆச்சாரமான சூழலில் இருப்பவரும் கூட நட்பை தேடி இணையம் வருகிறார்கள்..
அதைவிட நான் அதிகமாக கண்டது புகழ் விரும்பிகள்..
எல்லோருக்கும் புகழ் பிடிக்கும்தான்.. இதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.. சிலருக்கு அது ஊக்கம் , அங்கீகாரம்.. அந்தளவில் அது ஆரோக்கியமானதே..
ஆனால் அதையும் தாண்டி தகுதியற்ற புகழை தேடும்போதுதான் ஆபத்தாக வந்து முடியும்..
எப்படி இந்த தகுதியற்ற புகழை அடைய விரும்புவார்கள்.?
ஓட்டு போடுங்க என பிச்சை கேட்பது.. இதில் கூட சமூகத்துக்கு தேவையான விஷ்யங்களை சொல்லி அது பரவவேண்டும் என நல்லெண்ணத்தில் ஓட்டு கேட்பவர்களை இங்கே சொல்லவில்லை.. ஆனால் உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் ஓட்டு பிச்சை கேட்பதும் , பின்னூட்ட மொய் எழுதுவதுமாய்...
ஜாலியாக சகாக்கள் சேர்ந்து கும்மி அடிக்கட்டும் அதுவும் தவறில்லை.. ஆனால் சிலர் தகுதியற்ற , சமூக விரோத பதிவுகளை போட்டு கூட்டம் சேர்த்துவிட்டு தன்னை பெரிய தலைவராக நினைத்துக்கொண்டு கருத்து சொல்லும்போது தான் தாங்க முடிவதில்லை...
ஆக இங்கே தற்போது நிலவும் இந்த சூழல்/கூட்டம் ஆரோக்கியமானதல்ல என்பது என் கருத்து...
இப்ப சில விஷயம் பெண்கள் குறித்து.. இது தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்குவதற்கல்ல. ஒரு விழிப்புணர்வுக்கு மட்டுமே..
பொதுவெளியில் நாம் என்ன உடையில் செல்வோமோ , அந்த உடையில் உள்ள படங்களை மட்டுமே உங்கள் முக புத்தகத்திலோ அல்லது பதிவிலோ போடுங்கள்..
சில மாதம் முன்பு ஒரு பெண்ணின் நைட்டி போட்ட படம் தினமும் வந்து என் முகபத்தகத்தில் தொந்தரவு கொடுத்தது..
அவர் அந்த படத்தை அறிந்தோ அறியாமலோ போட்டிருக்கலாம்.. இல்லை அது அவருக்கு ஒரு பெரிய விஷயமாக/தவறாக இல்லாமல் கூட இருக்கலாம்..
எதையும் எதிர்நோக்கும் துணிவு மிக்கவராயும் இருக்கலாம்..
ஆனால் பார்ப்பவர்கள் எல்லாரும் அவர் மன நிலையில் இருப்பார்கள் என சொல்ல முடியாதே?..
அதே போல்தான் சில ஆபாச கவிதைகளும்..
மணிமேகலை எழுதுகிறார் என்றால் அவரால் எதிர்கொள்ள முடியும்..
முத்தக்கவிதை எழுதும் சில தோழியர் , அவர் வாழும் நாட்டில் இது சகஜமாக இருக்கலாம்.. ( நான் வாழும் நாடு போல )
அவர்கள் குடும்பத்தினரும் அதனை அங்கீகரிக்கலாம்..
ஆனால் பொதுவில் அப்படி ஒரு கவிதை எவ்வாறு உள்வாங்கிக்கொள்ளப்படுகிறது என்பதையும் கணக்கில் கொள்ளணும்..
அதே போல சில பின்னூட்டங்கள் மூலமும் சில பெண்கள் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதுண்டு..
ஆக இதை வைத்தே ஒரு ஆண் எளிதாக இவர்களை எடைபோட முடிகிறது..
சாந்தம் வழியும் சர்வ லெக்ஷனம்;
காந்தமாய் கவரும் கண்களில் அன்புமழை;
பொன்னகைப் பூட்டிய பளிங்கு கழுத்தை
புன்னகைக் காட்டிய பவள இதழ்கள்
வெல்லும் வண்ணம் வார்த்து எடுத்த---
இப்படி ஒரு வர்ணனை ஒரு பெண்ணிடம் முக புத்தகத்தில் .அவள் புகைப்படம்
பார்த்து.
அவரும் நன்றி சொல்கிறார் இக்கவிதைக்கு...
முளையிலேயே கிள்ளி எறியவேண்டாமா?..
இல்லை அதை விரும்பினாலும் தனிமடலில் இருந்துவிட்டால் பரவாயில்லை.. அது அவர்கள் தனிமனித சொந்த விருப்பம்...மட்டுமே..
இது போதாதா சில ஆண்களுக்கு?..
இப்படியான பிரபலங்களை ஏன் பெண்கள் விரும்புகின்றார்கள் என்றுதான் புரிவதில்லை...
இவர்கள் கட்டாயம் மற்றவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமும்..
ஒஹோ நாமும் இப்படி வழிசலை ஏற்றால் தான் நமக்கும் பிரபலமடைய முடியும் என்று எண்ண வைக்கின்றார்கள்..
