Wednesday, September 1, 2010

எல்லை எதுவரை?.- சிறுகதை..

































Pictures : Thanks to Google..Images

" இன்னிக்கு வரட்டும் இருக்கு.. என்னதான் நெனச்சுட்டிருக்கார் மனசுல.?.."

" ஆரம்பிச்சுட்டியா மா.. விட்டுத்தள்ளுமா.. ஆம்புள அப்படித்தான்.. நாம தான் அட்ஜீஸ் பண்ணிட்டு போவோணும்.."

" உனக்கு தெரியாது செல்லம்மா.. உங்கள மாதிரி பெண்கள் இப்படி இளக்காரம் கொடுத்து கொடுத்தே திமிர் ஏறிப்போச்சு.."

" அதுங்காட்டி சொல்லல கண்ணு.. பொண்ணு குழந்த பெத்து வெச்சிருக்கியே..."

" பொண்ணு பெத்தா அடங்கி போகணுமா?.. பார்ட்டி அது இதுன்னு குடிச்சுட்டு வர அப்பாக்கு எங்க போச்சு பொறுப்பு.?"

" சரி சத்தம் போடாத பாப்பா முழிச்சுக்கும்.. " னு வேலையை செய்ய சென்றாள் செல்லம்மா..

--------------------------------------------------------------------------------------

" ஹேய் என்னாதிது ..?. பெட்டியை அடுக்கிட்டு இருக்க?.. "

"...."


" கேக்குறேன்ல.."

" புரியலையா ?.. நான் போறேன்.."

" எங்க உங்க அண்ணன் வீட்டுக்கா.?" அவரே கஷ்டப்பட்டுட்டிருக்கார்.. இல்ல அம்மா வீட்டுக்கா.?"

" நான் ஏன் அங்க போணும்.. எங்கே போறேன்னு போனப்புரம் தெரிஞ்சுக்கோ."

" என்ன மரியாதை குறையுது.?"

" அதுக்கேற்ற மாதிரி நீ நடந்துக்கல..சரி உன்கிட்ட பேசுவது வேஸ்ட்.. " என குழந்தையின் பெட்டியை அடுக்க ஆரம்பித்தாள்..

-----------------------------------------

" செல்லம்மா , இந்தா இந்த மாச சம்பளம்.. செடிக்கு முடிஞ்சா தண்ணி ஊத்து.. பணம் வந்து தருவேன்.."

" ஏம்மா நெசமாத்தான் சொல்லுதியா.?.. ராத்திரி சமாதானம் ஆயிருப்பன்னு நெனச்சேன்.." வருந்தினாள்..

" ,.. விடு செல்லம்மா. எங்க போயிருவா?.. அங்க சுத்தி இங்க சுத்தி திரும்ப இங்கதான வரணும்.?."பேப்பர் எடுத்துக்கொண்டு நிதானமாக உட்கார்ந்தான்..

" ...."

" குட்டிம்மா , இந்த உடுப்ப போட்டுக்க .. நாம ஊருக்கு போறோம்.."

" எங்கம்மா.?.. எனக்கு ஸ்கூல் இருக்கே.."

" அதெல்லாம் அப்புரம் பார்த்துக்கலாம்.. "

" அப்பா வரலியா மா.?"

" இல்ல.. நாம மட்டும்தான் இனி..."

" எனக்கு அப்பா வேணும் .மா..."

" சொன்னா கேட்கமாட்டியா.? "

" அவளை ஏண்டி அதட்டுற ?.. என்மேலுள்ள கோபத்துல... நீ இங்க வாடா செல்லம்.."

" ஒஹ்.. அப்ப சரி.. நீயும் இங்கேயே இரு.. ஆமா , நான் ஏன் ஒவ்வோரு வாட்டியும் உன்னையும் இழுத்துகிட்டு போகணும்..

சரிதான்.. உன் அப்பாவே உன்னை கவனிச்சாத்தான் பொறுப்பு வரும்.." னு சொல்லிட்டு பெட்டியை எடுத்துகிட்டு கிளம்பினாள்..

" ஹேய்.. நில்லு.. என்ன பையித்தியமா.. ?.போறதானா , குழந்தையையும் கூட்டிட்டு போ.. ..என்னால லீவு போட முடியாது.."

" ஒஹ்ஹொ.. அப்ப ரொம்ப வசதியா போச்சு.. அலுவலுக்கு கூட்டிட்டு போய்ட்டு அப்படியே பார்ட்டிக்கும் கூட்டிட்டு போய் பழக்கிடுங்க..குடிக்க .."

"........" உறைத்தது அவனுக்கு, ...

