Friday, August 27, 2010

சமூகத்தில் முதல் காலடி பதித்தது எப்போது?




























பெற்றோருக்கு பிள்ளைகள் எப்பவும் குழந்தைகள்தான்..அவர்கள் வளர்ந்து அவர்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தாலும் கூட.

ஆனால் பிள்ளைகளை நாம் மட்டும் வளர்க்கவில்லை. சமூகமும் சூழலும் சேர்த்தே வளர்க்கின்றது..

பல வருடம் நாம் சொல்லிக்கொடுக்காததை சில நொடிகளில் கற்று விடுவார்கள் ., அது நல்லதோ கெட்டதோ..

நாம் அவர்கள் கூடவே பயணித்துக்கொண்டிருக்க முடியாது..

ஆனால் இதை செய்தால் , இப்படியான விளைவுகள் என சொல்லி தயார் படுத்திக்கொள்ளலாம்..

ஏன் இந்த பீடிகை.. சொல்கிறேன் நேற்றைய சம்பவத்தை..

இரவு படுக்க போகுமுன் தொண்டையில் கிச் கிச்..

அதற்கான மிட்டாய் மருந்தை ( அதாங்க லொசெஞ்சஸ் ) வாங்கி வர சொல்லி பெரியவன் அறைக்கு சென்றால் படுத்துவிட்டார்.

" அம்மா தூக்கம் வருது காலையிலேயே எழும்பணும் வேற. பிளீஸ்."

" ப்ளீஸ் மா."

என்னோட ப்ளீஸ் வென்றது.. சோம்பிக்கொண்டே சட்டையை போட்டுக்கொண்டு கீழே சென்றார்.

போய்வர அதிகபட்சம் 10-15 நிமிடமே..

ஆனா 30 நிமிடம் ஆகியும் திரும்பவில்லை..கொஞ்சம் பயம்.

45 நிமிடம்... பயம் அதிகரித்தது.. ( இங்கு பொறாமைக்காரர்கள் சிலருண்டு :) . எப்படியெல்லாம் யோசனை வருது பாருங்க. )

50 நிமிடம் - எழுந்துவிட்டேன் . " என்னாச்சு போனவனை காணோம்.. கொஞ்சம் போய் பார்த்துட்டு வாங்க.."

"சின்ன குழந்தையா . வருவான்.. " பதிலில் அமைதியானாலும் குழப்பம்..

பின் 1 மணி நேரம் கழித்து வந்தார்.. வரும்போதே அம்மா அம்மா னு .. சத்ததிலேயே புரிந்தேன் ஏதோ பிரச்னைதான் என.

" அம்மா, நம்ம தமிழர்களுக்கும் வெள்ளைக்காரனுக்கும் சண்டை நான் உதவினேன்..."

படுத்திருந்தவள் சடாரென்று எழுந்தேன்.

" என்னாச்சு மா.?"

ஒரு வெள்ளைக்காரன் நம் இந்தியர் வீட்டை திறந்துள்ளார்.. அதை தடுத்த நம் தமிழரை அடித்துவிட்டார்..அவரை பிடிக்க வந்த காவலரையும் தடுத்துள்ளார்.. பின் அவனை செக்யூரிட்டி தள்ளியதில் சுவர் மண்டையில் முட்டி ஒரே ரத்தம்..

அவர்கள் காவல் துறைக்கு சொல்லிவிட்டனர்.

நான் வெளியே நின்றேன் . கட்டடத்தை விட்டு வெளியே ஓடி அவன் தப்ப நினைக்கையில் தமிழ் அங்கிள் ஜாடை காட்ட நான் என் கைகளை

கொண்டு அவனை தடுத்து நிறுத்தினேன்.. "

14 வயதிலேயே 6 அடி வளர்ந்திட்டாயே னு கவலை படாத நாளில்லை.. :(

ஆனால் முதன்முறையாக அது உதவியிருப்பது கொஞ்சம் திருப்தியாயிருந்தது..

இந்தியாவாய் இருந்திருந்தால் கண்டிப்பாக மாமாவை போல் ராணுவத்துக்கு அனுப்பியிருப்பேனடா..

" உனக்கு பயமா இல்லையா பா.?.. "

" ஹ. விட்டா அவனை அப்படியே ஒரு கையில தூக்கிருவேன் மா."