பெண் என்பவள் கம்பீரமானவள்.. சக்தி வாய்ந்தவள்.. எவருக்கும் அஞ்சாத மன பலம் படைத்தவள்..தவறுகளை துணிந்து எதிர்ப்பவளாக ,விமர்சனங்களை எதிர்கொண்டு தாங்கி புன்னகைப்பவளாக இருக்கணும்..
அவள் இப்படி கவிதைகள் மூலம் போகபொருளாய் பலவீனப்படுத்தப்படுவது மிக
ஆரோக்கியமற்றது என்பது என் கருத்து...
சமீபத்தில் சேட்டைக்காரன் என்ற பதிவர் கூட பொதுவில் ஒரு விஷயம் சொல்லியிருந்தது எல்லாருக்கும் நினைவிருக்கும்..
அவரிடம் இரு பெண்கள் தவறாக நடப்பதாகவோ/பேசியதாகவோ... அதை அவர் நிரூபிக்கவும் தயார் என்றார்..
ஆக இப்படியான பெண்கள் நம் மத்தியில் இல்லை என்று சொல்ல முடியாது..
செய்வதை செய்துவிட்டு ஆண்களே மோசம் என பழி போடுவது எப்படி சரியாகும்.?
ஒரு ஆண் தவறாக பேச முயல்கிறான் என்பதை ஒரு வார்த்தையிலேயே /புகழ்ச்சியிலேயே மிக மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும்...
அதை அனுமதித்து விட்டு பின்பு அழுவதால் பிரயோசனமில்லை..
நான் இணையம் வந்த புதிதில் பலரும் இப்படியாக பேசியவர்தான்..முதலில் காம ரசம் சொட்டும் கவிதைகளை பகிர்ந்து நம் கருத்தை கேட்பார்கள்.. அல்லது சிலைகளுடைய புகைப்படம் அனுப்புவார்கள்.. அல்லது இருக்கவே இருக்கு ஓஷோவின் காம வரிகள்...
நாம் மரியாதை கருதி அமைதியாகவோ , ஒரு புன்னகையோடோ விலகுவோம்..
சிலர் மீண்டும் தொந்தரவு செய்யும்போது , எனக்கு இதிலெல்லாம் விருப்பமில்லை என மென்மையாக மறுக்கலாம்..
யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை...
பின்பு நாம் அதை விரும்பாதவர் என தெரிந்தும் நல்ல விதமாய் மட்டுமே நட்போடு பழகுபவராய் மாறிப்போனதுண்டு..
ஆணிடம் காமம் குறித்தான் எண்ணம் பெண்ணை விட அதிகம்தான்.. மறுப்பதற்கில்லை...அது இயற்கை..
அதற்கு இடம் கொடுப்பதை பொறுத்தே இருக்கிறது , அதை தொடர்வதும் , விலகுவதும்..
ஆனால் அதை வைத்து மட்டுமே ஒருவன் அயோக்கியன் என்று சொல்லிவிட முடியாது..
பெண்களிடம் செல்லும் எல்லோரும் அயோக்கியருமல்ல.. செல்லாதவர் எல்லாரும் யோக்கியருமல்ல..
இதே தான் பெண்களுக்கும்..
20 வயதிலிருந்தே ஆணின் பார்வைகளை தாங்கியே வளர்ந்திருக்கோம்.. பெண் அங்கங்களை ரசிப்பவனாகவே படைக்கப்ப்ட்டிருக்கான் ஆண்..
ஆனால் எல்லா பெண்களையுமா எப்போதும் பார்க்கிறான்?.. அது காம வெறியனின் செயல் மட்டுமே..
அப்படி பார்ப்பவனும் , பெண்களையே ஏறெடுத்தும் பார்க்காமலேயே இருப்பவனும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள்..
மற்றபடி சாதாரணமாய் ரசிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.. அது நாகரீகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்..
இதேதான் இனையத்திலும்...
ஆணுக்கு பெண்ணின் மீது ஒரு அன்பு, பாசம், தாய்மை ஏதோ ஒன்றின்மீதும் , பெண்ணுக்கு ஆணின் மீதும் ஒரு கண்காணிப்பு, பாதுகாப்பு , ஆறுதல் , துணிவு தரும் ஏதோ ஒன்றும் தேவைப்படுகிறது...
இவை வரம்பு மீறாதவரை இரு பக்கமும் வளர்ச்சியோடு இருக்கும்வரை ஆபத்துகள் ஏதுமில்லை.. எப்ப மற்றவர் மீது பொறாமை , பொஸசிவ்நெஸ்/ஆழுமை வர ஆரம்பிக்குதோ அப்போது அங்கேயே நட்போடு , எவ்வித கசப்புமின்றி பிரிவது அவசியம்..
பிரியணும்னு முடிவெடுப்பவர் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் மிக கவனமாக கையாளணும்...
தன் நிலைமையை விளக்கி ஆணுக்கான அவகாசம் /நேரம் கொடுத்து , அவர் இதுவரை செய்த நல்ல விஷயங்களுக்கு நன்றி செலுத்தி , அவர் காயப்பட்டிருந்தால் அதற்கான மன்னிப்போடு விலகணும்..
அந்த நட்புக்கு ஒரு குற்ற உணர்ச்சியை கொடுத்துவிடக்கூடாது.. தப்பு நம்மேலும்தான்..இதை ஏற்க கடினமென்றாலும்..
ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நட்போடு இருக்கும்போது கண்டிப்பாக அவர் நல்ல விஷயம் செய்திருப்பார்.( ஒன்றாவது ) . அதை மறந்து தூக்கி எறிந்து விட்டு செல்ல வேண்டாம்..
அப்படி செல்லும்போதுதான் பழிவாங்கும் எண்ணம் வரும்..
இதையும் தாண்டி மென்மையாக பிரிந்தும் இப்படி பழிவாங்கும் எண்ணமிருந்தால் ஒண்ணும் கவலைப்படாது துணிந்து நிற்பதே வழி..
சில பல விஷமத்தனமான விமர்சனங்கள் நம்மீது பரப்பப்படும்.. எல்லாவற்றையும் ஏற்க பழகிக்கணும்.. ஏன்னா இது பொறாமை , போட்டிகள் நிறைந்த உலகமாச்சே..
நாம் நல்லவர்கள் , என்பதற்காக மட்டுமே நமக்கு நடப்பதெல்லாம் நல்லவையாக நடக்கணும் என்ற எவ்வித கட்டாயமுமில்லை..
ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு..
“Expecting the world to treat you fairly because you are a good person is a little like expecting a bull not to attack you because you are a vegetarian" Dennis Wholey
மேலும் ஒரு நல்ல நட்பு தப்பை சுட்டிக்காட்டக்கூடியதாய் இருக்கணும்.. தப்புகளை ஏற்றுக்கொள்வதாகவும் இருக்கணும்.. நட்பாய் இருக்கணும் என்ற ஒரே காரணத்துக்காக தப்புகளை கண்டும் காணாமல் இருக்க கூடாது..
நம் மனசாட்சிக்கு நாம் நல்லவர்களாய் இருந்தால் போதும்.. மற்றவர்களுக்காக அல்ல..அதே போல் நிரூபிக்க தேவையுமில்லை யாரிடமும்..
நம் குடும்பத்தினர் நம்மை நம்பணும்.. அவ்வளவே..
மேலும் திருமணமான பெண்கள் மற்றொரு ஆணோடு பேசுவதை நம் தமிழ்நாட்டு/இந்திய /சில சமயம் பல நாட்டு கலாச்சார ஆண்களால் உடனே ஏற்க முடியாதுதான்..
மெதுவாகத்தான் புரிய வைக்கணும்.. ஆனால் பெண் புரிந்துகொள்வாள் எளிதில்..
( என் வேலை நிமித்தம் என் பாஸ் கூட பல்வேறு ஊர்களுக்கு சென்று விடுதியில் தங்கி வருவேன்.. பல இரவு நேர வேலையும் எனக்கு.. இதையெல்லாம் பெருமையாக
அனுப்பி வைத்தாலும் , ஆயிரம் பேரோடு அலுவலில் கைகுலுக்கினாலும் ,20 வருடமாய் ஆண்களோடு ஆண் போலவே வேலை செய்தபோதும் , தன் கண் முன்னால் வேறொரு ஆண் கைகுலுக்குவதை ஜீரணிப்பது இன்னும் என் கணவருக்கு சங்கடம்தான்..அதிலும் வெளிநாட்டவர் என்றால் கூட பரவாயில்லை.. இந்தியர் என்றால் தான் ..:) ஏனெனில் நம் வளர்ப்பு அப்படி.. )
ஆக கணவரையும் புரிந்துகொள்ளணும்.. நாம் பேசும் அனைத்து நட்புகளையும் முடிந்தவரை அறிமுகப்படுத்திடணும்..
எனக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரும்போதெல்லாம் அவரும் சில சமயம் பேசுவார்..என் கல்லூரி தோழர்கள் என் வீட்டில் வந்து தங்கியதுமுண்டு..அவருக்கு பிடிக்கும் பட்சத்தில்..
பிடிக்காவிட்டால் ?.. வேறென்ன செய்ய புரியவைக்க முடியாவிட்டால் , புலம்பிக்கொண்டே விட்டுவிட வேண்டியதுதான்.. மற்றவரை மாற்றுவதை விட , நாம் மாறிக்கலாம் சில வேளை..
ஆண்களோடான எனது இருபது வருட வேலை அனுபவத்தில் ,நட்பு/காதல் பிரிவினால் அவர்கள் வருந்துவதையும், வலிகளை மனதுக்குள்ளே வைத்து அழுவதையும் கண்டுள்ளேன்.. பெண் புலம்பியாவது ஆறுதலடைவாள்.. ஆனால் ஆண் பூட்டி வைப்பான்..சிலரே வெளியில் சொலவ்தும்..
ஆண்களும் சில பெண் நட்புகள் , அல்லது காதலி பிரிந்துபோய்விட்டாளே என ஒருபோதும் கவலை கொள்ளாதீர்கள்..
காதலும் , அன்பும், நட்பும், இன்ன பிறவும் நம்மிடையேதான் இருக்கிரதேயன்றி பிறரிடம் இல்லை.. அதற்கு தகுதியானவர்கள் கிடைத்தே தீரும்...
நண்பர்கள் பிரிந்தாலும் அவர்களோடான அந்த நட்பு கால நினைவுகள் ஒருபோதும் பிரிவதில்லை.. அவை என்றென்றும் இனிமையாக இருக்கணும்..
நண்பர்களை நட்போடு பிரிய பழகுவோம்...
படம் : நன்றி கூகுள்..
