Friday, October 1, 2010

மதமும் மனித உறவுகளும்..1

































மதமும் மனித உறவுகளும்..


உளவியல் ரீதியாக கட்டுரை எழுதும் வரிசையில் பல விஷயங்கள் படித்தாலும் எதை எழுதுவது என்று நான் கேட்டிருந்த நேரத்தில்

நண்பரொருவர், " மதங்களும் மனித உறவுகளும் " என்ற தலைப்பில் எழுத சொன்னார்..

இது குறித்து தமிழமுதம் குழுமத்திலும் பல விவாதங்கள் நடத்தியுள்ளோம் 1000 மடல்களுக்கு மேல்..பல்வேறு மதத்தினரோடு , பார்வையோடு..

ஆக இதை எழுதுவதே ஒரு மகிழ்வான செயல்...

நன்றி அந்த நண்பருக்கு..

-------------------------------------------------------




"Doubling the rate of religious attendance raises household income by 9.1 percent, decreases welfare participation by 16 percent from baseline rates, decreases the odds of being divorced by 4 percent , and increases the odds of being married by 4.4 percent."


மதம் என்பது நான் இங்கு பொதுவாக மட்டுமே உபயோகிக்க போகும் வார்த்தை..

வாசிப்பவர்கள் அவரவருக்கு பிடித்த மதத்தை ( கவனிக்க அவரவர் மதத்தை அல்ல ) பற்றி நினைத்துக்கொள்ளலாம்.

மதம் என்பது மனிதன் உருவாக்கியது.. கடவுள் என்பது கட்டுக்கதை என்று நினைப்பவரும் அறிந்துகொள்ளவேண்டிய விஷயம் பல உள்ளது..

கடவுள் என்பது கட்டுக்கதை, கற்பனையா.?. இருந்துவிட்டு போகட்டுமே..

அதனால் ஏற்படும் நன்மைகள் யாவை .?.. தீமைகள் யாவை.?

எது அதிகம் என அலசுவோம்...

கேள்விகளை தொடுத்தால் தான் மற்றவரின் மாற்றுப்பார்வையை புரிந்துகொள்ள முடியும்..மாற்றுக்கருத்தை உள்வாங்கிக்கொள்ள முடியும்..

கேள்விகள் கேட்காமலேயே தங்கிவிடுவதுதான் தோல்வியின் ஆரம்பம்.. எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கணும் என்ற கட்டாயமுமில்லையே.

மதம் தாண்டி அறிவியல் வளர்ச்சி அப்படித்தான் ஏற்பட்டது.. இருப்பினும் மதத்துக்கு ஏன் இந்த முன்னுரிமை தரப்படணும்.? அதைத்தான் நாம் அலச போகிறோம்.

மதம் அடுத்து சடங்குகள் , பழக்கவழக்கங்கள் என அக்காலத்துக்கு ஏற்ப பல நல்ல விஷயங்களை எழுதியும் செய்தும் வைத்துவிட்டு போனார்கள்..

சிலது எக்காலத்துக்கும் பொருந்தும்.. சிலது எல்லா மாற்றத்துக்கும் உள்ளாகும்...

அடிப்படையில் எல்லா மதமும் நல்ல விஷயங்களையே சொன்னாலும், நடைமுறைப்படுத்துவதில்தான் பல சிக்கல்கள் ..

இங்கு நாம் அறைத்த மாவையே அறைக்க வேண்டாம்.. மதத்தால் ஒரு தனிமனிதன் அடையும் உயர்வு என்ன..?

சிலர் ஏன் மதத்தை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.. மதப்பற்று கூட மத வெறி ஆவது ஏன்.. அவர்களை எப்படி கண்டுகொள்ள?..

