Wednesday, August 11, 2010

பொண்ணுகளே இப்படித்தான் - குட்டிக்கதை





















"ரகு , என்னோட நண்பர் நவீன் சென்னைல இருக்கார். கூட படித்தவர் சொல்லிருக்கேனே.
அவர் நிச்சயமா உனக்கு ஒரு வேலை வாங்கி தரமுடியும்.."

" கூடப்படிச்சவங்கெல்லாம் இன்னுமா நியாபகம் வெச்சிருப்பாங்களா சுசி.?"

" எல்லாரும் போல அல்ல இவர். ரொம்ப உதவும் மனப்பான்மை அதிகம்.."

-----------------------------------------------------

" சார் கவலைய விடுங்க.. ஒரு வேலை வாங்கி தர முடிஞ்ச எனக்கு உங்க இருவரின் கல்யாணத்த நடத்த முடியாதா?."

" அப்படி இல்ல ரொம்ப தொந்தரவு செய்றேனோ னு.."

" சுசிக்காக என்ன வேணா செய்யலாம் சார்.. கடைசி வருஷம் புராஜக்ட் நேரம் என் அப்பாக்கு முடியாம போச்சு..
அப்ப சுசிதான் இழுத்து போட்டு என் புராஜக்டையும் முடிச்சு தந்தா. ரொம்ப குடுத்து வெச்சவங்க சார் நீங்க."

" ம். புரியுது.. ஆனா வீடு பாக்கணும் , அது இதுன்னு பெரிய வேலைகள் இருக்கே.. இரண்டு வீடுகளும் பகை எங்க காதலுக்கு ."

" கவலைய என்கிட்ட விடுங்க சார். நம்ம பசங்க இருக்காங்க.. எள்ளுன்னா எண்ணெயா நிப்பாங்க.. நீங்க சுசிய வர சொல்லுங்க,."

-------------------------------------------------

" சுசி நீ இப்போதைக்கு என் அக்கா வீட்டில் இரு.. எல்லாம் சரியானதும் நானும் சாரும் வந்து அழைத்து செல்கிறோம்."

" கஷ்டமா இருக்கு நவீன். எங்களால உனக்கு அதிக சிரமம்.. "

" ஏன் இப்படி தனித்து பேசுற சுசி.? . நீ என்னோட பெஸ்ட் பிரண்ட்.. உனக்கு செய்யாம யாருக்கு செய்ய.?"


" சார் , இந்தாங்க 20,000 ரூபாய் .. சம்பளம் வரும் வரை சமாளிங்க..மேற்கொண்டு ஏதும் வேணுமுன்னா தயங்காதீங்க.."

சுசிக்கு
கண்ணீர் வந்தது..ரகுவோ பிரமித்து போய் நின்றான்.

----------------------------------------------

" அழகான வீடு.. நவீன் நல்ல வீடா செலக்ட் செய்திருக்கான்... பாருங்க எனக்கு செடிகள் பிடிக்கும் னு எத்தனை செடி வாங்கி வெச்சிருக்கான்.?"


" இங்க பாரு .. சமையல் அறையில் பாத்திரங்கள் கூட..."


"ஆமா சுசி . கட்டில் மெத்தை , மேசை , நாற்காலி கூட அவனே வாங்கிட்டான் , நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல.."

" என்ன தங்கமான மனசு பாருங்க.. ஒரு கல்லூரி தோழிக்காக இத்தனை மெனக்கெட முடியுமா யாராச்சும்..? ரியலி ஐயம் ப்ரவுட் ஆஃப் ஹிம்.."

" ம்... சுசி அப்புரம் ஒரு முக்கியமான விஷயம்.."

" சொல்லு ரகு."


" ம். சொல்றேன்னு தப்பா நினைக்காதே.. இனி நவீன் கூட பேசுவதை குறைச்சுக்கோ.."

" என்ன சொல்ற ரகு.? "

" ஆமா.. இதுநாள் வரை நீ பழகியது வேற . இனி நீ என்னோட மனைவி .."

" சோ . வாட்.. என்ன பேசுற ரகு.. இவ்வளவு செஞ்சவனுக்கு நான் நன்றியோட இருக்க கூடாதா?"

" நன்றியோட இருக்க , நான் இருக்கேன்.. ஆயுசுக்கும் நண்பனா. ஆனா நீ மட்டும் குறைச்சுக்கோ னு சொல்றேன்."

" புரியல ரகு.. "


" நீயும் நவீனும் நட்பா இருப்பது எனக்கு பிடிக்கல னு புரிஞ்சுக்கோயேன்.. விளக்க முடியாது " சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

----------------------------------------------------------------------------------

" சார் எப்படி இருக்கீங்க.. வீடுல்லாம் புடிச்சிருக்கா.?..
"

"ம். ரொம்ப நன்றி நவீன். நீங்க இல்லாட்டி எங்களால ஒண்ணுமே செய்திருக்க முடியாது.. வாழ்நாள் பூரா மறக்க மாட்டேன் இந்த உதவியை.."


" என்ன சார் பெரிய வார்த்தைல்லாம் சொல்லிட்டு... ஆமா சுசி எங்க.? . நல்லா ஒரு வெட்டு வெட்டலாம்னு வந்தேன்.."