--
22 comments:
//தன் நிலைமையை விளக்கி ஆணுக்கான அவகாசம் /நேரம் கொடுத்து , அவர் இதுவரை செய்த நல்ல விஷயங்களுக்கு நன்றி செலுத்தி , அவர் காயப்பட்டிருந்தால் அதற்கான மன்னிப்போடு விலகணும்..
அந்த நட்புக்கு ஒரு குற்ற உணர்ச்சியை கொடுத்துவிடக்கூடாது.. தப்பு நம்மேலும்தான்..இதை ஏற்க கடினமென்றாலும்..//
மிக அருமையாக அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்.பெண்கள் அனைவரும் படித்து புரிந்து கொள்ள வேண்டும். நம் மேல் தவறை வைத்துக் கொண்டு எப்ப பார்த்தாலும் ஆண் அப்படி இப்படி என்று பாட்டு பாடி ஒரு பிரயோஜனமும் இல்லை.
//பெண் என்பவள் கம்பீரமானவள்.. சக்தி வாய்ந்தவள்.. எவருக்கும் அஞ்சாத மன பலம் படைத்தவள்..தவறுகளை துணிந்து எதிர்ப்பவளாக ,விமர்சனங்களை எதிர்கொண்டு தாங்கி புன்னகைப்பவளாக இருக்கணும்..//
பாரதியின் வார்த்தைகளில்-”நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை,நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நேர்மை”-இவை அடிப்படைகள்.மற்றவை தானே வரும்.
நல்ல பதிவு.
எப்படி இந்த தகுதியற்ற புகழை அடைய விரும்புவார்கள்.?
ஓட்டு போடுங்க என பிச்சை கேட்பது.. இதில் கூட சமூகத்துக்கு தேவையான விஷ்யங்களை சொல்லி அது பரவவேண்டும் என நல்லெண்ணத்தில் ஓட்டு கேட்பவர்களை இங்கே சொல்லவில்லை.. ஆனால் உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் ஓட்டு பிச்சை கேட்பதும் , பின்னூட்ட மொய் எழுதுவதுமாய்...
//
பல சமயங்களில் இது போல உணர்ந்திருக்கிறேன்.
இந்தப் பின்னூட்டங்களால் என்ன பலன் அடைகிறார்கள் அல்லது ஓட்டுக்களால் என்ன பயன் பெருகிறார்கள் என்றே புரியவில்லை.
”அருமையான பகிர்வு” ”கலக்கல் தலைவா” என பல குப்பைகளுக்கும் வாரி வழங்குவார்கள்
அருமையான பதிவு. இரண்டு பக்கங்களையும் புரிந்து சரிசமாக உண்மையை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். உங்களைப் போல உள்ளவர்கள் நம் நாட்டில் நீதிபதியாக இருந்தால் நம் நாட்டில் நீதி கிடைக்கும். "பாரதியின் புதுமை பெண்ணான உங்களுக்கு" எனது வாழ்த்துக்கள்
எங்கு திறமை இருந்தாலும் கண்டுபிடித்து வாழ்த்தும் MTG ( Madurai Tamil Guy ) அவர்கள் ....உண்மைகள்
சாந்தி மேடம்
இந்தப் பதிவையும், இதற்கு முந்தைய பதிவையும் படித்தேன். இரண்டுக்குமான பின்னூட்டம் இது. பெரிதாக இருக்கிறது. மன்னிக்கவும்.
பதிவின் அடிநாதம் எனக்குப் பிடித்துள்ளது.
எனக்கு இது சம்பந்தமாக ஒன்றிரண்டு யோசனைகள் உண்டு.
ஒவ்வொரு தொழிலிலும் code of conduct என்று ஒன்று உண்டு. பதிவெழுதுதல் ஒரு தொழில் இல்லை என்ற போதிலும் அது பொதுவெளியில் வருகிறது. எனவே ஒரு சில குறைந்த பட்ச ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்று கருதத் தோன்றுகிறது. நீங்கள் சொல்லும் புகைப்படம், ஓட்டுப் பிச்சை, சமூக விரோதப் பதிவுகள், ஆபாசக் கவிதைகள் எல்லாம் இதில் வந்துவிடும்.
ஆனால் இதையெல்லாம் யார் எடுத்துச் சொல்லி யார் கேட்பது என்கிற பெரிய கேள்வி நம்முன் உள்ளது.
தமிழ்மணம், இன்ட்லி போன்ற திரட்டிகளைப் பற்றிப் பெரும்பாலான தமிழ்ப் பதிவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அது போன்ற திரட்டிகளின் முகப்புப் பக்கங்களில் bloggers’ code of conduct’ என்று ஒரு நிரந்தர சுட்டியை அவர்கள் வைக்கலாம். புதிதாக எழுத வருபவர்கள் அதைப் படித்துப் பார்த்துவிட்டு எழுத ஆரம்பிக்கலாம். இவர்கள் யார் என்னைக் கேள்வி கேட்பது நான் என் இஷ்டப்படிதான் எழுதுவேன் என்று எழுதுபவர்களை மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். இது போல ஏற்கனவே எழுதிக் கெட்ட பெயர் வாங்கியுள்ளவர்களின் case studyகளை அவர்கள் பெயரில் அல்லாமல் வேறு பெயரில் அங்கேயே வைக்கலாம் (பாஸ்டன் ஸ்ரீராம் பின்னூட்டத்தில் சொல்வதை நான் இங்குக் கொஞ்சம் போல மாற்றிப் பிரதிபலிக்கிறேன்).
