Monday, November 29, 2010

லிவிங் டுகெதர் வலையுலக புரிதல்



































லிவிங் டுகெதர் பற்றிய அனேக பதிவுகள் வந்தது..

பல புரிதல்கள்.. பல புதிய பார்வைகள்.. புதிதாக கற்றுக்கொண்டவையும் ஏராளம்.

அதைவிட புதிதாக சந்தித்த அறிவுபூர்வமான வலைத்தளங்கள்.. இத்தனை நாள் பார்க்காமல் விட்டோமே என வருந்துமளவுக்கு..

சரி இப்ப என்ன சொல்ல வரே னு கேட்கிறீங்களா.?

பல பதிவுகளை படித்ததுமே அவர்கள் புரிதலை பார்த்து வியப்பும் ,சிரிப்பே வந்தது..:)

சரி போக போக புரிவார்கள் .

பலரின் புரிதல் இங்கே..


லிவிங் டுதெர்னா

1. ஆபாசம் அபச்சாரம் , கலியுகம்..கலாச்சார மீறல்...

2. காமத்துக்கு மட்டுமே.

3. மேல்நாட்டிலிருந்து அழிக்க வந்த ஆயுதம்

4. பணம் படைத்தவருக்கு மட்டுமே..

5. ஜோடி மாத்திகிட்டே இருக்கலாம்..

6. பாலியல் தொழில்..மாதிரி

7. குழந்தைகள் பற்றி அக்கறை இல்லாதவர்கள்..

8. எய்ட்ஸ் வரும்.

9. ஒருத்தனுக்கு ஒருத்தியல்ல../ஒருத்திக்கு ஒருத்தனல்ல.

10. சொந்த பந்தங்களை விட்டு விலகுதல்./விலக்குதல்..

11. மத விரோதம்.. /துரோகம் ..

12. பெண்ணாதிக்கம்..

13. திருமணம் என்பது சடங்கல்ல.. புனிதம்.. மேலே சொன்னவை திருமணத்தில் கிடையாது..






ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ப்பாஆஆஆஆஆஆஆஆஆ.. முடியல..

இப்படி ஒரு புரிதல் இருப்பதால் தான் அவர்களுக்கு கோபம் வந்துள்ளது என எண்ணியதும் பாவமா இருக்கு..


சிலர் விரைவில் புரியலாம்,.. சிலர் விடாப்பிடியாக நாங்க ஏன் புரியணும்.. அதெல்லாம் புரிஞ்சுக்கவே மாட்டோம் னு அடம் பிடிக்கலாம்..முயலுக்கு காலே இல்லைன்னு சொல்லலாம்..

பெண்ணுக்குரிய உரிமைகளையே கொடுக்க மறுக்கும் சில ஆணாதிக்கவாதிகள் , மதவாதிகள் இருக்கும்போது இதுவும் அதிசயமில்லை..

இன்னும் காதல் என்றாலே வெட்டி போடும் சமூகம் நம்மிடையே இருக்கு..

என் குடும்பத்திலேயே இந்த வருடம் தான் முதல் காதல் திருமணம் ( சாதி, மத வேறுபாட்டோடு ) பலத்த எதிர்ப்போடு நடந்துள்ளது...

ஏன் எதிர்க்கிறோம் னு பார்த்தா , நாம அடுத்தவங்கள கிண்டல் அடிச்சிருப்போம்.. இப்ப நம்ம டர்ன் வந்துட்டதே.. தாங்க முடியாதே...அதான் ரொம்ப தோல்வியா நினைப்பது...


நாம் இன்னும் அறிந்துகொள்ளவேண்டிய உளவியல் கூற்று அனேகம் உள்ளது.. குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல் , "கற்போம் கற்பிப்போம்.."

---------------------------------------------------


என் குழந்தை சின்னவரிடம் ,

" பெரியவங்க சொன்னா கேட்கணும். அவங்களுக்கு நிறைய தெரியும் , அனுபவம் இருக்கும் இல்லையா.?."

" எனக்கும் நிறைய தெரியும்.. Parts of the Computer , CPU is the brain.. இப்படி எல்லாமே.. அது உங்களுக்கு தெரியுமா?.. "

" அவ்வ்வ்.. இதெல்லாம் யுகேஜி ல கத்துகிட்டியா.. நீ பெரிய ஆளு தாம்பா... "

" இப்ப புரிஞ்சுதா.. அதனால நான் சொல்றதையும் நீங்க கேளுங்க..."

