Friday, September 24, 2010
புர்கா போட்ட பெண்கள்.
இந்த செவ்வாய் அன்று ஏற்கனவே எழுதியிருந்தேன் ஐடிசி க்கு சென்று அகதிகளை சந்தித்ததாக..
10 மணிக்கு வரிசையில் நின்று படிவம் நிரப்பி கொடுத்துவிட்டு அமர்ந்தால் எதிரே 2 வட இந்தியர் , ஒரு பாகிஸ்தான் பெண்மணி , 3 இஸ்லாமிய தாய் பெண்கள் ( கல்லூரி செல்லும்
பெண்களாயிருக்க கூடும்.. )
நான் சுவற்றை பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்ததால் எனக்கு பார்வையை செலுத்த வேறு வழியில்லை.. இவர்கள் 6 பேரையும் மாற்றி மாற்றி பார்த்தே ஆகவேண்டிய நிலைமை,..
அல்லது கண்ணை மூடிக்கொண்டு இருக்கணும்..
அந்த பாகிஸ்தான் பெண்மணி 6 அடி உயரம் , மெலிந்த தேகத்தோடு மிக அழகாக ஒரு மாடல் போல் இருந்தார்.. இஸ்லாமியர் என்பதன் அடையாளமாக
தலையில் துப்பட்டா மட்டுமே அனிந்திருந்தார்.. அது அவருக்கு மேலும் அழகூட்டியது என்றே சொல்லலாம்..
கால் மேல் கால் போட்டு மிக கம்பீரமாக அமர்ந்திருந்தார்.. ( கம்பீராமன பெண்மணிகள் எப்போதும் என்னை கவர்ந்திடுவார்கள்.:) )
கால் , கை விரல்களில் மிக பொருத்தமான நகப்பூச்சுகள்.. தன்னை அழகுபடுத்திக்கொள்ள எப்படி நேரம் செலவழிப்பார்கள் என்பது எப்போதுமே நான் வியப்பதுண்டு...
நான் செய்யாவிட்டாலும் அதை முழுமனதாய் ரசிப்பேன்.. இங்கே பார்க்கும் சில தாய் பெண்களை வைத்த கண் வாங்காமல் பார்த்த சம்பவமுண்டு..
கணவர் தான் " சைட் அடித்தது போதும் வா." என அழைத்து செல்லணும் அத்தனை அழகு பதுமைகள் பொருத்தமான அலங்காரத்தோடு , ஆப்பிள் கன்னங்களோடு
கன்ணை கவர்ந்ததுண்டு.. ( நல்லவேளை ஆணாய் பிறக்கவில்லை :)) ).. அதே போல திருநங்கைகளும் அத்தனை அழகு இங்கே...
அதே போல சிறுமிகளும் அவர்கள் உடுப்புகளும் தலை அலங்காரமும்..எப்போதும் ரசனைக்குறியவை..
காலில் அணியும் காலணியில் கூட பாருங்கள்.. பெண்களுக்கென்றால் அதில் கல் பதித்து , அழகான சம்க்கி , பூக்கள் கொண்டு அழகழகான வேலைப்பாடுகளுடன் .
ஒரு அலுவலில் , ஏன் காவல்துறை , நீதிமன்றம் , மருத்துவமனை போன்ற வெற்றிடமாக இருக்குமிடத்தில் கூட ஒரு பூந்தொட்டியையோ, பச்சை இலை செடிகளையோ வைத்து பாருங்கள்..
மனதுக்கு எத்தனை இதம்...
ஒரு பிரச்னையின் போது நாம் கேட்கும் மெல்லிய இசை?.. நல்ல திரைப்படம்./. கடற்கரையில் காலார நடை..?.
இப்படி ரசனைகள் நம் மனதினை மாற்றும் வல்லமை படைத்தவை..
"A THING OF BEAUTY IS JOY FOREVER " John Keats சொன்னது எத்தனை நிஜம்.?
அழகு படுத்திக்கொள்வது , அழகை ரசிப்பது அவரவர் விருப்பம்.. ஆனால் அதை வைத்து மட்டுமே எடைபோடுவதுதான் தவறான விஷயம்..
இப்படி இருக்க , எனக்கு மிக வேதனை தந்த விஷயம் என் முன்னால் அமர்ந்திருந்த அந்த 3 இஸ்லாமிய வாலிப பெண்கள்..
தலையில் வெள்ளை முக்காடு..
உடம்பு முழுதும் கருப்பு அங்கி போன்ற உடை..
கைகளுக்கும் , விரல்களுக்கும் கூட கருப்பு துணியால் மூடி, கால்களுக்கு சாக்ஸ் போட்டு கருப்பு ஷூ போட்டு மூடி...:(
கண்களை தவிர வேறெதுவும் காணமுடியாது..
ஏற்கனவே தாய் மக்கள் பேசுவது சத்தமே கேட்காது..ரகசியம் பேசுவது போல மிக மென்மையான சங்கீத மொழியில் பேசுவர்..
இப்ப அங்கியினுள் பேசுவது ?.
அதில் ஒரு பெண் உணவருந்த ஆரம்பித்தார்.. கை விரல் வரை இருந்த அந்த தலை முக்காடானது , அவர் சாப்பிட மிக இடைஞ்சலாக வந்து வந்து விழுது சாப்பாட்டின் மேல்..
அதை பொருட்படுத்தாது ஒரு கவளம் எடுத்து வாயில் போட மற்றொரு கையால் அந்த துணியை பிடித்துக்கொள்ள , இப்படியே ஒவ்வொரு வாய்க்கும் அவர் செய்வது பார்க்க கஷ்டமாயிருந்தது..
தண்ணீர் குடிக்கவும் அந்த பாட்டிலை துணிக்குள் எடுத்து சென்று கஷ்டப்பட்டே குடிக்கணும்..
அவர்களுக்கு அது பழகிப்போன ஒன்றுதான் இல்லையென சொல்லவில்லை..
ஆனால் இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு பழக்கவழக்கத்தை வைத்து பெண்களை கஷ்டப்படுத்துவதை பார்த்தால் மிக வருத்தமாக உள்ளது..
எனக்கு தெரிந்த ஒரு இஸ்லாமிய பெண் வெளிநாடு சென்று படிக்கும்போது விரும்பிய உடை , ஏன் ஜீன்ஸ் கூட அணிவார்.. விரும்பிய அணிகலனும் அப்பப்ப உள்ள பேஷன் பொருந்த்து.
ஆனால் ஊருக்கு வந்துவிட்டால் கருப்பு அங்கியில் முடங்கி விடுவார்.
எத்தனை எத்தனை ஆசைகளை விருப்பங்களை மற்றவருக்காக அவர் இருக்கும் சமூகத்துக்காக விட்டுக்கொடுக்கவேண்டியுள்ளது?..
இது போல எத்தனை பெண்கள் தம் ஆசைகளை துறந்து துறவி வாழ்க்கை வாழ்ந்துகொண்டுள்ளார்கள்..?
கிடைத்துள்ளது ஒரு வாழ்க்கை .. அதில் பலதரப்பட்ட கட்டுப்பாடோடு உயிர் இருந்தும் பிணமாய் வாழ்ந்துகொண்டு ?..
இதில் திருமணம் செய்து வைத்துவிட்டு வெளிநாடு செல்வார் கணவர்.. , ஆயுசுக்கும் தொலைக்காட்சியை பார்த்து அதில் வரும் காதல் பாட்டுகளை கற்பனை செய்துகொண்டு
2 ஆண்டுக்கு ஒருமுறை கூடிக்கொண்டு , ஒரு நாடகமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு...?????.. நல்லபெயர் எடுக்கவா?...