என்னென்ன மாதிரியான விஷயங்கள் code of conduct இல் இருக்க வேண்டுமென்பதை யார் பரிந்துரைப்பது என்பது போன்ற நடைமுறைக் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. வேண்டுமானால் திரட்டிகள் இது சம்பந்தமாகப் பதிவர்களைக் கேட்கலாம். அந்தத் திரட்டியை நடத்துபவர், வரும் பரிசீலனைகளில் எது சரியாகப் படுகிறதோ அவற்றை அந்த நிரந்தர சுட்டியில் வைக்கலாம். இதிலும் சிக்கல்கள் வரத்தான் செய்யும். ஆனால் நாம ஏதாவது ஒரு புள்ளியில் ஆரம்பித்துத்தான் ஆகவேண்டும். போகப் போக அபிவிருத்தி செய்து கொள்ளலாம்.
மற்றபடி தனிமனித முயற்சிகளும் நிறையத் தேவை. நாம் எழுதும் பதிவுகள் தனிமனிதர்களைக் காயப்படுத்தக் கூடாது. அது போன்ற விஷயங்களைத் தனி மடலில் தீர்த்துக் கொள்ளலாம்.
எது சம்பந்தமான விஷயங்களை எழுதக் கூடாது பதிவில் என்று ஒரு negative லிஸ்ட் கட்டாயம் நம்மிடம் வேண்டும்.
பைரசி ஒரு பெரிய பிரச்சனை ஆக உள்ளது. மற்ற தளங்களில் இருந்து சர்வ சாதாரணமாகப் பாடங்களைக் காப்பி அடித்துப் போடுகிறார்கள்.
எக்காரணம் கொண்டும் இணையவெளியில் கிடைக்கும் முகம் தெரியாத நண்பர்களுடன் சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நாம் ஒருவரை முதல் முறையாக நேரில் சந்தித்த கொஞ்ச நாளில் நாம் நம் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறோமா? கிடையாது. அதே விதியை இணைய நட்பிற்கும் பொருத்திப் பாருங்கள். கொஞ்ச நாள் பழகி,பேசி ஒரு கட்டத்தில் நம்பிக்கையானவர் என்று தோன்றும் பட்சத்தில் மட்டுமே உங்கள் சொந்தத் தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
ஒரு விஷயத்தை ஒருவரிடம் பகிர்ந்து கொண்டுவிட்டீர்களானால் அதை அவர் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார் என்பதற்கு ஒரு உத்தரவாதமும் இல்லை. எனவே யாரிடம் பகிர்ந்து கொள்கிறோம் என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். நாம் எதற்கோ ஆறுதல் தேடப் போய் சிக்கல் இன்னும் பெரிதாகிவிடக் கூடாது. வானலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்தது போல ஆகி விடக் கூடாது.
நல்ல பதிவு.
சொல்லவேண்டியது எல்லாமே சொல்லி விட்டீர்கள்.
//இவை வரம்பு மீறாதவரை இரு பக்கமும் வளர்ச்சியோடு இருக்கும்வரை ஆபத்துகள் ஏதுமில்லை.. எப்ப மற்றவர் மீது பொறாமை , பொஸசிவ்நெஸ்/ஆழுமை வர ஆரம்பிக்குதோ அப்போது அங்கேயே நட்போடு , எவ்வித கசப்புமின்றி பிரிவது அவசியம்//
இந்த அளவுக்கு பொறுப்பான ஆட்கள்சமூகத்தில் மிக குறைவு என்றே நினைக்கிறேன்.
வாங்க அமுதா..
//மிக அருமையாக அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்.பெண்கள் அனைவரும் படித்து புரிந்து கொள்ள வேண்டும். நம் மேல் தவறை வைத்துக் கொண்டு எப்ப பார்த்தாலும் ஆண் அப்படி இப்படி என்று பாட்டு பாடி ஒரு பிரயோஜனமும் இல்லை//
அதேதான் மா.
சென்னை பித்தன் said...
பாரதியின் வார்த்தைகளில்-”நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை,நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நேர்மை”-இவை அடிப்படைகள்.மற்றவை தானே வரும்.
நல்ல பதிவு.//
வாங்க சென்னை பித்தன் சார்..
ஆமா பாரதி , பெரியார் வழி பெண்கள் தாம் நாங்கள்..:)
ரிஷபன்Meena said...
பல சமயங்களில் இது போல உணர்ந்திருக்கிறேன்.
இந்தப் பின்னூட்டங்களால் என்ன பலன் அடைகிறார்கள் அல்லது ஓட்டுக்களால் என்ன பயன் பெருகிறார்கள் என்றே புரியவில்லை.
”அருமையான பகிர்வு” ”கலக்கல் தலைவா” என பல குப்பைகளுக்கும் வாரி வழங்குவார்கள்//
வாங்க ரிஷபன்..
ஆமா இதுவும் ஒரு சமூக விரோத செயல் என புரியாமலேயே செய்கிறார்கள்..
ரிஷபன் ,
தகுதியற்றவர்கள் தமிழ்மணத்தில் முன்னணியில் இருப்பதை வைத்தே நம் நாடு எந்தளவு மோசமான நிலைமையில் இருக்கிறது என புரிந்துகொள்ளலாம்...
