Monday, November 22, 2010

கோ-ஹபிடேஷன் /லிவிங்-டுகெதர் என்ற இணைந்து வாழ்தல் - 3.

லிவிங்-டுகெதர்











































மனிதர்கள் பலவிதம்..சிலர் நாத்திகர் சிலர் ஆத்திகர்..சிலர் நடுவில்..

சில்ர் பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்வோம்..

சிலருக்கு பிறப்பே அற்புதம்.. நாம் அனுபவிப்போம்..அனுபவித்ததை பகிர்வோம்.

சிலருக்கு நான் வாழ்ந்ததுபோல் எல்லாரும் வாழட்டுமே...

சிலர் எதிர்மறை எண்ணம், சிலர் நேர்மறை எண்ணம் , மீதமுள்ளவர், நிதர்சன எண்ணம் கொண்டவர்கள்..

சிலர் எதிலும் துணிவு, சிலர் எப்போதும் பயம், சிலர் ஜாலி, சிலர் கோபம் .

இவற்றில் பல விஷயம் ஜீன்களிலேயே தீர்மானிக்கப்படுகிறது.. சிலது வளர்ப்பு முறையிலும் மீதம் சூழலிலும்..



இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..இப்படி பலவேறு குணநலன்களும் ரச்னையும் உள்ளவன் மனிதன்..எல்லாரையும் ஒரே விதத்தில் கட்டுப்பாடிட்டு அடைக்க முடியாது...



திருமணம் என்பது இருவர் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து பிள்ளைகள் பெற்று மகிழ்ச்சியை இன்னும் வளர செய்வது..

இந்த மகிழ்ச்சி என்பது பணமோ, புகழோ , அழகோ, படிப்போ, நல்ல குணமோ, வீரமோ ,காமமோ எதுவோ , ஒன்றோ , பலதோ அடிப்படையாக கொண்டிருக்கலாம்..

ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்தலில் பெண்ணே கரு சுமந்து பிள்ளை வளர்ப்பதில் அதிக பங்கேற்பதால் , அவளின் முதன்மையான தேவை பாதுகாப்பு..

பாதுகாப்பு என்பதிலும் பல விஷயத்தை அடிப்படையாக கொண்டது..

ஆனால் ஆணுக்கு திருமண பந்தத்தில் முக்கியமாக உடல்தேவை என்பது இயற்கையாகவே ஏற்பட்டது..


அதற்காக தன் வருங்காலத்தை , குழந்தை வளர்ப்பை சட்டை செய்யாதவனுமல்ல..

ஆக இருவர் இணைந்து இன்ப துன்பங்களில் பல்லாண்டு ஒரே இடத்தில் இருந்தும் , குழந்தைகள் பெற்றும் , அவர்கள் பிரச்னைகளை சமாளித்து வெற்றிகரமாக

, நிம்மதியாக வாழணும் என்றால் அவர்கள் பல விஷயங்களை முன்கூட்டியே திட்டமிடணும்..

எதிலெல்லாம் ஒத்து போகலாம் எதெல்லாம் அனுசரிக்கணும், விட்டுக்கொடுக்கணும் என இருவருமே இணைந்து திட்டமிடல் வேண்டும்..

ஆனால் இளவயதில் ஹார்மோன் தொந்தரவால் கண்டதுமே சிலருக்கு காதல் ஏற்படுகின்றது..


என்ன காரணம் என தெரியாமலேயே ஒருவரை பிடித்தும்விடுகின்றது..இவர்/ள் தான் தனக்கு பொருத்தமான துணை என மனம் நினைக்கின்றது..

திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார்கள்.. ஒன்றாக வாழ தொடங்குவார்கள்.. அப்போதுதான் இருவருக்குமான அன்றாட வேறுபாடுகள், ரசனைகள் , பழக்கவழக்கங்கள் புரிபடுகிறது..

ஆனாலும் ஏதோ ஒரு காரணி மிக உறுதியாக இருக்கும்பட்சத்தில் ஒத்து வராத ரசனைகளும்கூட , அனுசரித்தோ விட்டுக்கொடுத்தோ போக முடிகிறது..


இப்படி எல்லார் விஷயத்திலும் நடைபெறுவதில்லை..

ஒருவருக்கு உணவு மற்றொருவருக்கு விஷமாக இருக்கும்பட்சத்தில் அனுசரிப்புக்கே அங்கு இடமில்லை..

பிரிய முடிவு செய்வார்கள்.. செலவு செய்த திருமணம் முறிவடையக்கூடாதே என பலர் பிராயாசையால் சில திருமணம் கடனேன்னு தொடரும்.. சில பிரியும்..வலியோடு...

சில துணைகள் தமக்குள் ஒற்றுமை இல்லாவிட்டாலும் பிள்ளைகள், அவர்கள் வாழ்வுக்காக பொறுத்துக்கொண்டு தம் ஆசைகளை கனவுகளை தியாகம் செய்வதுமுண்டு..தவறில்லை.. நல்லதும் கூட.. கட்டாயத்துக்கன்றி , மனமொத்த அனுசரணையாக இருக்கும்பட்சத்தில்....


இப்படி திருமணங்களில் உள்ள பல தவறான விஷயங்களே கோ-ஹேபிட்டேஷன் என்ற முறைக்கு வழிவகுத்திருக்கணும்..

காதலில் விழுந்தால் மட்டும் போதாது , வாழ்ந்து பார்த்து பின் குழந்தை பெறுவதை முடிவு செய்கிறார்கள்..

வாழும்போது மட்டுமே போலித்தனமற்று நிதர்சனமான வாழ்க்கை தெரிய வரும்..அடுத்தவரின் குறைகள் புரியும்...


அதைக்கொண்டே முடிவுகளும் எடுக்கின்றார்கள்:..

இத்தகைய திருமணங்களில் பிரிவு அதிகம் என்பது உண்மை..

ஆனால் எத்தனை நல்லது முன்கூட்டியே பிரிந்துவிடுவது.?.

பிடிக்காத துணையோடு காலத்துக்கும் குழந்தைக்காக மல்லுக்கட்டி , குழந்தைகளையும் நிம்மதியில்லாமல் மனச்சோர்வுக்கு ஆளாக்கி மொத்தத்தில் அது ஒரு மோசமான சமூக சூழலுக்கு வித்திடுவதை விட?..

சில சமூக விரோதிகள் உருவாகுவதைவிட?..


எல்லா திருமணங்களுமே இப்படியான முடிவுதான் என சொல்லவரவில்லை.. காலப்போக்கில் ஒருவரையொருவர் புரிந்து நேசிக்க ஆரம்பித்து வெற்றி பெரும் திருமணங்கள் அனேகமுண்டு..அதுமட்டுமல்ல முன்பின் அறியாதவர்கள் இருவர் திருமணம் ஒரு சுவாரஸ்யமே சாதனைவிரும்பிகளுக்கு .. முக்கியமா இரு துணையும் நல்ல அனுசரணையாக , விட்டுக்கொடுப்பவராய் , அன்பானவர்களாய் இருந்துவிட்டால் அது எப்படியும் வெற்றி பெரும்..

ஆனால் வெளியே பார்க்க நல்ல குணமாய் அமைதியாய் யார் வம்புக்கும் போகாதவராய் இருப்பவரின் நிஜம் ( சைக்கோத்தனம் , கோபம், நோய், உடல்குறை , இத்யாதி ) கூட துணைக்கு மட்டுமே தெரிய வரும்...திருமணத்துக்கு பின்..