" சரிங்க ஐயா..."

---------------------------------


கோச்சுக்கவா முடியும் குழந்தைகளிடம்?.....



--------------------------

கொஞ்சம் மெச்சூரிட்டி உடையவர்களுக்கு../அடைய விரும்புபவருக்கு மட்டும்...

http://www.psychologytoday.com/blog/sex-dawn/201003/anti-marriage-counseling


Readers with a more open-minded disposition might enjoy this interview with Dr. Perel.



படம் : நன்றி கூகுள்..






..

19 comments:

Bibiliobibuli said...

இதுக்கெல்லாம் தீர்ப்பு சொல்ல நான் நாட்டாமை அல்ல. ஆனாலும் என் கருத்து, இது சம்பந்தப்பட்ட இரண்டுபேருடைய முடிவு. முடிவெடுக்கும் அறிவு, பக்குவம், எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளை சந்திக்கும் மனோதிடம் எல்லாம் இருக்குமானால், அது அவர்களின் சொந்த முடிவு. ஆனால், அதற்குரிய சமூக, பொருளாதார சுதந்திரம் மற்றும் அங்கீகாரம் ஆணைப்போலவே பெண்ணுக்கு இருந்தால் அது ஆரோக்கியம்.

சமூகம், பெற்றோர், குடும்பம் என்கிற கோணத்தில் பார்த்தால் இது கருத்து அல்லது தீர்ப்பு சொல்ல முடியாமல் நீண்டுகொண்டே போகும் நெடிய இடர்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

வாங்க ரதி..


// இது சம்பந்தப்பட்ட இரண்டுபேருடைய முடிவு. முடிவெடுக்கும் அறிவு, பக்குவம், எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளை சந்திக்கும் மனோதிடம் எல்லாம் இருக்குமானால், அது அவர்களின் சொந்த முடிவு. ///

அழகாக சொன்னீர்கள்..

// ஆனால், அதற்குரிய சமூக, பொருளாதார சுதந்திரம் மற்றும் அங்கீகாரம் ஆணைப்போலவே பெண்ணுக்கு இருந்தால் அது ஆரோக்கியம். //

இதுதான் எமது ஆதங்கம்..

பெண் முன்னேற்றம் என்பதை நாட்டின் முன்னேற்றமாய் காணணும்.

துமிழ் said...

மீண்டும் மீண்டும் உங்களைப் போன்ற தனி மனிதர்களின் கருத்துக்களையே ஆதாரமாக முன் வைக்கும் உங்கள் அறியாமையை என்ன சொல்வது?
லிவ்விங் டுகெதர் ஜோடிகளிடம் உத்தியோக பூர்வமாக எடுக்கப்பட கருத்தாய்வுகள் நிறைய இருக்கின்றன.அப்படியான உத்தியோக பூர்வமான
கருத்துக்களையே நீங்கள் ஒரு பொதுத் தளத்திலே முன் வைக்க வேண்டும் .இது கட்டளை அல்ல சின்ன அறிவுரை.

அந்தத் தளம் எந்தளவுக்கு உத்தியோக பூர்வமானது என்பதிலும் எனக்கு சந்தேகமே, காரணம் அவர்கள் ஆரம்பமே இவ்வாறு இருக்கிறது,

Clinical psychology is far less scientific than many psychologists would have you believe.//

எழுதி இருப்பது உளவியல் நிபுணர். அவருக்கு கிளினிக்கல் மன நல மருத்துவம் பற்றி இவ்வாறு சொல்லும் அனுபவம் இருக்காது.
கிளினிக்கல் மன நலம் என்பதும் உளவியல் என்பதும் வேறு வேறானவை.

இப்படி பிழையான உத்தியோக பூர்வமற்ற தகவல்களை கொடுப்பதை விட்டு ஆக்கபூர்வமாக ஏதாவது சிந்தியுங்கள்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

மீண்டும் மீண்டும் உங்களைப் போன்ற தனி மனிதர்களின் கருத்துக்களையே ஆதாரமாக முன் வைக்கும் உங்கள் அறியாமையை என்ன சொல்வது?//

அன்பின் துமிழ் , இது ஏதும் ஆதரமோ , விவாதமோ அல்ல..

இது ஒரு மாற்றுப்பார்வை , நாம் இதுவரை நினைத்ததிலிருந்து அவ்வளவே..