உடனே சின்னவர் , " ஹேய் , அப்ப நீ ஹீரோ ஆயிட்டியா.?" ( தமிழ்பட பாதிப்பு என்னத்த சொல்ல.?:) )

" அம்மா உங்ககிட்ட சொல்லிட்டு போகத்தான் வந்தேன்.நீங்க பயப்படுவீங்கன்னு .. நான் திரும்ப போகணும்.."

" ஒண்ணும் போக வேண்டாம் உனக்கெதுக்கு வம்பெல்லாம்.பள்ளி செல்லும் வயதிலே.?" அப்பா.

" அம்மா , பிளீஸ்..அடி வாங்கியது என் தோழனின் அப்பா .. "

புன்னகைத்தேன்.. அதையே அனுமதியாக எடுத்துக்கொண்டு போனான்.. இந்த முறை மொபைலோடு..

" சரி நானும் போய் என்னன்னு பார்த்துட்டு வரேன் " கிளம்பினார் இவர் 10 நிமிடம் கழித்து..

போன மச்சான் திரும்பி வந்தார்... ஒருத்தரையும் காணோமாம்..:))



நிம்மதியா உறங்க சென்றேன்..

அடுத்த அரை மணி நேரம் கழித்து மகன் வந்தார்..

இந்த முறை அனைத்தையும் படம் பிடித்து எடுத்து வந்து விளக்க என் அருகே அமர்ந்தார்..( அதுக்குத்தான் மொபைலை எடுத்தார் போல )

" என்னாச்சு அப்பா வந்தாங்க.. காணோமாமே. "

" ஆமா அனைவரும் காவலர் வந்த வேன் அருகில் சென்றுவிட்டோம்.. பல தமிழர்கள் காவல்துறை சென்றுள்ளார்கள்..பலர் படம் எடுத்தனர்..

அங்கிள் என்னையும் கூப்பிட்டார்கள்.. அம்மா கிட்ட கேட்கலை னு சொன்னேன்."

சண்டையை படம் பிடித்து ஃப்ரீலான்ஸ் புகைப்படக்காரர் போல விளக்க ஆரம்பித்தார்..

இந்த துணிவெல்லாம் எங்கிருந்து வந்தது?..

இப்பத்தான் பிறந்து , என் மேல் கால் போட்டுக்கொண்டு படுத்து , யாராவது வந்தால் என் முதுகின் பின்னால் எட்டி பார்த்துக்கொண்டு ,

தம்பியோடு டாம்& ஜெரி பார்த்துக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டிருந்த பிள்ளை , வளர்ந்துட்டாரா?..

" சரி எப்படினாலும் நீ இதில் தலையிடுவதெல்லாம் தப்பு..உனக்கேதும் ஆனால்.?." அப்பா.

விவாதமாகப்போனது..

தடுத்தே ஆகணும்..

" உனக்கு அந்த பிரச்னையை ஹாண்டில் செய்வோம்னு நம்பிக்கை இருந்ததா.?.அவன் ஏதாவது

கைத்துப்பாக்கி வைத்திருந்து சுட்டா என்ன செய்வே?."

" அப்படி செய்யும் சூழல் இல்லை மா.. ஆனால் என்னுடைய பிரசன்ஸ் ( தமிழ்?? ) மிகவும் தேவைப்பட்டது என்பதை புரிந்தேன் "

" அப்ப சரி.. தப்பு நடக்கும் இடத்தில் நம்மால் முடிந்த ஆதரவு கொடுக்கவே செய்யணும்.. ஆனால் பல நேரம் நாம் காயப்படுவோம்.

அதுக்கும் தயாரா இருக்கணும். இருப்பியா.?"

" காயத்த பாத்தா முடியுமா மா.?"


நிறைவாய் இருந்தது.. என்னிடமுள்ள போராட்ட குணம், துணிவு , தெம்பு , கேரிங் இப்ப என் வாரிசில்..

சின்ன வயதிலிருந்தே சொல்லிவருவேன்.

" நமக்காக மட்டும் வாழ்வதில் பெரிதாய் ஏதும் சுவாரஸ்யமேயில்லை.. அடுத்தவருக்காக ஏதேனும் எதையும் எதிர்பாராது செய்து வாழ்வதிலேயே நிறைவு உண்டு என.."