எனக்கு தெரிந்த ஒரு பெண் நல்ல அழகி , மென்மையானவர் என வரதட்சணையே வாங்காமல் ஒருவர் மணமுடித்தார். நல்ல வேலை கை நிறைய சம்பளம் என பெருமிதப்பட்டனர் பெற்றோர்.

ஆனால் காமக்கொடூரனாய் இருந்தார்.. எப்போதும் தேவை அவருக்கு.. ஆனால் கார் வாங்கி மனைவியை பெருமையா ஹோட்டலுக்கு அழைத்து செல்வதும் விலையுயர்ந்த பட்டுப்புடவை , நகை , சொத்து வாங்கிதருவதுமாய் வெளி உலகுக்கு நல்ல மனிதனாய் தெரிந்தார்..

முதல் குழந்தை பிறந்தது.. உடனே அடுத்த குழந்தை உருவானது.. அபார்ஷன் செய்தாள்..


அடுத்த சில மாதத்தில் அடுத்த குழந்தை.. அதையும் பெற்றார்

அடுத்து சில அபார்ஷன்கள்..

உடம்பும் மனதும் சீரழிந்து மன நோய் வந்தது.. கொஞ்சம் கொஞ்சமாய் மறதி வர ஆரம்பித்தது..உலகையே வெறுத்தாள்..


அப்பதான் அவள் சீரியஸ்நஸ் புரிந்து மருத்துவ உதவி நாடினர்..

வீட்டில் வேலைக்காரி வைக்க அனுமதியில்லை. ஏனெனில் வீட்டு விஷயம் வெளியே செல்லுமாம்..ஆனால் கணவர் உதவி செய்வார்தான்...

அப்பெண்ணின் அம்மா மட்டும் வந்து உதவ அனுமதி..

இப்படி எத்தனை எத்தனை கதைகள்? .வெளியில் சொல்ல முடியாமல்?..தெரியாமல்..?

ஆனால் இதுபோன்ற கதைகள் என்னதான் கலாச்சார மாற்றம் வந்தாலும் நடைபெறும்..

இது மன துணிவு சம்பந்தப்பட்ட விஷயமும் கூட.. வளர்க்கும்போதே கொடுக்கவேண்டிய துணிவும் தற்காப்பும்..



விவாகரத்தும் எல்லாராலும் செய்ய முடியாது.. பெண்ணுக்கு குழந்தைமேலுள்ள உரிமை ஆணுக்கும் உண்டே..

முக்கியமா குழந்தைகள் ஏன் அந்த பிரிவின் தண்டனையை அனுபவிக்கணும்..?


ஆக நல்ல இல்லறம் , நல்ல குழந்தைகள் , அதனொட்டி நல்ல சமூகம் அமையணும் என்றால் நல்ல திட்டமிடல் கண்டிப்பா இருக்கணும்..

கோ-ஹேபிட்டேஷன் என்ற முறையில் இது சாத்தியமாகிறது.. அதற்காக இதில் இருப்பவரெல்லாம் திருமணமே செய்ய விரும்பாதவரில்லை..


திருமணம் செய்வதர்கான முன்னேற்பாடுதான் இது பலருக்கு..

மற்றும் சிலருக்கு , ' வாழ போறது நாம் இருவரும், மனமொத்த பரஸ்பர நம்பிக்கையிலும் , அன்பிலும்.. இதுக்கெதற்கு ஒரு பேப்பர் ஒப்பந்தம்., செலவுகள்..பரபரப்புகள் ???" என்பதாய் கேள்வி..


இணைந்து வாழ்தல் என்றாலே உடனே காமம் மட்டும்தான் என்றால் அது அலுத்துபோகும் மனமொத்து போகாபட்சத்தில்...

இப்படியான வாழ்வில் பெண்ணுக்குத்தான் அதிக பாதிப்பு என்று பயப்படுகின்றனர் பலர்..

நிஜம்..

பெண்ணுக்கு பாதிப்பு எல்லாவற்றிலும் உண்டு.. திருமணத்திலும் இதே பாதிப்புகள் உண்டு..

இதிலிருந்து தப்பி தனியாகவோ குழந்தையோடோ வரும் பெண்ணுக்கு சட்ட ரீதியாக ஜீவனாம்சம் கிடைக்காதாமே?.. " ********* " , " ***********" , என பட்டம் சூட்டி அவளை அவமதிப்பார்களே?.. சமூகம் அவளை ஒதுக்கி வைக்குமே ?..

இதுபோன்றவற்றுக்கு பயப்படுபவர்கள் தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம்..


இவற்றையெல்லாம் துச்சமென நினைப்பவர் மட்டுமே , எத்தனை குழந்தையென்றாலும் நான் வளர்ப்பேன் தனியாக என துணிபவர் ஈடுபடலாம்..

மேல் நாட்டில் இதற்கு சட்டமும் இருக்கின்றது .நம், நாட்டில் இதுவரை அனுமதி மட்டுமே உண்டு.. ஆனால் ஜீவனாம்சம் கிடைக்க வழி இல்லை ( மஹாராஷ்டிராவில் மட்டும் சில வழிவகை இருப்பதாக தெரிய வந்தது.. உறுதியா தெரியலை ) .


படிக்காமலோ, வேலைக்கு செல்லாமலேயோ கூட துணையை இழந்தவர், விவாகரத்து செய்தவர்கள் பலர் குழந்தை பெற்று வளர்க்கவில்லையா என்ன ?..

அப்படியிருக்கும்போது படித்து தன் சொந்தக்காலில் நிற்பவர்கள் தன் துணை வருங்காலம் பற்றி முடிவெடுக்க முழு உரிமை உண்டு..

அதனால் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு அவர்களே முழு பொறுப்பு என்பதையும் அவர்கள் அறிந்தே இருக்கின்றார்கள்..


லிவிங்-டுகதெரிலிருந்து பிரிவது " ****** " த்தனமாக தெரியுமென்றால் , காதலித்து கைவிடப்பட்டு மற்றொருவனை/ளை மணமுடிப்பது எதில் சேர்த்தி.?

காதல் வயப்பட்டதுமே அவர்களோடு மனதளவில் வாழ்வதில்லையா?.. இல்லையென்றால் மருத்துவரை பார்க்கணும்...

சில போலித்தனமான கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு விதியேன்னு வாழ்வதை விட இவ்வுலகில் ஒருமுறை வாழப்போகிற நாம் நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வழியிருக்குமானால் , அதனால் யாருக்கும் எவ்வித தொந்தரவும் இல்லையென்றால் அதை தேர்ந்தெடுப்பதில் தவறேதுமில்லை..

எல்லா விஷயத்திலும் பாதகமும் இருப்பதுபோல் இதிலும் பாதகமுண்டு.. இதை தன் இஷ்டத்துக்கு தவறாக உபயோகப்படுத்தவும் , ஏமாற்றவும் செய்ய வழியுண்டுதான்... ஏன் காதலிப்பது போல நடித்து ஏமாற்றுவதில்லையா?..


ஆனால் அதெல்லாம் விதிவிலக்குகள் மட்டுமே.. விதிவிலக்குகள் விதியாகாது...

இத்தனை சொல்லியும் எனக்கு திருமணம் என்பதிலும் சடங்குமுறைகள் , கல்யாண விழாக்கள் , சொந்த பந்தங்களிலும் ஒரு சுவாரஸ்யம் இருப்பதாகத்தான் தெரிகிறது..அது என் சொந்த கருத்து மட்டுமே..