எண்ணங்கள் 13189034291840215795 said...

உத்தியோக பூர்வமாக எடுக்கப்பட கருத்தாய்வுகள் நிறைய இருக்கின்றன.அப்படியான உத்தியோக பூர்வமான
கருத்துக்களையே நீங்கள் ஒரு பொதுத் தளத்திலே முன் வைக்க வேண்டும் .இது கட்டளை அல்ல சின்ன அறிவுரை.//

இன்னும் நிறைய வாசிக்கணும்..

நேரமிருக்கும்போது அதையும் செய்கிறேன்..கண்டிப்பாக..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Clinical psychology is far less scientific than many psychologists would have you believe.//

எழுதி இருப்பது உளவியல் நிபுணர். அவருக்கு கிளினிக்கல் மன நல மருத்துவம் பற்றி இவ்வாறு சொல்லும் அனுபவம் இருக்காது.
கிளினிக்கல் மன நலம் என்பதும் உளவியல் என்பதும் வேறு வேறானவை. //

Good therapists understand this and approach each clinical situation with openness and compassion that allow them to see the world through their client's eyes as much as possible.

இதுதான் அவர்கள் சொல்ல விரும்புவது..

பிரச்னையை /ஆட்களை பொறுத்து உளவியல் மருத்துவம் உபயோகப்படுத்தப்படுகிறது இங்கே..

மேலும் இது முற்றிலும் வேறான சப்ஜெக்ட்..

தம்பதியினருக்கிடையிலுள்ள புரிதல் , நிஜம் பற்றி..

The underlying point of Druckerman's book (and Perel's, and ours) is that these are conclusions we choose. We choose how to configure our marriages. We choose whether or not to tolerate one behavior or another.

எண்ணங்கள் 13189034291840215795 said...

வினோத் கமெண்ட் துமிழ் அவர்களுக்கும் இங்கும். புரிதலுக்கு..

--------------------------------------------------

Subject: Re: லிவ்விங் டுகதர் - ஒரு சமூகச் சீர்கேடு.

-------

சாரி டாக்டர்.
அனானிக்கும் ,ரோகினிகுன் பதில் கமேண்ட் போட்டேன் அன size கொஞ்சம் அதிகமாகி விட்டது.. என் பதில் கமேண்ட்..

4096 எழுத்து தான இருக்கலாமாம்.. அதான் மெயில் போடரேன்..
ரொம்மத்தான் எழுதிட்டனொ ?
============
//...அனானியா வந்து போனாலே போன் நம்பர் கேட்பீர்களா?இந்தச்
சமூகத்திரை கிழிபட வேண்டும்..//

இல்ல... அனானியா வந்த்போன எல்லரிடமும் போன் நொ கேட்கல..
லிவிங் டு கேதர் தான் சரின்னு சொல்லரிங்க இல்ல... அப்ப அத செஞ்சு பார்ப்போம்.. அது என்னபா .. லிவ்விங் டு கொதர் சரி.. அனா அது அடுத்தவன் வீட்டு பொண்ணுக்குதான் .. இது தான் உஙக நிலைப்படா?

ஒரு விஷயம் சரின்ன ..ஏன் அத உஙக வீட்டுல செய்ய கூடாது ?
அதான் கேட்டேன்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

வினோத் கமெண்ட் துமிழ் அவர்களுக்கும் இங்கும். புரிதலுக்கு..

-----------


//..திரும்பவும் ஆண் மேல் , பெண் கீழ் என்ற எண்ணமே வெளிப்படுகிறது,
ஏன் அந்த பொண்ணு இவன் ஆகாது ஆப்படின்னு தூக்கி போட்ருக்க கூடாது, அது என்னங்க விதவை , வேசி , வாழாவெட்டி எல்லாமே பெண்களுக்கு மட்டுமே ....//

பெண் உரிமைன்ன என்னங்கரது.. ஆண்களுக்கு மட்டும் இல்ல பெண்களுக்கும் புரியல.

பெண் உரிமைங்கரது.. ஆண்கள் செய்யர எல்ல தப்பையும் செய்யுர உரிமை அப்படின்ன.. அது இப்பொ இருக்க்ரத விட மோசமான நிலைக்குதான் பொண்ணுஙகள கொண்டு சேர்க்கும்.


எது அவசியாமாதோ, எது விலை உய்ர்ந்தது. அரிதானது அத பத்திரமாதான் வைக்கனும்..