சொல்வதை விட நாம் செயலிலும் வாழ்ந்து காட்டணும்..மிருகங்களோடு அன்பு செலுத்துவது, இயற்கையை மதிப்பது.. இவை செயலில் இருக்கணும்..

சம்மர் பள்ளி , பண்டிகை கொண்டாட்டங்கள் , சிறைச்சாலை, டிடென்ஷன் செண்டர் சந்திப்புகள் என தனியே நான் எடுத்து செய்யும்போதெல்லாம் " ஏம்மா உங்களுக்கு வேண்டாத வேலை "

னு சொன்ன பிள்ளை இன்று நான் சொல்லாமலேயே சமுகத்துக்கு உதவணும்னு முதல் படி ஏறியிருப்பது மகிழ்ச்சியை விட அதிக பொறுப்பை தந்துள்ளது .

இனம் , மொழி, மதம் என எல்லாம் தாண்டி மனிதநேயத்தோடு மட்டுமே வளர்க்கணும் இக்காலக்குழந்தைகளை..

"நாளை நீ வளர்ந்தபின் என்னை கவனிப்பதை விட முடியாத வயோதிகர்களை கவனித்தால் நான் மிக மகிழ்வேன் " என அடிக்கடி சொல்வேன்..

மேலும் ஏதாவது பெரிய வியாதி வந்தால் கூட எனக்காக ஏதும் செலவழிக்க கூடாது.. என் வாழ்க்கை நான் நிறைவாய் வாழ்ந்துவிட்ட திருப்தி இருக்கு..ஆக அந்த

செலவை கூட உபயோகமாய் செலவழிக்கணும் " என சொல்லிவைத்துள்ளேன்..

மனிதனுக்கு எப்போதும் திருப்தி ஏற்படுவதேயில்லை.. திருப்தி வேறு உழைப்பு வேறு.

உழைப்பு ஆயுசுக்கும் , இறுதி மூச்சுவரை செய்துகொண்டே இருக்கணும்.. ஆனால் திருப்தி என்பதை நாமாக வழவழைத்துக்கொள்ளவேண்டிய ஒன்று..

அந்த திருப்தி ஏற்படும்போதுதான் நமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களுக்கான நன்றி உணர்வு வரும்.. நன்றி உணர்வு வரும்போது மற்றவருக்காக ஏதாவது செய்யணும்னு தோணும்..

குழந்தைகள் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள்.. நமக்கு ஓரளவுதான் உரிமை இருக்கின்றது அவர்கள் மேல்.

எல்லாவற்றையும் அட்வைஸ் சொல்லி வளர்க்க முடியாது. கவனிக்கின்றார்கள் நம்மை.. நம் போராட்டங்களை.. நம் வெற்றியை.. கடின உழைப்பை..

ஒவ்வொரு பிரச்னைகளையும் நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதே அவர்களுக்கான மறைமுக பயிற்சி..

பிரச்னைகளை அலசிடுங்கள் குழந்தைகளோடு..ஆனால் பயம்கொள்ளாமல்..

நாளைய உலகில் அவர்கள் சந்திக்க வேண்டிய மனிதர்கள் பல்தரப்பட்டனர்.. முக்கியமாக சைக்கோக்கள்., பொறாமைக்காரர்கள்....நல்லவர்களுக்கு சமமாக இருக்கின்றனர்..

செய்திகள் பார்க்க பழக்கணும். அதை விவாதிக்கவும் செய்யணும்..சில தினங்களுக்கு முன் பிலிப்பைன்சில் ஹாங்காங் சுற்றுலா பயணிகளை

ஹை-ஜேக் செய்த போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்தார்கள்.. சுமார் 5 மணி நேரம் இடத்தை விட்டு அகலாமல் பார்த்தார்..

நம்க்கு பொறுமையில்லை..ஆனால் அதிலும் கற்கிறார்கள்.. எப்படியெல்லாம் காவலர் உடனடி நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என..

நானும் மகனும் விரும்பி பார்ப்பது Fear factor எனும் தொடர்..

அதிலுள்ள உணவுகளை உண்பதை பார்த்து நான் முகம் சுழித்தாலும் மகன் இதிலென்ன இருக்கு என பார்ப்பார்..