இருப்பினும் லிவிங்-டுகெதர் ஒன்றும் மோசமான பயப்படும் விஷயமில்லை என்பதற்கே இந்த விளக்கம்..

லிவிங்-டுகெதரில் நுழைபவர்கள் 100% இல்லற வாழ்வை ஆயுசுக்கும் அதே நபரோடு தொடரணும் என்ற ஆவலில்தான் தொடங்குகின்றார்கள்.. விளையாட்டுக்கல்ல...

அதுமட்டுமல்ல 50 வயதுக்கு மேலுள்ளவர்கள் , விவாகரத்தானவ்ர்கள் ,துணையை இழந்தவர்கள் , பல காரணத்துக்காக மேல்நாட்டில் இணைந்து வாழ்கின்றனர்..

முக்கிய காரணிகள் ,

1. வசதி , எளிது , சிக்கலற்றது..

2. முன்கூட்டியே உறவுமுறை சரிவருமா என பரிசோதித்தல்..

3. சிக்கனம்.( விழா எடுத்து கொண்டாடவேண்டியதில்லை )

4. திருமண ஒப்பந்தத்தில் நம்பிக்கையின்றி தங்களை அதிகமாய் நம்புவது..

5. விவாகரத்து , அதுக்காக நேரம் , சட்டதிட்டம் , பணம் செலவழித்தல் , ஆகியவற்றை தவிர்க்க..

6. சமூக கேள்விகளை தவிர்க்க ( இது வயாதானவர், முக்கிய புள்ளி , போன்றோர் ) .

எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு விவாகரத்தாகவே 5 வருடம் ஆனது..:(. அதற்குள் அவர் குடும்பம் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது.

இக்கட்டுரை ஒரு அறிமுகம் மட்டுமே.. பலர் இது ஏதோ பேராபத்தை , கலாச்சார சீரழிவை ஏற்படுத்த வந்ததாய் நினைத்து வருந்துவதால் சில புரிதல்கள் மட்டுமே...


நிஜமான , பயத்துக்குறிய கலாச்சார சீரழிவுகள் தொலைக்காட்சியிலும் ஊடகத்திலும் இப்ப பதிவுலகிலும் ஆபாசம் என்ற பேரிலும் , நடனம் , சீரியல் , வன்முறை என்றும் வந்துகொண்டுதானிருக்கிறது...


அதுதான் நம் குழந்தைகளுக்கு ஆபத்து...நம் கலாச்சாரத்தில் ரிஸ்க் எடுக்க ஊக்குவிக்காமல்/பாராட்டாமல் பாசம் என்ற பயத்திலேயே குழந்தைகளை வளர்த்துவிடுகிறோம்..

புயலும் சீற்றமும் இருக்கும் கடலிலே கப்பலோட்டக்கூடிய மாலுமியே சிறந்தவன்.. நம் பெண்களுக்கு அதுதான் மிக தேவை..

தனியே நம் நாட்டில் கெளரவமாக வாழக்கூடிய சூழல் பெண்ணுக்கு வரணும்.. ஏனெனில் பெண்ணுக்கு மட்டுமே " **** , ****** " என்ற பட்டங்களை கொடுத்து பழகியுள்ளோம்.. அதையெல்லாம் சட்டை செய்யாமல் மற்றவருக்கு முன்னுதாரணமாக நம் பெண்களை வளர்ப்போம்..தேவையில்லாமல் பெண்களுக்கு பட்டம் கொடுத்தால் அதுக்கு மரியாதை இல்லாமல் போய்விடும்..கெட்ட வார்த்தைகளை கேட்டு கேட்டு பழகும் துணிவை வழங்குகின்றீர்கள்..அவ்வளவே..:)

பாலியல் தொழில் ஒழிக்கவே முடியாது.. உலகிலேயே மிக பாவப்பட்ட தொழில் அது.. கோடி கொட்டிக்கொடுத்தாலும் நம் வீட்டு பெண்கள் செய்வார்களா ?.. ஆசை துணைக்கே அலுத்துபோகும் பெண்கள் இருக்கையில் , பாலியல் தொழிலை கண்ட சாக்கடை ஆணுக்கும் பறிமாறுகிறாளே.. நோய் வாங்கி நோய் தீர்க்கிறாளே..? பாலியல் தொழிலாளி குழந்தைகளுக்கு நாம் ஒரு துரும்பாவது நகர்த்தியிருப்போமா?.. ஆனா வாய்கிழிய பேசுவோம் கேவலமாக ...!!

வாழ்நாளெல்லாம் அவளுக்கு ஒருவர் துணைக்கு இருந்தே ஆகணும் என்ற பயசூழலை தவிர்ப்போம்... பாலியல் ஆபத்துகளை , அதை எதிர்க்கும் துணிவை பெண் குழந்தைக்கு கொடுப்போம்...



மாற்றங்களில் உள்ள நல்லவற்றை சிந்தித்து ஏற்க பழகுவோம்... ஏனெனில் நமக்கு பிடிக்காவிட்டாலும் புதியன , மாற்றங்கள் வந்தே தீரும்...

சில குறிப்புகள் சங்க காலத்திலிருந்து .

" காந்தர்வம் என வைதிக மரபில் குறிப்பிடப்படுகின்ற திருமண முறை எந்தவித நிர்ப்பந்தமும் பொய்மையும் பாசாங்குகளுமற்ற உறவு முறையாகும். உத்தரகுரு என்றும் போகபூமி என்றும் புராணங்களில் குறிப்பிடப்படும் நாட்டில் இத்தகைய உறவுமுறை இருந்தது எனத் தெரியவருகிறது.6 தமிழ் மரபில் களவு மணம் எனக் குறிப்பிடப்படுவதை வைதிக மரபில் நிலவிய காந்தர்வ மணத்தோடு ஒப்பிடுவதுண்டு.7 களவு என்ற சொல்லே கள்ளத்தனமாக, பிறர் அறியாமல் மேற்கொள்ளப்படும் காதல் ஒழுக்கம் எனப் பொருள்படும். களவு மணமே தமிழ் நெறி என்று கூறும் அளவிற்குக் களவு மணத்திற்குச் சங்கப் புலவர்களிடையே குறிப்பிடத்தக்க அங்கீகாரம் கிட்டியிருந்தது. இந்நெறி காமன் வழிபாட்டோடு தொடர்புடையது என்பதற்குப் பிற்காலக் காப்பியமாகிய சீவகசிந்தாமணி அசைக்கமுடியாத சான்றாகத் திகழ்கிறது. சீவகனும் சுரமஞ்சரியாரும் காமன் கோட்டத்துக் கடியறை தன்னில் இரகசியமாகச் சந்தித்துக் கூடி மகிழ்ந்ததை ”இன்றமிழ் இயற்கை இன்பம்” நுகர்ந்தார்கள் எனச் சீவகசிந்தாமணி (பா. 2003,2055,2063) குறிப்பிடுகிறது. "

நன்றி : http://www.sishri.org/kaaman.html

----------------


பழங்குடியினர் திருமணத்தில் சில முறைகளைக் கடைபிடித்து வருகின்றார்கள். பொதுவாக ஆணோ, பெண்ணோ மணந்து கொள்ள விரும்பினால் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பழகவிடும் பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. இருவரையும் காட்டிற்குள் அனுப்பிவிடுகிறார்கள். தங்களுக்குள் மனம் விட்டுப் பேசி தனியே தங்கி சில நாட்கள் பழகுகின்றனர். பின்னர் திரும்புகின்ற போது பெரியோர்களின் முன் நிறுத்தப்படுகின்றனர். இருவரும் மனம் ஒத்து மணந்து கொண்டால் மட்டுமே கணவன் மனைவியாகலாம். விரும்பாவிடில் இருவரும் பிரிந்து வேறு ஒருவரை (இருபாலரும்) மணக்கலாம்.