கடவுள்னு ஒருத்தர் இருப்பாரென்றால் அவருக்கு நம் மனம் புரியாதா?.. மனதளவில் நாம் சரியாக இருந்தால் போதாதா?..
இதை யோசித்துக்கொண்டிருக்கும்போதே அப்பெண்களில் ஒருத்தி வந்து தாய் பாஷையில் அந்த படிவம் நிரப்பிட உதவி கேட்டார்..
அப்பதான் அந்த கண்களை சந்தித்தேன்.. அதிலேயே தெரியுது அவள் தாழ்ச்சி , புன்னகை...
உலகமெங்கும் பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த கட்டுப்பாடு?..
அப்படியானால் இஸ்லாமிய பெண்ணை தவிர மற்ற பெண்களை ஆண்கள் பார்க்கலாம் என்ற சமரசமா?..
இல்லை மற்ற பெண்களை பார்க்கும்போது கண்களை மூடிக்கொண்டு பேசுவார்களா?..
கண்களுக்கு கடிவாளம் போடலாம் ... மனதுக்கு... கற்பனைக்கு எப்படி போடுவது?..
யாரை ஏமாற்றுகிறோம்?.. யாருக்காக...
ஒரு இஸ்லாமிய பெண்ணை என்னை போன்ற மற்றொரு பெண் ரசித்து பார்க்க கூடாதா?..
ஒரு பாகிஸ்தான் பெண்மணி கம்பீரமாக இருப்பதாய் மகிழும் நான் , எனக்கு முன்னுதாரணமாய் எடுத்துக்கொள்ளும் நான் இப்படி புர்காவினால் எத்தனை பெண்களை இழந்துள்ளேன்.?
பாராட்டு எல்லோருக்குமே பிடிக்கும்.. புர்காவுக்குள் புழுங்கும் பெண்கள் மட்டும் விதிவிலக்காய் இருக்கணுமா?..
நடமாடும் சிறை கைதிகளாய் தோன்றினார்கள் எனக்கு...
உலகில் அடுத்து ஒரு மிகப்பெரிய மாற்றமோ, புரட்சியோ வருமென்றால் அது இந்த புர்காவிலிருந்து விடுதலையாக இருக்கணும் என்பது என் பேராசை..
நான் அணிவது என்னை நான் ரசிக்க, எனக்கு உற்சாகம் கொள்ளவே.. அதே உற்சாகம் அனைவருக்கும் கிடக்கணுமே..
நான் ரசித்தவகைகளை , நான் அனுபவித்து உடுத்தியவகைளை , நான் விரும்பிய நிறங்களை , இந்த சகோதிரிகளும் அணியும் காலம் எப்போது வரும்..
வரணும்.. வரும்...
யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புகள்..
ஆனால் அதைவிட நான் அதிகம் காய்ப்படுகிறேன் ஒவ்வொரு முறை புர்காவினுள் ஒரு கைதியாக ஒரு பெண்ணை , சக மனுஷியை பார்க்கும்போது...:((
படம் : நன்றி கூகுள்..
Subscribe to:
Post Comments (Atom)
52 comments:
furkaa yaen... plz visit..
Dear Sir neenga keta doubt indha two linksayum padichu paarunga.. ungaluku ans kidaikum..
http://onlinepj.com/pengal/hijab_en/
SARCHAI AAKAPADUM PURKAA
http://onlinepj.com/pengal/sarchaiyakapdum_burka/
islam samanthamaaa ungaluku enna doubtso adhai indha linkil paarungal
http://onlinepj.com/bayan-video/nonmuslim_bayan/
muslim allathavargalin kelvigal
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/kelvi_pathil_thokupu/
நன்றி ஹசன்.
நீங்க தந்த லிங் வாசிப்பேன்.மாற்று கருத்துகளை மதிப்பேன்..
இருப்பினும் பல்லாயிரம் ஆண்டுக்கு முன் ஏற்படுத்திய பழக்கவழக்கம் இன்றைய நவீன காலத்திலும் தொடருவது என்னால் ஏற்க முடியவில்லை...என் வருத்தம் மட்டுமே இது...
அன்புள்ள சகோதரிக்கு.
//இருப்பினும் பல்லாயிரம் ஆண்டுக்கு முன் ஏற்படுத்திய பழக்கவழக்கம் இன்றைய நவீன காலத்திலும் தொடருவது என்னால் ஏற்க முடியவில்லை...என் வருத்தம் மட்டுமே இது...//
பல்லாயிரக்கனக்கான ஆண்டுகளுக்கு முன்னே ஏர்படுத்திய பழக்க வழக்கமென்றாலும். அதில் இன்றைக்கும் தேவையான நல்வழியுள்ளதாலும்.இறைவன் நமக்கு சிரமத்தை தரமாட்டான் என்ற ஆழ்ந்த நம்பிக்கைகொண்டுள்ளவர்களுக்கும். என்றுமே சிரமம் ஏற்படாது.
புர்கா என்பது சிறையல்ல, சுதந்திரம்.
அதை பின்பற்றும் மனம் பொறுத்தது.
வெளியுலக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது சிரமமாக தெரிவதுபோல்தோன்றும்
அதை உளப்பூர்வமாக உணரும்போது
வரமாக தெரியும்.
ரசனையிருப்பவனே மனிதன்
ஒரு பொருளை ரசிபது போன்றல்ல,ஒரு பெண்ணை ரசிப்பது என்பது.
ஒரு பெண் பெண்ணை ரசிப்பதற்க்கும். ஒரு ஆண் பெண்ணை ரசிப்பதற்க்கும் வித்தியாசங்கள் பல பல உண்டு.
தாங்களே இந்தளவு ரசித்திருக்கும்போது, இதே ஒரு ஆண் அந்தபெண்ணை ரசித்திருந்து அந்த ரசிப்பு அவன் மனதில் சிறு சபலத்தை ஏற்படுத்தி மறைந்தாலும் தவறுதானே! ஏனெனில் மனிதர்கள் ஏதேனும் ஒரு சமயத்தில் தன்னை மறந்தவர்கள் தவறிழப்பவர்கள். இதையாராலும் மறுக்கமுடியுமா?
தற்கால நவீனயுகத்தில், ஒவ்வொருநாளும் பெண்கள் வெளியுலகில் படும்பாடையும்
அதனால் நடக்கும் சம்பவங்களையும் நான் சொல்லித்தெரியவேண்டிதில்லை.
அப்படியிருக்கும் தற்காலத்தில் நம்மை நாம்தானே பாதுகாக்கவேண்டும். அதற்க்கு பெண்களுக்கு புர்க்காவும் ஒருவகை பாதுகாக்கும் கவசமே என்பதும் என் கருத்து.
புர்காவால் எவ்வித இடைஞ்சலுமில்லை. ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு வகைகளில் புர்கா என்ற, ஆடைகளுக்குமேல் ஒரு மேலாடை அணிந்து தன்னை தற்காத்துக்கொள்கிறார்கள் அவ்வளவுதான்.
//நான் அணிவது என்னை நான் ரசிக்க, எனக்கு உற்சாகம் கொள்ளவே.. அதே உற்சாகம் அனைவருக்கும் கிடக்கணுமே..