தங்கத்தை இரும்பு பெட்டியில் வச்சு இருக்க்ஙக் .. அப்ப இரும்புக்கு இருக்கும் சுதந்திரம் தங்கத்துக்கு இல்லை இத்க்கு என்ன பண்ணலாம் ?

பெண் .தாய் .இந்த சமுகத்துக்கு தேவை . உங்கள்க்கே தெரியும்..
தந்தை இல்லாமல் எத்தனை தாய்மார்கள் குழந்தைகளை வளர்த்து இருக்கஙக.. அதெபொல்
தாய் இல்லமல் எத்தனை
தந்தைமார்கள் குழந்தைகளை வளர்த்து இருக்கஙக.. பர்த்திங்கன. புரியும்.

இது இல்லமல் 0 - 5 வயதுவரை குழந்தைகளுக்கு தாய் தந்தை நெருக்கம் மிக அவசியம். அதுவும் தாயின் அரவணைப்பு மிக அவசியம்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

வினோத் கமெண்ட் துமிழ் அவர்களுக்கும் இங்கும். புரிதலுக்கு..

-----------

லிவிங் டு கொதர் எதொ வெளிநாட்டு இறக்குமதி இல்லை. பேர் வேண்டுமானல் இம்பொர்டட் இருக்கலாம் ஆனா சரக்கு மிக பழய லோக்கல் சரக்கு தான்.

மனித இனம் தோன்றின காலத்துல இருந்து இயங்குன பல சமூக அமைப்புகளை ஆய்வு பண்ணின இது புரியும். தாய் வழி சமுகம், குழு சமுகம் இப்படி பல.

இப்பொ நாம் இருக்குறது தந்தைவழி சமுகம். ஜனநாயகம் மாதிரி தான் இது. ஆதாவது இதுல குறையே இலலைன்னு இதை தேர்ந்து எடுக்கல.

ஆனா இதைவிட குறைந்த குறைகள் இருக்கர முறை இல்லை அதனால இதை தேர்ந்து எடுத்து இருக்கோம்.

தாம்பத்திய உறவுல பெண் ரொம்ப முக்கியம். ஜோதிடத்துல பார்த்திங்கனா பொண்ணுக்கு ஆண் ஜாதக்க்ம் பொருந்துதான்னுதன் பார்ங்க.

உற்வுல பொண்ண்க்கு நீண்டக்கால துணை தேவை. நீண்ட நேரமில்ல.. நீண்ட காலம். ஒரெ முறையில் கூட பெண் கருவுறும் வாய்ப்பு இருக்கு. அத வளர்த்தாலும் கலைத்தாலும் பெண்ணுக்கு உடல் & மன ரீதியாக் 100% பாதிப்பு, ஆனா ஆணுக்கு அப்படி எதுவும் இல்லை.
வேணும்னா உணர்வு ரீதியான பாதிப்பு இருக்கலாம்.

ஆண் நான் அவன் இல்லைனு சொல்லிடலாம் . கர்ப்பமான பொண்ணு நான் அவள் இல்லைனு சொன்ன சரியா போய்டுமா?


அபர்சன் இருக்கலனு சொல்லலாம். ஆனா அதை பண்ணி பார்த்தா தான் அத விளைவுகள் தெரியும். எங்க பக்கது வீட்டு அம்மா 3 முறை அபார்சன் பண்ணினாஙக. இப்பொ 40 வயசு. இருமினால் சிறுநீர் தனா வருது. உடல் ரொம்ப பலவீனமா இருக்குனு சொல்லுராஙக. இப்பொ என்ன பணண முடியும் ?

பொண்ணுக்கு பாதிப்பு அதுவும் 100% பாதிப்ப்பு , திரும்பவும் பழய நிலைக்கு வ்ர முடியாத பாதிப்பு இருக்கு அதனால தான். இந்த பழய சமூக அமைப்பு இதை விட திருமணமே சிறந்ததுன்னு எத்துகிட்டங்க.

தப்பு பண்ண வாய்ப்பு கிடைச்ச ...
மனச தொட்டு சொல்லுஙக. நம்மை அடையாளம் தெரியாது, என்ன தப்பு பண்ணினாலும் பிடிபட மாட்டோம்னா எத்தனை பேர் யோக்கியமா இருப்போம் ? இந்த குழந்தை என்னால வந்ததுன்னு உண்மையை சொல்லி ஆயுள் வரை பராமரிக்கும் பொருப்பை ஏற்போம் ? வேண்ணா 1/100 இருக்கலாம்.