ஒரு பெண்ணை மணக்க விரும்பும் ஆடவனைப் பெண் வீட்டிற்கு அனுப்பி அங்கேயே இருந்து உழைத்து வர வேண்டும். சரியான தகுதியுள்ள மாப்பிள்ளை என்று பெண்ணும், பெண் வீட்டாரும் கருதினால் மட்டுமே பெண் கொடுக்கப்படும் இல்லையேல் பெண் கொடுக்க மறுத்து விடுவார்கள். ஆண்டுக்கணக்கில் உழைப்பவரும் உண்டு.


http://www.eegarai.net/-f15/-t7337.htm?theme_id=13515


படம் : நன்றி கூகுள்.

37 comments:

Robin said...

//ஆக நல்ல இல்லறம் , நல்ல குழந்தைகள் , அதனொட்டி நல்ல சமூகம் அமையணும் என்றால் நல்ல திட்டமிடல் கண்டிப்பா இருக்கணும்..

கோ-ஹேபிட்டேஷன் என்ற முறையில் இது சாத்தியமாகிறது.. //

எப்படி சாத்தியமாகிறது?

ஜோதிஜி said...

From peaceful minds do great ideas flow

வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி ஜோதிஜி..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger Robin said...

//ஆக நல்ல இல்லறம் , நல்ல குழந்தைகள் , அதனொட்டி நல்ல சமூகம் அமையணும் என்றால் நல்ல திட்டமிடல் கண்டிப்பா இருக்கணும்..

கோ-ஹேபிட்டேஷன் என்ற முறையில் இது சாத்தியமாகிறது.. //

எப்படி சாத்தியமாகிறது?//

வருக ராபின்,...

இம்முறையில் அவர்கள் தம்மையே சோதித்துக்கொள்கின்றனர்.. இல்லற வாழ்வுக்கு , பெற்றோராக இருக்க தமக்கு/துணைக்கு முழு தகுதி இருக்கிறதா என்று..

சில திருமணங்களைப்போல் , முதலிரவோடு கரு சுமக்கும் அவலம் இல்லை..

ஒரு குழந்தையே குழந்தை பெற்று அவதிப்படும் போக்கு இல்லை..

பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் கொண்டாடப்படணும்.. அதுதான் சமூக நலனுக்கும் மிக நல்லது..

திட்டமிடலின்றி வத வதன்னு பெருமைக்காக பெத்துவிட்டு குழந்தைகளையும் அல்லல்பட செய்வது.?

வாழ்க்கையே நம்பிக்கைதான்..

திருமணம் என்று பேருக்கு செய்தால் மட்டும் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்திடுமா?..

ஒரு விபத்து நேர்ந்து துணையை இழந்தால் அக்குழந்தைகளின் கதி?..

ஆக எந்த பயணத்திலும் விபத்துகள் உண்டு..

கோஹேபிடேஷனில் நில விபத்துகளை தடுக்கலாம் என்பதற்கான வழிகள் உண்டு...

அதில் இணைபவரும் மனமொத்து இறுதிவரை வாழ முடிவுசெய்தவர்களே...

Robin said...

இந்த முறையில் எளிதில் பிரிந்துவிட முடியும். இந்நிலையில் குழந்தையின் நிலை என்ன?

//திட்டமிடலின்றி வத வதன்னு பெருமைக்காக பெத்துவிட்டு குழந்தைகளையும் அல்லல்பட செய்வது.?// இந்தக் காலத்தில் வதவதவென்று குழந்தை பெற்று கொள்பவர்கள் மிகக் குறைவு.

//ஒரு விபத்து நேர்ந்து துணையை இழந்தால் அக்குழந்தைகளின் கதி?..//
இது சேர்ந்து வாழ்பவர்களுக்குப் பொருந்தாதா?

//கோஹேபிடேஷனில் நில விபத்துகளை தடுக்கலாம் என்பதற்கான வழிகள் உண்டு...// புரியவில்லை.

//அதில் இணைபவரும் மனமொத்து இறுதிவரை வாழ முடிவுசெய்தவர்களே..// அப்படி எத்தனைபேர் இறுதிவரை சேர்ந்து வாழ்கின்றனர்?

எண்ணங்கள் 13189034291840215795 said...

இந்த முறையில் எளிதில் பிரிந்துவிட முடியும். இந்நிலையில் குழந்தையின் நிலை என்ன?

-

விவாகரத்து செய்தவர்களின் குழந்தையின் நிலைமையே இங்கேயும்..

என்ன வித்யாசம் என்றால் திருமணம் செய்து வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள் விவாகரத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.. ஆனால் இங்கே அதற்கான திட்டமிடல்( பணம் , வளர்ப்பு , பொறுப்புகளை பகிர்வது ) ஏற்கனவே இருக்கும்..


முதற்கண் தமக்குள் ஒத்து வருவதாக இருந்தால் மட்டுமே குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள்.. அவசரப்பட்டல்ல..

எண்ணங்கள் 13189034291840215795 said...

//திட்டமிடலின்றி வத வதன்னு பெருமைக்காக பெத்துவிட்டு குழந்தைகளையும் அல்லல்பட செய்வது.?// இந்தக் காலத்தில் வதவதவென்று குழந்தை பெற்று கொள்பவர்கள் மிகக் குறைவு.

சரியே..

ஆனாலும் இரு குழந்தைகூட வேலைக்கு செல்லும் தம்பதிக்கு சுமையாக இருப்பதுண்டு...அதிலும் பெண் அனேக பொறுப்பெடுக்கணும்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

//ஒரு விபத்து நேர்ந்து துணையை இழந்தால் அக்குழந்தைகளின் கதி?..//
இது சேர்ந்து வாழ்பவர்களுக்குப் பொருந்தாதா?



நிச்சயம்.. ஆனால் இவர்கள் திட்டமிட்டு வாழ்க்கையை நடத்த ஆரம்பிப்பதால் எதையும் எதிர்நோக்கும், சமாளிக்கும் திறன் அதிகம் பெற்றவராய் , அதிக தன்னம்பிக்கையுடையவராய் இருப்பார்கள்..அதுதான் இவர்களின் பிள்ஸ்பாயிண்ட்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

//அதில் இணைபவரும் மனமொத்து இறுதிவரை வாழ முடிவுசெய்தவர்களே..// அப்படி எத்தனைபேர் இறுதிவரை சேர்ந்து வாழ்கின்றனர்?

55% என சர்வே சொல்லுது...

மீதி நபர்கள் குழந்தை பெறாமல் பிரிந்தது நல்லதுதானே?..

எண்ணங்கள் 13189034291840215795 said...