நாளொரும் ஏனியும் பொழுதொரு வண்ணமுமாய் கண்டுபிடிப்புகள் அதிகமாகிக்கொண்டு வரும் நிலையில் இன்னும் பழைய பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு

பயங்காட்டிக்கொண்டு மூலையில் உட்கார வைப்பதை தடுக்கணும்..அது எந்த மதம் என்றாலும்.. ஆனால் அதுவும் மென்மையான வழியில் , புரியவைத்து மட்டுமே..

கோபர்நிக்கன், டார்வின் கோட்பாடுகள் மனிதனுக்கு இயற்கையில் ஒரு முக்கிய இடத்தை அளித்திருந்தாலும் , மனிதனை மையமாகக் கொண்ட , மனித இனத்தையே இயற்கையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற ,மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற .விஷயத்தில் அதிகமின்றி , தனிப்பட்ட சுதந்திரம் உள்ளவனாய் , சிந்திக்க வல்லவனாய் படைக்கப்பட்டுள்ளான்..

அப்படியானால் எல்லாம் எனக்கே எனக்காய் படைக்கப்பட்டிருந்தால் , எது என் மகிழ்ச்சியில் குறுக்கிடுது.. ஏன் ..?

இங்குதான் மதச்சார்பற்றவரின் பார்வைக்கும் மதப்பற்றுடையவனுக்கும் உள்ள வித்யாசம் என்னென்ன உண்டு என பார்க்க போகிறோம்..

முக்கிய விஷயம் இது எல்லோருக்கும் பொருந்தும் என்பதல்ல.. அனேகருக்கு..என்கிறது ஆராய்ச்சிகள்..

ஒருவரை அவமானப்படுத்துவதில் கூட இதை காணலாம்.. ம.பற்றுடையவர் எளிதில் அவமானப்படுத்தமாட்டார். அதே நேரம் அவமானத்தை எளிதில் மன்னித்து

மறந்தும் விடுவார்..ம.சா.அற்றவரின் ஆசைகளும் கற்பனைகளும் எல்லையற்றவையாக இருப்பதினால் அவரால் தொடர்ந்து உயிர் வாழ்தல் என்பதே மிக வெறுப்பானதாகவும் கசப்புக்குறியதாகவும், திருப்தியற்ற வாழ்க்கையாகவுமே எல்லாவற்றையும் கேள்விக்குறிய ,சந்தேகத்துக்குறியதாக மாறிவிடுகிறது..

மாறாக ம.பற்றுடையவருக்கு , எதிர்பார்ப்புகள் அளவோடு இருந்தும், முதிர்ச்சியான புரிதலோடும், ஏமாற்றங்களை இயல்பாக எடுத்துக்கொள்ளும் தன்மையோடும் இருக்க பழக்கப்படுத்தப்படுகிறான்.


இரக்கம் , கருணை , தயவு போன்ற விஷயங்களில் ம.பற்றுடையவரின் சிந்தனை மிக உயர்வாக இருக்கும்..இத்தகைய குணநலன் பாரபட்சமின்றி அனைவருக்குமானது , என்ற நல்ல எண்ணம் இருக்கும்..

இத்தகைய எண்ணம் கொண்டிருப்பதே அடிப்படை மனித நேயம் என்று எண்ணுவர்.இவர்களை பொறுத்தவரை மனிதன் பிறக்கும்போதே பாவத்தோடு பிறந்து , பாவத்தோடே வளர்ந்து அதை ஏற்கும் மனப்பக்குவம் அடைகிறான்..தவறுவது இயல்பாகிறதால் மன்னிப்பும் இயல்பாகிறது இங்கே..

மாறாக ம.சா.அற்றவருக்கோ, பிறக்கும்போது மனிதன் நல்லவனாய் பிறந்து சூழலால் கெட்டவானாய் மாறுகிறான் என்பதால் , இது அவனவன் தலையெழுத்து , அவனவன் மட்டுமே பொறுப்பு என்று எண்ணிடுவான்..ஆக இரக்கம், கருணை, தயவு , மன்னிப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்..

ஆக ம.சா.அற்றவர் மனித குலத்தை இரண்டாய் பிரிக்கிறார்.

