Monday, September 6, 2010

இழிவினால் முன்னேற்றம்....- சிறுகதை..
-----------------------------------படம் : நன்றி கூகுள்

-----------------------------------"இதப்பாரும்மா.. உனக்கு நல்ல முகவெட்டு.. சினிமா துறையில் நல்லதொரு எதிர்காலம் இருக்கு "

" வேண்டாம் சார். என் குடும்பத்துல பழக்கமில்ல.. விடமாட்டாங்க சார்.. தொந்தரவு பண்ணாதீங்க."

" ஏம்மா இது உன்னோட வாழ்க்கை.. நீ பிரபலமானதும் அவங்க ஏத்துக்குவாங்க.. அதுவரை நான் கவனிச்சுக்கிறேன் உன்னை.."

" யோசிக்கிறேன் சார். "

-----------------------------------------------------------------

2 வருடத்துக்கு பின்.."இதப்பாரு இந்த படம் பயங்கர வெற்றின்னு ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர் உன்னை நெருங்குவாங்க.. என்கிட்ட கேட்காம கால்ஷீட் கொடுத்திடாதே.."

" சரிங்க.."

" உன்னை எந்த உசரத்தில் கொண்டு போய் சேர்க்கணும்னு எனக்கு தெரியும்.. என்கிட்ட மோதக்கூடிய பணமோ, பலமோ இண்டஸ்ட்ரில யாருக்கும்
கிடையாது .. தெரியுமுல்ல.. "

" ஆமாங்க.."


" ஆனா அதுக்கு நீ ஒண்ணு செய்யணும்...எனக்கு ----------------- இருக்கணும்.."

" அய்யோ , மன்னிச்சுடுங்க சார்.. நவீனும் நானும் உயிருக்குயிரா ......"


" சுத்த பையித்தியக்கார பொண்ணாயிருக்கியேம்மா.. அவன் ஹீரோ.. அவன் ஆயுசுக்கும் நடிச்சுட்டே இருப்பான்.. ஆனா இண்டஸ்ட்ரீல பெண்ணோட மதிப்பு அவ வயசுக்குத்தான்... அதான் சில பெரிய நடிகையெல்லம் இப்படி செட்டில் ஆயிடுறாங்க . கேள்விப்பட்டதில்லையா.? "

--------------------------------------------------------


5 வருடத்துக்கு பின்...

" ஹலோ..."

" ஏங்க நாந்தான்.. எப்ப நம்ம கல்யாணம்.?"


" நீயா.. இந்த நம்பர் புதுசா இருக்கே.. சரி ரொம்ப தொந்தரவு பண்ணாத.. நான் ஸ்விட்சர்லாந்து போய்ட்டு வர 3 மாதமாகும்..
ஏதாச்சும் சீரியல் ல அம்மா , அக்கா வேஷத்துக்கு முயற்சி பண்ணேன்... என்னை இனி அணுகாதே .. நான் ரொம்ப பிஸி.."

" என்னங்க இப்படி சொல்றீங்க.. உங்களை நம்பி எந்த படத்துக்கும் ஒத்துக்காம என் வாய்ப்புகளையெல்லாம் விட்டேனே.. நீங்க கல்யாணம் பண்ணிக்கிறேன்னு..."


" இத பாரு...இது சகஜம் இந்த இண்டஸ்ட்ரீ ல..பொலம்புரத விட்டுட்டு, பொழைக்கிற வழிய பாரு.."


" நான் சும்மா விடமாட்டேன் உங்களை.. எங்கிட்ட சாட்சி இருக்கு..."


" என்ன செய்யணுமோ செய்யும்மா.. வரட்டா.. உடம்பு பத்திரம்.."

---------------------------------------------------------------

" இன்ஸ்பெக்டர் சார் , அந்த நடிகை நம்மை ரொம்ப தொந்தரவு செய்றாப்ல..."

" சொல்லிட்டீங்கல்ல.. செஞ்சுருவோம்...நீங்க நல்லபடியா பேசுற மாதிரி அவள அந்த விடுதிக்கு மட்டும் வர சொல்லிடுங்க.."

---------------------------------------------------------------

" அட என்னம்மா இது.. கோழையாட்டம் தற்கொலை அது இதுன்னு..."

