4. போதாமை , குறைபாடு, இயலாமை , ஊனம்
கவன ஈர்ப்பு, ஆளுமை, வேலை செய்யாமல் போனதால் எப்படியாவது பலம் சேர்த்து பழி வாங்கும் முயற்சியில் இறங்கினாலும்,
அதிலும் தோற்று போனதும் அவர்கள் இந்த இயலாமை நிலைமைக்கு தள்ளப்படுவர்..
தம் திறமையின் மீது நம்பிக்கை வைத்து முன்னேறாமல் அடுத்தவரை காயப்படுத்தி அதிலொரு இன்பம் காணுவதையே முழுநேர தொழிலாக செய்வதால் குறைபாடு
அதிகம் வளர்த்து ஒரு ஊனமான நிலைமைக்கு தம்மையே தள்ளுவர்..
செய்யவேண்டிய ஆக்கபூர்வமான காரியங்கள் எத்தனையோ இருக்க பழிவாங்குவதில் அத்தனை நேரத்தையும் செல்விட்டு அதில் தோல்வியும் அடைவதால் இனி என்னிடம் என்ன இருக்கு என்ற போதாமை
எண்ணம் வந்துவிடும்...
தம்பதியினருள் ஒருவர் தொடர்ந்து இந்த வித்தைகளை பயன்படுத்தும்போது அடுத்தவர் மிக கவனமாக முதல் நிலையிலேயே புரிந்துகொண்டு அங்கேயே பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளணும்..
சிலர் இயலாமை வரை வந்த பின்பே சரணடைவார்கள்..
அதையும் கணக்கில் கொள்ளாமல் ஊக்கப்படுத்தினால் மீண்டு வர வழிபிறக்கும்...
அராஜகமான முறையில் எப்போதும் நியாயம் கிடைப்பதில்லை என புரிந்துகொள்ளணும்..
அப்படியே கிடைத்தாலும் அது தொடர்ந்து நிலைப்பதில்லை..
நம்மை , நம் குடும்பத்தை சுற்றியுள்ளவர்கள் எப்படி இருக்கிறார்கள் , அவர்களுக்கு நம் மீதான நல்லெண்ணம் இருக்கிறதா இல்லை போலியான உறவுகளா என பார்த்து
விலகலோ, உறவாடுதலோ மேற்கொள்ள வேண்டும்...
நமக்கு தெரியமலே இந்த புதைகுழிக்குள் சிக்கிடும் வாய்ப்புண்டு..
ஆக நம் சூழல், நட்புகள், உறவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன நம் குடும்ப நிம்மதிக்கும், குழந்தை வளர்ப்புக்கும்...
ஒருவரிடம் நட்பு கொள்ளும்போது முதலில் அவர் நோக்கம் நன்றாக இருக்கிறதா என பார்த்துக்கொள்ளணும்..
அவருக்கு சமூகத்தின் மீதான பார்வை , உதவும் எண்ணம் எத்தனை உயர்வாக உள்ளது என்றும்..
சுயநலமாக இருந்து பாராட்டை பெற விரும்புபவரை விட பொதுநலத்துக்காக விமர்சனங்களை ஏற்பவராக இருப்பவர் நேர்மையானவர்.
அப்படி ஒரு கொள்கை கொண்டவரோடான நட்பு ஒருபோதும் நான் மேலே சொன்ன நான்கு வகை குணங்களை கொண்டிருக்காது...
அதாவது போலித்தனமான கவன ஈர்ப்பு , ஆளுமை , பழிவாங்குதல் இயலாமையில் தள்ளுதல் இருக்கவே இருக்காது..
மாறாக படிப்படியாக நம்மை உயர்த்துவதாய் இருக்கும்...அவர்களின் கொள்கை...
இல்லறத்தில் ஒருவர் இப்படியான குணத்தை கொண்டிருந்தாலும் கூட அக்குடும்பமே இத்தகைய குணம் கொண்டு வளரும்.. அவர் சார்ந்த சூழலும் சமூகமும்..
அப்படியும் பிடிவாதமாய் மாற்ற முடியாத ஒரு துணை அவருக்கு கிடைத்தாலும் அவர்களது விவாக ரத்தானது மிக நட்போடு பிரியும் எவ்வித கசப்பும் இல்லாமல்..
எனக்கொரு தோழி உண்டு இங்கே .. 10 வருடத்துக்கு பின் தம்பதியினர் இருவரும் நட்போடு, புரிதலோடு பிரிந்தார்கள்..
இப்பவும் மாதம் ஒருமுறை டென்னிஸ் ஒன்றாக விளையாடுவதுண்டாம்...