நான் ரசித்தவகைகளை , நான் அனுபவித்து உடுத்தியவகைளை , நான் விரும்பிய நிறங்களை , இந்த சகோதிரிகளும் அணியும் காலம் எப்போது வரும்..//
தாங்கள் நினைப்பது தவறு. தங்களுக்கு பிடித்த, விருப்பமானவைகளை அவர்கள் அணிகிறார்கள் அதற்க்கு இஸ்லாத்திலும், இல்லங்களிலும்,எவ்விதத்திலும் தடையில்லவேயில்லை சொல்லப்போனால் அலங்காரம் செய்துகொள்ள
முழு உரிமையும் வழங்கப்பட்டிருக்கிறது பெண்களுக்கு. அவர்கள் வெளியில் செல்லும்போது தனக்கு பிடித்தமானவைகள் செய்கிறார்கள் ஆனால் அதற்குமேல்தான் இந்த புர்காவை அணிகிறார்கள்.
ஆக அவர்களுக்கு தேவையான ஆடை அலங்காரங்களை அவர்கள் செய்துகொண்டு தானும் சந்தோஷப்படுவதுடன் தன்கணவரையும் சந்தோஷப்படுத்துகிறார்கள்.இதுதான் உண்மை.
வீட்டிலிருக்கும்போது யாரும் தாங்கள் சொல்லும் கருப்பு அங்கியை போட்டுக்கொண்டேயிருப்பதுமில்லை.
தாங்கள் விரும்புவதைபோல் அவர்கள் விரும்புவதை அணிந்து வருகிறார்கள்.அதேபோல் வெளியுலகிற்க்கு வரும்போது கருப்பு அங்கிமட்டுமே அணிந்துவருவதுமில்லை.
வரையரைக்கு உட்பட்டதே வாழ்க்கை,இப்படிதான் வாழவேண்டுமென ஒரு கோட்பாடு இருக்கிறதல்லவா ஒவ்வொருவருக்கும். அதேபோன்றுதான் இதுவும். இதை பாரமா நினைப்போருக்கு இக் கருத்து சரிவராது அதாவது. தன்நாட்டில் பிறக்காக வாழ்ந்து மூடிக்கொண்டு, வேறொருநாட்டில் அவைகளில்லாமலிருப்போருக்கு,
இது இறைகட்டளை. இதை மற்றவர்களுக்காக செய்வதல்ல, இதில் மனிதருக்கு மாபெரும் நல்லுபதேசம் இருக்கு அதை விளங்கினால் நன்மை நமக்கே.
புர்கா போடுவதால் பெண்கள் ஒன்றும் அடிமையில்லை. அவரவர்களின் காரியங்களாகட்டும் கல்வியாகட்டும்.வேலையாகட்டும் அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு நிச்சயம் உண்டு,அதை செயல்படுத்தியும் வருகிறார்கள்.
இறைவன் சொன்னபடி, இறைவேதம் சொன்னபடி, இறைத்தூதர் சொன்னபடி, நடப்பதையும். நடைமுறைப்படுதுவதையும்.
விரும்புவர்கள் இஸ்லாமியர்கள்.
அதில் நமக்கு நல்லது இருக்குமென உறுதியாய் நம்புகிறவர்கள்.
நல்லதையும் கெட்டதையும் பகுதறிக்கூடிய அறிவை நமக்கு தந்திருக்கும் இறைவன். நமக்கு சிரமமான எதையும் தரமாட்டான் என்ற நம்பிக்கை. அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தால்,உணர்ந்து வருவதால்தான் இந்த நீண்ட விளக்கவுரை.
என்றும்
அன்புடன் மலிக்கா
அன்புச்சகோதரியே இதையும் பார்க்கவும்
http://niroodai.blogspot.com/2010/07/blog-post_04.html
//கிடைத்துள்ளது ஒரு வாழ்க்கை .. அதில் பலதரப்பட்ட கட்டுப்பாடோடு உயிர் இருந்தும் பிணமாய் வாழ்ந்துகொண்டு ?..//
இது பிணமாய் வாழ்வது என்று இருந்தால் இஸ்லாம் 1400ஆண்டுகாலம் தொடர்ந்து வந்து இருக்குமா..?.
இந்த சின்ன இடுகையில புரிய வைக்க முடியாது உங்களுக்கு. மார்க்க அறிஞர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் தகுந்த விளக்கம் தருவார்கள்.
இதுப்போன்ற சந்தேகம் வருது, கேட்பது நல்லதுதான் . அப்போதுதான் இஸ்லாத்தின் முழு பரினாமமும் புரிபடும் தேவையில்லாத மனகசப்புகளும் விலகும்.
மிக அருமையான விளக்கம் மலிக்கா..
மாற்றுப்பார்வையை ஏற்கிறேன்...
ஜெய்லானி நன்றி வருகைக்கு..
இஸ்லாம் மீது எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை..
எனக்கு நேரம் கிடைக்கும்போது மற்ற சந்தேகங்களையும் வைக்கிறேன்...
இருப்பினும் இறைகட்டளை என சொல்லி அதை நம்புவதால் அதற்கு மேல் நான் என்ன சொல்ல?..
அந்த நம்பிக்கைகளை மதிப்பதை தவிர?..
கண்டிப்பா மலிக்கா..
நான் பிளாக் உலகுக்கு புதிது.. குழுமமே கதியென இருந்துவிட்டேன்..
தங்களைப்போன்றவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..
அருமையாக இருக்கு உங்க எழுத்து..
பார்த்தேன்..கவிதை மிக அருமை மலிக்கா..
நீங்கள் ஏற்கனவே பலரால் காயபப்ட்டிருப்பதாய் தெரிகிறது..
நான் வேறு காயப்படுத்திவிட்டேன் போல என் இடுகை மூலம்..
என் நோக்கம் அதுவல்ல..
நான் பெற்ற சுதந்திரம் அவர்களுக்கு இல்லையே என்ற கவலை..
அல்லது தலைக்கு மட்டுமாவது முக்காடிடலாம் என்ற எண்ணம் உண்டு... சில கிளைமேட் காரணங்களாலும் சொல்கிறேன்..அவர்கள் படுவது எனக்கு அவஸ்தையாக தெரிந்தது..
மற்றபடி இறை கட்டளையை நீங்களே மனமுவந்து ஏற்கும்போது எதுவுமே ஒரு பொருட்டல்ல என்று ஆணித்தரமாக நானும் நம்புகிறேன்...
ஒருவரின் நம்பிக்கையை சிதைப்பதை ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன்.. அவரவர் விருப்பம்
[பலங்காலத்து நாகரீகம்போல்
பின் நவீனத்திலும் ஆடைகளற்றும்
அரைகுறையாய் திரியும் மக்களிடையே
அகிலத்தை அறிவோடு வலம்வந்து
அசிங்கத்தை அவமதிக்கும்
இதேக் கூண்டுகிளிகளாய்]
இது கொஞ்சம் வருத்தம் தந்தது சகோதரி..
அரைகுறையாய் திருவது என்றாலும் ஒரு பெண்ணை அவள் சார்ந்த சூழலில் அவளால் தற்காத்துக்கொள்ள முடியுமானால் அவள் நிர்வாணமாய் கூட இருக்கலாம் என்பது என் கருத்து..
இங்கே நான் வாழும் நாட்டில் கடற்கறையிலோ ஏன் எம் வீட்டு நீச்சல் குளத்திலோ 90% அரைகுறையாய் வந்தாலும் யாரும் திரும்பி கூட பார்ப்பதேயில்லை என்பதே நிஜம்..
நல்லப்பதிவு விவாதங்கலில் தான் விளக்கம் கிடைக்கும்.
ஒரு விசயம் முகத்தைமூடுவது அவர்கள் அறியாமையில் செய்கிறார்களோ அல்லது விரும்பிசெய்கிறார்களா என்று தெரியவில்லை.
முகத்தையும் இருகரங்கலையும் மூடக்கூடாது என்பது நபி மொ(வ)ழி.
நன்றி.