" சொல்லி சொல்லி திருத்தலாம்னு பொறுத்து பொறுத்து பார்த்தால் ஒண்ணும் வேலைக்காவாது..இனி பிள்ளையை சீராட்டி எழுப்புவதிலிருந்து

ஒவ்வோரு உணவா மாற்றி மாற்றி செய்து கொடுத்து , பாடம் எழுத வெச்சு , கத சொல்லி தூங்க வெச்சா , பொறுப்பு கூடுமோ என்னமோ.?.. நான் வரேன்.."

நிதானமாய் எழுந்து வாசல் வரை சென்றவளை ஓடி வந்து கரம் பிடித்து நிப்பாட்டினான்...

" சரி உள்ள வா .. பேசலாம்.."

கையை உதறினாள்...

"எல்லாத்துக்கும் எல்லையுண்டு .. இப்ப எல்லையை தாண்டியாச்சு .. கொஞ்சம்..., அட்லீஸ்ட் ஒரு வாரம் குழந்தையோடு லீவு போட்டு இருந்தால் மட்டுமே திருந்தலாம்...

பேச்சு வார்த்தை பயனளிக்கும்னு தோணலை..ஒரு வாரம் கழித்து வருகிறேன் " என சொல்லிவிட்டு தாண்டி சென்ற ஆட்டோவை கை தட்டி அழைத்தாள்..


குழந்தையை பிரிந்த வலி மனதிலிருந்தாலும், இதைவிட வேறு வழியின்றி மனசை கல்லாக்கிக்கொண்டு ஆட்டோவில் புறப்பட்டாள்...

அவன் குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாய் வாசல் வருமுன்...

15 comments:

cheena (சீனா) said...

அன்பின் சாந்தி

கதை அருமை - புரிதலுணர்வும் பொறுமையும் சற்றே குறையும் போது நடக்கும் செயல்கள் - பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பில் பெரும்பாலும் ஆண்கள் ஈடுபாடு காட்டுவது கிடையாது. பெண்கள் பொறுப்பாகச் செய்கிறார்கள்.

ஆனால் இறுதியில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவன் வருவதற்கு முன்னர் அதிர்ச்சி வைத்தியம் - ஆட்டோ புறப்பட்டு விட்டது.

ம்ம்ம்ம்ம் - அவன் திருந்துவான் - அவள் வருவாள் - மழலை மகிழும்.

நல்வாழ்த்துகள் சாந்தி
நட்புடன் சீனா

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி சீனா ஐயா

[[ ஆனால் இறுதியில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவன் வருவதற்கு முன்னர் அதிர்ச்சி வைத்தியம் - ஆட்டோ புறப்பட்டு விட்டது. ]]


:) ஆமாங்க ஐயா.. மனதை கல்லாக்கிக்கொண்டே அதிர்ச்சி வைத்தியம் செய்தால்தான் குடிக்கும் ஆண்கள் திருந்துவார்கள்... ஆண்கள் கெட்டவர்களில்லை.. பொறுப்புகளை மறந்தவர்கள் மட்டுமே..:)

சிங்கக்குட்டி said...

என்னமோ போங்க, மனைவி போன துக்கத்தில் அதிகமாக குடிக்காமல் இருந்தால் சரிதான்....சும்மா... :-).

கதை அருமை.

எண்ணங்கள் 13189034291840215795 said...

சிங்கக்குட்டி said...

என்னமோ போங்க, மனைவி போன துக்கத்தில் அதிகமாக குடிக்காமல் இருந்தால் சரிதான்....சும்மா... :-).


ஆஹா இப்படி வேற இருக்கா.?.:). ஒருவேளை இத்தனை வாட்டி போனப்ப அதான் நடந்திருக்கும்.. இந்த வாட்டி குழந்தையை விட்டுப்போவதால் திருந்தலாமோ.?

கதை அருமை.

நன்றிங்க..சிங்கம்.

நாடோடி said...

குழ‌ந்தையை ப‌ராம‌ரித்து வ‌ள‌ர்ப்ப‌து என்ப‌து ச‌வாலான‌ விச‌ய‌ம் தான். அதில் பெரும்பாலும் ஆண்க‌ள் அக்க‌றைக் காட்டுவ‌து கிடையாது.

எப்ப‌டியோ குழ‌ந்தை வ‌ள‌ர்க்கும் த‌ண்ட‌னைக்கு ப‌ய‌ந்தாவ‌து க‌ண‌வ‌ன் திருந்தினால் ச‌ரி.. :)

க‌தை ந‌ல்லாயிருந்த‌து..

துளசி கோபால் said...

'கதை' நல்லா இருக்கு.

இப்படி அதிர்ச்சி வைத்தியம் செஞ்சாத்தான் சரி.

Avargal Unmaigal said...