" மேனேஜர் சார்.. பார்த்தீங்கதானே?.. என்கூட 5 வருஷமா இருக்கீங்க.. நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரியும்தானே?."


" விடுங்கம்மா.. சில ஊடகம் இப்படித்தான் போடுவாங்க .. அதுக்கு சில காவலர்களும் ஆதரவு ..என்ன செய்ய,..பெண் னா விபச்சாரினு..நா கூசாம எழுதுவாங்க."

" எனக்கு உயிரோட இருக்க பிடிக்கல சார்.."

" அட என்னகங்கம்மா நீங்க.. உயிர விட்டா அவனுங்க சொன்னது நெசமாயிடும்.. காலையிலேயிருந்து எத்தனை அழைப்புகள் தெரியுமா.?"

" எதுக்கு சார்.. " பயத்தோடு...


" பல கட்சியில் உங்களை கூப்பிடுறாங்கம்மா.."

" நிஜமாவா.?"


" ஆமாம்மா.. அதிலும் ஆளுங்கட்சி பிரமுகர் நேரில் சந்திக்க ஆள் அனுப்புவதாய் சொல்லிருக்கார்...இனி கவலை பட ஓண்ணுமேயில்லை.."

" எனக்கென்ன அரசியல் தெரியும் சார்.."


" எல்லாம் கத்துக்குவீங்க.. இனி நீங்க அந்த தயாரிப்பாளரை ஒரு கை பார்க்கவாவது அரசியலில் சேர்ந்தே ஆகணும்மா.. "

" ஏன்
என்னை போய் கூப்பிடணும் சார்.. என்னை பற்றி இத்தனை மோசமா செய்திகள் வந்தும்.?"


" அதான் மா ரகசியம்.. இனி நீங்க இழக்க எதுவுமேயில்லை.. எதையும் தாங்கும் இதயம் உங்களைப்போன்றவர்களிடம் மட்டும்தான் இருக்கும்... விமர்சனம் என்ற சாக்கடையை அலட்சியம் செய்ய உங்களால் மட்டும் தான் முடியும்... "

" ஆமா சார்.. இகழ்ச்சியே எனக்கு இப்ப துணையா இருக்கு.. இனி என்னைப்பற்றி பேசினாலே அது விளம்பரமாயிடும் எனக்கு.... இனி என் வாழ்க்கையில் நான் செய்ய நினைத்தவற்றை துணிவா செய்யலாம்... "

" அம்மா , அப்ப மொதல்ல போன் போட்டு தகவல் சொல்லிடுறேன் கட்சிக்கு..."" ஆமா சார். அப்படியே அந்த தயாரிப்பாளருக்கும் ஒரு நன்றி சொல்லிடுங்க...என் சார்பில்.."


4 comments:

இரகுராமன் said...

enakku ovvoru variyilum rendu rendu meaning theriyuthe :P en moolai sariyaa thaan velai seiyuthaa appo ??

oru doubt athaan clear pannika keten :)

nalla irukku unga karpanai

புன்னகை தேசம். said...

Blogger இரகுராமன் said...

enakku ovvoru variyilum rendu rendu meaning theriyuthe :P en moolai sariyaa thaan velai seiyuthaa appo ??


----------------------------

எழுத்தாளர் நோக்கிலேயே பதிவு படிக்கப்படவேண்டும் என்ற கட்டாயம் இல்லை..

அவரவர் சூழல், அவரவர் கற்பனை , அனுபவம் , தரற்றுக்கேற்பவும் கூட பல அர்த்தங்கள் தெரியலாம்தானே?..

நன்றி .

Udayakumar Sree said...

ஒரு மும்பை நடிகை (ஆனாலும் குண்டு தமிழச்சி)கதை போல இருக்கு.

புன்னகை தேசம். said...

Blogger Udayakumar Sree said...

ஒரு மும்பை நடிகை (ஆனாலும் குண்டு தமிழச்சி)கதை போல இருக்கு.

---------------------------------


வருகைக்கு நன்றி உதயகுமார்..

யாரையும் குறிப்பிடுவதல்ல..

செய்திகள் மூலமே கரு கிடைக்கும்..