//உலகமெங்கும் பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த கட்டுப்பாடு?.//-->கீழ்க்காண்பவை நடப்பது எந்த உலகில்?
//எனக்கு தெரிந்த ஒரு இஸ்லாமிய பெண் வெளிநாடு சென்று படிக்கும்போது விரும்பிய உடை , ஏன் ஜீன்ஸ் கூட அணிவார்.. விரும்பிய அணிகலனும் அப்பப்ப உள்ள பேஷன் பொருந்த்து.//-->//அந்த பாகிஸ்தான் பெண்மணி...//-->//நான் ரசித்தவகைகளை , நான் அனுபவித்து உடுத்தியவகைளை , நான் விரும்பிய நிறங்களை , இந்த சகோதிரிகளும் அணியும் காலம் எப்போது வரும்..//
//நான் பெற்ற சுதந்திரம் அவர்களுக்கு இல்லையே என்ற கவலை..//---அது சுதந்திரம் தானா, என்பதிலேதானே கருத்து வேறுபடுகிறது.
//அரைகுறையாய் திரிவது என்றாலும் ஒரு பெண்ணை அவள் சார்ந்த சூழலில் அவளால் தற்காத்துக்கொள்ள முடியுமானால் அவள் நிர்வாணமாய் கூட இருக்கலாம் என்பது என் கருத்து..//
---இது ஆணுக்கும் பொருந்தனுமே... எனில், தான் ஒரு பெண்ணால் கற்பழிக்கப்படுவதிலிருந்து(!?) தன்னை தற்காத்துக்கொள்ளும் அளவு பலமிக்க ஓர் ஆண் நிர்வாணமாக உலாவலாமா? ஆம் எனில், உங்கள் கணவர் நாளை காலை ஒரு கூலிங் கிளாஸ், வாட்ச், செருப்பு மட்டுமே உடலில் அணிந்து கொண்டு "நான் ஆபீஸ் போய்ட்டு வாரேன், டியர், பை" என்றால்... நீங்கள் என்ன சொல்வீர்கள்? அதே போல பல ஆண்கள் உங்கள் அலுவலகத்தில் உங்கள் கண்முன்னே உலாவினால்?
//இங்கே நான் வாழும் நாட்டில் கடற்கறையிலோ ஏன் எம் வீட்டு நீச்சல் குளத்திலோ 90% அரைகுறையாய் வந்தாலும் யாரும் திரும்பி கூட பார்ப்பதேயில்லை என்பதே நிஜம்..//---அட! இங்கே பெண் விடுதலை பேசித்திரியும் பெண்ணிய வாதிகளும், மாதர் சங்கங்களும் இன்னும் நிர்வாண சினிமா போஸ்டருக்கு கருப்பு பெயிண்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்களே? இவர்களெல்லாம் எப்போது உங்களைப்போல முன்னேற்றம் அடைவது?
அது போகட்டும் நீங்கள் நிஜமாலுமே பெண்ணா?
UFO ,
எங்கெங்கே என்ன உடை போடணும் என்பதில் உள்ள வரையறைகளை மதிக்கிறேன்..
அதுக்காக நிர்வாணமா எல்லாரும் உலாவணும் என்பது என் கருத்தல்ல.
பார்வைகளை மாற்றிக்கொள்ளணும்..
எது அளவுகோல் ?
சேலையையே கவர்ச்சியாக கட்டவும் முடியுமல்லவா?.
ஜீன்ஸ் சுடிதார் போன்ற முழுதுமாய் உடல் மறைக்கும் உடைகளும் உண்டு.
இங்கு நீச்சல் குளத்தில் ஒரு பெண் நீச்சல் உடையில் வருகிராள் என்றால் யாரும் அவளை வினோதமாய் பார்ப்பதில்லை என்றால் என்ன அர்த்தம்?..
தம் பார்வையை கட்டுப்படுத்திக்கொள்கிறார்கள்..
ஒரு பெண்ணை வரம்பு மீறி பார்ப்பதும் அவள் சுதந்திரத்தில் தலையிடுவது என அதுக்கு மதிப்பும் தரலாம்..
மேலும் பலரும் அப்படி இருப்பதாலும் இருக்கலாம்..
ஒரு பெண்ணை அவள் புறம் பார்த்து மட்டும்தான் ஆணுக்கு அவள் மேல் விருப்புகள் வரும் என்பது உங்கள் எண்ணமா?
அப்படியென்றால் அதுவும் தவறு.
ஒருவரின் திறமை, பேச்சு , அன்பு , கவனிப்பு , எல்லாம் கொண்டும் ஒரு பெண் மீது ஆசை வரலாமே?
அவை எல்லாவற்றையும் எப்படி தடுப்பது?..
திறமைகளை ஒளித்து வைத்தா?
[[ தாங்களே இந்தளவு ரசித்திருக்கும்போது, இதே ஒரு ஆண் அந்தபெண்ணை ரசித்திருந்து அந்த ரசிப்பு அவன் மனதில் சிறு சபலத்தை ஏற்படுத்தி மறைந்தாலும் தவறுதானே! ]]
----------------------------
ஒரு பெண்ணை அவள் புறம் பார்த்து மட்டும்தான் ஆணுக்கு அவள் மேல் விருப்புகள் வரும் என்பது உங்கள் எண்ணமா?
அப்படியென்றால் அதுவும் தவறு.
ஒருவரின் திறமை, பேச்சு , அன்பு , கவனிப்பு , எல்லாம் கொண்டும் ஒரு பெண் மீது ஆசை வரலாமே?
அவை எல்லாவற்றையும் எப்படி தடுப்பது?..
திறமைகளை ஒளித்து வைத்தா?
புர்கா என்பது சிறையல்ல, சுதந்திரம்.
அதை பின்பற்றும் மனம் பொறுத்தது.
வெளியுலக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது சிரமமாக தெரிவதுபோல்தோன்றும்
அதை உளப்பூர்வமாக உணரும்போது
வரமாக தெரியும்.
-----------------
இதை ஏற்கிறேன் ஏனென்றால் சில பழக்கவழக்கம் நாம் விரும்பி ஏற்ற பிறகு அவை நமக்கு ஒருபோதும் சுமையல்ல..
நான் வருந்துவது அப்படி ஏற்காதவருக்கு ..
இது பிணமாய் வாழ்வது என்று இருந்தால் இஸ்லாம் 1400ஆண்டுகாலம் தொடர்ந்து வந்து இருக்குமா..?.
-------------------------
மாற்றமே ஏற்படாது வந்துள்ளதா?..
குரான் எழுதிய நேரம் பெண்கள் இப்போது போல வேலைக்கு செல்வதில்லைதானே?..
பொதுவெளியில் இப்படி எழுதுவதில்லைதானே?..
ஆக அதற்கான அனுமதி பற்றி என்ன சொல்லியிருக்குது குரானில்.?..
அறியவே கேட்கிறேன்..
அது போகட்டும் நீங்கள் நிஜமாலுமே பெண்ணா?
---------------------------------
பெண் என்றால் எப்படியெல்லாம் எழுதணும் என்ற வரைமுறை உள்ளதா நண்பரே.?
இருப்பின் சொல்லுங்கள் ..
எந்த வார்த்தை உங்களை அப்படி எண்ண செய்தது?.:)
முகத்தையும் இருகரங்கலையும் மூடக்கூடாது என்பது நபி மொ(வ)ழி.
-------------
அறிந்துகொண்டேன் ராஜவம்சம்...நன்றி.