அன்புள்ள சாந்தி மேடம் அவர்களுக்கு . உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது. என் வலைப்பக்கதிற்கு வந்து பின்னூட்டம் இட்டு முதல் பாலோவராக சேர்ந்ததிற்கு மிக்க நன்றி. நீங்கள் பக்கதில் இருந்தால் உங்கள் வீட்டிற்கு ஸ்வீட் எடுத்து வந்திருப்பேன். ஸாரி

என் பொண்டாட்டி இந்த மாதிரி கோவிச்சுக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போக முடியாது ஏன் என்றால் அவங்க அம்மா வீடு இந்தியாவில இருக்கு. ஹி ஹி ஹி ஹி. அப்படியே போனாலும் நானும் ஜனகராஜ் மாதிரி என் பொண்டாட்டி ஊருக்கு போய்யிட்டானு சந்தோஷ்மா ஆட்டம் போடுவோமில்ல கூட என் சின்ன பொண்னும் சேர்ந்துகுவா என்னோட . ஏன்னா நான் தான் என் பொண்னையும் என் பொண்டாட்டியையும் நல்லா கவனிச்சுகிறேன்.


http://avargal-unmaigal.blogspot.com/2010/08/rab-music.html

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி நாடோடி , நன்றி துளசி அம்மா..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger Avargal Unmaigal said...

அன்புள்ள சாந்தி மேடம் அவர்களுக்கு . உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது. என் வலைப்பக்கதிற்கு வந்து பின்னூட்டம் இட்டு முதல் பாலோவராக சேர்ந்ததிற்கு மிக்க நன்றி. நீங்கள் பக்கதில் இருந்தால் உங்கள் வீட்டிற்கு ஸ்வீட் எடுத்து வந்திருப்பேன். ஸாரி

-----
:)) நன்றிங்க..
------------


என் பொண்டாட்டி இந்த மாதிரி கோவிச்சுக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போக முடியாது ஏன் என்றால் அவங்க அம்மா வீடு இந்தியாவில இருக்கு. ஹி ஹி ஹி ஹி. அப்படியே போனாலும் நானும் ஜனகராஜ் மாதிரி என் பொண்டாட்டி ஊருக்கு போய்யிட்டானு சந்தோஷ்மா ஆட்டம் போடுவோமில்ல கூட என் சின்ன பொண்னும் சேர்ந்துகுவா என்னோட . ஏன்னா நான் தான் என் பொண்னையும் என் பொண்டாட்டியையும் நல்லா கவனிச்சுகிறேன்.


---------

இங்க பாருங்கய்யா சேட்டையை...அவ்வ்வ்வ்:)

A N A N T H E N said...

நல்ல கதைக்கா... ஆனா இப்படி ஓர் அதிர்ச்சி எல்லாம் கொஞ்சம் ஓவரு தான்... நீ கோவிச்சுக்கிட்டு போனா போடி ன்னுட்டு... இருந்திட்டா என்னாவுறது.... ஆமாக்கா செல்லம்மாக்கு என்னா வயசு...

எண்ணங்கள் 13189034291840215795 said...

Blogger A N A N T H E N said...

நல்ல கதைக்கா... ஆனா இப்படி ஓர் அதிர்ச்சி எல்லாம் கொஞ்சம் ஓவரு தான்... நீ கோவிச்சுக்கிட்டு போனா போடி ன்னுட்டு... இருந்திட்டா என்னாவுறது.... ஆமாக்கா செல்லம்மாக்கு என்னா வயசு


------------------

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

அடுத்த சேட்டைக்கார தம்பி..

குடிப்பத நிப்பாட்ட சொன்னா வயச கேக்குறத பாருங்கய்யா...

ஒரு 65 -80 னு சொல்லணும் போலயே இனி..

அவ்வ்வ்வ்

ஜெயந்தி said...

கதை நல்லா வந்திருக்கு.

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்ரிங்க ஜெயந்தி, அனந்தன் தம்பி

Anonymous said...

@ நாடோடி,
//எப்ப‌டியோ குழ‌ந்தை வ‌ள‌ர்க்கும் த‌ண்ட‌னைக்கு ப‌ய‌ந்தாவ‌து க‌ண‌வ‌ன் திருந்தினால் ச‌ரி.. :)//
குழந்தைகள் வளர்ப்பதை தண்டனை என்று சொன்னதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தப்படும். =))

ஹாய் ஆன்ட்டி,
இப்பத்தான் எல்லாவற்றையும் வாசிச்சு முடிச்சேன். கதைகள் எல்லாம் நச் என்று இருக்கிறது.

எண்ணங்கள் 13189034291840215795 said...

அனாமிகா துவாரகன் said...

குழந்தைகள் வளர்ப்பதை தண்டனை என்று சொன்னதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தப்படும். =))


அதானே செஞ்சிடுவோம்.. நாடோடிக்கு 16 பிள்ளை பெற வாழ்த்திடுவோம் அப்ப..

:))
ஹாய் ஆன்ட்டி,
இப்பத்தான் எல்லாவற்றையும் வாசிச்சு முடிச்சேன். கதைகள் எல்லாம் நச் என்று இருக்கிறது.

நன்றிம்மா.