" ஓஹ் . அதுவா.. உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும் நவீன்.. "

" சொல்லுங்க சார்.."

" அது வந்து.. வந்து.. இப்ப கல்யாணம் ஆனதும் சுசி கொஞ்சம் தனிமையை விரும்புறார்போல தெரியுது..ஒருவேளை அவ பெற்றோரை பிரிந்ததால் இருக்கும்.."


" இருக்கும் இருக்கும் சார்..நல்லா பாத்துக்கோங்க அவளை .. நான் வரேன் சார்.."

" இருங்க நவீன் .. நீங்க எனக்கு பெஸ்ட் பிரண்ட் தான் இனி.. நாம சந்திப்போமே அலுவலகத்தில்;."


"பரவால்ல சார்.. ஏதாச்சும் உதவின்னா கூப்பிடுங்க "

----------------------------------------------------------

கனத்த
மனதோடு " இந்த பொண்ணுங்களே இப்படித்தான் " னு மனதுள் சொல்லிக்கொண்டே வெறுப்பாய் சென்றான்..


உதிர்ந்த
ஒரு துளி கண்ணீரை துடைத்தவளாய் நவீன் செல்வதை மாடியிலிருந்து பார்த்தாள் சுசி..

15 comments:

எல் கே said...

aangaluku possessiveness jaasti

ஒரு கோப்பை வாழ்க்கை said...

நல்லாயிருக்குங்க உங்க நியாயம்...

மணிஜி said...

இந்த பொஸசிவ் நெஸ்ஸை விட மாட்டீங்களோ?

Vediyappan M said...

அசத்திட்டீங்க ! எப்பா. இப்படி கொஞ்ச வரிகளிலேயே எப்படி குழப்பிட்டீங்க,

இரகுராமன் said...

practical view..

pengalum sari aangalum sari maathika muyarchi panna vendiya aspect ithu ..

Unknown said...

இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும்

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி அனைவருக்கும்., கருத்துக்கும்..

-----------------

தன்னம்பிக்கையுடைய , மகிழ்ச்சியான, சுயமுன்னேற்றமுடைய ஆணுக்கோ பெண்ணுக்கோ இத்தகைய பொஸசிவ்நெஸ் , பொறாமை வருவதில்லை..


இப்படியானவர்கள் , அடுத்தவரின் சுதந்திரத்தையும் , அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மதிப்பார்கள்..

திரும்ணம் என்பதே விட்டுக்கொடுப்பதுதான் , அதிலும் ஒருவரின் தனித்தன்மை காணாமல் போய்விடக்கூடாது..

அப்படி கண்டிப்பாக இருந்தால் விளைவுகள் வேறு ரூபம் எடுக்கும்.

There was an interesting article recently in a national newspaper about how dominant career women with great success and financial wealth often still had very dominant partners at home. Let us not confuse manliness and masculinity with possessiveness. Jealousy and possessiveness is about stripping away confidence, esteem and dignity. It is about subjugating and decrying the needs of the injured party for the wishes of the stronger force. That has no place in our modern world.

Danger Signals:

* Dismay and suggestions as to how you should dress
* Overly concerned about where you are going when socializing
* Insistence on escorting you to mundane places
* Interference with your social plans
* Excessive phone calls to know your whereabouts
* Overly intense nature to anything
* Inability to communicate and discuss

பேசி புரிந்துகொள்ள தயாராக இருப்பதில்லை..

* Putting you down and anything that makes you feel inferior

தன் ஆளுமைக்குள் கொண்டு வர முயற்சிப்பது.

* Lack of outlook and poor self-esteem or lack of confidence
* Dominant overtones in domestic arrangements
* Aggressive temper and unreasonable attitude to minor details

எண்ணங்கள் 13189034291840215795 said...
This comment has been removed by the author.
Udayakumar Sree said...

மனது, எண்ணங்கள், உணர்ச்சிகள் எல்லாமே இருவருக்கும் ஒன்றே என்று இருவருக்குமே புரிந்தபின்னர்தான் சுகமான வாழ்க்கை ஆரம்பிக்கிறது. ஒருவர் புரிந்துகொள்ளவில்லை என்றாலும் காத்திருக்கவேண்டும், பொறுமையுடன்!

சங்கே முழங்கு said...

அருமை!

Raghu said...

ஆண்க‌ளுக்கு பெண்க‌ளைவிட‌ பொஸ‌ஸிவ்னெஸ் அதிக‌ம்ங்க..ஆனா அவ்வ‌ள‌வா வெளியே காமிச்சுக்க‌ற‌தில்ல‌ ;)

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி அனைவருக்கும் , கருத்துக்கும்...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஆண்க‌ளுக்கு பெண்க‌ளைவிட‌ பொஸ‌ஸிவ்னெஸ் அதிக‌ம்ங்க..ஆனா அவ்வ‌ள‌வா வெளியே காமிச்சுக்க‌ற‌தில்ல‌
நுற்றுக்கு நுறு உண்மை

ரசிகன் said...

சுருக்கமா,அதேசமயம் சொல்ல வந்த கருத்தை தெளிவா சொல்லிய கதை. அருமை:)

சிங்கக்குட்டி said...

கலக்கல் கதை போங்க...:-)