//நடமாடும் சிறை கைதிகளாய் தோன்றினார்கள் எனக்கு...// இதே வார்த்தைகளை பதினாறு வயதில் என்னைப்பார்த்து என் கல்லூரியில் படித்த எதிர்த்த வீட்டு அக்கா சொன்னது "நீ நடமாடும் சிறை கைதியாய் தோன்றுகிறாய் எனக்கு..." என்று.
மேட்டர் இதுதான்...
என் வீட்டில் பெற்றோர்களின் கண்டிப்பு நிறைய.
அதாவது,
பள்ளி விடுமுறை நாட்களில் கூட (சனி, ஞாயிறு) மாலை நான்கு மணிக்குத்தான் விளையாட விட்டை விட்டு வெளியேறலாம். ஆனால், மாலி ஏழு மண்ணுக்குள் வீட்டுக்குள் இருந்தேயாக வேண்டும்.
சனி, ஞாயிறு மட்டுமே டிவி பார்க்க அனுமதி.
கோடை விடுமுறையில் மட்டுமே கதைப்புத்தகங்கள் படிக்க, சினிமா தியேட்டர் செல்ல அனுமதி.
தெருவில் எந்த சக வயது பெண்களுடனும் பேச/பழக அனுமதி இல்லை.
பனியன் இல்லாமல் வெறும் பேண்ட்/லுங்கி உடன் தெருவாசல் பக்கம் (பால் பாக்கெட் எடுக்க, பேப்பர் எடுக்க, போஸ்ட் வாங்க, சைக்கிள் துடைக்க என்று எதோ காரணங்களால்)செல்ல தடை.
கெட்ட வார்த்தைகள் பேசும் /சிகரட் பிடிக்கும்/ கட் அடித்து சினிமா செல்லும்/ ஏழுமணிக்கு பின்னும் விளையாடும்/ படிக்கும் பள்ளி காலங்களில் சினிமா, கதைப்புத்தகம் என்று திரியும் பையன்கள் கூட பழக பேச தடை.
மேற்கூறியவை மீறப்பட்டால் வெலக்குமாத்துக்கட்டை பிஞ்சிடும்...
எனக்கும் அப்போது அதெல்லாம் பெரும் அராஜக அக்கிரமமாக அவமானமாக இருந்தது உண்மைதான். 'போயும் போயும் இவர்களுக்குப்போய் மகனாக பிறந்தோமே' என்று பலசமயம் நினைத்தது உண்டு. பின்னாளில் என் நிலையையும், நான் எப்படி வாழ அப்போது விரும்பினேனோ அவ்வாறு அப்போது வாழ்ந்து சந்தோஷித்த என் ஒரு சில நண்பர்களின் தற்போதைய நிலையை ஒப்பிட்டுப்பார்க்கும் போது, இப்போது நினைக்கிறேன்... "இந்த அருமையான பெற்றோர்களுக்கு என்னை மகனாய் பிறக்க வைத்தது, என் இறைவன் எனக்களித்த அருட்கொடை-பெரும்பாக்கியம்" ..என்று.
இப்படித்தான்... எது சுதந்திரம்... எது அடிமைத்தனம்... எது கட்டுப்பாடு... எது ஆதிக்கம்... எது அறிவுரை... எது கொடுமை... எது நல்லது... எது கெட்டது... என்று புரிந்துகொள்வதில் மனிதர்களிடைத்தில் பல மாற்றுக்கருத்துக்கள் உள்ளன.
அவையெல்லாம் அந்தந்த கால கட்டத்தில் அந்தந்த விருப்பு வெறுப்பு மனநிலையில் சரியாகவோ தவறாகவோ தோன்றும். காலப்போக்கில் சரியென்று தோன்றியது தவறாகவும், தவறென்று தோன்றியது சரியாகவும் போய்விடும்.
வாழ்க்கை ஒரு பரிட்சைக்கூடம். பிட் அடிப்பது, காப்பி அடிப்பது, பேப்பர் சேஸ் பண்ணுவது எல்லாம் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பது மாணவனாய் இருக்கும்போது அக்கிரமமாய் தோன்றும். பிற்காலத்தில் அதன் பயனை அனுபவிக்கும்போது அந்த சட்டம் போட்டவர்களை அதை செம்மையாய் நடை முறை படுத்தியவர்களை வாழ்த்த தோன்றும்...
நூறு வயது வாழ்ந்து விஞ்ஞானியாய் சாகும்போது கூட நிறைய கற்க வேண்டியதை கற்காமலும், புரிய வேண்டியதை புரியாமலும் சாக வேண்டியுள்ளது.
இதுதான் மனித வாழ்க்கை.
-இது ஆணுக்கும் பொருந்தனுமே... எனில், தான் ஒரு பெண்ணால் கற்பழிக்கப்படுவதிலிருந்து(!?) தன்னை தற்காத்துக்கொள்ளும் அளவு பலமிக்க ஓர் ஆண் நிர்வாணமாக உலாவலாமா? அதே போல பல ஆண்கள் உங்கள் அலுவலகத்தில் உங்கள் கண்முன்னே உலாவினால்?
-------------
நீங்க தவறா புரிந்தீர்கள்..
கடற்கறை எடுத்துக்கொள்வோம்.. அங்கே ஆணும் பெண்ணும் அப்படித்தான் உலவுகின்றார்கள்..
ஏன் உலக அழகி மேடையிலேயும்..சினிமாவிலேயும்..
அவர்களை எந்த இஸ்லாமியரும் பார்ப்பதேயில்லையா?.. சபலப்பட்டதேயில்லையா?..
அப்படி பார்ப்பவர்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றனரா?..
கவிதையில் எழுத்தில் ஆபாசம் கொண்டு எழுதுபவர்களை பார்க்கிறோம் ..
அதான் ஏன் பெண்ணுக்கு மட்டும் இந்த சட்டம் ..
ஆண் சபலப்படுவான் என்ற ஒரே காரணம் மட்டும்தான் என்றால் மாற வேண்டியது மாற்ற வேண்டியது ஆணின் பார்வையைத்தானே ஒழிய பெண்களை மறைத்து வைப்பதால் தீர்வாகும் என்பது எனக்கு ஏற்பல்ல..
எல்லா கடவுளுக்கும் மனதை பார்க்க முடியும் தானே?..
ஆண் உன்னை பார்த்து சபலமடைவதால் நீ புர்கா போட்டுக்கோ என சொல்வதைவிட ஆணிடம் , உன் மனைவியை தவிர மற்ற அனைவரையும் உன் சகோதரியாக பார்க்க பழகணும் என சொல்லியே வளர்க்கலாமே?..
இது எளிதல்லவா?..
புர்கா போடாத மற்ற பெண்களை இஸ்லாமிய ஆண்கள் எப்படி நோக்குவார்கள்.?.. நோக்கினார்கள் இதுவரை?..
நீங்களும் ரவுடியா பார்ம் ஆகிட்டீங்க... வாழ்த்துக்கள்!
தமிழ் பிரியன் said...
நீங்களும் ரவுடியா பார்ம் ஆகிட்டீங்க... வாழ்த்துக்கள்!
------------------
நன்றி ..
நீங்க சொல்வதால் நான் கடவுளாகவும் ஆக முடியாது...
உங்க பார்வையில் தான் கோளாறு
September 24, 2010 3:56 PM
Journey & Thought said...
பார்த்தேன்..கவிதை மிக அருமை மலிக்கா..//
மிகுந்த நன்றி சகோதரி
//நீங்கள் ஏற்கனவே பலரால் காயபப்ட்டிருப்பதாய் தெரிகிறது..//
சத்தியமாக நான் யாரலும் எங்கும் எதிலும் காயப்பட்டதேயில்லை.
