Monday, September 6, 2010

பெண்ணே உனக்குத்தான் எத்தனை பெயர்.?























































ப‌த்துமாத‌ம் வ‌ய‌ற்றில் சும‌ந்து
- தாலாட்டி
வ‌ள‌ர்த்த‌ பெண்ணே உன்னை
அம்மா என்று அழைக்கிறேன்!!


என் உட‌னாய் பிற‌ந்து - பாச‌ம‌ழைப்
பொழிந்த‌ பெண்ணே உன்னை
ச‌கோத‌ரி என்று அழைக்கிறேன்!!




வெள்ளைத் தோல் உன்ன‌ழ‌கில் - ம‌ய‌ங்கி
வ‌சீக‌ரித்த‌ பெண்ணே உன்னை
காத‌லி என்று அழைக்கிறேன்!!




அடிமையாய் வ‌ந்து என‌க்கு - ப‌ணிவிடை
செய்யும் பெண்ணே உன்னை
ம‌னைவி என்று அழைக்கிறேன்!!



என்னைவிட‌ அதிக‌ம் ப‌டித்து - பொதுவில்
ஆணிய‌ த‌வ‌றுக‌ளை சுட்டுவ‌தால்
புர‌ட்சி பெண்ணே உன்னை
விப‌ச்சாரி என்று அழைக்கிறேன்!!



க‌டைசியில் சொன்ன‌து நிஜ‌மாய்
போனால்,
மேலே சொன்ன‌து பொய்யாய்
போகுமோ!!!!






17 comments:

எல் கே said...

karpanai nalla illa

எண்ணங்கள் 13189034291840215795 said...

வருக எல்கே..

இது எல்லாருக்கும் பொருந்தாது..

சில ஆணாதிக்கவாதிகளுக்கு மட்டும்..

முக்கியமா புனைவு என்ற பேரில் பெண்ணை மட்டம் தட்டும் ஒரு கூட்டத்தாருக்கு மட்டும்...

ஆக புரட்சிப்பெண் , இனி விபச்சாரி என்ற பேரை வெற்றி என நினைக்க ,ஊக்கம தரவே இக்கவிதை...

Robin said...

//இது எல்லாருக்கும் பொருந்தாது..// நன்றி :)

எண்ணங்கள் 13189034291840215795 said...

Hi jmmsanthi,

Congrats!

Your story titled 'பெண்ணே உனக்குத்தான் எத்தனை பேர்.?' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 7th September 2010 10:56:02 AM GMT



Here is the link to the story: http://ta.indli.com/story/333698

Thanks for using Indli

Regards,
-Indli

----------------------------------------


பாராட்டுகள் அனைத்தும் இதை எனக்கு எழுதி அனுப்பிய பெரியவருக்கே சேரும்...

தன் பெயரை வெளியிடவேண்டாம் என கேட்டுக்கொண்டதால் தர இயலவில்லை..

வணங்குகிறேன்..

பூங்குழலி said...

என்னைவிட‌ அதிக‌ம் ப‌டித்து - பொதுவில்
ஆணிய‌ த‌வ‌றுக‌ளை சுட்டுவ‌தால்
புர‌ட்சி பெண்ணே உன்னை
விப‌ச்சாரி என்று அழைக்கிறேன்

ஆணாதிக்கவாதிகள் மட்டுமல்ல சில பெண்களும் இவ்வாறு பேசுவது தான் பெரிய சாபக்கேடு

எண்ணங்கள் 13189034291840215795 said...

பூங்குழலி said...


ஆணாதிக்கவாதிகள் மட்டுமல்ல சில பெண்களும் இவ்வாறு பேசுவது தான் பெரிய சாபக்கேடு

---------------------

அதே..

ஆணாதிக்கவாதம் பெண்ணிடமும் இருக்கு...

வருகைக்கு நன்றி பூங்குழலி..

Udayakumar Sree said...

இந்த ஆண் Vs பெண் சண்டை ஓயவே ஓயாதா?

அந்த அர்த்தனாரிதான் காப்பத்தனும்!

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger Udayakumar Sree said...

இந்த ஆண் Vs பெண் சண்டை ஓயவே ஓயாதா?

அந்த அர்த்தனாரிதான் காப்பத்தனும்!


-------------------------------------

தமிழ் பெண்களின் சாபக்கேடுதான்..

வெளிநாடுகளில் இப்படி இல்லை...வட இந்தியாவிலோ அதிகமில்லை..

Avargal Unmaigal said...