1. பாதிக்கப்பட்டவர்.

2. பாதிப்பு உண்டாக்குபவர்..

ஆனால் ம.பற்றுடையவருக்கு இத்தகைய பிரிவினை ஏதுமில்லை.. ஒன்றேதான் மனிதகுலம்..அது தவறு செய்யும் , திருந்தும் , பின் தவறு செய்யும்.. இதில் விதிவிலக்கென்ற பேச்சுக்கே இடமில்லை.. எல்லாருக்கும் இது ஏற்படும் யாரும் விசேஷமில்லை..

அதனால்தான் ம.பற்றுடையவருக்கு தன்னைப்போல் சக மனிதனை பார்க்க முடிகிறது,. நேசிக்க முடிகிறது.. ஏன் மன்னிக்கவும் முடிகிறது...

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது ஒரு பிரச்னையே இல்லை.. நரகமா சொர்க்கமா என்றும் அதுக்கு பயந்த வாழ்க்கை என்றும் கூட அதிகமா எண்ண தேவையில்லை..

இந்த வாழ்க்கையில் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது..?. சக மனிதன் , நம்மை சுற்றி இருப்பவன் எல்லோருமே ஒற்றுமையாய் இருந்தால்தான் நம் மகிழ்ச்சி..

ஆக இந்த ஒற்றுமையை எப்படி கொண்டு வருவது.?

அதனாலேயே உருவாக்கப்பட்ட நீதி கதைகள்.. கட்டுப்பாடுகள்.. ஒழுக்கங்கள் என்ற விதிகள்..

எப்படி சுற்றி சுற்றி வந்தாலும் நீதி ஒன்றுதான்.. உன்னை போல அடுத்தவனையும் நினை..

எனக்கு கிடைத்த ஒரு நிம்மதியான , திருப்தியான வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்கணும் என்ற எண்ணத்தை நல்லதொரு மதமும் அதன் செயல்பாடுகளும் விளக்கும் விளக்கணும்..

இதில் சிலர் அரசியல் செய்தமையால் பலருக்கு வெறுப்பு ஏற்பட்டே மதங்களை வெறுக்கின்றனர்..

அது அவசியமேயில்லை..

எல்லா மதத்திலும் நல்ல விஷயங்கள் ஆராவாரமில்லாமல் அமைதியாக விளம்பரமின்றி நடந்துகொண்டுதானிருக்கின்றன.. நல்வழிப்படுத்திக்கொண்டும் இருக்கின்றன..

ஆக அதை நாம் பார்க்கவேண்டும்.. நமக்கு பிடிக்காவிட்டாலும் அதை ஏதும் தடை செய்யவும் வேண்டாம்..

கண்டிக்கப்படவேண்டியதெல்லாம் மதத்தின் பெயரால் நடக்கும் அராஜகம் மட்டுமே..

ஏனெனில் மதம் குடும்ப வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்றது.. தனி மனிதனுக்கு அதிக பொறுமையை , தியாகத்தை கற்று தருகின்றது..

அதிலுள்ள இன்பத்தை சொல்லி தருகின்றது...சக மனிதனின் துன்பம் நம்மையும் பாதிக்க செய்கிறது..

ம.பற்றுடையவர் என்பதை விட ஆன்மீகவாதியால் சமூகத்துக்கு அதிக தொந்தரவு ஏற்படுவதில்லை..

ஆனால் ஆன்மீகம் பற்றி சிந்திக்காதவர் ( தன்னை பற்றி தன் பிறப்பு ஏன் என்பது பற்றியும் கூட ) எதை பற்றியும் யாரை பற்றியும் கவலைகொள்ளாமல், பிடிவாதமாய்

இருப்பதால் அதிகளவு தவறான நடவடிக்கையில் ஒரு வித வெறுப்பு மனப்பான்மையோடு நடந்துகொண்டு உலகையும் கெடுத்து வைப்பதாக சொல்கிறது ஆராய்ச்சிகள்..

