நன்றி : படங்கள் : கூகுள்
இந்த பிளாக் ஆரம்பித்த போது தாய்லாந்து பெண்ணின் புன்னகை படம் போட்டு தந்தவரும், இப்ப அந்த படத்தை மாற்ற சொல்லி புதுப்படம் தந்தமைக்கும்,
தம்பி கண்ணனுக்கு விசேஷ நன்றி..
---------------------------------------------
சின்னவர் " அம்மா ஏன் எப்பா பார்த்தாலும் ஆக்டிவா இருக்கீங்க.?"
ஆமா உனக்கு பொண்ணு வந்து கல்யாணம் பண்ற வரை இப்படித்தான் "
உடனே அவர் , " அம்மா எனக்கு கேர்ல்ஸ் வேண்டாம் . அவுங்கள ரொம்ப டேக் கேர் பண்ணணும் . பாய்ஸ் தான் மேரி பண்ணிப்பேன்..பாய்ஸ் என்னையும் என் பைக்கையும் டேக் கேர் பண்ணுவாங்க.."
-----------------------------------------------
நேர்று தான் பள்ளி திறந்த முதல் நாள். புது பள்ளி..
" சரி சொல்லு வகுப்பில் எத்தனை பாய்ஸ் , எத்தனை கேர்ல்ஸ் , பேர் என்ன?.."
" நான் பாய்ஸ் பாக்கவேயில்லை... கேர்ல்ஸ் மட்டும்தான் பேசினாங்க.. ஐ திங் நான் ஹீரோ னு.. ( லீவுல தமிழ்ப்படம் பாக்காதே னு சொன்னா கேட்டாதானே?..படம் பக்கும்போதே அடுத்த சீன் சொல்லிடுவார்.. )
------------------------------
கிண்டர்கார்டன் முடிந்து ஒன்றாம் வகுப்பு.. பல பாஷைகள் ஆரம்பிப்பார்கள்..
"அப்புரம் டீச்சர் என்ன சொன்னாங்க?"
டீச்சர் கேட்டாங்க "பஞ்சாபி அந்த பக்கம் போங்க,, ஹிந்தி இந்தப்பக்கம் போங்க , னு"
"சரி நீ எந்த பக்கம் போன?.."
நான் கேட்டேன் , " நான் தமிழ்நாடு எங்க போகணும்னு.?"
சிரிச்சு மாளல...,
அப்பாவியா ஏன் சிரிச்சீங்க ?..னு கேட்கிறார்..
------------------------------
போன வாரம் காய்ச்சலுக்கு மருத்துவர் கிட்ட போனதும் , மருத்துவர் அவனிடம்
" எங்கெல்லாம் வலிக்குது"
" தலையில கொஞ்சம் சூடா இருக்கு.."
" அப்புரம்"
" தொண்டையில "
" எப்படி "
" இந்த எல்லோ சன் ( SUN) இருக்குல்ல அந்த மாதிரி ஹாட் ஆ இருக்கு.."
சீரியஸா இருந்த மருத்துவர் விவிசி..
------------------------------
டீச்சர் என்னை குட் பாய் னு சொன்னாங்க.."
" அப்படியா , பரவால்லியே ,. முதல் நாளும் அதுவுமா.? ஆமா ஏன் அப்ப்டி சொன்னங்க?."
" நான் போய் முதல் சேர் ல உக்காந்தேன்.. அதை ஒரு பெண்ணுக்கு குடுக்க சொல்லிட்டு என்னை இரண்டாவதா உட்கார சொன்னாங்க.
நான் செய்தேன்.. அப்புரம் , முதலில் உட்கார்ந்த பெண்ணுக்கு போரடிச்சுது போல,.. நாந்தான் நாள் முழுக்க பேசி ஃபிரண்ட் ஆனேன்.."
" அவ்வ்வவ்வ்வ்"
----------------------------------------------------
12 comments:
அருமை அருமை
சிரிப்பு ha ha ha
super. hehe
ரசித்தேன், சிரித்தேன்.
நன்றி யாதவன் , ரமேஷ், முகில்
:)
Smart kutti!
உடனே அவர் , " அம்மா எனக்கு கேர்ல்ஸ் வேண்டாம் . அவுங்கள ரொம்ப டேக் கேர் பண்ணணும் . பாய்ஸ் தான் மேரி பண்ணிப்பேன்..பாய்ஸ் என்னையும் என் பைக்கையும் டேக் கேர் பண்ணுவாங்க.."
எனக்கு படிக்கும் போதே அவன் குரல் கேக்குது.இங்கேயும் விவிசி .அதுவும் அந்த பைக் மேட்டர் .அப்ப ஒங்களுக்கு மருமகன் தானா ?மாமியார் மருமகள் சண்டை போட முடியாதே ?சோ ஸ்வீட் +ஸ்மார்ட் .ஆண்ட்டியும் குட் பாய்ன்னு சொன்னாங்க ன்னு சொல்லிடுங்க .
நன்றி அருணா, பூங்குழலி..
--------
எனக்கு படிக்கும் போதே அவன் குரல் கேக்குது.இங்கேயும் விவிசி .அதுவும் அந்த பைக் மேட்டர் .அப்ப ஒங்களுக்கு மருமகன் தானா ?மாமியார் மருமகள் சண்டை போட முடியாதே ?சோ ஸ்வீட் +ஸ்மார்ட் .ஆண்ட்டியும் குட் பாய்ன்னு சொன்னாங்க ன்னு சொல்லிடுங்க .]]
ஆஆஆஆஆ
உலகம் போற போக்குல அந்த பயம் வேற இருக்கு.. 2 பசங்களும் பொண்ணுங்கள கண்டா பயப்படுறாங்க.. ஆனா என் அக்கா பசங்களும் இப்படி சொன்னவிங்க தான்.. இப்ப பாருங்க பெண்டாட்டி கிழிச்ச கோட்டை தாண்டுவதில்லை.. :))
கண்டிப்பா சொல்றேன் அவனிடம்..:)
//டீச்சர் கேட்டாங்க "பஞ்சாபி அந்த பக்கம் போங்க,, ஹிந்தி இந்தப்பக்கம் போங்க , னு"
"சரி நீ எந்த பக்கம் போன?.."
நான் கேட்டேன் , " நான் தமிழ்நாடு எங்க போகணும்னு.?//
கலக்கலு:))
ha ha :)
ஹி ஹி ஹி :-)
அங்கேயும் தமிழ்நாடு பிரச்சனையா :-)
நன்றி ரசிகன், ரகு , சிங்கக்குட்டி.
---------
ஹி ஹி ஹி :-)
அங்கேயும் தமிழ்நாடு பிரச்சனையா :-)
--------
ஆமா வீட்டுல தமிழ் பேசிட்டு பள்ளியிலும் எதிர்பார்த்தார்போல..:)
ha ha ha... chinnavar padu chutti...
//உடனே அவர் , " அம்மா எனக்கு கேர்ல்ஸ் வேண்டாம் . அவுங்கள ரொம்ப டேக் கேர் பண்ணணும் . பாய்ஸ் தான் மேரி பண்ணிப்பேன்..பாய்ஸ் என்னையும் என் பைக்கையும் டேக் கேர் பண்ணுவாங்க.."//
VVC ka...
Post a Comment