அதனால பொணகளுக்கு சில கட்டுபாடு இருக்கரது நல்லது தான்.


நல்லது யாருக்குனா அந்த பொண்களுக்கும் அவங்க எதிர் கால குடும்பத்துக்கும் தான்.

ஆனால் பொண்ணுகள கட்டுப்படுதறது அவ்வளவு சுலபம் இல்லை. சரியே தப்போ தான் நினைததை செய்தே ஆக் வேண்டுனுகிறது பல பொண்கள் பண்ணுற விஷயம் . திருமணம் ஆன ஆண்கள் இதை நல்லா தெரிஞ்சு இருப்பங்க.

சமுகத்தில 99/100 பயப்படும் விஷ்யம் மத்தவங்க என்ன சொல்வங்க்க அப்ப்டிங்கர சமுக மதிப்பீடு தான். போலிசுக்கு கூட இந்த அளவு பயபடுறது கிடையாது.

அதனால் இந்த பெயர்கள்..

"//... விதவை , வேசி , வாழாவெட்டி ....//
பொண்களிடம் சமுக பயத்தை ஏற்படுத்தி..அதிக பட்ச பெண்களை சரியான பாதையில் வைத்திருக்க உதவும். சம்பந்தபட்டவஙகளுக்கு அது ரொம பெரிய சஙகடம் தான். ஆன கீதையில் கிருஷ்ணர் சொன்னபடி ஒரு குடும்பத்தை காப்பற்ற ஒருவனை அழித்தால் தான் முடியும்னா அழிக்கலாம். அதுவும் ஆறம் தான். அதேபொல் இந்த பெயர்களால் சில பொண்கள் பாதிக்க படுவாங்கதான். ஆன சமுக பயம் இருந்தா தான் எதிர்கால் சமுதாம் உருப்படியா இருக்க முடியும்.

இது பெண் சுதந்திரத்த்க்கு எதிரனது அல்ல.

குழந்தை எப்பவும் இனிப்பு தான் சப்பிடுவேன்னு சொல்லும் ஆன தாய் சப்பிட கூடாதுன்னு சொன்ன .. தாய் குழந்தை சுதந்திரத்துக்கு எதிரானவளா?

அதுபோல தான் இதுவும்.



============

எண்ணங்கள் 13189034291840215795 said...

எங்க பக்கது வீட்டு அம்மா 3 முறை அபார்சன் பண்ணினாஙக. இப்பொ 40 வயசு. இருமினால் சிறுநீர் தனா வருது. உடல் ரொம்ப பலவீனமா இருக்குனு சொல்லுராஙக. இப்பொ என்ன பணண முடியும் ?//

திருமணம் செய்தவரா அல்லது லிவிங்-டுகெதரா?..

எண்ணங்கள் 13189034291840215795 said...

"//... விதவை , வேசி , வாழாவெட்டி ....//
பொண்களிடம் சமுக பயத்தை ஏற்படுத்தி..அதிக பட்ச பெண்களை சரியான பாதையில் வைத்திருக்க உதவும். சம்பந்தபட்டவஙகளுக்கு அது ரொம பெரிய சஙகடம் தான். ஆன கீதையில் கிருஷ்ணர் சொன்னபடி ஒரு குடும்பத்தை காப்பற்ற ஒருவனை அழித்தால் தான் முடியும்னா அழிக்கலாம். அதுவும் ஆறம் தான். அதேபொல் இந்த பெயர்களால் சில பொண்கள் பாதிக்க படுவாங்கதான். ஆன சமுக பயம் இருந்தா தான் எதிர்கால் சமுதாம் உருப்படியா இருக்க முடியும்.

இது பெண் சுதந்திரத்த்க்கு எதிரனது அல்ல.//

வினோத் ,

ஆணுக்கு எந்த கெட்ட பயரும் இல்லாமல் பெண்ணுக்கு மட்டும் சூட்டும்பொழுது அவள் அதை எதிர்ப்பாள்தான்.

மேலும் இது ஆணுக்கும் நல்லதல்ல..

" நீ மேன்மையானவன் . பெண்ணை அடிமைப்படுத்த பிறந்தவன் "என சொல்வது ஒரு ஆணை ஊனமாக வளர்ப்பதற்கு சமம்..