இந்த கவிதை. பதிவுலகில் எழுத்துசுதந்திரம் இருக்கு என்பதற்காக எதைவேண்டுமென்றாலும் எழுதலாமென சிலபேர்கள் பலரின்மனங்களையும் மதக்கோட்பாடுகளையும் புண்படுத்துகிறார்கள்.
பிறரின் கோட்பாடுகளில் அவர்களுக்கு சரியான அறிதல்லாமல் இருக்கலாம் .இல்லை அறிந்தே அப்படியெழுதி மனங்களை நோகடிக்கலாம் அப்படியுள்ளவர்களுக்காக அதைவிளக்கவே கவிதையின்மூலம் உணர்த்தினேன்.
//நான் வேறு காயப்படுத்திவிட்டேன் போல என் இடுகை மூலம்..//
இதிலும் காயப்படவில்லை அறியாமலிருபவைகளை எனக்கு தெரிந்தவரையில் அறியவைக்க ஒரு சந்தர்ப்பம் உருவாக்கியததாகத்தான் நினைக்கிறேன் சகோதரி..
ஆண்களை சபலமேற்படுத்தாமல் இருக்க புர்கா அணிவது பலமுறையா இருக்கு!
சிம்பிளா நான் என்ன சொல்றேன்னா, அப்படி சபலம் ஏற்படும் ஆணுக்கு கண்னை புடிங்கிட்டா ஒரே வேலையா போயிரும்!
இங்கே புர்கா வேணும்னு சொல்ற இஸ்லாமிய நண்பர்கள் கண்ல ஆரம்பிப்போமா!
http://onlinepj.com/pengal/hijab_en/
அல்லாவுக்கு கை காலெல்லாம் இருக்குன்னு சொல்லிட்டு பீஜேவே ஓடிப்போயிட்டாரு, அவரு புர்கா ஏன்போடனும்னு ஊருக்கு உபதேசம் பண்ண வந்துட்டாராக்கும்!
//இது பிணமாய் வாழ்வது என்று இருந்தால் இஸ்லாம் 1400ஆண்டுகாலம் தொடர்ந்து வந்து இருக்குமா..?.
இந்த சின்ன இடுகையில புரிய வைக்க முடியாது உங்களுக்கு. மார்க்க அறிஞர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் தகுந்த விளக்கம் தருவார்கள். //
பல்லாயிரகணக்கான வருடங்கள் உடன்கட்டை ஏறும் முறை கூட இருந்தது, ராசாராம் மோகன் ராய் தான் அதை முதலில் எதிர்த்து போராடினார்!
அந்த மாதிரி கேனதனமான வழிமுறைகள் எல்லா மத்தத்துலயும் தான் இருக்கு, மதம் பிடித்திருப்பது அகன்று மனிதம் பிடிக்கும் போது, உண்மை புரியும்!
ஆணென்ன, பெண்ணென்ன
நீயென்ன நானென்ன்
எல்லாம் ஓரினம் தான்
என்று!
//முகத்தையும் இருகரங்கலையும் மூடக்கூடாது என்பது நபி மொ(வ)ழி.//
மூடக்கூடாது என்றா இருக்கிறது!
மூடத்தேவையில்லை என்று இருக்கும், அதாவது அதை தவிர எல்லாத்தையும் மூடிடனும்
//ஓர் ஆண் நிர்வாணமாக உலாவலாமா? ஆம் எனில், உங்கள் கணவர் நாளை காலை ஒரு கூலிங் கிளாஸ், வாட்ச், செருப்பு மட்டுமே உடலில் அணிந்து கொண்டு "நான் ஆபீஸ் போய்ட்டு வாரேன், டியர், பை" என்றால்... நீங்கள் என்ன சொல்வீர்கள்? அதே போல பல ஆண்கள் உங்கள் அலுவலகத்தில் உங்கள் கண்முன்னே உலாவினால்?//
Unidentified Fighting Object
எப்பவும் இந்த விசயத்தில் லூசு மாதிரி தான் பேசிகிட்டு இருப்பார்!
புர்கா எதுக்குன்னு கேட்டா, ஆண்களை நிர்வாணமா போக சொல்றாரு பாருங்க!
இங்க யாராவது புர்கா வேணாம், இஸ்லாமிய பெண்கள் எல்லாம் நிர்வானமா போங்கன்னா சொன்னாங்க!
விருப்பபட்ட உடை அணிய சுதந்திரம் கொடுங்கன்னு தானே சொன்னாங்க!
ஆண்கள் மட்டும் விருப்பட்டதை அணிவாங்களாம், பெண்கள் மட்டும் அடிமையா இருக்கனுமாம்!
என்னைக்கு தான் திருந்தப்போறாங்களோ தெரியல!
//குரான் எழுதிய நேரம் பெண்கள் இப்போது போல வேலைக்கு செல்வதில்லைதானே?..//
யார் சொன்னது ..அவர்கள் வேலைக்கு போகவில்லைஎன்று அப்போதே நிறைய பேர் செய்திருக்கிறார்கள். பர்தா பற்றி வந்ததும் அவர்கள் பர்தாவுடன் செய்தும் இருக்கிறார்கள்
//பொதுவெளியில் இப்படி எழுதுவதில்லைதானே?..
ஆக அதற்கான அனுமதி பற்றி என்ன சொல்லியிருக்குது குரானில்.?..
அறியவே கேட்கிறேன் //
சகோ.. ஆரம்பத்தில சொன்னதுதான் . இஸ்லாம் பற்றி முழுவதும் தெரியாமல் ஏதாவது ஒன்னு ரெண்டு மட்டும் கேக்காதீங்க ..அதுக்கு இது சரியான இடுகையும் இல்லை . அதுக்குதான் மார்க்க அறிஞர்களை நேரில் பார்க்க சொன்னேன் .
முடியாவிட்டால் நேரம் இல்லா விட்டால்
http://onlinepj.com ல் மேலே முழு அட்டவனை இருக்கு ..முதல்ல அதையெல்லாம் படிச்சிட்டு அப்புறமா இருக்கும் சந்தேகத்தை கேளுங்க அது ஆக்க பூர்வமான கேள்வியா இருக்கலாம் ஒரு வேளை.. !!
//நான் வேறு காயப்படுத்திவிட்டேன் போல என் இடுகை மூலம்..//
இதிலும் காயப்படவில்லை அறியாமலிருபவைகளை எனக்கு தெரிந்தவரையில் அறியவைக்க ஒரு சந்தர்ப்பம் உருவாக்கியததாகத்தான் நினைக்கிறேன் சகோதரி..
--------------------
நன்றி மலிக்கா..
முடியாவிட்டால் நேரம் இல்லா விட்டால்
http://onlinepj.com ல் மேலே முழு அட்டவனை இருக்கு ..முதல்ல அதையெல்லாம் படிச்சிட்டு அப்புறமா இருக்கும் சந்தேகத்தை கேளுங்க அது ஆக்க பூர்வமான கேள்வியா இருக்கலாம் ஒரு வேளை.. !!
---------------
பார்க்கிறேன் ஜெய்லானி..
http://onlinepj.com/
---------------
பார்த்தேன் ஜெய்லானி..
பெண்கள் முகத்தை மூடவேண்டியதில்லை என்றே சொல்லியிருக்கு..
மேலும் முகத்தை மூட்வதே தவறு செய்ய வழிவகுப்பதாகவும் சொல்லியிருக்கு..ஒரு கேடயம் போல தவறு நடக்க..
மேலும் பெண்கள் பலவீனமானவர் என்று சொல்லப்பட்டிருக்கு ..
இக்கால பெண்கள் பலவீனமானவர்களாய் எனக்கு தெரியவில்லை...