A premarital agreement is an unusual contract. It is an agreement between marrying persons that, at least in part, contemplates the breakup of the marriage. The subject matter of the agreement is unique: no other contract can address such matters as Child Custody, child education, and spousal maintenance.

http://legal-dictionary.thefreedictionary.com/Premarital+Agreement


ஆக இப்படியான ஒரு பொது அக்ரிமெண்டும் கூட போட்டுக்கொள்கிறார்கள்...தமக்கும் , தம் சொத்துக்கள் , குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Child Custody


The care, control, and maintenance of a child, which a court may award to one of the parents following a Divorce or separation proceeding.

Under most circumstances, state laws provide that biological parents make all decisions that are involved in rearing their child—such as residence, education, health care, and religious upbringing. Parents are not required to secure the legal right to make these decisions if they are married and are listed on the child's birth certificate. However, if there is disagreement about which parent has the right to make these decisions, or if government officials believe that a parent is unfit to make the decisions well, then family courts or juvenile courts will determine custody.

http://legal-dictionary.thefreedictionary.com/Child+Custody

துமிழ் said...

1. வசதி , எளிது , சிக்கலற்றது..

2. முன்கூட்டியே உறவுமுறை சரிவருமா என பரிசோதித்தல்..

3. சிக்கனம்.( விழா எடுத்து கொண்டாடவேண்டியதில்லை )

4. திருமண ஒப்பந்தத்தில் நம்பிக்கையின்றி தங்களை அதிகமாய் நம்புவது..

5. விவாகரத்து , அதுக்காக நேரம் , சட்டதிட்டம் , பணம் செலவழித்தல் , ஆகியவற்றை தவிர்க்க..

6. சமூக கேள்விகளை தவிர்க்க ( இது வயாதானவர், முக்கிய புள்ளி , போன்றோர் ) //

இவற்றை உங்களுக்கு யார் சொன்னது..?
இன்னும் முக்கியமான காரணங்களை ஏன் சொல்லவில்லை
அவை..
.சட்டரீதியா திருமணம் செய்ய முடியாத நிலை ( சில நாடுகளில் ஓரினச் சேர்க்கை யாளர்கள் )
ஒரே நேரத்தில் பல துணைகளை வைத்துக் கொள்ள விரும்புபவர்கள்

(ஓரினச் சேர்க்கை, மற்றும் ஒரே நேரத்தில் பல துணிகளை வைத்திருத்தல் அவரவர் உரிமை என்று
நீங்கள் சொன்னால் ,கருத்துக் கூறியதற்காக என்னை மன்னிக்கவும்)

இன்னும் சில காரணங்கள்...
சில அரசாங்க சலூகைகளை பெற்றுக் கொள்ள(வரி கட்டுதல் போன்றவை)
மத , இன வேறுபாடுகள் காரணமாக பதிவு செய்து கொள்ள முடியாத நிலை (சில நாடுகளில்)
இந்த இரண்டு காரணங்களுக்காக திருமணத்தை தவிர்க்க வேண்டிய அவசியம் நம் நாட்டிலே இல்லை.

ஆதாரம் - விக்கி பீடியா

நன்மையான கருத்துகளை மட்டும் கூறி ஒருதலைப் பட்சமாக ஆதரிக்கும் நீங்கள் ஏன் இந்த தீமை பயக்கும்
காரணங்களை சொல்லாமல் விட்டு விட்டீர்கள்?

இதுவே இந்தக் கலாச்சாரத்தில் ஈடுபடுபவர்களும் ஆதரிப்பவர்களும் நேர்மை அற்ற விதத்திலே விடயத்தையும்
வாழ்க்கையையும் கையாள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

Robin said...

//ஆக இப்படியான ஒரு பொது அக்ரிமெண்டும் கூட போட்டுக்கொள்கிறார்கள்...தமக்கும் , தம் சொத்துக்கள் , குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு.// குழந்தைகளுக்கு பணத்தைவிட பெற்றோரின் அரவணைப்புதான் முக்கியம்.

Robin said...

//நிச்சயம்.. ஆனால் இவர்கள் திட்டமிட்டு வாழ்க்கையை நடத்த ஆரம்பிப்பதால் எதையும் எதிர்நோக்கும், சமாளிக்கும் திறன் அதிகம் பெற்றவராய் , அதிக தன்னம்பிக்கையுடையவராய் இருப்பார்கள்..அதுதான் இவர்களின் பிள்ஸ்பாயிண்ட்// தன்னம்பிக்கை உடையவர்கள் கண்டிப்பாகத் திருமணம் செய்து கொள்வார்கள். இடையில் கழற்றி விடலாம் என்று நினைப்பவர்களே இந்த மாதிரி வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.

துமிழ் said...

//ஆக நல்ல இல்லறம் , நல்ல குழந்தைகள் , அதனொட்டி நல்ல சமூகம் அமையணும் என்றால் நல்ல திட்டமிடல் கண்டிப்பா இருக்கணும்..

கோ-ஹேபிட்டேஷன் என்ற முறையில் இது சாத்தியமாகிறது.. //

இது உங்கள் கற்பனையா? அல்லது இந்த வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் சொன்ன உண்மைக் கருத்தா?

.................................
Cohabiting couples are disadvantaged financially with the lowest level of wealth among household types, comparable to families headed by a single mother. Intact, two-parent families and stepfamilies have the highest level of wealth.

parenting role of a cohabiting partner toward children of the other person is vaguely defined, making cohabitation an unstable living arrangement for children. “The non-parent partner––the man in the substantial majority of cases––has no explicit legal, financial, supervisory or custodial rights or responsibilities regarding the children of his partner

Married women spend 14 more hours per week doing housework than do their husbands, while cohabiting women spend 10 more hours per week doing housework than their male partners. Because men in cohabiting relationships are less likely to support their partners financially than are married men, cohabiting women are not compensated for their housework the way married women are,
ஆதாராம் ..
http://chronicle.uchicago.edu/000302/cohabit.shtml

எண்ணங்கள் 13189034291840215795 said...

துமிழ் வருகைக்கு நன்றிங்க ..

-------------------------------------


சட்டரீதியா திருமணம் செய்ய முடியாத நிலை ( சில நாடுகளில் ஓரினச் சேர்க்கை யாளர்கள் )
ஒரே நேரத்தில் பல துணைகளை வைத்துக் கொள்ள விரும்புபவர்கள்


விதிவிலக்குகளை பற்றி என் கருத்தை இங்கே சொல்லவேயில்லை..

ஒசேக்கள் பற்றி தனிப்பதிவும் எழுதியுள்ளேன்..

அவர்களையும் ஏற்கிறேன்.. ஆனால் பைசெக்ஷுவல் ஒசேக்களாக மாறுவதை தடுக்கவும் சொல்கிறேன்..

துமிழ் said...

விதிவிலக்குகளை பற்றி என் கருத்தை இங்கே சொல்லவேயில்லை..//

இது விதி விலக்கு என்று நீங்களே முடிவெடுத்து தப்பிக் கொள்ளப் பார்க்கிறீர்கள்...
இதுவும் லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு ஒரு காரணம் ,விதி விலக்கல்ல

எண்ணங்கள் 13189034291840215795 said...

இன்னும் சில காரணங்கள்...
சில அரசாங்க சலூகைகளை பெற்றுக் கொள்ள(வரி கட்டுதல் போன்றவை)
மத , இன வேறுபாடுகள் காரணமாக பதிவு செய்து கொள்ள முடியாத நிலை (சில நாடுகளில்)
இந்த இரண்டு காரணங்களுக்காக திருமணத்தை தவிர்க்க வேண்டிய அவசியம் நம் நாட்டிலே இல்லை.//


கேள்வியிலேயே பதிலும் இருக்கு.பாருங்க..