அதே எண்ணத்தில் வளரும் ஆணால் ஒரு பெண்ணை அவள் சுதந்திரத்தை புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்த முடியாதபடி ஊனப்படுகிறான்..

பெண் ஒரு சக மனுஷி. அவளுக்கும் உணர்வுகள் உண்டு.. சம உரிமை தரணும் என்றே சொல்லி வளர்ப்போம். ஆணை ஆணாக...மனுஷனாக...

துளசி கோபால் said...

இன்னும் குகைகளில் வாழும் ஒரு சமூகத்தில் திருமணம் என்ற ஒன்று இல்லவே இல்லையாம். மனசுக்குப் பிடிச்சத் துணையுடன் வாழ்க்கை நடக்குது. எங்கே? நம் தமிழ்நாட்டில்தான்.

விஜய் டிவியில் நிஜம் என்ற தொடரில் காமிச்சாங்க.

பழைய காலத்து காந்தர்வ விவாஹம் தாலிகட்டி, அந்தக் கலியாணத்தை ரெஜிஸ்தர் செய்தா நடந்துச்சு?

ஆம்பிளைகள் ஒழுக்கமில்லாம போக ஆரம்பிச்சவுடந்தான் இந்த தாலிகட்டும் கலியாணம் நடைமுறைக்கு வந்துருக்குமோ? அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டி அதன்மூலம் இவனைக் கட்டிப்போட்டு வச்சுருக்கும் ஐடியா:-))))

Unknown said...

உண்மைதான்.

துமிழ் said...

Good therapists understand this and approach each clinical situation with openness and compassion that allow them to see the world through their client's eyes as much as possible.
//

what im saying is the person who made this comment is not a clinician. he is a therapiest. he has no chance to get enough clinical experience to comment on clinical situation.

please try to understand what im trying to say.
வெள்ளைக் காரன் எதைச் சொன்னாலும் சரிதான் என்பதையும், அதையே மாற்றுக் கருத்து என்று முன் வைக்கும் மனநிலையும் முதலில் நம் சமூகத்தில் மாற வேண்டும்.

http://thavaru.blogspot.com/ said...

இருவருக்குமான புரிதல் தாங்க இதெல்லாம். இன்றைக்கும் தாலி கட்டிய ஒரே காரணத்திற்காக விருப்பம் விருப்பம் இல்லையோ வாழ்ந்து தன்னை மடித்து கொள்ளும் பெண்கள் ஏராளம்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

துளசி கோபால் said...

இன்னும் குகைகளில் வாழும் ஒரு சமூகத்தில் திருமணம் என்ற ஒன்று இல்லவே இல்லையாம். மனசுக்குப் பிடிச்சத் துணையுடன் வாழ்க்கை நடக்குது. எங்கே? நம் தமிழ்நாட்டில்தான்.

விஜய் டிவியில் நிஜம் என்ற தொடரில் காமிச்சாங்க.

பழைய காலத்து காந்தர்வ விவாஹம் தாலிகட்டி, அந்தக் கலியாணத்தை ரெஜிஸ்தர் செய்தா நடந்துச்சு?//

அதானே?...:)

// ஆம்பிளைகள் ஒழுக்கமில்லாம போக ஆரம்பிச்சவுடந்தான் இந்த தாலிகட்டும் கலியாணம் நடைமுறைக்கு வந்துருக்குமோ? அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டி அதன்மூலம் இவனைக் கட்டிப்போட்டு வச்சுருக்கும் ஐடியா:-))))//

:))


ஹாஹா சரியா சொன்னீங்க..

எண்ணங்கள் 13189034291840215795 said...

தவறு said...

இருவருக்குமான புரிதல் தாங்க இதெல்லாம். இன்றைக்கும் தாலி கட்டிய ஒரே காரணத்திற்காக விருப்பம் விருப்பம் இல்லையோ வாழ்ந்து தன்னை மடித்து கொள்ளும் பெண்கள் ஏராளம்.//

அதேதாங்க ..

தான் அடிமைப்பட்டிருக்கோம் என்றே தெரியாமல் வாழும் சாபம்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

what im saying is the person who made this comment is not a clinician. he is a therapiest. he has no chance to get enough clinical experience to comment on clinical situation.

please try to understand what im trying to say.
வெள்ளைக் காரன் எதைச் சொன்னாலும் சரிதான் என்பதையும், அதையே மாற்றுக் கருத்து என்று முன் வைக்கும் மனநிலையும் முதலில் நம் சமூகத்தில் மாற வேண்டும். //

நிச்சயமாக..