ஆக பிரிவும் தவறில்லை , ஒரு வித ஊக்கமான தொடர்பு நட்பாக தொடரும்போது...
அத்தகைய மன நிலைக்கு நம்மை நாம் தயார் செய்துகொள்ளணும் என்றால், முதலில் நாம் துணை மீதான அக்கறையை வலிய சென்று அதிகப்படுத்தி
முன்னுதாரணமாய் இருக்கணும்...
திருமண வாழ்க்கையில் சில காரணங்களால் அலுப்பு தட்டலாம்.. சந்தேகம் வரலாம்.. ஆனால் அதை எல்லாவற்றையும் ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டு அலட்சியம் செய்யாமல்
பிரச்னைகளை மனம் விட்டு பேசிடவும் பேச வாய்ப்புகள் தரவும் வேண்டும்...
துணை ஒருவர் கவன ஈர்ப்பு செய்ய ஆரம்பிக்கிறார், அன்புக்கு பதிலாய் ஆளுமை வருகிறது , பழிவாங்க தயாராகிறார் என்றார் மற்ற துணை உடனே அதை சரிசெய்திட வேண்டும்..
தெரிந்தோ தெரியாமலோ நாமும் காரணமாயிருக்கலாம்.. நம்மேல் நியாயம் என்றால் கூட புரிதலில் சிக்கல் இருக்கலாம் ..
ஆக நேரம் செலவழித்து புரிய வைப்பதும் நம் கடமைதான் என்னதான் அவர் மேல் நியாயம் இல்லையென்றாலும்..
ஏனெனில் இது குடும்பம் .. மற்ற உறவு நட்பு போல அல்ல..
பள்ளியில் ஒரு மாணவன்/வி இப்படி செய்தாலும் ஆசிரியர் அப்பிள்ளைக்கு தனி கவனம் செலுத்தி அவர் குறையை தீர்க்கலாம்..
நட்பு என்றாலோ , அலுவல் என்றாலோ கூட நாம் ஒதுங்கிடலாம் .. ஆனால் துணை அப்படியான விஷயமல்ல..
என்னால ஒண்ணும் முடியாது என்ற நிலைமைக்கு அவர்கள் வந்தாலும் , ( Helpless Stage ) , நாம் அவர்களிடம் எடுத்து சொல்ல வேண்டியது ,
அவர்களால் எல்லாம் முடியும் .. என்ன பிரச்னை னா Self help less , சுயமா தம்மை மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய வில்லை என்பதை எடுத்து சொல்லி ,
எதிர்மறை எண்ணத்திலிருந்து விடுவித்து ஒரு முழுமையான தன்னம்பிக்கை கொண்டவராய் ஆக்கிடலாம்...இது கண்டிப்பாக முடியும்..
கொஞ்சம் பொறுமை தேவை.. முக்கியமா மூன்றாவது ஆளின் தலையீடு இல்லாமல் /குழப்பாமல் பார்த்துக்கொள்ளணும்...
இனிய இல்லறமே குழந்தை வளர்ப்புக்கு மிக அடிப்படை தேவை..
ஆக குழந்தைகளுக்காக தத்தம் ஆசைகள் , பிரச்னைகள் , சிலவற்றை தம்பதியினர் விட்டுக்கொடுப்பதில் தவறேயில்லை..
கிடைத்துள்ளது ஒரு வாழ்க்கை.. இன்பமயமாக ஆக்கிக்கொள்வது நம் கையில்..
வாழ்க இனிமையாக...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த உளவியல் கட்டுரை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன் .. அனேகமாக அடல்ஸ் ஒன்லியாக இருக்கக்கூடும்...அல்லது பெண்ணின் தேவை என்ன ( what a women really wants ?. ) என்பதாக இருக்கலாம்...
அல்லது நீங்களே சொல்லலாம்.. எதை குறித்து எழுதலாம் என..:)
சந்திப்போம் ...நன்றி..
3 comments:
இடுகைகளில் ஒரு பயிற்றுவிக்கும் மொழியில் சிறந்த கட்டமைப்பு இருக்கிறது. கூடவே சொந்தக்கருத்தும் இலக்கியநயத்தோடு காணக்கிடைக்கிறது. வாழ்த்துக்கள்.
தொடர் அருமையாக வந்துள்ளது. வாசகர்களை ஈர்க்கும் எழுத்தாளருக்கான நடையும் அருமை. வெற்றிப்பயணம் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்,
தம்பி ஸ்ரீ.
நன்றி காமராஜ், உதயகுமார்.
Post a Comment