தம்பதியினரின் மனமொத்த வாழ்க்கையை சட்டம் சில கட்டுப்பாடுகளுக்காக தடுக்குமானால் அதை அவர்கள் மீறுவது அவர்கள் தனிப்பட்ட திட்டமிடல், வாழ்க்கை..

நம்ம நாட்டில் அவை இல்லை என்பதும் மகிழ்ச்சியான விஷயமே..

என் பார்வை முழுதுமே இல்லறம் , குழந்தைகள் வருங்காலம் குறித்தே முக்கியத்துவம்..


மற்றப்டி சட்டத்தை ஏமாற்ற மட்டுமே இதை தேர்ந்தெடுப்பவர்கள் கண்டனத்துக்குறியவர்கள்..

விதிவிலக்குகள்.எங்கும் உண்டுதானேங்க.?

எண்ணங்கள் 13189034291840215795 said...

இதுவே இந்தக் கலாச்சாரத்தில் ஈடுபடுபவர்களும் ஆதரிப்பவர்களும் நேர்மை அற்ற விதத்திலே விடயத்தையும்
வாழ்க்கையையும் கையாள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.//

:)

நன்றி...

இப்படித்தான் உடன்கட்டை, மறுமணம், காதல் திருமணம் செய்யும்போதும் தடை வந்திருக்கும்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

cohabiting women spend 10 more hours per week doing housework than their male partners. Because men in cohabiting relationships are less likely to support their partners financially than are married men, cohabiting women are not compensated for their housework the way married women are,//


அப்புரம் ஏன் அந்த உறவில் இருக்கிறார்கள்?..

வெளியேறலாமே.?.. என்ன கட்டாயம்?

எண்ணங்கள் 13189034291840215795 said...

parenting role of a cohabiting partner toward children of the other person is vaguely defined, making cohabitation an unstable living arrangement for children. “The non-parent partner––the man in the substantial majority of cases––has no explicit legal, financial, supervisory or custodial rights or responsibilities regarding the children of his partner//

இது ஒரு சூழல் நீங்க சொல்லியிருப்பது..

என்ன செய்யலாம்?..

பேரண்டல் அக்ரிமெண்ட் , சைல்ட் கஸ்டடி அக்ரிமென்ட் போட்டுக்கொள்ளலாம்..

ஆனா என்ன செய்தாலும் அடித்தளமான அன்பு இல்லாத எந்த உறவையும் ஏன் நீட்டிக்கணும்.?.. அது புரியலை எனக்கு...

எண்ணங்கள் 13189034291840215795 said...

இது விதி விலக்கு என்று நீங்களே முடிவெடுத்து தப்பிக் கொள்ளப் பார்க்கிறீர்கள்...
இதுவும் லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு ஒரு காரணம் ,விதி விலக்கல்ல /

திருமணம் செய்ய எத்தனை எத்தனை காரணமுண்டோ அதே போல் லிவிங்-டுகெதர் வாழ்க்கையிலும் பல்வேறு காரணங்கள்..உண்டுதான்...

இதில் தப்பிக்க என்ன இருக்கு..?

55% பேர் திருமணம் செய்துகொண்டார்கள் , என்பதே நல்ல விஷயம்தானே?..

அதைவிட பொருந்தாத 45% பிரிந்தார்கள் என்பதும் நல்லதுதானே?..

லிவிங்-டுகெதர்தான் நல்லது என எங்கேயும் நான் சொல்லவில்லை..

ஆனால் அதிலும் நன்மைகள் உண்டு . நம் திருமண முறையிலுள்ள சில கண்மூடித்தனமான பழக்கவழக்கங்கள் நீக்கப்படணும் என்பதுமே என் கருத்து..

நான் முன்பே சொன்னதுபோல் இன்னும் சம்பிரதாய திருமணத்தை ஆதரிக்கிறேன். குழந்தைகளுக்கும் அதை காண்பிக்கிறேன்.. இருப்பினும் அவர்கள் இதை தேர்ந்தெடுத்தால் ஏற்பேன்..


ஊர் என்ன சொல்லுமோ , விவாகரத்து செய்தால் மறுமணம் செய்ய முடியாதோ , வாழவே முடியாதோ என்ற பயம் நீங்கணும்...

விவாகரத்து கேஸ்கள் குமிந்து கிடக்கின்றது நம்மூரில்..

அவர்கள் எப்ப விடுதலை பெற்று அடுத்த திருமணம் செய்வது?..

இப்படி இரண்டு பக்கமும் நல்லது கெட்ட்டதை ஆரய்ந்து அவரவர் முடிவு செய்யட்டும்..

அதைவிடுத்து லிவிங்-டுகெதரே ஆபாசம் என்ற பயமுறுத்தல் தேவையில்லை என்கிறேன்..:)

எண்ணங்கள் 13189034291840215795 said...

குழந்தைகளுக்கு பணத்தைவிட பெற்றோரின் அரவணைப்புதான் முக்கியம். //

நிச்சயமாக...

இது தற்காப்பு/பாதுகாப்புக்கு மட்டுமே..

இதையெல்லாம் தாண்டியது அன்பும் , நம்பிக்கையும்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

தன்னம்பிக்கை உடையவர்கள் கண்டிப்பாகத் திருமணம் செய்து கொள்வார்கள். //

அப்படியும் சொல்ல முடியாது..



//இடையில் கழற்றி விடலாம் என்று நினைப்பவர்களே இந்த மாதிரி வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.//.

கழற்றிவிட இத்தனை பிரயாசப்படுவார்களா?.. 5 வருடம் சேர்ந்து வாழ்ந்து திருமணம் செய்வார்களா?..

போலியா அத்தனை வருடம் இணைந்து வாழ முடியுமா?..

:)

sivakumar said...

ஒரே மதத்தைச் சார்ந்த காதலர்கள் திருமணம் செய்துகொள்ளவே பலவிதமான தடைகள் இருக்கும் சமூகம் இணந்து வாழ்தலை ஏற்றுக் கொள்வது என்ப்தற்கு நூற்றாண்டு காத்திருக்க வேண்டும். பழமைச்சடங்குகளின் அழுத்தம் தாளாமல்தான் இது போன்ற கலாச்சாரங்களில் மனம் சாய்கிறது. என்னைப் பொறுத்தவரையில் ஜாதி, மதம், சடங்குகள், தாலி, மணக்கொடை, ஆடம்பரச் செலவுகள் தவிர்த்த திருமணம் என்பதை தற்போதைய சூழலில் பெரிய புரட்சியாகப் பார்க்கிறேன். பெண்ணடித்தனம் என்ப்து திரும்ணத்தை எதிர்ப்பதில், இணைந்து வாழ்தலை ஆதரிப்பதில் ஒரு பெரிய காரணமாக இருக்க முடியும். இது போன்ற திருமணத்தை ஏற்கும் ஒரு ஆண் ஆணாதிக்கவாதியாக் இருக்கமாட்டான். திருமணங்கள் ஒரு வர்த்தகம், பண்டமாற்றாக் நடைபெறுவதால்தான் பெரியார் அதை ஒரு "சட்டப்பூர்வமான் விபச்சாரம்" என்றார். கலாச்சாரம் குறித்துப் ஆயிரமாண்டுப் பெருமை கொள்ளும் வேளையில் அதே கலாச்சாரம் காக்கப்பட்டு வரும் கால்ம் முழுக்க விபச்சாரம் தொடர்ந்து பேணப்பட்டே வந்துள்ளது என்பதே உண்மை. எல்லாச் சடங்குகளும் ஆணின் வசதிக்காகவே படைக்கப்பட்டுள்ளன். இந்நிலையில் திருமணத்தை, விட்டு இணைந்து வாழ்தல் என்பது சட்டியிலிருந்து தப்பி அடுப்புக்குள் விழுந்தது போலாகிவிடும் பெண்ணின் நிலை. இதை ஆணாதிக்க நிலையிலிருந்து சொல்லவில்லை. இணைந்துவாழ்தல் என்பதிலும் எனக்கு மறுப்பில்லை. இதில் ஆண்கள் புகுந்து விளையாடிவிடுவார்கள். நம் சமூகத்தில் தற்போதுள்ள நிலையைக் கணக்கில் கொண்டு இதைச் சொல்கிறேன்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

வாங்க தமிழ்வினை..