சில நேரம் வேதனை.. சில நேரம் சிரிப்பாய் இருக்கு..
:)
Avargal Unmaigal said...
அருமையான பதிவு. இரண்டு பக்கங்களையும் புரிந்து சரிசமாக உண்மையை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். உங்களைப் போல உள்ளவர்கள் நம் நாட்டில் நீதிபதியாக இருந்தால் நம் நாட்டில் நீதி கிடைக்கும். "பாரதியின் புதுமை பெண்ணான உங்களுக்கு" எனது வாழ்த்துக்கள்
எங்கு திறமை இருந்தாலும் கண்டுபிடித்து வாழ்த்தும் MTG ( Madurai Tamil Guy ) அவர்கள் ....உண்மைகள்//
வாங்க மதுரை தமிழ்கை ( Guy ) ..
வாழ்த்துக்கு நன்றி..
எனக்கு IPS ஆகணும்னு ஒரு காலத்தில் கனவுல்லாம் உண்டு.. ம்.. எங்க விட்டாங்க..?...:)
RMS Danaraj said...
நல்ல பதிவு.
சொல்லவேண்டியது எல்லாமே சொல்லி விட்டீர்கள்.
இந்த அளவுக்கு பொறுப்பான ஆட்கள்சமூகத்தில் மிக குறைவு என்றே நினைக்கிறேன்.//
வாங்க தன்ராஜ்.
ஆமாங்க பொறுமை குறைந்து வருகிறதுதான்..போட்டி அதிகரிக்குதே..
Blogger Gopi Ramamoorthy said...
சாந்தி மேடம்
இந்தப் பதிவையும், இதற்கு முந்தைய பதிவையும் படித்தேன். இரண்டுக்குமான பின்னூட்டம் இது. பெரிதாக இருக்கிறது. மன்னிக்கவும்.
பதிவின் அடிநாதம் எனக்குப் பிடித்துள்ளது.
//
வாங்க கோபி... உங்க பதில் பெரிதானதற்கு ஏன் வருத்தம் .. மிக அழகான அலசல்.. சமூக பார்வையுமே..
உங்க நேரத்துக்கல்லவா நன்றி சொல்லப்படணும்..
எனக்கு இது சம்பந்தமாக ஒன்றிரண்டு யோசனைகள் உண்டு.
ஒவ்வொரு தொழிலிலும் code of conduct என்று ஒன்று உண்டு. பதிவெழுதுதல் ஒரு தொழில் இல்லை என்ற போதிலும் அது பொதுவெளியில் வருகிறது. எனவே ஒரு சில குறைந்த பட்ச ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்று கருதத் தோன்றுகிறது. நீங்கள் சொல்லும் புகைப்படம், ஓட்டுப் பிச்சை, சமூக விரோதப் பதிவுகள், ஆபாசக் கவிதைகள் எல்லாம் இதில் வந்துவிடும்.
ஆனால் இதையெல்லாம் யார் எடுத்துச் சொல்லி யார் கேட்பது என்கிற பெரிய கேள்வி நம்முன் உள்ளது.
தமிழ்மணம், இன்ட்லி போன்ற திரட்டிகளைப் பற்றிப் பெரும்பாலான தமிழ்ப் பதிவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அது போன்ற திரட்டிகளின் முகப்புப் பக்கங்களில் bloggers’ code of conduct’ என்று ஒரு நிரந்தர சுட்டியை அவர்கள் வைக்கலாம். புதிதாக எழுத வருபவர்கள் அதைப் படித்துப் பார்த்துவிட்டு எழுத ஆரம்பிக்கலாம். இவர்கள் யார் என்னைக் கேள்வி கேட்பது நான் என் இஷ்டப்படிதான் எழுதுவேன் என்று எழுதுபவர்களை மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். இது போல ஏற்கனவே எழுதிக் கெட்ட பெயர் வாங்கியுள்ளவர்களின் case studyகளை அவர்கள் பெயரில் அல்லாமல் வேறு பெயரில் அங்கேயே வைக்கலாம் (பாஸ்டன் ஸ்ரீராம் பின்னூட்டத்தில் சொல்வதை நான் இங்குக் கொஞ்சம் போல மாற்றிப் பிரதிபலிக்கிறேன்).
//
மிக சரியாக சொன்னீர்கள்.. நாங்கள் நடத்தும் தமிழமுதம் குழுமத்திலுமே 3 முறை வார்னிங் தருகிறோம்..
அங்கே எல்லா விஷயங்களையும் அடுத்தவர் மனதை காயப்படுத்தாமல் விவாதிக்கும்படி செய்துள்ளோம்..
ஆக முடியாதது என ஒன்று இல்லை..
ஆரம்பத்தில் பிடிவாதம் செய்வார்கள் , குழுவாக சேர்ந்து கத்துவார்கள்.. ஆனால் ஒரு கட்டத்தில் ஒழுங்குமுறைக்கு வந்தே ஆகணும்..
இப்படி உங்களைப்போன்ற நல்லவர்கள் பலர் சேர்ந்துதான் தேர் இழுக்கணும்...
கண்டிப்பா முடியும்...