பலவீனமாக ஆக்கப்படும் முயற்சி தொடற்கிறது என்று வேணா சொல்லலாம்..
அவர்கள் தங்கள் அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர
----------------------------------
முகம் மட்டுமே , ஏன் கண்கள் மட்டுமே கூட போதும் ஒரு ஆண் சபலப்பட...
அப்படியிருக்கும்போது வெளியே தெரியும் அலங்காரமும் சேரலாம் என சொல்லும்போது...???
சென்னையில் இப்படி கல்லூரி மாணவிகள் முகம் மறைத்துகொண்டு செய்யும் அநியாயம் கொஞ்சமல்ல..
------------------------------------------------
இப்படியும் சொல்லியிருக்கு..
ஆக நான் இடுகையில் வருத்தப்பட்டது மிக நியாயம்தானே?...
முகம் மறைக்க தேவையேயில்லை...என்பதையே குரானும் சொல்கிறது.
அதுமட்டுமல்ல , ஒரு ஆண் சபலப்பட முகம் /கண்கள் போதுமானது...
இங்கு சில மாதம் முன்பு இஸ்லாமிய கருத்தரங்கிற்கு மற்ற மதத்தினரை அழைத்து கருத்துகள் பகிர்ந்தனர்.
நானும் சென்றிருந்தேன்..பல விஷயம் அறியும் ஆவலில்..
அப்பவே புர்கா பற்றி கேட்க நினைத்தேன் நேரமானதால் கேட்க முடியலை..
மறுபடியும்?
வருக பீர், ஆசியா உமர் ..
கருத்துகளை அறிய ஆவல்..
நன்றி
நான் நேற்று பூங்கா சென்றிருந்த போது ஒரு இச்லாமிய பெண் புர்கா போட்ட சிறுமிகளோடு வந்து ஊஞ்சல் ஆடினார் .. அவரும்
சரளமா தமிழிலும் குழந்தையை திட்டி பேசினார்.. நான் தமிழ் என்பது தெரியாமல்..
என் மகன் அப்பாவை தமிழில் அழைத்து காண்பித்து கொடுத்துவிட்டார் நாங்க தமிழர் என.
பின் அன்போடு வந்து பேசினார்..
அப்ப நான் கேட்டேன் " குழந்தை புர்கா அணிந்துள்ளாளே, நீங்க அணிவதில்லையா ?." என
" இல்லை முக்கிய இடத்துக்கு மட்டுமே அணிவேன்..
பூங்காவுக்கு காற்று வாங்க வருகிறோம் .. இந்த நேரத்திலுமா அதை போடணும் னு போடலை " என்றார்.
அழகான சம்க்கி வேலைப்பாடுடனான சுடிதார் தலைக்கு மேட்சான கிளிப் . கை வளையல் கால் கொலுசு எல்லாமுமாய்..
ஆக அவர்களுக்கே அந்த உடை சில நேரம் சிறையாக தோன்றுகிறது...
பாவம்தான்..
பூங்காவில் அனைவரும் விளையாட்டு உடை அணிந்து வருவர்..ஆக அந்த இடத்துக்கே புர்கா தேவையில்லை என நினைத்துவிட்டார் போல..
இதுதான் நான் சொல்லும் புரட்சி... கொஞ்சம் கொஞ்சமாய் மக்கள் புரிவர்..
என் மதத்திலும் பல்லாண்டுக்கு முன் எழுதியவை சில நம்பிக்கையாக இருந்தாலும் மூட நம்பிக்கையென விழிப்புணர்ச்சி பெற்று வருகின்றனர்.
http://anboduungalai.blogspot.com/2009/11/blog-post_23.html
http://anboduungalai.blogspot.com/2010/01/blog-post_26.html
இதையும் படித்து பாருங்க்ள்
யாரும் கட்டாயத்தின் பேரின் புர்கா அணிவதில்லை அவர் அவர் விருப்பப்படி அணிகிறார்கள்
புர்கா என்றால் கருப்பு நிற அங்கி தான் அணியனும் என்றில்லை
அணியும் ஆடை உடலை நன்றாக கவர் பண்ணியுள்ள ஆடைக்கு பெயர்ரும் புர்காதான்
படித்தேன் ஜலீலா . நன்றி பகிர்வுக்கு.
என் சிறு விளக்கம் இங்கே..
--------------------------------------
[[ ஆண்களின் இயல்பு இது தான்.
ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும்.
அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ]]
----
எல்லா இடத்திலேயும் ஆணை முன்னிறுத்தியே பயங்காட்டியே பெண்கள் அடிமையாக இருக்கவேண்டும் என நிர்ப்பந்திப்பது போலுள்ளது...
மாற வேண்டியது ஆண்கள் தான்..மாற்ற வேண்டியது அவர்களின் மனதையும் பார்வையையும்..
மீண்டும் சொல்கிறேன் , இங்கு கடற்கரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் 90% நிர்வாணமாக இருந்த போதும் அதை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளாமல் ஆண்களால் செல்ல முடிகிறது என்றால் , எப்படியான நாகரீகம் நிலவுகின்றது என்று புரிந்துகொள்ளணும்..
ஒரு பெண்ணை அவள் கழுத்து கீழ் பார்த்து பேசுவதே அநாகரீகம் என்று தெரிந்தே இவர்கள் வளர்க்கப்பட்டுள்ளார்கள் என சொல்லலாமா?..
------------------------------------------------------
[[ இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.]]
இஸ்லாமிய ஆணோ பெண்ணோ சினிமா பார்ப்பதில்லையா?.. கனவுக்கன்னி /நடிகர்களை ரசிப்பதேயில்லையா?..
துணையோடு தாம்பத்யத்தின்போது துணையைத்தான் நினைக்கிறார்கள் என யாராவது சத்தியம் செய்ய முடியுமா?. இல்லை அதை நம்பத்தான் முடியுமா?..
ஆக , மனதளவில் நினைவில் மூழ்குவதையெல்லாம் தவிர்க்கவே முடியாது..
ஒண்ணும் வேண்டாம் செய்தி வாசிக்கும் பெண்மணியை பற்றி கூட நினைவில் மூழ்கலாம்..
தவிர்க்க முடியாது யாராலும்... புர்கா போட்டு கடிவாளம் போடுவதென்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதுதான்..
நான் நேற்று சந்தித்த அப்பெண்மணி புரிய வைத்துவிட்டார்...மீண்டும்..
தாய்லாந்து புகழ்பாடும் அம்மணி... ஓ..! நீங்க அவங்க குரூப்பா? அதனாலத்தான் இப்படி கண்மூடித்தனமா எதிர்ப்பா? பிரபல பதிவர் ஆக நல்ல முயற்சிதான்...
அப்புறம் கீழே...இருப்பதெல்லாம் என்னங்க...?
Thailand is world renown for its sex industry and the coyote style dancers who perform in public during festivals.
Read more: http://www.thai-blogs.com/index.php/2007/02/21/what_not_to_wear_in_thailand?blog=5
Thailand raises alarm over student Web prostitution
http://www.chinapost.com.tw/asia/thailand/2009/02/02/194311/Thailand-raises.htm
Amazing Thailand - Rapes, Assaults, Murders
- the land of piles
http://sites.google.com/site/landofpiles/amazingthailand-rapes,assaults,murders
Rapes of underage girls are up...
----By The Nation
Published on March 6, 2010
On average, 17 to 18 underage girls were raped or molested every day last year... according to a Ramjitti Institute study released yesterday.
