

2 மாத புலிக்குட்டி ஒன்றை குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்களோடு கலந்து ஈரான் நாட்டுக்கு எடுத்து செல்ல துணிந்த பெண்மணி , பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக அந்த புலிக்குட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார். விளையாட்டு சாமான்களோடு இருக்கும்போது பஞ்சு வைத்து அடைத்த புலிக்குட்டி போன்ற தோற்றம் ஏற்படுத்த கலந்து வைத்துள்ளார்..
விமான நிலையத்தில் ஸ்கேன் செய்யும் போது புலிக்குட்டி மூச்சு விடுவது தெரிந்துவிட்டது..
பெட்டியை திறக்க சொல்லி பார்த்த போது மிக அழகான அந்த 2 மாத குட்டி அமைதியாக அரை தூக்கத்தில் இருந்துள்ளது.
உடனே அப்பெண்ணை கைது செய்து 4 வருட சிறை தண்டனையும் வழங்கியுள்ளார்கள்....
புலிகள் தற்போது அழிகின்ற சூழலில் இருப்பதால் மிகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது..
வனவிலங்கு அதிகாரிகள் புலிக்குட்டியை எடுத்து சென்று மிக பாதுகாப்பாக வைத்துள்ளனர்..
புலியை கண்டுபிடித்து மீட்டது குறித்து பெருமகிழ்ச்சி கொண்டனர் அதிகாரிகள்..
1 comment:
super. ippadiyumaa thiruduvaanga?
Post a Comment