ஒரே மதத்தைச் சார்ந்த காதலர்கள் திருமணம் செய்துகொள்ளவே பலவிதமான தடைகள் இருக்கும் சமூகம் இணந்து வாழ்தலை ஏற்றுக் கொள்வது என்ப்தற்கு நூற்றாண்டு காத்திருக்க வேண்டும். //

ஆம்..

//பழமைச்சடங்குகளின் அழுத்தம் தாளாமல்தான் இது போன்ற கலாச்சாரங்களில் மனம் சாய்கிறது. என்னைப் பொறுத்தவரையில் ஜாதி, மதம், சடங்குகள், தாலி, மணக்கொடை, ஆடம்பரச் செலவுகள் தவிர்த்த திருமணம் என்பதை தற்போதைய சூழலில் பெரிய புரட்சியாகப் பார்க்கிறேன். //

மிக சரி.



//பெண்ணடித்தனம் என்ப்து திரும்ணத்தை எதிர்ப்பதில், இணைந்து வாழ்தலை ஆதரிப்பதில் ஒரு பெரிய காரணமாக இருக்க முடியும். இது போன்ற திருமணத்தை ஏற்கும் ஒரு ஆண் ஆணாதிக்கவாதியாக் இருக்கமாட்டான். //

ம்..

//திருமணங்கள் ஒரு வர்த்தகம், பண்டமாற்றாக் நடைபெறுவதால்தான் பெரியார் அதை ஒரு "சட்டப்பூர்வமான் விபச்சாரம்" என்றார். //

அருமையா அப்பவே சொல்லியுள்ளார்..

//கலாச்சாரம் குறித்துப் ஆயிரமாண்டுப் பெருமை கொள்ளும் வேளையில் அதே கலாச்சாரம் காக்கப்பட்டு வரும் கால்ம் முழுக்க விபச்சாரம் தொடர்ந்து பேணப்பட்டே வந்துள்ளது என்பதே உண்மை.//

அதானே?..

//எல்லாச் சடங்குகளும் ஆணின் வசதிக்காகவே படைக்கப்பட்டுள்ளன். இந்நிலையில் திருமணத்தை, விட்டு இணைந்து வாழ்தல் என்பது சட்டியிலிருந்து தப்பி அடுப்புக்குள் விழுந்தது போலாகிவிடும் பெண்ணின் நிலை. இதை ஆணாதிக்க நிலையிலிருந்து சொல்லவில்லை. இணைந்துவாழ்தல் என்பதிலும் எனக்கு மறுப்பில்லை. இதில் ஆண்கள் புகுந்து விளையாடிவிடுவார்கள். நம் சமூகத்தில் தற்போதுள்ள நிலையைக் கணக்கில் கொண்டு இதைச் சொல்கிறேன்.//

சரிதான் .. இதுவும் நடக்கலாம் நம் ச்மூகத்தில்..

அறைகுறையாக இதை பின்பற்றுவதிலுள்ள அபாயங்கள் பல உண்டு..

நல்ல புரிதலில் மட்டுமே , அதிலும் துணிவான பெண்ணுக்கே இது சரிவரும்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

தகவலுக்கு : 1
------------------

In the case of Bharata Matha & Ors v. R. Vijaya Renganathan & Ors. [4] dealing with the legitimacy of child born out of a live-in relationship and his succession of property rights, the Supreme Court held that child born out of a live-in relationship may be allowed to succeed inheritance in the property of the parents, if any, but doesn't have any claim as against Hindu ancestral coparcenary property.

எண்ணங்கள் 13189034291840215795 said...

தகவலுக்கு : 2
------------------
எல்லா தம்பதியினரும் இணைந்து வாழ்தலாக ஒப்புக்கொள்ளப்படமாட்டாது..

அதற்கென சில ஒப்பந்தம்/கட்டுப்பாடுகள் உண்டு..


The Supreme Court in the case of D. Velusamy v.D. Patchaiammal [6] held that, a ‘relationship in the nature of marriage’ under the 2005 Act must also fulfill the following criterias (a) The couple must hold themselves out to society as being akin to spouses. (b) They must be of legal age to marry. (c) They must be otherwise qualified to enter into a legal marriage, including being unmarried. (d) They must have voluntarily cohabited and held themselves out to the world as being akin to spouses for a significant period of time, and in addition the parties must have lived together in a ‘shared household’ as defined in Section 2(s) of the Act. Merely spending weekends together or a one night stand would not make it a ‘domestic relationship’. It also held that if a man has a ‘keep’ whom he maintains financially and uses mainly for sexual purpose and/or as a servant it would not, in our opinion, be a relationship in the nature of marriage’.

வருண் said...

***
விவாகரத்து செய்தவர்களின் குழந்தையின் நிலைமையே இங்கேயும்..

என்ன வித்யாசம் என்றால் திருமணம் செய்து வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள் விவாகரத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.. ஆனால் இங்கே அதற்கான திட்டமிடல்( பணம் , வளர்ப்பு , பொறுப்புகளை பகிர்வது ) ஏற்கனவே இருக்கும்..


முதற்கண் தமக்குள் ஒத்து வருவதாக இருந்தால் மட்டுமே குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள்.. அவசரப்பட்டல்ல.. ***

நீங்க சொல்ற இந்த கேஸ், ரொம்ப படித்த பக்குவமான இருவர் பத்தி சொல்றீங்க.

நம்ம ஊரில் ஏழைமக்கள் இதை எப்படி எடுத்து எப்படி வாழ்வாங்கனு தெரியலை.

விவாகரத்து வாங்க 5 வருடமாச்சுனு சொல்றீங்க, லிவ் டுகெதரலில் குழந்தை பிறந்து பிரிந்தவர்கள் குழந்தைக்கு சைல்ட் சப்போர்ட் வாங்க எவ்வலவு நாள் ஆகும்? வாங்கிற வரை அந்தக்குழந்தை உயிரோட இருக்குமா?

If the woman involved has "financial freedom", no problem in marriage as well as live-together.

But, for one who does not have education or financial independence I think marriage is a better option for NOW! :)

எண்ணங்கள் 13189034291840215795 said...

If the woman involved has "financial freedom", no problem in marriage as well as live-together.

But, for one who does not have education or financial independence I think marriage is a better option for NOW! :)//


வருண் ,

திருமணம் எப்போதும் நன்றே..