Safety Information : ...Incidents of sexual assault do occur and female travellers should be cautious... Thailand travel information
http://www.wordtravels.com/Travelguide/Countries/Thailand/Basics
Crime Statistics > Most Rapes (per capita) (most recent) by a country in the world list...
http://www.nationmaster.com/graph/cri_rap_percap-crime-rapes-per-capita
ஆக மொத்தத்தில் தாய்லாந்து யோக்யதை நன்றாக தெரிகிறது. மேற்படி புள்ளிவிவரத்தில் சவூதி அரேபியா கட்டக்கடைசியில் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும்? ...புருகா?...ச்சீ..ச்சீ...
///நூறு வயது வாழ்ந்து விஞ்ஞானியாய் சாகும்போது கூட நிறைய கற்க வேண்டியதை கற்காமலும், புரிய வேண்டியதை புரியாமலும் சாக வேண்டியுள்ளது.///
---ரிப்ப்ப்பீட்ட்ட்டேய்ய்ய்ய்....
Thanks for the comments Mohamed..
Ill reply you later..
தாய்லாந்து புகழ்பாடும் அம்மணி... ஓ..! நீங்க அவங்க குரூப்பா? அதனாலத்தான் இப்படி கண்மூடித்தனமா எதிர்ப்பா? பிரபல பதிவர் ஆக நல்ல முயற்சிதான்...
---------------------------------------
நண்பர் மொகமது , எனக்கு தேவை கருத்துகள் மட்டுமே..
தாக்குதல் என்றால் தனி பதிவே என் பெயர் போட்டு பதிவுலகை நிரப்பலாம்..
அதை பற்றி எனக்கு அக்கறையில்லை..
சரி இப்ப விஷய்த்துக்கு வருவோம்.
நீங்க சொல்கிற சவுதியில் Press சுதந்திரம் இருக்கிறதா?..
அங்கே நடக்கும் கற்பழிப்புகள் , கொலைகள் வெளியே சொல்லும் வாய்ப்பு இருக்கிறதா?..
ஆக ஒரு நாட்டின் புள்ளிவிபரம் அவர்கள் சம்மத்த்தோடு வெளிவருவது மட்டுமே..
சவுதியில் உள்ள சட்ட சிக்கல்கள் தெரியும் தானே அனைவருக்கும்..
காதலித்தாலே பெண்ணுக்கு இன்னும் கல்லடி கொடுக்கும் இடம்தானே?..
நிறைய விவாதிப்போம் நண்பரே.. ஆனால் நிதானமாய் , பொறுமையாய், கற்றுக்கொள்ளும் எண்ணமிருந்தால் மட்டுமே...
இல்லை தாக்கியே ஆகணும் என்றால் அதை தனி பதிவாக போட்டு ஆறுதல் அடையலாமே...
http://en.wikipedia.org/wiki/Human_rights_in_Saudi_Arabia
http://www.saudigazette.com.sa/index.cfm?contentID=2009020828735&method=home.regcon
http://news.bbc.co.uk/2/hi/7098480.stm
http://searchwarp.com/swa571626-Saudi-Woman-Sentenced-To-Corporal-Punishment-Of-300-Lashes-And-18-Months-In.htm
---------------------------------------------
Please read this ..
Mikey - 20th September 2010
Saudi Arabia's rape count would probably be much higher if the forced marriages and the that wives are legally required to be submissive to their husbands (including sex) were taken into account.
http://www.nationmaster.com/graph/cri_rap-crime-rapes
சகோதரரே,நீங்கள் புர்காவைப்பற்றி தவறாக எண்ணியுள்ளீர்கள்.இது சம்பந்தமாக இஸ்லாம் மார்க்கத்தின் நூலான திருக்குரானும்,இறைவனின் இறுதி தூதர் நபிகள் நாயகம் அவர்களின் ஹதீசும் என்ன சொல்கிறது என்பது பற்றி தெரிந்து கொண்டுவிட்டு பேசுங்கள்.
இதையும் மேலும் என் மற்ற கட்டுரைகளையும் பார்வைய்டுங்கள்.பிளீஸ் யாரையும் காயப்படுத்தாதீர்கள்
http://anboduungalai.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE
வணக்கம் பாத்திமா..
இதில் காயப்பட என்ன இருக்கின்றது?..
சகோதரி மலிக்கா சொன்னது போல " இது இறைவனின் கட்டளை " என்றால் சொல்ல ஒன்றுமேயில்லை..
அதை மதிக்கிறேன்.
இதே போல நான் மாமிசம் உண்பதும் பலருக்கு மூடப்பழக்கமாய் தோணலாம்..
ஆனால் அதுக்காக மாமிசம் ஏன் சாப்பிடக்கூடாது என்று எடுத்து சொல்வதை நான் தடுக்கமாட்டேன்..
அதிலுள்ள நல்ல கருத்துகளை எடுப்பதும் எடுக்காததும் என் விருப்பம் மட்டுமே..
அதேதான் புர்காவுக்கும்..
மாற்று கருத்துகளை கேட்பவர் கேட்கட்டும்..
பல்லாண்டு காலம் முன்புள்ள பல நம்பிக்கைகள் இப்போழுது மூட நம்பிக்கையாகி வருகின்றன..
எல்லா மதத்திலும்..
அதே போல புர்கா போடுவதிலும் மாற்றம் வரலாம்..
நான் பார்த்த பெண்கள் கண் தவிர எல்லாவற்றையும் மூடியது கூட இஸ்லாமில் புர்கா பற்றி என்ன சொல்ல பட்டிருக்கு என தெரியாமல் தானே?
மீண்டும் சொல்கிறேன் யாரையும் காயப்படுத்துவது என் நோக்கம் அல்ல..
நான் காயப்பட மட்டுமே தயாராய் உள்ளேன்..
சகோதரர் தமிழ் பிரியன் என்னை ரவுடி னு சொன்னதும் பதிலுக்கு அவர் வீட்டு பெண்களையோ , அவரையோ ரவுடி னு சொல்ல நேரமாகுமா என்ன?.:)
ஆனால் அது என் குறிக்கோள் அல்ல என்று புரிந்தால் போதும்..
மாறாக, படிக்கும் காலத்தில் காதல்வலையில் வீழ்ந்து தம்மை இழந்துவிடாமல், நேரிய வழியில் செல்வதற்கு இது ஏதுவாக இருக்கிறது
---------------------------------------
காதலுக்கும் பர்தாவுக்கும் என்ன சம்பந்தம் சகோதரி?.
பர்தாவுக்குள் இருக்கும் பெண்ணுக்கு ஒரு ஆடவனை பார்த்து காதல் வந்தால்?.
மேலும் புற அழகை வைத்துத்தான் காதல் வரும் என்பதும் தவறான பார்வை..
ஒருவரின் திறமை, நடவடிக்கை கூட போதுமானது..
ஒரு ஆணிடம் இநுது தப்பிப்பதற்காக எதையெல்லாம் தான் ஒரு பெண் மறைக்க முடியும்?..
அதைவிட நான் எப்படி இருந்தாலும் என் சம்மதம் இன்றி ஒருவன் என்னை பார்ப்பது அநாகரீகம்.. அது தடுக்கப்படணும் என்ற போராட்டம் தான் நல்லது..
அதுதான் பல நாடுகளில் பெண் முன்னேற்றமாக விழிப்படைந்தும் உள்ளது..
நிலவுக்கு பெண் போக முடியுற இந்நாளில் இன்னும் ஆண் பெண் வித்யாசம் பாராட்டுவது வருத்தப்பட செய்யுது சகோதரி..
ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுததாம்......
வருக சுமஜ்லா..
நீங்களே ஆடுன்னு சொன்னா எப்படி?..
ஓநாயா இருந்தாதான் பிழைக்க/தப்பிக்க முடியுது .:)
Post a Comment