ஒரு தெரபிஸ்ட் அவர் பார்வையில் சொல்லியிருக்கார் . மட்டம் தட்டவில்லை..

Clinical psychology is far less scientific than many psychologists

அறிவியல் பார்வை/ஆராய்ச்சிகள் கொஞ்சம் கம்மியா..என்று மட்டுமே சொல்கிறார்.

ஏனெனில்

"research psychologists continue to make fascinating discoveries about how the brain works, '

அவர்கள் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெறுது..

ஒவ்வொரு பேஷண்டும் ஒவ்வொரு விதமாய் தேவைக்கேற்ப அணுகப்படுகிறார்கள் என்பது அவர் வாதம்..

இது சரிதானே?.

எல்லார் பிரச்னைக்கும் ஒரே தீர்வு இருப்பதில்லைதானே?..


மற்றபடி வெள்ளைக்காரன் சொன்னதுக்காக நாம் தலையாட்டுவதில்லை.. ஏனெனில் அவர்களுக்குள்ளேயே மாறுபடுகின்றனரே இன்னும்...

எல்லாம் அலசுவோம்.. கற்போம்..

மற்றொன்று தெரபிஸ்ட் தான் சிறப்பு என்றோ , க்ளினிகல் சைக்காலஜி மட்டம் என்றோ யாரும் தீர்ப்பெழுத முடியாது..

அவரவர்க்கு அது அது..

RMD said...

நல்ல பதிவு,
வாழ்த்துகள்.
ஒன்றி வாழ்தல் (பேர் கண்டு பிடித்து விட்டார்கள். இதனி குறித்த உளவியல் ரீதியான் புரிதல்,விளக்கங்கள் தேவைஇல்லை.

என்னுடைய புரிதல் படி இது ஒரு சாதி,மத மறுப்பு, காதல், பதிவு திருமணத்திற்கு மற்றாக காதலிப்பவர்களால் தேர்ந்தெடுக்கப் படும் முறை.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் திருமண பதிவு மற்றும் சட்ட ரீதியான பாதுகாப்பு மட்டுமே ,அதனை இந்த வாழ்க்கையில் ஈடுபட்டு உள்ளவர்கள், எப்படி மேற்கொள்ளுகிறார்கள் என்பதை விளங்க முயலவதே சரியான பார்வை. சிலர் அவர்கள் தரப்பு வாதங்களை வைப்பார்கள்,அவர்களை புரிந்து கொள்வோம்.

இதை உன் வீட்டில் நடந்தால் அனுமதிப்பாயா எனபதும் இதை வெளிப்படையாக விவாதிப்பவர்கள் மேல் தொடுக்கப் படும் ஒரு கேள்வி.

ஒரு பாதிக்கப் படுபவர்களுக்க்காக பரிந்து பேசினால் நீ பாதிக்கப் பட்டாயா? உனக்கு ஏன் இந்த அக்க்கறை? என்பது எல்லாம் பழைய கேள்விகள்.

ஒருவர் ஒரு காரியத்தை அதன் மீதான புரிதலுடன், எந்த விளைவையும் சந்திப்பேன் என்று செய்தால் இதனை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை.

கருத்து அளவில் உள்ள பல விஷயங்கள் நடமுறைக்கு வரும்போது மட்டுமே அது பயன் தருமா இல்லையா என்று கூற முடியும்.இதனை ஒன்றி வாழ எத்தனிப்பவர்கள் புரிந்து கொண்டார்களா.இந்த விவாதங்கள் அவர்களுக்கு மாற்று க்கருத்து கொடுக்கலாம்.

இது சகலாச்சாரத்திற்கு எதிரானது என்று சொன்னால் சாதி,மத ,மறுப்பு பதிவு திருமணமும் எதிரானதுதான்.

இபோது அவர்கள் தங்கள் திருமணத்தை பதிவு செய்யப் போவதில்லை என்பதுதான் பிரச்சினையா?

அவர்கள் எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் பிரச்சினைகள் பற்றிதான் விவாதமா?

இப்போது சமூகத்தில் என்ன நடைமுறை வெளிப்படையாக உள்ளதோ அதற்கு எதிராக எதையும் விவாதிக்க கூடாது என்ற அன்புக் கட்டளையா?