// என்னென்ன மாதிரியான விஷயங்கள் code of conduct இல் இருக்க வேண்டுமென்பதை யார் பரிந்துரைப்பது என்பது போன்ற நடைமுறைக் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. வேண்டுமானால் திரட்டிகள் இது சம்பந்தமாகப் பதிவர்களைக் கேட்கலாம். அந்தத் திரட்டியை நடத்துபவர், வரும் பரிசீலனைகளில் எது சரியாகப் படுகிறதோ அவற்றை அந்த நிரந்தர சுட்டியில் வைக்கலாம். இதிலும் சிக்கல்கள் வரத்தான் செய்யும். ஆனால் நாம ஏதாவது ஒரு புள்ளியில் ஆரம்பித்துத்தான் ஆகவேண்டும். போகப் போக அபிவிருத்தி செய்து கொள்ளலாம்.//
ஆம பதிவர்களிடமே ஆலோசனை கேட்கலாம்..
//மற்றபடி தனிமனித முயற்சிகளும் நிறையத் தேவை. நாம் எழுதும் பதிவுகள் தனிமனிதர்களைக் காயப்படுத்தக் கூடாது. அது போன்ற விஷயங்களைத் தனி மடலில் தீர்த்துக் கொள்ளலாம்.//
கண்டிப்பாக... ரெளத்தரிம தான் பழக சொன்னார். பாரதி கெட்ட வார்த்தைகளை அல்ல.. சிலர் தவறா புரிந்தனர்.. ( நானும் புனைவு எழுதினேன்.. சிலர் என்னை பற்றி மிக மோசமாக எழுதியதால் வேறு வழியின்றி மன்னிப்பு கேட்டுக்கொண்டே அவர்களை " முள்ளை முள்ளால் எடுக்க வேண்டி.."
ஆக இந்த நிலைமை கூட வரக்கூடாது.. ஆரோக்கியமான சூழல் வேணும் என்றால்..
// எது சம்பந்தமான விஷயங்களை எழுதக் கூடாது பதிவில் என்று ஒரு negative லிஸ்ட் கட்டாயம் நம்மிடம் வேண்டும்.
பைரசி ஒரு பெரிய பிரச்சனை ஆக உள்ளது. மற்ற தளங்களில் இருந்து சர்வ சாதாரணமாகப் பாடங்களைக் காப்பி அடித்துப் போடுகிறார்கள்.//
அப்படி கண்டுபிடிக்கும் பட்சத்தில் பதிவர்கள் அவர்களை ஒதுக்கிடவேண்டும்.. திரட்டியில் இருந்து விலக்கிடணும்..
// எக்காரணம் கொண்டும் இணையவெளியில் கிடைக்கும் முகம் தெரியாத நண்பர்களுடன் சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நாம் ஒருவரை முதல் முறையாக நேரில் சந்தித்த கொஞ்ச நாளில் நாம் நம் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறோமா? கிடையாது. அதே விதியை இணைய நட்பிற்கும் பொருத்திப் பாருங்கள். கொஞ்ச நாள் பழகி,பேசி ஒரு கட்டத்தில் நம்பிக்கையானவர் என்று தோன்றும் பட்சத்தில் மட்டுமே உங்கள் சொந்தத் தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
ஒரு விஷயத்தை ஒருவரிடம் பகிர்ந்து கொண்டுவிட்டீர்களானால் அதை அவர் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார் என்பதற்கு ஒரு உத்தரவாதமும் இல்லை. எனவே யாரிடம் பகிர்ந்து கொள்கிறோம் என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். நாம் எதற்கோ ஆறுதல் தேடப் போய் சிக்கல் இன்னும் பெரிதாகிவிடக் கூடாது. வானலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்தது போல ஆகி விடக் கூடாது.//
மிக சரியாக சொன்னீர்கள்..
எப்ப ஒரு விஷயம் வாய் விட்டு வெளியே வந்துவிட்டதோ அப்பவே அது ரகசியமல்ல...
ஆக எந்த ஒரு விஷயத்தையும் இது வெளியில் வந்தால் சமாளிக்க முடியுமா என நம்மை நாமே கேட்டுக்கொள்ளணும்...
என்னை பொறுத்தவரை நாம் சொல்லிய விஷயத்தை விட சொல்லாத விஷயமும் புரளிகளுமே அதிகம் வரும்.. அதுவும் பெண் என்றால் பன்மடங்கு..
தூசு என தட்டி விட்டு செல்ல பழகிக்கணும் சில நேரம்...
நாங்க குழுமம் நடத்துவதால் வாங்காத கெட்ட வார்த்தைகளே இல்லை.. பழகிப்போச்சு..
ஆக துணிவையும் சேர்த்து தந்திடுவார்கள் சில நேரம்..
உங்க பதில்களை வைத்தே பதிவுலகில் மாற்றம் கொண்டு வர ஒரு சிறப்பு பதிவு போடலாம்..
நீங்க போடுங்களேன்..
எல்லோர் ஆலோசனையும் கேட்போமே...
நன்றி கோபி.
நண்பர்களை நட்போடு பிரிய பழகுவோம்...
ரொம்பவே சரியாக யோசித்து எழுதியிருக்கிறீர்கள் சாந்தி .இங்கே நட்பாவது எளிதாக இருக்கிறது .ஆனால் சரியாக களையப்படாத நட்பால் ஆபத்துகள் அதிகம் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது .எப்படி புரிய வைத்து பிரிய வேண்டும் என்பதை பற்றிய உங்கள் கருத்துகள் சிறப்பாக இருக்கின்றன .
பூங்குழலி said...
நண்பர்களை நட்போடு பிரிய பழகுவோம்...