மார்க்கெட்டில் உள்ள அனைத்தையும் சமைத்து தர சொல்லி கேட்கிறார். நமக்கோ உவ்வெ.. னு அருவருப்பாய் உள்ளது.

எங்கேயிருந்து கற்கிறார்கள்.. பள்ளியில் , நட்புகளிடமிருந்து..???

குடும்ப சூழல் 50% என்றால் வெளியில் 50% வளர்க்கப்படுகிறார்கள்..இது என்னைப்பொறுத்தவரை. இந்நாட்டைப்பொறுத்தவரை..

( மாறுபடலாம் மற்றவருக்கு )

நான் சமூக பிரச்னையில் காலடி எடுத்து வைத்தது எங்கள் NCC காம்ப்கள் மூலமாகத்தான்.

நீங்கள் முதலில் உங்களை இப்படி சமூக பிரச்னையில் இணைத்து எப்போது ..?

7 comments:

சிங்கக்குட்டி said...

உண்மை உண்மை, காலம் விரைவாக ஓடுகிறது.

எனக்கு குழந்தை பிறந்தவுடன் என் மனைவிடம் அனைவரும் சொன்னது, நீயே ஒரு குழந்தை, இன்று உனக்கு ஒரு குழந்தையா என்பதுதான்?

பகிர்வுக்கு நன்றி.

எண்ணங்கள் 13189034291840215795 said...

சிங்கக்குட்டி said...


எனக்கு குழந்தை பிறந்தவுடன் என் மனைவிடம் அனைவரும் சொன்னது, நீயே ஒரு குழந்தை, இன்று உனக்கு ஒரு குழந்தையா என்பதுதான்?

----------
வாங்க சிங்கம்..
:)

நிஜம்..

நான் பிறந்தகம் சென்றால் , இன்றும் எனக்கு சமைக்க தெரியாது , வெங்காயம் கூட உறிக்க தெரியாது என கேலி பேசுகிறார்கள்..கடக்குட்டி என்பதால்..

ஷைலஜா said...

நல்ல பதிவு சாந்தி. உங்க பையன்கள் ரொம்ப ஸ்மார்ட்டா தெரியறாங்க! குழந்தைகளை கோழைகளாக வளர்க்க எனக்கும் பிடிப்பதில்லை இத்தனைக்கும் எனக்கு 2ம் பெண்கள்தான்! ஆனாலும் எந்தந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை சொல்லிவருகிறேன்.

//பிரச்னைகளை அலசிடுங்கள் குழந்தைகளோடு..ஆனால் பயம்கொள்ளாமல்..

நாளைய உலகில் அவர்கள் சந்திக்க வேண்டிய மனிதர்கள் பல்தரப்பட்டனர்.. முக்கியமாக சைக்கோக்கள்., பொறாமைக்காரர்கள்....நல்லவர்களுக்கு சமமாக இருக்கின்றனர்/////


உண்மையான வார்த்தைகள்!!

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஷைலஜா said...


வாங்க ஷைலஜாக்கா .


நல்ல பதிவு சாந்தி. உங்க பையன்கள் ரொம்ப ஸ்மார்ட்டா தெரியறாங்க!
--

நன்றி அக்கா
----
குழந்தைகளை கோழைகளாக வளர்க்க எனக்கும் பிடிப்பதில்லை இத்தனைக்கும் எனக்கு 2ம் பெண்கள்தான்! ஆனாலும் எந்தந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை சொல்லிவருகிறேன்.

------ தாயைப்போல சேய்..

நீங்க எட்டடின்னா அவுங்க 32 அடி பாயணுமே...:)

நாடோடி said...

குழ‌ந்தைக‌ளை எப்போதும் தோழ‌மையுட‌ன் வ‌ள‌ர்ப்ப‌து ந‌ல்ல‌தே.. பெற்றோரிட‌ம் இருந்துதான் ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ளை குழ‌ந்தைக‌ள் க‌ற்று கொள்கிறார்க‌ள்...

உங்க‌ள் ம‌க‌னின் இந்த‌ துணிச்ச‌லுக்கு என்னுடைய‌ பாராட்டுக்க‌ளும் வாழ்த்துக்க‌ளும்..

Thekkikattan|தெகா said...

அருமையான பதிவு!

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றிங்க தெகா, நாடோடி...