Monday, August 30, 2010
இன்னா செய்தாரை - குட்டிக்கதை..
" டேய் , எப்படியாவது போட்டுத்தள்ளணும்டா." .. ரிச்சி
" ஆமாண்டா. சாதாரண வக்கீல் பொட்டச்சிக்கு என்ன இம்புட்டு திமிரு.?" பீட்டர்
" நாம யாருன்னு காட்டணும்டா.." சாம்..
" பெரிய நீதிபதின்னு இவளுக்கு நெனப்பு.. ஒழுங்க புள்ள குட்டிய பார்த்துட்டு இருக்க முடியாதோ?.. எல்லார் தப்பையும் தட்டி கேட்பாளாம்.. தட்டி வெச்சா அடங்குவா.."
" இப்படி நம்மள ஒட்டு மொத்தமா நஷ்ட ஈடு வழங்க வெச்சுட்டாளே டா.."
" அவளுகளுக்கு ஆதரவு கொடுக்கிறானுங்க பாரு ************** அவனுங்கள சொல்லணும்.."
" என்ன புரளி சொன்னாலும் அசர மாட்டேங்காளடா.. "
" கெழவி டா.. அவள போய்.. சீ தூ... " கேவலமாய் பேசி தங்களுக்குள்ளே சிரித்து ஆற்றாமையை தீர்த்துக்கொண்டனர்..
--------------------------------------------------------------
" டேய் தெரியுமா சேதி.. இன்னிக்கு நாம படிச்ச பள்ளிக்கு வராளாம்.. என்னமோ விருதெல்லாம் கொடுக்க போறாளாம்... "
" நம்ம பள்ளி யில் இவளுக்கென்ன வேலை..? .. படுபாவி.. சும்மா விடக்கூடாது டா.. பிளான் சொல்லு.."
" கெளம்புடா நாமளும் போவோம்.. போகும்போது சொல்றேன் என் பிளானை.."
------------------------------------------------------------
பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் , விளையாட்டுக்கு பின் பரிசளிப்பும் விருதும் ..
" நல்லொழுக்க விருது " ரிச்சி " என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது.. "
கைதட்டல்.
சிறந்த சமூக சேவை விருது " பீட்டர் " என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது.. "
கைதட்டல்.
சிறந்த மாணவன் விருது " சாம்" என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது..
பலத்த கைதட்டல்.
பின் அந்த பெண் வக்கீல் பேசுகையில் ,
அந்த 3 மாணவரையும் வாழ்நாள் முழுதும் எல்லோரும் நினைவு கூறும் வகையில் தான் இவ்விருதுகளை அறிவித்ததாக சொன்னார்..
கையிலுள்ள கத்திகளை அங்கேயே போட்டுவிட்டு வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க கூட தகுதியின்றி வெளியேறினார்கள் , ரிச்சி, பீட்டர் , மற்றும் சாம்...
ஆனால் அடுத்த விருதுக்கு தம்மால் இயன்ற உதவியை செய்யணும் என்ற தீர்மானத்தோடு...
-------------------------------------------------------------------------------
நன்றி படம்: கூகுள்
( சமீபத்திய பிரச்னையில் பின்னூட்டம் இட்டவர்களும், தனிமடல் அனுப்பியவர்களுக்கும் நன்றி சொல்ல மறந்திருந்தால் என் மன்னிப்புகள்..
அறிமுகமில்லாத நட்புகளின் ஆறுதல் அளவிடமுடியாதது.. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி..)
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நல்ல கருத்து, இடுகை அருமை.
எனக்கு கொஞ்சம் குழப்பம், இது கதையா அனுபவமா?
வருகைக்கு நன்றி சிங்கம்
கதைதான்..
ஆனால் இப்படி இன்னா செய்தாரை அவர் நாண , நன்னயம் செய்தவர்களை கண்டுள்ளேன்...
குறளுக்கு சரியான விளக்கக் கதை .. :)
இன்னா செய்தாரை ஒருத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்....
இந்த குறளுக்கு மிக பொருத்தமான இருக்கிறது இந்த குட்டிக்கதை....
இது போல் மேலும் பல நல்ல பதிவுகள் பதிய வாழ்த்துக்கள்....
சிறந்த கருத்து..! நன்றி..!
நன்றி கோபி , உண்மைத்தமிழன்.
Post a Comment