ரொம்பவே சரியாக யோசித்து எழுதியிருக்கிறீர்கள் சாந்தி .இங்கே நட்பாவது எளிதாக இருக்கிறது .ஆனால் சரியாக களையப்படாத நட்பால் ஆபத்துகள் அதிகம் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது .எப்படி புரிய வைத்து பிரிய வேண்டும் என்பதை பற்றிய உங்கள் கருத்துகள் சிறப்பாக இருக்கின்றன .//
வாங்க பூங்குழலி...
//சரியாக களையப்படாத நட்பால் ஆபத்துகள் அதிகம் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது//
மிக சரியாக சொன்னீர்கள்..
இன்றைய வேகமான போட்டி நிறைந்த உலகில் நெருங்கிய சொந்தங்களும் கூட
ஆபத்து விளைவிப்பதாகவே இருக்கின்றார்கள்...
ஆக எப்போதுமே மனதை பாசிட்டிவாக , நேர்மறை எண்ணத்தோடும் , ஒருவித சந்தேகத்தோடும் வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது...
குழந்தைகளிடம் கொஞ்சம் கண்டிப்பாக இருந்தாலே " ஐ ஹேட் யூ மம்."
நாம என்னிக்காவது சொல்லியிருப்போமா?... பெர்றோர் கண்ணீர் சிந்தக்கூடாதேன்னு நாம் தியாகம் செய்தோம்.. பலவற்றை..
ஆனா பிள்ளைங்க சொல்லும்போது " சரிப்பா ஹேட் பண்ணிக்கோ. ஆனா படிக்க வேண்டியதை செய்ய வேண்டியதை ஒழுங்க செஞ்சிடு.. " னு சொல்லிட்டு போகவேண்டியிருக்கு..:))
எதிர்நீச்சல் பழக வைக்கணும் குழந்தைகளையும்...
நாமளும் கற்கிறோம் அன்றாடம்.. உலக மாற்றத்துக்கேற்ப..
என்னுடைய சாட் மதார் என்ற பெண் , அர்விந்த மூலம் அரைகுறையாக வெளியிட்டார்...
அதாவது அவர் பேசியதை மறைத்து நான் பதிலளித்ததை மட்டுமே போட்டு என்னை இழிவு படுத்துவதாக எண்ணி..:)
பாருங்க அது கூட நல்லதா போச்சு .. :).
ஆபாச சினிமா விமர்சகர் மேல் நான் என்ன மரியாதை வைத்திருந்தேன் என்பது புரிந்தது..
ஆனா என்னை காயப்படுத்த எண்ணி என் தோழிகள் இருவருக்கு சங்கடம் கொடுத்தது மட்டும் மிக மோசம்..
மிகவும் நல்லபதிவு வாழ்த்துகள் பயணமும் எண்ணங்களும்.
வாங்க தவறு..
நன்றி..
----------
இப்பத்தான் மருத்துவமனையிலிருந்து வந்தேன்..
பெரியவனுக்கு Food poison.. ஏதோ sea food சாப்பிட்டிருக்கான் பள்ளியில்...
வருடத்தில் 3 முறை வந்திடும் எப்படியும்,..
அட்மிட் பண்ணாமல் தப்பிப்பேன்.
இன்று தெரிந்த மருத்துவர்.. பிடித்து அட்மிஷன் போட்டுட்டார்..
சின்னவர் அண்ணாவை பார்த்துக்க சொல்லி பொறுப்பை கொடுத்துவிட்டு துணிகள் எடுக்க வந்தோம்...
இங்க்ல மருத்துவமனை போவது ஸ்டார் விடுதி போவது போல்..
நம்மை விட பன்மடங்கு அன்பா கவனிச்சிக்குவாங்க.. ( ம். எல்லாம் பணம் படுத்தும் பாடு.. )
வீட்டுல இரண்டும் டாம் & ஜெரி .. அங்கே அண்ணாவுக்கு அன்பா உதவுறார்.. ஆக Charity begins at hospital...
கிளம்பிட்டேன்.. ( அம்மா மெதுவா வாங்கன்னு சொன்னாங்க.. பிடிச்ச கார்ட்டூன் பார்த்துகிட்டு இருப்பதால்.. )
//ஓட்டு போடுங்க என பிச்சை கேட்பது.. இதில் கூட சமூகத்துக்கு தேவையான விஷ்யங்களை சொல்லி அது பரவவேண்டும் என நல்லெண்ணத்தில் ஓட்டு கேட்பவர்களை இங்கே சொல்லவில்லை.. ஆனால் உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் ஓட்டு பிச்சை கேட்பதும் , பின்னூட்ட மொய் எழுதுவதுமாய்...// உண்மை.. உண்மை முற்றிலும்.. உண்மை... நான் கூட இதைப் பற்றி எழுதணும்னு நினைத்தேன்... ஆனால் நீங்க சொன்ன மாதிரியே ஓட்டுப்பட்டை சேர்த்துட்டேன்.. சமீபமா (போன வாரம்தான்) நான் கூட ஓட்டுப்போடுங்கன்னு ஒரு பத்தியே அடிச்சுட்டேன்.. அதுக்கு தகுந்த பதிவுகள் என்னிடம் இருக்கான்னா நீங்கள் சொல்வீங்களா..! எதிர்பார்க்கிறேன் தங்கள் கருத்துகளை..!
Post a Comment