இத்தகையவர்தான் ஆன்மீகவாதி என்ற போர்வையில் மறைந்துகொண்டும் மற்றவருக்கு தொந்தரவு தருவதும்..

ஒரு குழந்தை நல்லதொரு ஆன்மீக சூழலில் வளரும்போதே இத்தகைய நல்ல குணநலங்களை எளிதாக பெற்று வளர வைக்கப்படுவார்கள் ஆசிரியர்களால் ( அல்லது மத குருக்களால் )

நாம் ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாவிட்டாலும் வளரும் குழந்தைக்கு , புதிதாக உலகத்தை பார்த்து கேள்விகளோடு பிரமித்தும் , குழம்பியும் போயிருக்கும் குழந்தைக்கு

இத்தகைய ஆன்மீக கதைகள் , வகுப்புகள் அவர்களை நல்வழியில் வளர்க்க உதவிடும்..

உதாரணத்துக்கு கெட்ட வார்த்தை பேசுவது தப்பு.,. அடுத்தவரை காயப்படுத்தும் என சொல்லி வளர்க்கப்பட்ட குழந்தைகள் எச்சூழலிலும் அதை சொல்வதை தவிர்க்கும்..

மாறாக தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை அடையும்.. அதை வைத்தே மற்றவரை மாற்றிடவும் செய்யும்...

இதை ஆன்மீகமற்றவரால் செய்ய முடியாதா என்றால் ஒருபோதும் முடியாது என்பதல்ல. அப்படியான ஒரு சூழல் உருவாக்குவது மதத்தால் செய்வது எளிது என்பதுதான்..

காதல் என்றால் கற்பனையை ஏற்றுக்கொள்ளும் நம்மால் , மனித குல மேம்பாட்டுக்காக ,ஒரு நல்ல விஷயத்துக்காக கடவுள், அதை சார்ந்த மத கதைகளை கற்பனைகளையும் ஏற்றுக்கொள்ளலாமே.?.முக்கியமா குழந்தைப்பருவத்திலாவது....

கடவுள் நம்பிக்கை என்பது முட்டாள்தனமாய் இருக்கலாம்.. ஆனால் நிச்சயமாக தீங்கற்றது...வாழ்வதற்கான நம்பிக்கை தருகிறது ..


மேலும் பல்வேறு கோணத்தோடு தொடருவோம்..




படம் : நன்றி கூகுள்..




3 comments:

மதுரை சரவணன் said...

//கடவுள் நம்பிக்கை என்பது முட்டாள்தனமாய் இருக்கலாம்.. ஆனால் நிச்சயமாக தீங்கற்றது...வாழ்வதற்கான நம்பிக்கை தருகிறது ..//

thanks for sharing. good post.

sury siva said...

மனித அறிவின் எல்லைகளுக்கும் பரிமாணங்களுக்கும் அப்பாற்பட்ட ஒன்றை, இன்றைய தெரிந்த அறிவின்
அடிப்படையில் எடை போடுவது சரியா !

ஆல்பர்ட் ஈன்ஸ்டின் சொல்வதை கவனிப்போம்.

knowledge of the existence of something we cannot penetrate, of the manifestations of the profoundest reason and the most radiant beauty - it is this knowledge and this emotion that constitute the truly religious attitude; in this sense, and in this alone, I am a deeply religious man. (Albert Einstein)

பெஞ்சமின் இஸ்ரேலி கூறுகிறார்:

where knowledge ends, religion begins.

நம்புவதும் நம்பாததும் அவரவர் உரிமை. இருப்பினும் அறிவின் , அதாவது முழு மனித சமுதாயத்தின் த்ற்பொழுதைய அறிவின் எல்லைகளை, சரிவரப்புரிந்துகொள்வதும் நன்று.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி சரவணன் , Sury..

[where knowledge ends, religion begins. ]


மிக சரி..