இணைந்து வாழ்பவரும் இறுதியில் திருமணம் செய்கின்றனர்தான்..

அதே மாதிரி இது பணம், படிப்பு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல..

ஒரு கிராமாத்து பெண்ணிடம் சமூகம் என்ன சொல்லும் என்ற பயமற்ற துணிவு இருக்குமானால் ,

அவள் கூட ,

" மாமோய் , எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு.. ஊர் என்ன சொன்னா என்ன கடசி வரை நான் காப்பாத்துவேன் உன்னை.. எனக்கு தெம்பிருக்கு.. " னு சொல்லக்கூடும்..

அவரவர் அனுபவம் இத்துணிச்சலை தரக்கூடும்..

தன் பெற்றோரோ, சொந்தமோ திருமண வாழ்வில் நரகத்தை அனுபவிப்பதை பார்த்தால் சிலருக்கு நம்பிக்கையற்று போகும்..

அவர்கள் துணிவை பெற்றால் இது சாத்தியம்...

ஆனால் இந்தியாவில் இன்னும் அதிக சட்டதிட்டம் தேவை இது பிரச்னையின்றி நடைபெற..

என்னது நானு யாரா? said...

நல்ல மனமுதிர்ச்சியோடு கட்டுரையை எழுதி இருக்கீங்க தோழி! நிறைய விஷயங்களைப் புரிந்துக்கொள்ள முடிந்தது.

எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. பெண்ணை பெற்றோர் நன்குப் படித்திருந்தும், பெண்ணுக்கு திருமணம் தான் பாதுகாப்பு என்று ஏன் நினைக்கின்றனர்.

என்ன விலைக்கொடுத்தாகிலும் பெண்ணிற்கு திருமணம் செய்து பார்த்து விட வேண்டும் என்று ஏன் துடிக்கின்றனர்? பெண்ணுக்கு திருமணம் இல்லாத நிலையினை ஏன் எண்ணிப்பார்க்க மறுக்கின்றனர்?

இப்படியே இளம்பெண்களும் தங்களின் பெற்றோர்கள் சொல்வதைப்போன்று தன் வாழ்வும் திருமண பந்தத்திலேயே கலந்து முடிந்துவிட்டால் பரவாயில்லை என்றே ஏன் எண்ணுகின்றனர்?

ஒரு பதட்டம், ஒரு பயம் இருக்கிறதே பெண்ணை பெற்றுவிட்டால், அது ஏன்?

உங்களைப் போன்று எண்ணும் பெண்கள் ஏன் சிறுபான்மையினராய் இருக்கிறார்கள். எல்லா விஷயங்களும் பெண்ணுக்கு எதிராக இருக்கும்போதும் ஏன் அந்த விஷயங்களை எதிர்க்க முன்வருவதில்லை. அதிக அதிகமாய் அந்த வலிகளை தாங்கிக்கொண்டு சகித்துக்கொண்டும் வாழ நினைக்கின்றனரே ஏன்?

பொருளாதார சுதந்திரம் அடைந்துவிட்டப் பெண்களின் நிலையிலும் பெரிய மாற்றம் இல்லையே ஏன்?

பாலியல் சுதந்திரத்தைப் பற்றி இன்றைய பெண்கள் என்ன நினைக்கின்றனர்? கழுத்தை நெறிக்கும் உறவு முறையில் ஏன் நீடித்து இருக்கவே விரும்புகின்றாள்?

இன்றைய பெண்களின் மனநிலையைப் புரிந்துக்கொள்ளவே இந்த கேள்விகளை கேட்டிருக்கின்றேன். நல்ல மாற்றம் வரவேண்டும் என்கின்ற ஆவல்!

தங்களின் நலனை கருதாத திருமண பந்தத்தை பல பெண்களும் எதிர்க்க ஆரம்பித்தால் தான், பெண்களுக்கு சிறந்த வாழ்க்கை அமையும் சாத்தியகூறுகள் அதிகம் என்பது என்னுடைய எண்ணம்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

என்னது நானு யாரா? said...

நல்ல மனமுதிர்ச்சியோடு கட்டுரையை எழுதி இருக்கீங்க தோழி! நிறைய விஷயங்களைப் புரிந்துக்கொள்ள முடிந்தது.

நன்றி நண்பரே.

உங்க கேள்விக்கு ஒவ்வொன்றாய் பதிலளிக்கிறேன்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

என்னது நானு யாரா? said...



எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. பெண்ணை பெற்றோர் நன்குப் படித்திருந்தும், பெண்ணுக்கு திருமணம் தான் பாதுகாப்பு என்று ஏன் நினைக்கின்றனர்.


நம் நாட்டில் மட்டுமே அந்த நிலைமை..

தனக்கு பின் தன் பெண் தனியாக நம் சமூகத்தில் சமாளிக்க முடியாது என்ற பயம் அவர்களுக்கு.. அது அவர்கள் பார்த்த சூழல்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

என்னது நானு யாரா? said...



என்ன விலைக்கொடுத்தாகிலும் பெண்ணிற்கு திருமணம் செய்து பார்த்து விட வேண்டும் என்று ஏன் துடிக்கின்றனர்? பெண்ணுக்கு திருமணம் இல்லாத நிலையினை ஏன் எண்ணிப்பார்க்க மறுக்கின்றனர்?



அதே பதில்தான்.. அவள் பாதுகாப்பாய் அயுசுக்கும் இருப்பது திருமணத்தில் மட்டுமே என்ற எண்ணம்..அறியாமை.

எண்ணங்கள் 13189034291840215795 said...

என்னது நானு யாரா? said...



இப்படியே இளம்பெண்களும் தங்களின் பெற்றோர்கள் சொல்வதைப்போன்று தன் வாழ்வும் திருமண பந்தத்திலேயே கலந்து முடிந்துவிட்டால் பரவாயில்லை என்றே ஏன் எண்ணுகின்றனர்?


1.சிலருக்கு எதிர்க்க வழியில்லை.

2. எதிர்த்தால் மனக்கஷ்டம் அடைவார்களே என விட்டுவிடுதல்.

3.சுற்று சூழலில் இதுவரை தனியாளாக வெற்றி பெற்று வாழும் பெண்களை கண்டதில்லை..

4. துணிவா ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை.. பழி /அவச்சொல்லுக்கு பயமும்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

என்னது நானு யாரா? said...



தங்களின் நலனை கருதாத திருமண பந்தத்தை பல பெண்களும் எதிர்க்க ஆரம்பித்தால் தான், பெண்களுக்கு சிறந்த வாழ்க்கை அமையும் சாத்தியகூறுகள் அதிகம் என்பது என்னுடைய எண்ணம்.//

மிக சரியாக சொன்னீர்கள்..

நம் சமூகம் ஆணாதிக்க சமூகம் .. ( பெண்களுமே ஆணாதிக்கத்தை விரும்புகின்றார்கள் )

ஆக இதை எளிதில் முழுதுமாக மாற்ற முடியாது.. ஆனால் மாற்றம் வர ஆரம்பித்துவிட்டது என்பதும் உண்மை.

http://thavaru.blogspot.com/ said...

எதார்த்தம் இதாங்க. எல்லா இடத்திலேயும் ஒரு சமநிலை நிலவனும்.
ஆண் பெண் இருபாலருக்கும் சரியானவாய்ப்பு கிடைச்சா நீங்க சொல்லுற மொத்தமும் பொருந்துங்க பயணமும் எண்ணங்களும்.