ஒரு பெண்னை மதிக்க தெரியாதவன் ஒரு மனிதனே அல்ல. சாந்தி அவர்களே யார் என்ன சொல்கிறார்கள் என்று கவலைப்பாடாமல் நீங்கள் எழுதுங்கள். நீங்கள் கவலைபட வேண்டியது உங்கள் கணவர், குழந்தைகள் மற்றும் உங்கள் குடும்பதினர் மட்டுமே. அன்னை தெராசாவைப் ப்ற்றியும் காந்தியையும் ஆரம்பத்தில் பல பேர் அசிங்கமாக பேசினார்கள் ஆனால் அதையெல்லாம் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார்கள். அதுபோல இருங்கள். வாழ்க வளமுடன்

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger Udayakumar Sree said...

இந்த ஆண் Vs பெண் சண்டை ஓயவே ஓயாதா?

அந்த அர்த்தனாரிதான் காப்பத்தனும்!


-------------------------------------

தமிழ் பெண்களின் சாபக்கேடுதான்..

வெளிநாடுகளில் இப்படி இல்லை...வட இந்தியாவிலோ அதிகமில்லை..

September 8, 2010 12:31 PM
Delete
Blogger Avargal Unmaigal said...

ஒரு பெண்னை மதிக்க தெரியாதவன் ஒரு மனிதனே அல்ல. சாந்தி அவர்களே யார் என்ன சொல்கிறார்கள் என்று கவலைப்பாடாமல் நீங்கள் எழுதுங்கள். நீங்கள் கவலைபட வேண்டியது உங்கள் கணவர், குழந்தைகள் மற்றும் உங்கள் குடும்பதினர் மட்டுமே. அன்னை தெராசாவைப் ப்ற்றியும் காந்தியையும் ஆரம்பத்தில் பல பேர் அசிங்கமாக பேசினார்கள் ஆனால் அதையெல்லாம் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார்கள். அதுபோல இருங்கள். வாழ்க வளமுடன்


------------

மிக்க நன்றிங்க.. மிக மிக ஊக்கமாய் உள்ளது.. நான் தொடர்வேன் உங்களைப்போன்றவரின் ஆசியோடு...

பின்னோக்கி said...

//வெள்ளைத் தோல் உன்ன‌ழ‌கில் - ம‌ய‌ங்கி

ஒன்று புரியவில்லை. உங்களின் ப்ளாக்கில் இருக்கும் அனைத்துப் படங்களையும் ஒரு முறை பாருங்கள். எதாவது கருப்பாக அல்லது மானிறமாக ஒரு முகம் தெரிகிறதா. உங்களின் பார்வையைப் பொதுப் பார்வையாக்காதீர்கள்.

//அடிமையாக மனைவி.

இதுவும் உங்களின் பார்வையே அன்றி பொதுப் பார்வையாகது.

மற்றபடி உங்களைச்சுற்றி நிகழும் பிரச்சினைகள் முழுவதும் அறிந்தவன் இல்லை. அதனால் மேலே சொன்ன கருத்துக்களைத் தனியே வாசிக்கவும். எதனுடனும் இணைத்துப் படிக்க வேண்டாம்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

pinnookki ungkal paarvaiyum nanru..


nanri

எண்ணங்கள் 13189034291840215795 said...

pinnookki ungkal paarvaiyum nanru..


nanri

R.Gopi said...

//என்னைவிட‌ அதிக‌ம் ப‌டித்து - பொதுவில் ஆணிய‌ த‌வ‌றுக‌ளை சுட்டுவ‌தால் புர‌ட்சி பெண்ணே உன்னை விப‌ச்சாரி என்று அழைக்கிறேன்!!//

இந்த வரிகள் மிகவும் வேதனையளிப்பதாக இருந்தது தோழி.....

இந்த நிலை என்று மாறுகிறதோ, அந்நாளில் தான் சமூக மாற்றம் உண்மையிலேயே ஏற்பட்டு விட்டது என்று பொருள் கொள்ளலாம்...

கவலை வேண்டாம்... இந்த் நிலை விரைவில் மாறும்....

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger R.Gopi said...

இந்த வரிகள் மிகவும் வேதனையளிப்பதாக இருந்தது தோழி.....

இந்த நிலை என்று மாறுகிறதோ, அந்நாளில் தான் சமூக மாற்றம் உண்மையிலேயே ஏற்பட்டு விட்டது என்று பொருள் கொள்ளலாம்...

கவலை வேண்டாம்... இந்த் நிலை விரைவில் மாறும்....


----

Thanks Gopi...

Women should get used to these type of vulgar abuses from men so that they should move forward ignoring these rude comments rumours etc..,,

Actually , indirectly these type of men strengthen women.

So lets also say thanks to these men.

:)

RAGUNATHAN said...

நல்லா இருக்கு கவிதை...அப்படியே
இதையும் படிங்க...

http://krnathan.blogspot.com/2010/09/blog-post_11.html

Unknown said...

சாட்டையடி!